அன்பு நண்பர் கலைவேந்தன் சார் அவர்களுக்கு,
வணக்கம். சென்ற முறை போல் அல்லாமல் புண்படுத்தும் வார்த்தைகளை பெருமளவில் தவிர்த்து பதிவிட்டதற்கும் முதன் முதலாக உங்களைப் போன்றோர் நடிகர் திலகமும் சில சாதனைகளை செய்திருக்கிறார் என்று பெரிய மனத்தோடு ஒப்புக் கொண்டதற்கும் நன்றிகள்.
இனி நீங்கள் பதிவில் சொன்ன பல விஷயங்களையும் அவற்றுக்கான எங்களின் பதில்களும்.
பராசக்தி திருச்சி வெலிங்டன் அரங்கில் 245 நாட்களும் கொழும்பு மைலன் அரங்கில் 294 நாட்கள் ஓடியதற்கும் எந்த வித ஆதாரமும் இல்லை. ஆகையால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது ஒன்று. இங்கே ஆதாரம் என்று நீங்கள் குறிப்பிடுவது நாளேடுகளில் வந்த விளம்பரம் என்று நான் புரிந்து கொள்கிறேன். விளம்பர ஆதாரம் இல்லை என்றால் ஒத்துக் கொள்ள முடியாது என்றால் நீங்கள் வெள்ளி விழா படம் என்று தூக்கிப் பிடிக்கும் மதுரை வீரன் படத்திற்கும் விளம்பர ஆதாரம் இல்லையே நண்பரே! அதனால் மதுரை வீரன் மதுரை சென்ட்ரலில் வெள்ளி விழா ஓடவில்லை என்று நாங்கள் சொல்லலாமே! வெள்ளி விழா விளம்பரத்தை விடுங்கள். உங்கள் இணைய தளங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மதுரை வீரன் 100 வது நாள் விளம்பரமே பொய்யாக உருவாக்கப்பட்டதுதானே. 40 அரங்குகளில் 100 நாட்கள் என்று சொல்லும் அந்த ஆதாரம் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் இதோ.
அதில் 100 நாட்கள் ஓடியதாக குறிப்பிட்டிருக்கும் பட்டுக்கோட்டை முருகைய்யா கதை தெரியுமா? குடியரசு தலைவர் பதவி வகித்த R.வெங்கடராமன் 1957-62 காலகட்டத்தில் பெருந்தலைவர் அமைச்சரவையில் தொழில் துறை மந்திரியாக இருந்தபோது 1961-ல் தன்னுடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் ஒரு காங்கிரஸ் பிரமுகரால் கட்டி முடிக்கப்பட்ட திரையரங்கை திறந்து வைத்தார். அந்த அரங்குதான் முருகையா. தியேட்டர் வளாகத்தில் RV 1961-ல் திறந்து வைத்தபோது நிறுவப்பட்ட கல்வெட்டு இருக்கிறது. 1961-ல் தான் தியேட்டரே திறக்கப்பட்டது. ஆனால் 1956 ஏப்ரலில் வெளியான மதுரை வீரன் அங்கே 100 நாட்கள் ஓடியதாக விளம்பரம் தயார் செய்யும் நீங்கள் சிவாஜி ரசிகர்களின் நேர்மையை பற்றி பேசுகிறீர்கள். காமடியாக இல்லை?. அந்த லிஸ்டில் இன்னும் நிறைய காமடிகள் இருக்கின்றன. அது தற்காலம் வேண்டாம்.
இனியும் சொல்கிறேன். அலிபாபா வெளியானது 12.01.1956. சென்னை சித்ரா பிரபாத் சரஸ்வதி. அடுத்த படம் மதுரை வீரன் வெளியான நாள் 13.04.1956. சென்னையில் அதே சித்ரா பிரபாத் சரஸ்வதி. ஜனவரி 12 முதல் ஏப்ரல் 12 வரை அலிபாபா ஓடியிருந்தாலே 92 நாட்கள்தான் வரும். [மார்ச் 31 அன்றே வேறு படம் வெளியாகி விட்டது என்றும் சொல்வார்கள் வாதத்திற்காக அதை கூட மறந்து விடுவோம்] அதிக பட்சமாக 92 நாட்கள் மட்டுமே ஓடியிருக்க வாய்ப்புள்ள அலிபாபா சென்னையில் மூன்று திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடியது என்று இத்தனை வருடங்களாக சொல்லிக் கொண்டிருகிறீர்களே இதை விடவா வேறு ஒருவர் அள்ளி விட முடியும்?
இனி நீதி. சென்னையிலும் சேலத்திலும் 99 நாட்கள் ஓடியது. ராஜ ராஜ சோழன் சென்னையில் 98 மதுரை திருச்சி கோவை சேலம் முதலிய நகரங்களில் 97 நாட்கள ஓடியது. இலங்கையில் 103 நாட்கள் என்று ஒரு தகவல் உண்டு. ஆனால் அங்கே பௌர்ணமி தினங்களில் காட்சிகள் கிடையாது என்றும் அந்த நாட்களை விட்டு விட்டுதான் கணக்கெடுக்க வேண்டும் என்றும் ஒரு விஷயம் சொல்வார்கள். பௌர்ணமியை சேர்த்தால் 100 நாட்கள் வரும் என்றும் உறுதிபடுத்தப்படாத தகவல் உண்டு. சரி அதை கூட விட்டு விடுவோம். 99 நாட்கள் அல்லது 98 நாட்கள் ஓடிய படங்கள் கணக்கில் வராது என்றால் உங்களிடம் ஒரு கேள்வி. இப்போது சென்னை சத்யம் அரங்கில் தினசரி ஒரு காட்சி மட்டும் ஓடும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 150 நாள் என்று சொல்கிறீர்கள். 22 வாரத்தில் சுமார் 18 வார வியாழகிழமைகளில் ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிடப்படவில்லை. சத்யம் வளாகத்தில் Blind date என்ற கான்செப்ட் உண்டு. வியாழன் மாலைக்காட்சியன்று வளாகத்தில் ஒரு ஸ்க்ரீனில் என்ன படம் என்று தெரியாமல் டிக்கெட் வாங்கி உள்ளே சென்று அமர்ந்து படம் துவங்கும் போதுதான் என்ன படம் என்று தெரிய வரும். அதற்காக 18 வாரங்கள் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்படாமல் நிறுத்தப்பட்டது. ஆக 150 நாட்களில் 18 நாட்கள் அவுட். அதுவும் தவிர 13 நாட்கள் படம் ஓடும். 14வது நாள் படம் இல்லை. பின் 15 முதல் 20வது நாள் வரை ஓடும். 21ம் நாள் இல்லை. மீண்டும் 22வது நாள் என்று சொல்வார்கள். இப்படி தொடர்ச்சியாக ஓடாமல் 18 வியாழன் மாலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் 150 நாள் என்றால் நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமாம். 100 நாட்களுக்கு ஒரு நாள் குறைவாக ஓடியதாம். அதனால் 100 நாள் கணக்கு வராதாம். நல்ல கணக்கு சார் உங்கள் கணக்கு.
திருடன் 100 நாட்கள் என்று சொன்னது இலங்கையில். ராஜபார்ட் ரங்கதுரை சேலத்தில் 100 நாட்கள் ஓடியதாக தகவல் உண்டு. ஆனால் அதற்கு விளம்பர ஆதாரம் கைவசம் இல்லை. அதனால் ஒத்துக் கொள்ள முடியாது என்றால் அதே தராசை உங்களுக்கு நிறுத்துப் பார்த்தால், சேலத்தில் பரிசு 100 நாட்கள் ஓடியது என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லையே. திருச்சியில் ரகசிய போலிஸ் 100 நாட்கள் ஓடியதற்கு ஆதாரம் இலையே. படகோட்டி 100 நாள் விளம்பரமும் போலிதானே. உண்மை இப்படி இருக்க அதை மறைக்க எங்களை மேல் பழி.
https://ci3.googleusercontent.com/pr...com/wk1nd2.jpg
அன்றைக்கு சென்னை என்று எழுதும்போதும் சரி, பேப்பர்களில் அச்சு கோர்க்கும் போதும் சரி னை என்ற எழுத்திற்கு கொம்பு இருக்கும். சீர்திருத்த தமிழ் வந்த பிறகுதான் னை என்று கொம்பில்லாமல் வர ஆரம்பித்தது. இந்த விளம்பரத்தை பாருங்கள், கொம்பில்லாத சீர்திருத்த னை.
விளையாட்டுப் பிள்ளை 100 நாட்கள் ஓடியது என்று இந்த திரியில் எங்குமே சொல்லப்பட்டதில்லை. சுமார் 6,7 வருடங்களுக்கு முன்னரே அந்த படம் எங்கள் மதுரையில் நியூசினிமாவில் 84 நாட்கள் ஓடியது என்றும் (திருச்சியிலும்) பின் வெள்ளைக்கண்ணுவிற்கு மாற்றப்பட்டு ஷிப்டிங்கில் 100 நாட்களை நிறைவு செய்தது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.
1960 முதல் 1965 வரை நடிகர் திலகத்தின் படங்கள் ஓடியது உண்மை. ஆனால் உடனே உடனே எம்ஜிஆர் படங்கள் வந்து அவற்றை வென்றது என்று ஒரு statement.
1960-ல் படிக்காத மேதையும், தெய்வப் பிறவியையும் இரும்பு திரையையும் வென்ற ஒரு எம்ஜிஆர் படத்தை காட்டுங்கள்.
1961-ல் பாவ மன்னிப்பு, பாசமலர் என்று இரண்டு வெள்ளி விழா படங்கள் மற்றும் பாலும் பழமும் என்ற 20 வார படத்தையும் வென்ற எம்ஜிஆர் படம் எது?
1962-ல் பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, ஆலய மணி ஆகிய 100 நாட்கள் படங்களுக்கு எதிரே ஒரு ஒரு தாயை காத்த தனயன்.
1963-ல் சென்னையில் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் ஓடிய பெரிய இடத்துப் பெண், மதுரையில் மட்டும் ஓடிய நீதிக்கு பின் பாசம் இருவர் உள்ளமோ பல்வேறு அரங்குகளில் 100 நாட்கள். அது தவிர அன்னை இல்லம் 100 நாட்கள்.
1964-ல் சென்னையில் 5 படங்கள் [கர்ணன், பச்சை விளக்கு, கை கொடுத்த தெய்வம், புதிய பறவை, நவராத்திரி] 15 அரங்குகளில் 100 நாட்கள். இது வரை முறியடிக்கப்படவில்லை. மதுரையில் 4 படங்கள். திருச்சியில் 3 படங்கள். உங்களுக்கோ பணக்கார குடும்பம் தவிர [அது கூட 5 அரங்குகள்தான். கோவை சுவாமி மற்றும் சேலம் அரங்குகள் ஷிப்டிங்] பெரிய வெற்றி எதுவுமில்லை. வேட்டைக்காரன் 2 ஊர்கள், தெய்வ தாய் சென்னை மட்டும், படகோட்டி சென்னை ஒரு தியேட்டர் [அதுவும் சந்தேகம்].
உண்மை இப்படி இருக்க நடிக்க வந்து சுமார் 30 வருடம் கழித்துத்தான் தலைநகர் சென்னையில் முதல் வெள்ளி விழா படம் கொடுத்தவர் மேற் சொன்ன வருடங்களில் எந்த வருடமும் சிவாஜியை வெல்ல முடியாத ஒருவர், அவர்தான் வசூல் சக்கரவர்த்தி என்று நீங்கள் சொன்னால்?
அடுத்து 1971-ல் நடிகர் திலகத்திற்கு 7 தோல்வி படங்கள் என்று ஒரு statement. அவர் நடித்த படங்கள் 10. அதில் 100 நாட்கள் ஓடியவை மூன்று படங்கள். குலமா குணமா சவாலே சமாளி மற்றும் பாபு. அது போக மற்ற படங்கள் எல்லாம் தோல்வி என்று நீங்கள் குறிப்பிடுவதாக நான் புரிந்துக் கொள்கிறேன்.
100 நாட்கள் ஓடாத படங்கள் எல்லாம் தோல்வி படங்கள் என்றால் 12 வாரங்கள் ஓடியுள்ள படங்களும் தோல்வி பட்டியலில்தான் சேரும் என்றால் எம்ஜிஆர் நடித்து 100 நாட்கள் ஓடாத பல படங்களும் தோல்வி படங்களே என்று நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். அதற்கு நன்றி.
1971-ல் வெளியான ரிக்ஷாக்காரன் அதுவரை சாந்தியில் வெளியான படங்களின் வசூலை முறியடித்து விட்டது என்று ஒரு வாதம்.
ஆமாம் 1961 முதல் வெளி வந்த படங்களின் கணக்கு என்றால் அன்றைய டிக்கெட் ரேட் என்ன?
1971-ல் ரேட் என்ன? ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டோம் என்றால் கூட அதன்பின் வந்த ராஜா 50 நாட்களில் 51 நாட்கள் ரிக்க்ஷாகாரன் வசூலை தாண்டியதே.
http://i501.photobucket.com/albums/e...ps9e44e188.jpg
அது கூட வேண்டாம். குறைந்த நாட்கள் கூடுதல் வசூல் என்ற உங்கள் தராசுபடியே மதுரை நியூசினிமாவில் ரிக்க்ஷாகாரன் 161 நாள் வசூல் Rs 4,09,000 சொச்சம். அதே மதுரையில் சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா வெறும் 98 நாள் வசூல் Rs 4,10,000 சொச்சம். வெறும் வாய் வார்த்தை அல்ல .இதோ
http://i501.photobucket.com/albums/e...pse50e3aee.jpg
http://i501.photobucket.com/albums/e...psb4bfba7b.jpg
இனி கட்சி ஆரம்பித்த போது ஆதரிக்கவில்லை. எப்படி சார்?
அவர் நடிகர் மட்டுமல்ல அன்றைய ஸ்தாபன காங்கிரஸ் உறுப்பினர். இரண்டு கழகங்களுமே ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என்பது ஸ்தாபன காங்கிரஸ் நிலைப்பாடு. எப்படி அவர் வேறு நிலை எடுக்க முடியும்?
அதே நேரத்தில் நீங்கள் குறிப்பிட்ட உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு ரிலீஸ் சமயத்தில் பிரச்சனை ஏற்பட்டபோது ஒப்பந்தம் செய்த தியேட்டர்கள் பின் வாங்கினால் அண்ணனின் படத்தை சாந்தியிலும் கிரவுன் புவனேஸ்வரியிலும் நான் திரையிடுகிறேன் என்று முன் வந்தாரே நடிகர் திலகம் அதுதான் நடிகர் சங்க தலைவராக மட்டுமல்ல சக நடிகனுக்கு உற்ற நேரத்தில் தோள் கொடுத்த மாண்பும் கூட. உங்கள் வாதத்திற்காக இதை நீங்கள் மறைக்கலாம். ஆனால் வரலாறு தெரிந்த சிவாஜி ரசிகனிடமேவா?
அது போல் 1967 முதல் 1972 அக்டோபர் வரை ஆளும் கட்சி. அதை சந்தடி சாக்கில் 1971 என்று குறைத்து காண்பித்தாகி விட்டது.
படத்தை வெளியிடுவதற்கு அரசியல் எதிர்ப்பு நெருக்கடி என்று ஒரு வாதம். இதய வீணை முதல் பல்லாண்டு வாழ்க வரை 10 படங்களில் 2 படங்களுக்குதானே நெருக்கடி. மீதி 8 படங்களும் இலையே.
இன்னும் சொல்லப் போனால் அரசியல் நெருக்கடி தீர்ந்த 1976 ஜனவரி 30-கு பிறகு எம்ஜிஆர் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லையே.
முக்தா சரியான data கையில்லாமல் இதயக்கனி மட்டுமே அந்த வருடத்தில் சென்னையை தாண்டியும் 100 நாட்கள் ஓடியது என்று .தவறான தகவல் தந்தார்.
அதே ஆண்டில் 1975-ல் அவன்தான் மனிதன் சென்னையை தாண்டி ஓடியதை அவர் பாவம் மறந்து விட்டு பேசினார்.
அதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு பேசலாமா?
http://i501.photobucket.com/albums/e...psc96300f1.jpg
இரண்டு படங்கள் (ஒன்று 100 நாட்கள் மற்றொன்று வெள்ளி விழா) செய்த சாதனைகளை அவர் திரையுலகிலிருந்து விலகும் வரை முறியடிக்கப்படவில்லை என்று ஒரு வாதம்.
நண்பரே அந்த சாதனை அவர் திரையுலகை விட்டு விலகிய ஒரே வருடத்தில் முறியடிக்கப்பட்டு விட்டது. அதை பெரிதாக சொன்னால் தமிழகம் கூட வேண்டாம் எங்கள் மதுரையை மட்டும் எடுத்துக் கொள்வோம் அன்று முதல் இன்று வரை ஏன் இனி என்றுமே முறியடிக்கப்படாத சாதனைகள் என்று ஒரு டசன் சாதனைகள் என்னால் சொல்ல முடியும். ஒரு சில
ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகி 100 நாட்கள் ஓடியது
ஒரே காலண்டர் வருடத்தில் இரண்டு வெள்ளி விழா படங்களை மூன்று முறை கொடுத்தது
1958 முதல் 1979 வரை தொடர்ந்து 22 வருடங்கள் இடைவெளி இல்லாமல் 100 நாட்கள் படங்களை கொடுத்தது
சிவாஜி தான் நடிக்க வந்த 1952 முதல் எம்ஜிஆர் திரையுலகை விட்டு விலகிய 1978 வரை மதுரையில் 48 நூறு நாட்கள் படங்களை கொடுத்தது. 1936 முதல் 1978 வரை எடுத்தாலும் உங்களுக்கு அதை விட குறைவுதான்.
இனி சிவாஜி எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று ஒரு வாதம். காரணம் அன்றைய நாளிலும் சாதனை புரியவில்லை. இன்றைய நாளிலும் இல்லை. அரசியலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். இப்படி முதல் வெளியிட்டிலும் சாதிக்காமல் மறு வெளியிடுகளிலும் சோபிக்காமல் அரசியலிலும் வெற்றி பெறாமல் ஒரு சில ஆயிரங்கள் ரசிகர்கள் மட்டுமே உடைய ஒரு மனிதனை அவன் இந்த பூமியில் இருந்து மறைந்து 13 ஆண்டுகள் ஆன பிறகும் எந்த வித கட்சி ஆட்சி அதிகார பலம் ஆள் பலம் பண பலம் என்ற எந்த வலுவான பின்புலங்களும் இல்லாத ஒரு மனிதனை நீங்கள் நடத்தும் பருவ இதழில் மாதம் மாதம் திட்டுவது, உங்கள் இணைய தளங்களில் வசை மாறி பொழிவது, போஸ்டர் அடித்து திட்டுவது என்று நீங்கள் செய்யும் போதே தெரியவில்லையா நீங்கள் எந்தளவிற்கு சிவாஜி சேனாவை பார்த்து மனம் பதறுகிறீர்கள் என்று?
நீங்கள் ஆஸ்திரேலியா டீம் ஆக இருந்தால் ஆப்கானிஸ்தான் பற்றி பயம் வராது.
நீங்கள் Roger Federar ஆக இருந்தால் Rohan Bopanna பற்றி கவலை வராது
நீங்கள் Manchester United ஆக இருந்தால் Mohan Bagan பற்றி அச்சமிராது.
நண்பரே எங்களுக்கும் உங்களோடு லாவணி பாட நேரமில்லை. இந்த பதில் போதும் என நினைக்கிறேன்.
இறுதியாக ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து ஒரு punch dialogue எழுதியிருகிறீர்கள். எங்கள் படத்தில் அது போன்ற punch dialogues கிடையாது. எனவே இந்த பதிவை நிறைவு செய்ய உங்கள் பட punch வரிகளையே எடுத்துக் கொள்கிறேன்.
காலத்தை வென்றவர் இருக்கலாம். ஆனால்
கணேசனை வென்றவர் இல்லை.
அன்றும் இன்றும் என்றும்
அன்புடன்