Page 90 of 400 FirstFirst ... 40808889909192100140190 ... LastLast
Results 891 to 900 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #891
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    மதுரை திரு.சுந்தரராஜன் அவர்களே,

    வருக! வருக!! தங்களின் சிறப்பான பதிவுகளைத் தருக!!
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #892
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு சிவா - திரு கோபால் : எனக்கு பதில் தந்த உங்கள் இருவருக்கும் அன்பு வணக்கம் !

    எம்ஜிஆர் - சிவாஜி இருவரும் சாதனையாளர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை, எங்கள் பார்வையில்.

    வசூல் பற்றிய புள்ளி விவரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் முதலிடம் என்பதை நாங்கள்சொல்கிறோம். எம்ஜிஆர் என்றுமே வசூலில் சக்கரவர்த்தி, என நாடும் ஏடுகளும் போற்றியுள்ளார்கள். இதனை உறுதிபடுத்தும் விதத்தில் அந்த காலத்தில் வெளியான "பொம்மை" மற்றும் "பேசும் படம்" முதலான
    பத்திரிகைளில் செய்திகள் பிரசுரமாயின.

    நீங்கள் உங்கள் தரப்பு வாதத்தை கூறினீர்கள் . சரி கடந்த காலத்தில் உங்கள் நண்பர்கள் பதிவில் தவறான தகவல்கள் இருந்ததை நீங்கள் ஒப்பு கொள்கிறீர்களா ?

    1. பராசக்தி - அதிக நாட்கள் ஓடியதற்கு எந்த ஆதாரமும் இல்லை .

    2. இரும்பு திரை - வெள்ளிவிழா - எந்த ஆதாரமும் இல்லை .

    3. நூறு நாட்கள் ஓடாத பல படங்களை 100 நாட்கள் ஓடியதாக பட்டியல் போட்டு உள்ளார்கள் . உதாரணத்துக்கு சில .... (நீதி - ராஜ ராஜ சோழன் - திருடன் -
    விளையாட்டு பிள்ளை -ராஜபார்ட் ரங்கதுரை.) இது போன்று பல படங்களை குறிப்பிட முடியும்.

    4. எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு ஒரு போட்டியே இல்லை என்று உங்கள் நண்பர் ஒருவர் கூறியுள்ளார். நாங்களும் அதைத்தானே கூறி வருகிறோம். எம். ஜி. ஆர். என்ற மாபெரும் மக்கள் சக்தி படைத்த நடிகர் எவருடனும் ஒப்பிட முடியாதவர் என்பதே உண்மை. ஏன் என்றால், திரு., சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்க வருவதற்கு முன்பே மக்கள் திலகம் தமிழ் திரையுலகில் நுழைந்து ஒரு கலக்கு கலக்கியதுமில்லாமல், அவருக்கு முன்பே "மதுரை வீரன்" வெள்ளிவிழா படத்தினை தமிழ் திரையுலகிற்கு அளித்தவர். பின்பு, ஜெமினி கணேசன் நடிப்பில் " கல்யாண பரிசு" வெள்ளி விழா கொண்டாடியது. அதற்கு பிறகுதான் "பாகப்பிரிவினை" வெள்ளி விழா கொண்டாடியது.

    5. பராசக்திக்கு பிறகு மனோகரா - வீரபாண்டிய கட்ட பொம்மன் - பாகப்பிரிவினை - பாசமலர் - பாவமன்னிப்பு - ஆலயமணி - படித்தால் மட்டும் போதுமா - நவராத்திரி - கைகொடுத்த தெய்வம் - திருவிளையாடல் - சரஸ்வதி சபதம், போன்ற படங்கள் வெற்றி பெற்றதை நாங்களும் அறிவோம் . ஆனால் உடனுக்குடன் எங்கள் நாயகன் எம்ஜிஆர் படங்கள் வந்து வசூலிலும், ஓட்டத்திலும் உங்கள படங்களின் சாதனைகளை வென்றதை மறுக்க முடியுமா ?

    6. 1965 முதல் 1977 வரை - 13 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். - சிவாஜி படங்களின் வசூல் - சாதனைகள் ஒப்பீடு செய்தால் எங்கள் எம்.ஜி.ஆர். எல்லா விதத்திலும் முதலிடம் பெற்று இருந்தார் என்பது உங்கள் மனசாட்சிக்கு நன்கு தெரியும்.

    இரவு பகலாக பல படங்களில் சிவாஜி நடித்தார் . போதிய இடைவெளி இன்றி படங்களை வெளியிட்டார் .என்று நீங்கள் சொல்லலாம் . 1971ம் ஆண்டில் மட்டும் திரு. சிவாஜிகணேசன் அவர்களுக்கு 7 தோல்வி படங்கள் . சென்னை சாந்தி மற்றும் திருச்சி -பிரபாத், இரண்டும் உங்கள் திரை அரங்கம் என்பதை
    சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

    புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே !

    எவர் கிரீன் ஹீரோ - MATINEE IDOL என்று அழைக்கப்பட்டவர் - எங்கள் எம்.ஜி.ஆர். ஒருவரே !

    திரு. சிவாஜி கணேசன், சிறந்த நடிகர்களில் ஒருவர் என நாங்கள் மறுத்தது கிடையாது. ஏன் என்றால் .நாங்கள் ஏற்றுகொண்ட தலைவன் எம். ஜி. ஆர்.
    அவர்களே பல முறை இதனை கூறி இருக்கிறார். மேலும், திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த " தில்லானா மோகனாம்பாள் " திரைப்படத்தை அயல் நாட்டு
    கலைஞர்கள் மற்றும் மற்றும் குழுவினர் தமிழகம் வந்த போது அவர்களுக்கு திரையிட்டு காண்பித்த பெருந்தன்மை எங்கள் கலைவேந்தனுக்கு உண்டு. சில
    சாதனைகள் செய்து உள்ளார் .நம்புகிறோம் .

    தமிழகத்தின் 7 அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படம் :"எங்கள் வீட்டு பிள்ளை" புரட்சித் தலைவர் எம். ஜி.ஆர். அவர்கள் 1977ம் ஆண்டில்,
    திரையுலகை விட்டு விலகும் வரை இந்த சாதனை முறியடிக்கப்பட வில்லை. அவ்வாறே 25 அரங்குகளில் (தமிழகம், கர்நாடகம், இலங்கை உட்பட) 100 நாட்கள் ஓடிய கலைவேந்தனின் காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்" சாதனையும் முறியடிக்கப்படவில்லை.

    சென்னை மாநகரில் குளிர் சாதன வசதி பொருந்திய சாந்தி அரங்கில் வெளியிடப்பட்ட பல படங்களின் அதிக நாட்கள் வசூலை மிக குறுகிய நாட்களிலேயே
    எங்கள் மக்கள் திலகத்தின் "ரிக்ஷாக்காரன்" படம் முறியடித்தது. அதே போன்று அந்த காலத்தில், சென்னை "சத்யம்" அரங்கில் வெளியான அனைத்து
    படங்களின் வசூலையும், புரட்சித்தலைவரின் "இதயக்கனி" திரைப்படம் முறியடித்து ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது.

    இவ்வளவு ஏன் ? திரு. சிவாஜி கணேசன் அவர்களை வைத்து பல படங்களை தயாரித்த திரு. முக்தா சீனிவாசனே, பல நடிகர்களின் பல வெற்றிப்படங்களை, மக்கள் திலகத்தின் சாதாரண படங்களே புறந்தள்ளிவிட்டதை "இதயக்கனி" வெற்றி விழாவில் குறிப்பிட்டு பேசி உள்ளார். இத்தனைக்கும், அவர் ஒரு கரை கண்ட மூத்த சினிமா தயாரிப்பாளர். (புரட்சித் தலைவர் அவர்களை வைத்து எந்த படமும் தயாரிக்காதவர் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது)

    எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் நடிக்க வந்த காலம் தொட்டு எதிர்ப்பிலேயே வளர்ந்தவர். அவருக்கு, ஆதரவான - சாதகமான சூழ்நிலைகள்
    என்று பார்த்தல் சொற்ப வருடங்களே ! (1967 - 1971 வரை) அரசியலில் அவர் தி.மு.க. வை சார்ந்திருந்த காரணத்தால் அன்றைய ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் தொந்தரவுகளும் இருந்தன. தொடர்ந்து, 1972ம் ஆண்டு முதல் 1976 வரை அவர் சந்திந்த இன்னல்களும், கொடுமைகளும் என்னென்று சொல்வது) (நேற்று-இன்று-நாளை மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் இந்த இரு படங்களையும் அவர் வெளியிடுவதற்கு அவர் பட்ட பாடு இருக்கிறதே ... அப்பப்பா சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. வேறு எந்த நடிகராக இருந்திருந்தால், நமக்கு திரையுலகமும் வேண்டாம், அரசியலும் வேண்டாம் என்று அந்தர் பல்டி அடித்து ஓடியிருப்பார்கள் அல்லது சரணாகதி அடைந்திருப்பார்கள். இதில் பாராட்ட வேண்டிய அம்சம் என்னவென்றால் இந்த இரண்டு படங்களும் அன்றைய ஆட்சியாளர்களின் அடக்கு முறையை எதிர்த்து வெற்றிக் கொடி நாட்டியது. )

    1972ம் ஆண்டு புரட்சித் தலைவர் கட்சி ஆரம்பித்த போது, நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்க தலைவராக இருந்தார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக திரு. ஏ. எல். சீனிவாசன் அவர்கள் இருந்தார். அவரது காலத்து நடிகர்கள் பலரும், சக நடிகர் ஒருவர் கட்சி ஆரம்பித்துள்ளாரே என்று அவரை ஆதரிக்கவோ அல்லது குறைந்த பட்சம் ஒரு வாழ்த்து அல்லது பாராட்டி ஓர் அறிக்கையோ விட முன் வராதது துரதிர்ஷ்டமே. அன்றைய ஆட்சியாளர்களை தனி ஒருவராக, ரசிகர்களின் ஆதரவை மட்டுமே நம்பி, எதிர் கொண்டார் எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். இந்த நிலைமை வேறு ஏதாவது ஒரு நடிகருக்கு ஏற்பட்டிருக்குமாயின், முதல் ஆதரவுக்குரல் எங்கள் புரட்சி தலைவரிடமிருந்து தான் வந்திருக்கும்.

    ஆனால், திரு. சிவாஜி கணேசன் அவர்களுக்கு இது போன்ற எந்த நெருக்கடியும் எந்த காலத்திலும் இருந்ததில்லை. அரசியல் ஆதிக்கவாதிகளின் எதிர்ப்பையே சமாளித்து, மீறி தமிழ் திரையுலகில் வெற்றி பெற்றவர் எங்கள் எம். ஜி. ஆர். என்பதை நாட்டு மக்கள் நன்கறிவர்.

    நான் சிவாஜி கணேசன் அவர்கள் மடியில் தவழ்ந்தவன் என்று இன்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் திரு. கமலஹாசன் அவர்கள் தனது "ராஜ பார்வை" 100 வது நாள் விழாவில், முதல்வராக இருந்த எங்கள் புரட்சித் தலைவரை சிறப்பு விருந்தினராக அழைத்தார். அவ்விழாவில் உரையாற்றிய எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள், " நானும், தம்பி கணேசனும் ஒன்றிலிருந்து நூறு வரை வந்து விட்டோம். எனவே, திரு. கமலஹாசன் அவர்கள் 101லிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று" இதயந்திறந்து கூறினார். அந்த மேடையில் விழாவில் அழைக்கப்படாத திரு. சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை, தமிழக முதல்வராக இருந்த எங்கள் புரட்சித்தலைவருக்கு.

    எங்கள் புரட்சித்தலைவர் அவர்கள் எதற்கும் அஞ்சியது கிடையாது. எதிரிகளுக்கு தோல்வியை பரிசளித்தே பழக்கப்பட்டவர்.
    முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகி விடவும் முடியாது.

    உங்களைப் போன்றோர் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ள மறுத்தாலும் சரி, இதுதான் உண்மை. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி. ஆர். சாதனைகள் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியது. .

    உங்கள் அபிமான நடிகரின் சாதனைகளை நீங்கள் பதிவிட்டுக் கொள்ளுங்கள். எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் சாதனைகளை தெரிவிக்கும் போது அதில் குறுக்கீடு செய்வது, விதண்டா வாதம் புரிவது போன்றவைகளால் தான் கருத்து வேறுபாடுகள் எழுகின்றன. எனவே இத்துடன் முடித்துக் கொள்வது நலம் என்று கருதுகிறேன்.

    தொடரலாம் என்று நீங்கள் கருதினால் நானும் பழைய விவகாரங்களை எல்லாம் ஆதாரத்துடன் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அதற்கு வாய்ப்பு வழங்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    அடங்கொப்புரானே சத்தியமாய் எம். ஜி. ஆர். வசூல் சக்கரவர்த்தி தான். இதை ஒப்புக் கொள்ள மறுத்தாலும் அவர் தான் என்றும் வசூல் சக்கரவர்த்தி !



    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் .

    கலைவேந்தன்

  4. #893
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு சுந்தரராஜன் அவர்களின் வருகைக்கு
    எனது வாழ்த்துக்கள்
    கோபு

  5. #894
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    திரு சிவா - திரு கோபால் : எனக்கு பதில் தந்த உங்கள் இருவருக்கும் அன்பு வணக்கம் !

    எம்ஜிஆர் - சிவாஜி இருவரும் சாதனையாளர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை, எங்கள் பார்வையில்.

    கலை வேந்தன் சார்,

    அம்மாடியோவ் ,ஒரு சின்ன பதிவுக்கு இவ்வளோ பெரிய விளக்கமா?

    ஒரு நடிகரின் செல்வாக்கு என்ற விதத்தில் ,சிவாஜியின் செல்வாக்கு ,1952 இலேயே தொடங்கி விட்டது. ஆனால் P .U .சின்னப்பா கிளாஸ்மேட் மலைக்கள்ளன் வரை காத்திருக்க வேண்டி வந்தது.பராசக்தி வந்த அன்று முதல்,சமுக படங்களில் நடிக்கும் துணிவு ,1961 வரை எம்.ஜி.ஆருக்கு இல்லை.விட்டு விடுவோம். சரித்திர படங்களில் நடித்து பேர் வாங்குவோம் என்றாலும்,மனோகரா வெற்றி ஆசையில் மண் போட்டு விட்டது.வீட்டில் இருந்தவருக்கு பிரேக் கொடுத்தவர் சிவாஜி.

    பக்ஷி ராஜா வீட்டு வாசலில் கெஞ்சி நிற்க, கோவை சென்று நடிக்க முடியாத சிவாஜி,adventure படங்களுக்கு அண்ணனை போடுங்கள் என்ற பிறகு ,அந்த படத்தினால்(மலை கள்ளன்) வாழ்வு பெற்றார்.

    பிறகு கூட சிவாஜி அளவு தொடர்ச்சியாக வெற்றி கொடுத்ததாக எந்த காலமும் இல்லை. 65 வரை சிவாஜி கொடிதான். எம்.ஜி.ஆருக்கு நாடோடி மன்னன்,எங்க வீட்டு பிள்ளை இரண்டுதான் சூப்பர் ஹிட் ரகம். இந்த கால கட்டத்தில் சிவாஜிக்கு எத்தனை superhit படங்கள். எண்ண கைகள் போதாது. A சென்டர் களில் திருவிளையாடல் ,எங்க வீட்டு பிள்ளையை முந்தியது.கர்ணன் -வேட்டை காரனில் ,கர்ணன்தான் வசூல் அதிகம். ஆனால் படகோட்டி-நவராத்திரி போட்டியில் ,படகோட்டியின் மண் கவ்வல் மறைக்க பட்டது(நீரும் நெருப்பும்-பாபு தெரிந்த கதை).எம்.ஜி.ஆர் pictures ,ஆர்.எம்.வீ தவிர்த்து எந்த படங்கள் பெரிசாக சாதித்தன?(மாட்டு கார வேலன் ஒன்றுதான்).

    சிவாஜியை மீறி எந்த நடிகரும் நடிப்பிலும் சாதிக்கவில்லை. பாக்ஸ் ஆப்பிஸ் மன்னரும் சிவாஜி ஒருவரே. தன் படங்கள் வந்தால் ஒரு வருடம் எந்த படங்களும் வராமல் பார்த்து கொண்ட (நாடோடி மன்னன்,அடிமை பெண்,உ .சு .வா) பயம் எங்கே?சிவந்த மண்ணிற்கு ,ஒரு மாதம் முன்பு படம் வெளியிடும் தில் எங்கே?புதிய பறவை,வியட்நாம் வீடு,தங்க பதக்கம் எல்லா படத்தையும் போலத்தானே போட்டியுடன் (வேறு யார்,எங்களுக்கு நாங்களே)ரிலீஸ் செய்ய பட்டு சாதித்தது?

    உலகே அறிந்த பராசக்தி வெள்ளிவிழா வெற்றிக்கு ,உங்கள் certificate மட்டுமே அவசியம் என்ற நிலை இல்லை.உங்கள் நகையுணர்வை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

    ஒரு முக்குலத்தை சேர்ந்த ,மிகவும் பிற்பட்ட தமிழர், வாழ்க்கையில் ,திறமை ஒன்றினால் மட்டுமே சாதித்ததை பார்த்து வயிரெறிய ,இத்தனை கலை ,தமிழ் நெஞ்சங்களா?இந்த லட்சணத்தில் தமிழனாக வாழ்வதில் பெருமை கொள்ள வேண்டுமாம்.

    தயவு செய்து ,நாங்கள் சும்மா இருக்க விடுவீர்கள் என்று நம்பி ,இத்துடன் விடுகிறோம். ஒப்பீடு நிகழ்த்தினால் இழப்பு உங்களுக்கே.எங்களுக்கு தொடர விருப்பமில்லை. எங்களிடம் ஆதாரங்கள் இல்லை, எங்களுக்கு விவரமே தெரியாது என்று நினைக்கிறீர்களா?நான் இது வரை ,எங்கள் தெய்வத்தின் புகழை மட்டுமே பாடி வந்தேன்.நீங்கள் திரியில் வந்து அனாவசிய குழப்பம் செய்கிறீர்கள்.தயவு செய்து,அவரவர் வேலையை பார்ப்போம்.நட்பாக தொடர்வோம்.
    Last edited by Gopal.s; 13th August 2014 at 08:54 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #895
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜிக்கு எதிர்ப்பில்லையாம். அவருக்கில்லாத எதிர்ப்பா?வாசன் போன்றோர்,மணியன் போன்றோர் ஆனந்த விகடன் ,தினத்தந்தி,முரசொலி,ராணி ,கல்கண்டு ,இதயம் பேசுகிறது பத்திரிகைகள் (குமுதம்,துக்ளக்,சாவி மட்டுமே விதிவிலக்கு) அனைத்துமே கங்கணம் கட்டி எதிர்க்கவில்லையா?பராசக்தியில் தொடங்கிய எதிர்ப்பு,தி.மு.கவில் அவர் பெற்ற செல்வாக்கை கண்டு எதிர்ப்பு,56 முதல் 72 வரை ,எந்த நிறுவன பலமும் ,அரசியல் பலமும் இல்லாமல் எத்தனை எதிர்ப்புகள்?சாதனை மறுப்புக்கள்?திரிப்புகள்?ராஜதந்திரம் என்ற பெயரால்,நட்பு தயாரிப்பாளர்களுக்கு வலை வீச்சு ஒரு புறம்.(மாறி போனவர்கள் இறுதியில் பல்லவன் பஸ் சில் பயணித்து உயிர் விட்டனர் )

    அவரின் திரை செல்வாக்கை மறைக்க நடந்த சதிகள் கொஞ்சமா நஞ்சமா?துப்பாக்கி சூட்டில் சம்பந்தமே படாத அவரின் படங்கள் ஓடும் திரையரங்குகளில் ரசிகர்களுக்கெதிராக ,படங்களுக்கெதிராக நடத்த பட்ட வன்முறை வெறியாட்டங்கள் கொஞ்சமா?

    எதிர்ப்பிலேயே வளர்ந்தவர் சிவாஜி என்று சொன்னது கண்ணதாசன்.

    நண்பரே, அவரவர் செய்த சாதனைகள் உலகிற்கே தெரியும். நீங்களும் ,நானும் சண்டையிட்டு லாபமென்ன?இன்றைய பல கோடிகள் புரளும் திரையுலகு,அக்கால ஆயிரங்களை,லட்சங்களை பற்றி இன்றைய தலைமுறையை அக்கறை கொள்ள வைக்காது.வசூல்களை பற்றி விவரிப்பதில் நேரம் செலவிடும் ஆசையும் எங்களுக்கில்லை.
    Last edited by Gopal.s; 14th August 2014 at 04:01 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Thanks kalnayak, Russellbpw, Harrietlgy thanked for this post
  8. #896
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    1952 இலிருந்து 1978 வரை,தமிழ் திரையுலகில் உச்ச பட்ச வசூல் ஈட்டிய 2 படங்கள் வருட வாரியாக..

    1952- Parasakthi(Sivaji)

    1953- Ovvayar,Devadas

    1954-Manohara(Sivaji),Rathakanneer

    1955-Missiyamma,Kanavane Kan Kanda deivam

    1956-Madurai veeran(MGR),Mangaiyar Thilagam(Sivaji)

    1957-Makkalai Petra Magarasi(Sivaji),Maya Bazaar

    1958-Nadodi Mannan(MGR),Uthamaputhiran(Sivaji)

    1959-Veerapandiya Kattabomman(Sivaji),Bhagapirivinai(Sivaji)

    1960-Padikkatha Methai(Sivaji),Deivapiravi(Sivaji)

    1961-Pava Mannippu(Sivaji),Pasa Malar(Sivaji)

    1962-AlayaMani(Sivaji),Nenjil oor Alayam

    1963-Karpagam,Nanum Oru Penn

    1964-Kathalikka Neramillai,Kai Kodutha Deivam(Sivaji)

    1965-Enga Veetu Pillai(MGR),Thiruvilaiyadal(Sivaji)

    1966-Saraswathi sabatham(Sivaji),Anbe Vaa(MGR)

    1967-Naan, Kaval Karan(MGR)

    1968-Kudiyiruntha Koil(MGR),Panama Pasama

    1969-Adimaipenn(MGR),Sivantha Mann(Sivaji)

    1970-Mattukara Velan(MGR),Engiruntho vanthal(Sivaji)

    1971-Rikshaw Karan(MGR),savale Samali(Sivaji)

    1972-Vasantha Maligai(Sivaji).Pattikkada Pattanama(Sivaji)

    1973-Ulagam sutrum valiban(MGR),Engal thanga Raja(Sivaji)

    1974-Urimai Kural(MGR),Thanga Pathakkam(Sivaji)

    1975-Idaya Kani(MGR),Avanthan manithan(Sivaji)

    1976-Annakili,Badrakali

    1977-Aatukkra Alamelu, Annan oru Koil(Sivaji)

    1978-Thyagam(Sivaji),Sivappu Rojakkal.

    Sivaji movies figured in top collections on 25 times in 27 years and M.G.R movies figured in top collections on 12 times in 27 Years.



    Mr.Pammalar's Corrections.

    டியர் கோபால் சார்,

    தங்களது பதிவில், சில வருடங்களில் சில சிறுதிருத்தங்கள்:

    1954 : மனோகரா(ந.தி.), மலைக்கள்ளன்(ம.தி.)

    1955 : கணவனே கண்கண்ட தெய்வம்(ஜெமினி), மிஸ்ஸியம்மா(ஜெமினி)

    1956 : மதுரை வீரன்(ம.தி.), அமரதீபம்(ந.தி.)

    1957 : மாயாபஜார்(ஜெமினி), வணங்காமுடி(ந.தி.)

    1958 : நாடோடி மன்னன்(ம.தி.), பதிபக்தி(ந.தி.)

    1965 : திருவிளையாடல்(ந.தி.), எங்க வீட்டுப் பிள்ளை(ம.தி.)

    1970 : மாட்டுக்கார வேலன்(ம.தி.), சொர்க்கம்(ந.தி.)

    1974 : தங்கப்பதக்கம்(ந.தி.), உரிமைக்குரல்(ம.தி.)

    [ந.தி. : நடிகர் திலகம், ம.தி. : மக்கள் திலகம்]

    [நடிகர் திலகத்தின் "மங்கையர் திலகம்" 1955-ல் வெளிவந்த திரைக்காவியம், வெளியான தேதி : 26.8.1955]

    அன்புடன்,
    பம்மலார்.
    Last edited by Gopal.s; 13th August 2014 at 10:32 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #897
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    silver jublee nayagan is only our hero DEIVAMAGAN NADIGAR THILGAM who is uncomparable with any actor.Ennikkai theriyathavargal pavam vittu viduvom.

  10. #898
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    Hearty welcome to SUNDARA RAJAN.

  11. #899
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அன்பு நண்பர் கலைவேந்தன் சார் அவர்களுக்கு,

    வணக்கம். சென்ற முறை போல் அல்லாமல் புண்படுத்தும் வார்த்தைகளை பெருமளவில் தவிர்த்து பதிவிட்டதற்கும் முதன் முதலாக உங்களைப் போன்றோர் நடிகர் திலகமும் சில சாதனைகளை செய்திருக்கிறார் என்று பெரிய மனத்தோடு ஒப்புக் கொண்டதற்கும் நன்றிகள்.

    இனி நீங்கள் பதிவில் சொன்ன பல விஷயங்களையும் அவற்றுக்கான எங்களின் பதில்களும்.

    பராசக்தி திருச்சி வெலிங்டன் அரங்கில் 245 நாட்களும் கொழும்பு மைலன் அரங்கில் 294 நாட்கள் ஓடியதற்கும் எந்த வித ஆதாரமும் இல்லை. ஆகையால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது ஒன்று. இங்கே ஆதாரம் என்று நீங்கள் குறிப்பிடுவது நாளேடுகளில் வந்த விளம்பரம் என்று நான் புரிந்து கொள்கிறேன். விளம்பர ஆதாரம் இல்லை என்றால் ஒத்துக் கொள்ள முடியாது என்றால் நீங்கள் வெள்ளி விழா படம் என்று தூக்கிப் பிடிக்கும் மதுரை வீரன் படத்திற்கும் விளம்பர ஆதாரம் இல்லையே நண்பரே! அதனால் மதுரை வீரன் மதுரை சென்ட்ரலில் வெள்ளி விழா ஓடவில்லை என்று நாங்கள் சொல்லலாமே! வெள்ளி விழா விளம்பரத்தை விடுங்கள். உங்கள் இணைய தளங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மதுரை வீரன் 100 வது நாள் விளம்பரமே பொய்யாக உருவாக்கப்பட்டதுதானே. 40 அரங்குகளில் 100 நாட்கள் என்று சொல்லும் அந்த ஆதாரம் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் இதோ.

    அதில் 100 நாட்கள் ஓடியதாக குறிப்பிட்டிருக்கும் பட்டுக்கோட்டை முருகைய்யா கதை தெரியுமா? குடியரசு தலைவர் பதவி வகித்த R.வெங்கடராமன் 1957-62 காலகட்டத்தில் பெருந்தலைவர் அமைச்சரவையில் தொழில் துறை மந்திரியாக இருந்தபோது 1961-ல் தன்னுடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் ஒரு காங்கிரஸ் பிரமுகரால் கட்டி முடிக்கப்பட்ட திரையரங்கை திறந்து வைத்தார். அந்த அரங்குதான் முருகையா. தியேட்டர் வளாகத்தில் RV 1961-ல் திறந்து வைத்தபோது நிறுவப்பட்ட கல்வெட்டு இருக்கிறது. 1961-ல் தான் தியேட்டரே திறக்கப்பட்டது. ஆனால் 1956 ஏப்ரலில் வெளியான மதுரை வீரன் அங்கே 100 நாட்கள் ஓடியதாக விளம்பரம் தயார் செய்யும் நீங்கள் சிவாஜி ரசிகர்களின் நேர்மையை பற்றி பேசுகிறீர்கள். காமடியாக இல்லை?. அந்த லிஸ்டில் இன்னும் நிறைய காமடிகள் இருக்கின்றன. அது தற்காலம் வேண்டாம்.

    இனியும் சொல்கிறேன். அலிபாபா வெளியானது 12.01.1956. சென்னை சித்ரா பிரபாத் சரஸ்வதி. அடுத்த படம் மதுரை வீரன் வெளியான நாள் 13.04.1956. சென்னையில் அதே சித்ரா பிரபாத் சரஸ்வதி. ஜனவரி 12 முதல் ஏப்ரல் 12 வரை அலிபாபா ஓடியிருந்தாலே 92 நாட்கள்தான் வரும். [மார்ச் 31 அன்றே வேறு படம் வெளியாகி விட்டது என்றும் சொல்வார்கள் வாதத்திற்காக அதை கூட மறந்து விடுவோம்] அதிக பட்சமாக 92 நாட்கள் மட்டுமே ஓடியிருக்க வாய்ப்புள்ள அலிபாபா சென்னையில் மூன்று திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடியது என்று இத்தனை வருடங்களாக சொல்லிக் கொண்டிருகிறீர்களே இதை விடவா வேறு ஒருவர் அள்ளி விட முடியும்?

    இனி நீதி. சென்னையிலும் சேலத்திலும் 99 நாட்கள் ஓடியது. ராஜ ராஜ சோழன் சென்னையில் 98 மதுரை திருச்சி கோவை சேலம் முதலிய நகரங்களில் 97 நாட்கள ஓடியது. இலங்கையில் 103 நாட்கள் என்று ஒரு தகவல் உண்டு. ஆனால் அங்கே பௌர்ணமி தினங்களில் காட்சிகள் கிடையாது என்றும் அந்த நாட்களை விட்டு விட்டுதான் கணக்கெடுக்க வேண்டும் என்றும் ஒரு விஷயம் சொல்வார்கள். பௌர்ணமியை சேர்த்தால் 100 நாட்கள் வரும் என்றும் உறுதிபடுத்தப்படாத தகவல் உண்டு. சரி அதை கூட விட்டு விடுவோம். 99 நாட்கள் அல்லது 98 நாட்கள் ஓடிய படங்கள் கணக்கில் வராது என்றால் உங்களிடம் ஒரு கேள்வி. இப்போது சென்னை சத்யம் அரங்கில் தினசரி ஒரு காட்சி மட்டும் ஓடும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 150 நாள் என்று சொல்கிறீர்கள். 22 வாரத்தில் சுமார் 18 வார வியாழகிழமைகளில் ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிடப்படவில்லை. சத்யம் வளாகத்தில் Blind date என்ற கான்செப்ட் உண்டு. வியாழன் மாலைக்காட்சியன்று வளாகத்தில் ஒரு ஸ்க்ரீனில் என்ன படம் என்று தெரியாமல் டிக்கெட் வாங்கி உள்ளே சென்று அமர்ந்து படம் துவங்கும் போதுதான் என்ன படம் என்று தெரிய வரும். அதற்காக 18 வாரங்கள் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்படாமல் நிறுத்தப்பட்டது. ஆக 150 நாட்களில் 18 நாட்கள் அவுட். அதுவும் தவிர 13 நாட்கள் படம் ஓடும். 14வது நாள் படம் இல்லை. பின் 15 முதல் 20வது நாள் வரை ஓடும். 21ம் நாள் இல்லை. மீண்டும் 22வது நாள் என்று சொல்வார்கள். இப்படி தொடர்ச்சியாக ஓடாமல் 18 வியாழன் மாலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் 150 நாள் என்றால் நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமாம். 100 நாட்களுக்கு ஒரு நாள் குறைவாக ஓடியதாம். அதனால் 100 நாள் கணக்கு வராதாம். நல்ல கணக்கு சார் உங்கள் கணக்கு.

    திருடன் 100 நாட்கள் என்று சொன்னது இலங்கையில். ராஜபார்ட் ரங்கதுரை சேலத்தில் 100 நாட்கள் ஓடியதாக தகவல் உண்டு. ஆனால் அதற்கு விளம்பர ஆதாரம் கைவசம் இல்லை. அதனால் ஒத்துக் கொள்ள முடியாது என்றால் அதே தராசை உங்களுக்கு நிறுத்துப் பார்த்தால், சேலத்தில் பரிசு 100 நாட்கள் ஓடியது என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லையே. திருச்சியில் ரகசிய போலிஸ் 100 நாட்கள் ஓடியதற்கு ஆதாரம் இலையே. படகோட்டி 100 நாள் விளம்பரமும் போலிதானே. உண்மை இப்படி இருக்க அதை மறைக்க எங்களை மேல் பழி.



    அன்றைக்கு சென்னை என்று எழுதும்போதும் சரி, பேப்பர்களில் அச்சு கோர்க்கும் போதும் சரி னை என்ற எழுத்திற்கு கொம்பு இருக்கும். சீர்திருத்த தமிழ் வந்த பிறகுதான் னை என்று கொம்பில்லாமல் வர ஆரம்பித்தது. இந்த விளம்பரத்தை பாருங்கள், கொம்பில்லாத சீர்திருத்த னை.

    விளையாட்டுப் பிள்ளை 100 நாட்கள் ஓடியது என்று இந்த திரியில் எங்குமே சொல்லப்பட்டதில்லை. சுமார் 6,7 வருடங்களுக்கு முன்னரே அந்த படம் எங்கள் மதுரையில் நியூசினிமாவில் 84 நாட்கள் ஓடியது என்றும் (திருச்சியிலும்) பின் வெள்ளைக்கண்ணுவிற்கு மாற்றப்பட்டு ஷிப்டிங்கில் 100 நாட்களை நிறைவு செய்தது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

    1960 முதல் 1965 வரை நடிகர் திலகத்தின் படங்கள் ஓடியது உண்மை. ஆனால் உடனே உடனே எம்ஜிஆர் படங்கள் வந்து அவற்றை வென்றது என்று ஒரு statement. 1960-ல் படிக்காத மேதையும், தெய்வப் பிறவியையும் இரும்பு திரையையும் வென்ற ஒரு எம்ஜிஆர் படத்தை காட்டுங்கள். 1961-ல் பாவ மன்னிப்பு, பாசமலர் என்று இரண்டு வெள்ளி விழா படங்கள் மற்றும் பாலும் பழமும் என்ற 20 வார படத்தையும் வென்ற எம்ஜிஆர் படம் எது? 1962-ல் பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, ஆலய மணி ஆகிய 100 நாட்கள் படங்களுக்கு எதிரே ஒரு ஒரு தாயை காத்த தனயன். 1963-ல் சென்னையில் ஒரே ஒரு தியேட்டரில் மட்டும் ஓடிய பெரிய இடத்துப் பெண், மதுரையில் மட்டும் ஓடிய நீதிக்கு பின் பாசம் இருவர் உள்ளமோ பல்வேறு அரங்குகளில் 100 நாட்கள். அது தவிர அன்னை இல்லம் 100 நாட்கள். 1964-ல் சென்னையில் 5 படங்கள் [கர்ணன், பச்சை விளக்கு, கை கொடுத்த தெய்வம், புதிய பறவை, நவராத்திரி] 15 அரங்குகளில் 100 நாட்கள். இது வரை முறியடிக்கப்படவில்லை. மதுரையில் 4 படங்கள். திருச்சியில் 3 படங்கள். உங்களுக்கோ பணக்கார குடும்பம் தவிர [அது கூட 5 அரங்குகள்தான். கோவை சுவாமி மற்றும் சேலம் அரங்குகள் ஷிப்டிங்] பெரிய வெற்றி எதுவுமில்லை. வேட்டைக்காரன் 2 ஊர்கள், தெய்வ தாய் சென்னை மட்டும், படகோட்டி சென்னை ஒரு தியேட்டர் [அதுவும் சந்தேகம்].

    உண்மை இப்படி இருக்க நடிக்க வந்து சுமார் 30 வருடம் கழித்துத்தான் தலைநகர் சென்னையில் முதல் வெள்ளி விழா படம் கொடுத்தவர் மேற் சொன்ன வருடங்களில் எந்த வருடமும் சிவாஜியை வெல்ல முடியாத ஒருவர், அவர்தான் வசூல் சக்கரவர்த்தி என்று நீங்கள் சொன்னால்?

    அடுத்து 1971-ல் நடிகர் திலகத்திற்கு 7 தோல்வி படங்கள் என்று ஒரு statement. அவர் நடித்த படங்கள் 10. அதில் 100 நாட்கள் ஓடியவை மூன்று படங்கள். குலமா குணமா சவாலே சமாளி மற்றும் பாபு. அது போக மற்ற படங்கள் எல்லாம் தோல்வி என்று நீங்கள் குறிப்பிடுவதாக நான் புரிந்துக் கொள்கிறேன். 100 நாட்கள் ஓடாத படங்கள் எல்லாம் தோல்வி படங்கள் என்றால் 12 வாரங்கள் ஓடியுள்ள படங்களும் தோல்வி பட்டியலில்தான் சேரும் என்றால் எம்ஜிஆர் நடித்து 100 நாட்கள் ஓடாத பல படங்களும் தோல்வி படங்களே என்று நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். அதற்கு நன்றி.

    1971-ல் வெளியான ரிக்ஷாக்காரன் அதுவரை சாந்தியில் வெளியான படங்களின் வசூலை முறியடித்து விட்டது என்று ஒரு வாதம். ஆமாம் 1961 முதல் வெளி வந்த படங்களின் கணக்கு என்றால் அன்றைய டிக்கெட் ரேட் என்ன? 1971-ல் ரேட் என்ன? ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டோம் என்றால் கூட அதன்பின் வந்த ராஜா 50 நாட்களில் 51 நாட்கள் ரிக்க்ஷாகாரன் வசூலை தாண்டியதே.



    அது கூட வேண்டாம். குறைந்த நாட்கள் கூடுதல் வசூல் என்ற உங்கள் தராசுபடியே மதுரை நியூசினிமாவில் ரிக்க்ஷாகாரன் 161 நாள் வசூல் Rs 4,09,000 சொச்சம். அதே மதுரையில் சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா வெறும் 98 நாள் வசூல் Rs 4,10,000 சொச்சம். வெறும் வாய் வார்த்தை அல்ல .இதோ



    இனி கட்சி ஆரம்பித்த போது ஆதரிக்கவில்லை. எப்படி சார்? அவர் நடிகர் மட்டுமல்ல அன்றைய ஸ்தாபன காங்கிரஸ் உறுப்பினர். இரண்டு கழகங்களுமே ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என்பது ஸ்தாபன காங்கிரஸ் நிலைப்பாடு. எப்படி அவர் வேறு நிலை எடுக்க முடியும்? அதே நேரத்தில் நீங்கள் குறிப்பிட்ட உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு ரிலீஸ் சமயத்தில் பிரச்சனை ஏற்பட்டபோது ஒப்பந்தம் செய்த தியேட்டர்கள் பின் வாங்கினால் அண்ணனின் படத்தை சாந்தியிலும் கிரவுன் புவனேஸ்வரியிலும் நான் திரையிடுகிறேன் என்று முன் வந்தாரே நடிகர் திலகம் அதுதான் நடிகர் சங்க தலைவராக மட்டுமல்ல சக நடிகனுக்கு உற்ற நேரத்தில் தோள் கொடுத்த மாண்பும் கூட. உங்கள் வாதத்திற்காக இதை நீங்கள் மறைக்கலாம். ஆனால் வரலாறு தெரிந்த சிவாஜி ரசிகனிடமேவா?

    அது போல் 1967 முதல் 1972 அக்டோபர் வரை ஆளும் கட்சி. அதை சந்தடி சாக்கில் 1971 என்று குறைத்து காண்பித்தாகி விட்டது. படத்தை வெளியிடுவதற்கு அரசியல் எதிர்ப்பு நெருக்கடி என்று ஒரு வாதம். இதய வீணை முதல் பல்லாண்டு வாழ்க வரை 10 படங்களில் 2 படங்களுக்குதானே நெருக்கடி. மீதி 8 படங்களும் இலையே. இன்னும் சொல்லப் போனால் அரசியல் நெருக்கடி தீர்ந்த 1976 ஜனவரி 30-கு பிறகு எம்ஜிஆர் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லையே.

    முக்தா சரியான data கையில்லாமல் இதயக்கனி மட்டுமே அந்த வருடத்தில் சென்னையை தாண்டியும் 100 நாட்கள் ஓடியது என்று .தவறான தகவல் தந்தார். அதே ஆண்டில் 1975-ல் அவன்தான் மனிதன் சென்னையை தாண்டி ஓடியதை அவர் பாவம் மறந்து விட்டு பேசினார். அதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு பேசலாமா?



    இரண்டு படங்கள் (ஒன்று 100 நாட்கள் மற்றொன்று வெள்ளி விழா) செய்த சாதனைகளை அவர் திரையுலகிலிருந்து விலகும் வரை முறியடிக்கப்படவில்லை என்று ஒரு வாதம். நண்பரே அந்த சாதனை அவர் திரையுலகை விட்டு விலகிய ஒரே வருடத்தில் முறியடிக்கப்பட்டு விட்டது. அதை பெரிதாக சொன்னால் தமிழகம் கூட வேண்டாம் எங்கள் மதுரையை மட்டும் எடுத்துக் கொள்வோம் அன்று முதல் இன்று வரை ஏன் இனி என்றுமே முறியடிக்கப்படாத சாதனைகள் என்று ஒரு டசன் சாதனைகள் என்னால் சொல்ல முடியும். ஒரு சில

    ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகி 100 நாட்கள் ஓடியது

    ஒரே காலண்டர் வருடத்தில் இரண்டு வெள்ளி விழா படங்களை மூன்று முறை கொடுத்தது

    1958 முதல் 1979 வரை தொடர்ந்து 22 வருடங்கள் இடைவெளி இல்லாமல் 100 நாட்கள் படங்களை கொடுத்தது

    சிவாஜி தான் நடிக்க வந்த 1952 முதல் எம்ஜிஆர் திரையுலகை விட்டு விலகிய 1978 வரை மதுரையில் 48 நூறு நாட்கள் படங்களை கொடுத்தது. 1936 முதல் 1978 வரை எடுத்தாலும் உங்களுக்கு அதை விட குறைவுதான்.


    இனி சிவாஜி எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று ஒரு வாதம். காரணம் அன்றைய நாளிலும் சாதனை புரியவில்லை. இன்றைய நாளிலும் இல்லை. அரசியலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். இப்படி முதல் வெளியிட்டிலும் சாதிக்காமல் மறு வெளியிடுகளிலும் சோபிக்காமல் அரசியலிலும் வெற்றி பெறாமல் ஒரு சில ஆயிரங்கள் ரசிகர்கள் மட்டுமே உடைய ஒரு மனிதனை அவன் இந்த பூமியில் இருந்து மறைந்து 13 ஆண்டுகள் ஆன பிறகும் எந்த வித கட்சி ஆட்சி அதிகார பலம் ஆள் பலம் பண பலம் என்ற எந்த வலுவான பின்புலங்களும் இல்லாத ஒரு மனிதனை நீங்கள் நடத்தும் பருவ இதழில் மாதம் மாதம் திட்டுவது, உங்கள் இணைய தளங்களில் வசை மாறி பொழிவது, போஸ்டர் அடித்து திட்டுவது என்று நீங்கள் செய்யும் போதே தெரியவில்லையா நீங்கள் எந்தளவிற்கு சிவாஜி சேனாவை பார்த்து மனம் பதறுகிறீர்கள் என்று?

    நீங்கள் ஆஸ்திரேலியா டீம் ஆக இருந்தால் ஆப்கானிஸ்தான் பற்றி பயம் வராது.

    நீங்கள் Roger Federar ஆக இருந்தால் Rohan Bopanna பற்றி கவலை வராது

    நீங்கள் Manchester United ஆக இருந்தால் Mohan Bagan பற்றி அச்சமிராது.

    நண்பரே எங்களுக்கும் உங்களோடு லாவணி பாட நேரமில்லை. இந்த பதில் போதும் என நினைக்கிறேன்.

    இறுதியாக ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து ஒரு punch dialogue எழுதியிருகிறீர்கள். எங்கள் படத்தில் அது போன்ற punch dialogues கிடையாது. எனவே இந்த பதிவை நிறைவு செய்ய உங்கள் பட punch வரிகளையே எடுத்துக் கொள்கிறேன்.

    காலத்தை வென்றவர் இருக்கலாம். ஆனால்

    கணேசனை வென்றவர் இல்லை.

    அன்றும் இன்றும் என்றும்



    அன்புடன்

  12. #900
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    MURALI your brief reply to mr kalaivendan is good enough to keep others silent.
    Neethi 99 days sheild is very much kept in devi paradise till today any body can see if any doubts. I have lived in north madras areas since birth to 1965. to my knowledge no other actor's films other than NT celebrated 100days run at prabhath theatre.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •