http://i1170.photobucket.com/albums/...ps5a6a8d52.jpg
Printable View
விரைவில் எதிர்பாருங்கள் : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும்
"தாய்க்கு தலைமகன் " சென்னை அரங்குகளில்
http://i57.tinypic.com/241uql1.jpg
சென்னை தியேட்டர்களில் விரைவில் வெளியாக உள்ளது. புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். அவர்களின் "முகராசி " - 9 நாட்களில் நடித்து முடித்து 100நாட்கள் ஓடி வெற்றி கண்ட படம்.
http://i59.tinypic.com/fc0580.jpg
மதுரை திரு.எஸ். குமார் (புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர் ) அவர்கள் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார். 02/07/2014
திருமண நிகழ்ச்சி முடிந்ததும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சதுக்கத்திற்கு
சென்று அஞ்சலி செலுத்தியபின் , பேபி ஆல்பட் திரை அரங்கில் என்னுடன்
"ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம் பக்தர்கள் ஆரவாரத்துடன் பார்த்து
மகிழ்ந்தார். பின்பு இரவு பேருந்தில் மதுரைக்கு புறப்பட்டார்.
திரைப்படம் பார்க்கும் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது
திரி நண்பர்களின் பார்வைக்கு.
ஆர். லோகநாதன்
http://i58.tinypic.com/2cdefdg.jpg
திருவாளர்கள்:சாந்தகுமார், ஹயாத்,செல்வகுமார்,, எஸ். ராஜ்குமார் , ராமமுர்த்தி, சங்கர், எஸ். குமார் (மதுரை ), லோகநாதன். ஆகியோர்.
உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா !
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா !
கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம்
கண்டவருண்டோ சொல் என் தோழா
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
காண்பதில் தான் இன்பம் என் தோழா !
இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும்
இன்பம் உண்டாவதில்லை என் தோழா !
அரிய கைத் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா !
பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்
கிட்டுவதே இல்லை என் தோழா !
உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா !
http://i1170.photobucket.com/albums/...ps6206d2b8.jpg
watch from 35:54 what P.Vasu says.
http://www.youtube.com/watch?v=ibiLQKE5DPs
4.7.1977
''நினைத்தை முடிப்பவரின் ''வாழ்க்கையில் திருப்புமுனை - மக்கள் திலகத்தின் ரசிகர்களின் வெற்றி திரு நாள் .
1972 டிசம்பர் மாதத்தில் சட்ட சபையில் மக்கள் திலகத்தை பேச விடாமல் அன்றைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் மிருகத்தனமாக நடந்த சூழலில் மக்கள் திலகம் அவர்கள் '' சட்ட சபை செத்து விட்டது . இனிமேல் இங்கு வர மாட்டேன் என்று சபதம் எடுத்து விட்டு வெளியேறினார் .
54 மாதங்களுக்கு பிறகு மக்கள் திலகமே சட்ட சபை முதல்வராக தேர்ந்தெடுத்த பிறகு 30.6.1977 அன்று முதல்வராக பதவி ஏற்று பின்னர் 4.7.1977 அன்று தமிழக சட்ட சபைக்குள் மாபெரும் வெற்றி வீரராக எடுத்த சபதத்தை முடித்தவராக
மக்கள் திலகம் எம்ஜிஆர் நுழைந்தார் .
வரலாற்றில் இப்படி ஒரு மகத்தான மக்கள் தலைவரை காண்பது அரிது .
நம்முடைய மக்கள் திலகம் திரையில் சமுதாய பிணிகளையும் , உடல் பிணிகளையும் போக்கும் மருத்துவராக நடித்த திரைப்படங்கள்
1. மருத்துவர் சந்திரன் - தர்மம் தலை காக்கும் ஆம் காத்தது முன்று முறை .
2.மருத்துவர் - கதிரவன்- ஆம் கதிரவனை ஆட்சி கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்தது
3.மருத்துவர் மணிமாறன் - இந்த அகிலமே இன்று மட்டும் அல்ல என்றும் சொல்லி கொண்டு இருக்கிறது நீ ஒரு ஆயிரத்தில் ஒருவன் என்று.
04.07.1977
is shortly called 4777. yes many adamk cadres, thalaivar fans and public demanded this car no . i also asked this no for my two wheeler but rto office high officials asked Rs.20,000/- for this lucky no .
மக்கள் திலகம் அவர்கள் பதவி ஏற்ற நேரத்தில் ஓடிகொண்டிருந்த படம் ''இன்று போல் என்றும் வாழ்க ''
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு விதத்தில் மக்கள் திலகம் கலைத்துறை விட்டு விலகியது வருத்தமாக இருந்தாலும் உலக திரைப்பட வரலாற்றில் பல அற்புதங்களை , சரித்திர சாதனைகளை தந்து விட்டார் என்பதை எண்ணி
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பெருமை அடைந்தார்கள் .
மக்கள் திலகம் திரை உலகில் சாதித்த சாதனை துளிகள் .
மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த 115 படங்களில் அதிக வசூல் பெற்று 1977 வரை முதலிடம் பெற்ற படம்
http://i61.tinypic.com/mj7rj8.jpg
''உலகம் சுற்றும் வாலிபன் ''
திரை உலகில் அதிகளவு ரசிகர்களையும் , எம்ஜிஆர் மன்றங்களையும் பெற்ற பெருமை .
இந்திய அரசாங்கத்தின் ஜனாதிபதி விருது , பாரத் விருது பெற்ற பெருமை .
1967ல் மரணத்தை வென்று தேர்தலில் வென்று சாதனைகள் புரிந்தவர் .
குரலில் பாதிப்பு ஏற்பட்டாலும் கோடிகணக்கான ரசிகர்களில் ஆதரவு தொடர்ந்து இருந்தது .
அரசியல் - சினிமா இரண்டிலும் தனக்கு எதிரானவர்களின் வலுவான போட்டிகளை தவிடு பொடியாக்கி வெற்றி கண்டவர் .
திரை உலகில் சகலகலா வல்லவராக திகழ்ந்தார் .
திரை உலகில் பல புதுமைகளை தந்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்தவர் .
இயல்பான நடிப்பினால் எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்தார் .
மக்கள் திலகத்தின் எல்லா படங்களுக்கும் ''REPEATED AUDIENCE '' உண்டு என்பதை நிருபித்து காட்டியவர் .
37 ஆண்டுகள்கடந்தாலும் மக்கள் திலகத்தின் புகழ் - செல்வாக்கு - அவரின் நடிப்பு - மக்கள் மனதில் இன்னமும் வாழ்ந்து
கொண்டிருக்கிறது .
''என்னை பற்றியும் , என்னுடைய சாதனைகள் பற்றியும் கிண்டலும் கேலியும் செய்துவரும் நண்பர்களின் அறியாமையை மன்னித்து விடுங்கள் என்று கூறுகிறாரோ ''
http://i58.tinypic.com/730aop.jpg
இருபதாம் நூற்றாண்டின் பிறந்த ஒரே மனித கடவுளே
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பான் என்னும் வாக்கியம் போல
எங்கெங்கு உழைக்கும் வர்க்கம் இருக்கிறதோ அங்கெல்லாம் எங்கள் மன்னவன் உரிமை குரல் ஒலித்து கொண்டே இருக்கும் .
இமயத்தின் உயரத்தை பனை மரங்கள் மறைபதில்லை அதே போல் எங்கள் மன்னவனின் சாதனைகளை இந்த உலகில் மிஞ்ச ஒருவரும் இல்லை
http://i59.tinypic.com/315z67n.jpg
Makkal Thilagam & Devar
Can Anyone tell me which movie is this.
I think it is "Salivahanan"
பேரறிஞர் அண்ணா - மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களிடையேயான ஒற்றுமை :
http://i58.tinypic.com/kdltzm.jpg
1. இருவரும் பிறப்பில் நடுத்தர ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்கள்.
2. நோய்வாய்ப்பட்டு இருவரும் அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெற்றவர்கள்.
3. இருவரும் நள்ளிரவிலேயே இறந்தனர்.
4. பேரறிஞர் அண்ணா அவர்கள் இறக்கும் முன் கலைவாணர் என். எஸ்.கே. சிலையை திறந்து வைத்தார். அது போல் மக்கள்
திலகம் அவர்கள் இறுதியாக நேரு சிலையை திறந்து வைத்தார்.
5. இருவரும் முதல்வர் பதவியில் இருக்கும்போதே இயற்கை எய்தினர்.
6. இருவரது உடலும் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
7. பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களை இதயக்கனி என்றழைத்தார். மக்கள் திலகமோ பேரறிஞர்
அண்ணா அவர்களை " இதய தெய்வம் " என்றார்.
8. இருவரது இறுதி ஊர்வலத்தில் திரண்ட மாபெரும் கூட்டம் வரலாற்றில் இடம் பெற்றது.
9. இருவருக்கும் 'அருங்காட்சியகம் ' அமைத்தவர் முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி.
10. இருவரும் மக்கள் செல்வாக்குடன் இன்றும் திகழ்கின்றனர்.
11. இருவரது ஆட்சியும் சிறப்பானது என்று மக்கள் இன்னமும் பாராட்டுகின்றனர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இன்றைய தினம் காணப்படும் தொழில் நுட்பம் மற்றும் நுணுக்கங்கள் இல்லாத அந்த கால கட்டத்திலேயே காண்போர் வியக்கும் வண்ணம் " உலகம் சுற்றும் வாலிபன் " காவியத்தை தயாரித்தார். அவர் திரையுலகை விட்டு விலகும் வரை அவரது நிழலைக்கூட எவரும் நெருங்க முடிய வில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சாதனைகளின் சிகரம் நம் மக்கள் திலகம் மட்டுமே !
மிக குறைந்த எண்ணிக்கையிலான 115 காவியங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்து, அதிக அளவில் வெள்ளி விழாக் காவியங்களையும், 100 நாட்கள் கடந்த வெற்றிக் காவியங்களையும் அளித்த புகழுக்கு சொந்தக்காரர் நம் பொன்மனச்செம்மல் மட்டுமே !.
உலகின் 9வது அதிசயம் ஒப்பற்ற நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகம் எம்ஜியார் பாகம் - 9 துவக்கிய இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் இன்று தன்னுடைய 1001 பதிவுகளை நிறைவு செய்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் .
தன்னுடைய அலுவலக பணிகளுக்கிடையே நேரம் கிடைத்தபோதெல்லாம் மக்கள் திலகம் திரியில்
அருமையான ஆவணங்கள் - கட்டுரைகள் - விளம்பரங்கள் என்று பதிவிட்டு பெருமைகள் சேர்த்த
பேராசிரியருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .
'இன்று ' ஆயிரத்தில் ஒருவனாக '' நம் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் தயாரிப்பு தகவல்கள் மற்றும் 14 .3.2014 முதல் ஆயிரத்தில் ஒருவன் 101வது
நாள் விழா வரை தொடர்ந்து அன்றாட நிகழ்வுகள் - நண்பர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் - ஆயிரத்தில் ஒருவன் வெற்றி செய்திகளை உடனுக்குடன் பதிவிடுதல் என்று தன்னை முழுமையாக பயன் படுத்தி கொண்டவர் .அவருக்கு நம் பாராட்டுக்கள் . அவருடன் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து எம்ஜிஆர் மன்றங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி .
மக்கள் திலகம் எம்ஜியார் பாகம் - 9 துவங்கி இன்றுடன் 67 நாட்களில் 3600 பதிவுகளுடன் 73000 பார்வையாளர்களுடன் சிறப்பாக நடந்து வருகிறது .விரைவில் இந்த திரி நிறைவு பெற்று நம் இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜியார் பாகம்-10 துவக்கி வைப்பார் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கின்றேன் .
மக்கள் திலகம் திரியில் தொடர்ந்து பதிவிட்டு வரும் இனிய நண்பர்கள் திரு யுகேஷ் - திரு சைலேஷ் - திரு ரவிச்சந்திரன் - திரு லோகநாதன் - திரு செல்வகுமார் - திரு ரூப் குமார் திரு தெனாலி - திரு பிரதீப் பாலு - திரு கலிய பெருமாள் - திரு ஜெய்சங்கர் - திரு ராமமூர்த்தி மற்றும் பல நண்பர்களுக்கும் நன்றிகள் . தொடர்ந்து பதிவுகள் வழங்கி மக்கள் திலகத்தின் பெருமைகளை
அளித்திடுமாறு கேட்டு கொள்கிறேன் .
அன்புடன்
வினோத்
"திரி கண்ட திரவியம்" திரு செல்வகுமார் அவர்களுக்கு ..
ஆயிரத்தில் ஒருவன் நவீனமயமாக்கப்பட்டு வெற்றிகரமாக 100 நாட்கள் நிறைவு செய்திருக்கின்ற வேலையில் ..ஆயிரத்தில் ஓராவது பதிவு ..மிகுந்த அலுவலுகிடயே பதிவு செய்தமைக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
பலகாலம் பழகி இருந்தால்தான் பழரசம் முதல் தர பழரசம் என்பதுபோல தங்களுடைய பல வருட காலம் (சுமார் 40 - 45 காலம் இருக்கலாம் என்ற எனது அனுமானம்) பழக்கமுள்ள சிறந்த அனுபவங்கள் தாங்கள் இங்கு பகிர்ந்துகொள்வது மக்கள் திலகம் அவர்களது புகழுக்கு மற்றும் ஒரு வைரம். இதை தாங்கள் ஒரு just for sake என்றில்லாமல் ஒரு தொண்டாக செய்துவருவது மிகவும் பாராட்டுக்குரியது !
நீங்கள், திரு எஸ்வி, திரு யுகேஷ் மற்றும் ஒரு சிலர் இந்த திரியின் பெருமைகள் ! Pride of this thread !
இது உங்களுக்கு ice வைக்கவேண்டும் என்ற எண்ணத்திலோ, தங்களை impress செய்யவேண்டும் என்ற எண்ணத்திலோ எழுதுவதல்ல !
உள்ளத்தின் அடித்தளத்தில் உள்ள எண்ணம் !
ஆல்போல் தழைத்து வளர்க உங்கள் தொண்டு !
Rks
Thanks Vinod Sir for the info, sir just for doubt i am asking ,i did not see any scene in this costumes in Rajakumari movie ,there was only one fight sequence with Devar sir.
திரு. வினோத் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்களுடன் கூடிய நன்றி. !
புரட்சித் தலைவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின், கோட்டையில் அமர்ந்த இனிய நாள் 04-07-1977. இன்று, தாங்களும் இத்திரியின் 9வது பாகத்தில் மட்டும் 1001 பதிவுகளை கடந்துள்ளீர்கள். தங்களுக்கும் எனது பாராட்டுக்கள் !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i59.tinypic.com/qoi0at.jpg
Can Anyone Tell Me Which Movie is this.
"gentleman of the thread " என்று பாராட்டப்படும் திரு எஸ்வி சார்
திரு செல்வகுமார் இங்கு பதிவிட்டதன் மூலம் உங்களுடைய சாதனையை இங்கு அறியமுடிந்தது.
மனம் நிறைந்த பாராட்டுக்கள் ! உங்களுடைய இந்த சேவை மிக சிறந்த ஒன்றாகும் கிட்டத்தட்ட 10,000 பதிவு நெருங்கும் உங்கள் பதிவுகள் இந்த திரிக்கு பெருமை சேர்பவை மட்டும் அல்ல !
இந்த திரிக்கு படிப்பதற்கு வரும் பலருக்கு உந்துதலாக, உங்கள் படைப்புகளை படிப்பதை ஒரு வேலையாக வைத்துகொண்டு ( நான் உட்பட )வருபவர்களும் சரி, ஒரு பொழுதுபோக்காக வருபவர்களும் சரி..அனைத்து தரப்பு ரசிகர் மற்றும் பொதுமக்கள் இங்கு சுண்டி இழுத்து வரும் வல்லமை பெற்ற பதிவு தங்கள் பதிவுகளாகும்.
கருத்து பரிமாற்றங்கள், கருத்து பட்டிமன்றங்கள் ஆயிரம் ஏற்படலாம் தவறில்லை. காரணம் ஒரு உணவில் சாம்பார், ரசம், மோர், பாயசம், இனிப்பு இவை போன்றவை கலந்து இருந்தால் தான் உணவு சுவைக்கும். அதுபோல தான் நம் அனைவரின் பதிவுகளும் என்பது என் எண்ணம் !
அப்படி ஒரு அறுசுவை உணவை மக்கள் திலகம் பற்றிய தகவல் பசியோடு வருபருக்கு ..போதும் போதும் என்கின்ற அளவுக்கு படைப்பவர் நீங்கள் !
உங்களுடைய இந்த மகத்தான தொண்டு நீண்ட நாள் தொடர்ந்து பல மைல் கற்களை கடந்து வாழ்வாங்கு வாழ்ந்து வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் !
rks
PLEASE WATCH FROM 8:32 TO 8:51
http://www.youtube.com/watch?v=Msiwjqm2U4k
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i60.tinypic.com/2e1gark.jpg
http://i57.tinypic.com/r1ycgh.jpg
என்னுடைய பதிவுகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்த இனிய நண்பர் திரு rks அவர்களுக்கு அன்பு கலந்த நன்றி .
விரைவில் நீங்கள் துவக்க இருக்கும் நடிகர் திலகம் திரிக்கு எங்களுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
உங்களின் பதிவுகள் புதுமையாக , எல்லோரும் பாராட்டும் அரிய தகவல்கள் மற்றும் யார் மனமும் புண்படாதபடி
சவால்கள் இன்றி ,தரமான பதிவுகள் அமைய விரும்புகிறேன் .. நிச்சயம் நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன் .
குட் லக்
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=-rDJ...ature=youtu.be
MAKKAL THILAGAM M.G.R IN ANANTHA JOTHI -5.7.1963
51 YEARS COMPLETED TO DAY .
http://i58.tinypic.com/namh5.jpg