தின இதழ் -21/12/2016
http://i63.tinypic.com/2uot6ox.jpg
http://i65.tinypic.com/9rndxz.jpg
Printable View
தின இதழ் -21/12/2016
http://i63.tinypic.com/2uot6ox.jpg
http://i65.tinypic.com/9rndxz.jpg
தின இதழ் -25/12/2016
http://i63.tinypic.com/2jb60qf.jpg
http://i68.tinypic.com/zxv0g5.jpg
மாலை மலர் -17/12/2016
http://i64.tinypic.com/29ckzzq.jpg
மாலை மலர் -28/12/2016
http://i63.tinypic.com/9uapp5.jpg
தினமலர் -18/12/2016
http://i68.tinypic.com/2sbpseg.jpg
தின இதழ் -21/12/2016
http://i63.tinypic.com/jtbbk1.jpg
நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்கு,
எங்கே உங்களை ரொம்ப நாளாக வரவில்லை என்று நினைத்தேன். புரட்சித் தலைவர் நினைவு நாளுக்குக் கூட திரிக்கு வந்து அஞ்சலி பதிவு போடவில்லையே என்று நினைத்தேன். இன்றுதான் வராததற்கு காரணத்தை தெரிந்து கொண்டேன். நன்றி.
வராத நாளுக்கும் சேர்த்து வைத்து சும்மா குமுறிவிட்டீர்கள் குமுறி. எத்தனை பதிவுகள் தங்களின் உழைப்புக்கும் புரட்சித் தலைவர் மேலே உள்ள பக்திக்கும் நன்றி.
ஒரு திரியில் புரட்சித் தலைவரைப் பற்றி ஒரு நடிகருக்கு அடுத்த நிலையில் இருந்தார் என்று கூசாமல் பொய் புளுகுகிறார்கள். சிரிக்க வாய் மட்டும் போறாது. ஒரு பொய்யை திரும்பியும் திரும்பியும் சொன்னால் அதுவே உண்மையாகி விடும் என்று நினைத்து புளுகுகிறார்கள். யார் முதல் நிலையில் இருந்தார்கள், யார் மக்களால் ஒதுக்கப்பட்டு இப்போது மறக்கப்பட்டார்கள் என்பது எல்லாம் உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
புரட்சித் தலைவர் எங்கும் எதிலும் முதல் நிலையில் இருந்தார் என்பதற்கு உதாரணமாய் நீங்கள் வராத பதினைந்து நாட்களில் (எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. ஒன்றிரண்டு நாட்கள் கூட குறைச்சு இருக்கலாம்) எவ்வளவு செய்திகள் அவரைப் பற்றி பத்திரிகைகளில் வந்திருக்கின்றன என்பதை உங்கள் பதிவுகள் மூலம் தெரிய முடிகிறது. இதிலேருந்தே புரட்சித் தலைவரின் செல்வாக்கும் புகழும் புரியும். வேறு எந்த நடிகரைப் பற்றி 15 நாட்களில் இவ்வளவு செய்திகள் அதுவும் மறைந்த பிறகு வரும்?
உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். தவறாக நினைக்காதீர்கள். மன்னியுங்கள். புரட்சித் தலைவரோடு நமக்கு பிடிக்காத நடிகர் உடன் இருப்பது போல படங்கள் இருந்தால் அதை வெட்டி அல்லது மறைத்து பதிவிடவும். நம் திரியில் நமக்கு பிடிக்காத நடிகரின் படங்கள் வேண்டாம். அவர்களுக்கே அவ்வளவு இருக்கும்போது நமக்கு எவ்வளவு இருக்கும். மன்னிக்கவும். நன்றி.
நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி.
தங்களின் கருத்துக்களுக்கும்,விமர்சனங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றி.
தமிழ் திரைப்பட உலகில் 1954ம் ஆண்டு முதல் (விவரம் அறிந்த வகையில் )
1977 வரை (தமிழக முதல்வராகும் வரை) ஒரு சில ஆண்டுகள் தவிர (கால் எலும்பு முறிவு சிகிச்சை காரணமாக ஒய்வு) இடைவிடாமல், தொடர்ந்து , முதல்தர கதாநாயகன், வசூல் சக்கரவர்த்தி என்கிற சாதனைகள்.
1967ல் குண்டடிபட்டு, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல், உட்கார்ந்து கொண்டு, வெற்றி
பெற்று, சட்ட மன்று உறுப்பினர் ஆனதோடு, தன்னை இதயக்கனி என்று அழைத்த பேரறிஞர் அண்ணாவின் வேண்டுகோளுக்கு இணங்க, வெறும் முகத்தை மட்டும் காட்டி, தனது கட்சி (அப்போதைய தி.மு.க.) ஆட்சிக்கு வர
பெரிதும் காரணமாக இருந்தது .
1972ல் அ. தி.மு.க. கட்சியை துவக்கி, ஆரம்பத்தில் இடை தேர்தல்கள் , பின்னர்
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ,ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு மேலாக
முதல்வர் பதவியில் இருந்து மக்களுக்கு தொண்டாற்றி புரிந்த அரும் பெரும் சாதனைகள் .
1984ல் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் , அமெரிக்காவில் சிகிச்சை பெற்று
கொண்டே, தேர்தல் பிரச்சாரம் செய்யாமல், படுத்துக் கொண்டே , மீண்டும் முதல்வர் ஆகிய சாதனை
1960ல் இந்திய அரசு, பத்மஸ்ரீ பட்டம் வழங்க முற்பட்டபோது, இந்தி மொழியில்
அல்லாது, தமிழ் மொழியில் வழங்கினால்தான் வாங்கி கொள்வேன் என்று
மறுத்தது (செய்தி-சன் லைப் -ரிக்ஷாக்க்காரன் திரைப்படம் சமீபத்தில் ஒளிபரப்பியபோது )
1972ல் பாரத் பட்டம் வழங்கியபோது , விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடியாக
பட்டத்தை திருப்பி தந்தது
1988ல் தமிழ் திரையுலகில் மறைந்த நடிகர்களில் "பாரத ரத்னா " விருது பெற்ற
முதல்வர்
1987ல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்த பின்னும், 2017ல் (30 ஆண்டுகள் ) அவர் தோற்றுவித்த இயக்கம் மக்களாட்சி தத்துவப்படி தொடர்ந்து
ஆட்சியில் நீடிப்பு .
1978ல் தமிழ் திரையுலகை விட்டு விலகி, அரசியல் உலகில் முடிசூடா மன்னனாக , முதல்வராக வலம் வர ஆரம்பித்தது முதல் 2017 (இன்று வரையில் ) மறுவெளியீடுகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள், பல நகரங்கள், துணை நகரங்கள், கிராமங்களில் கூட திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடி வருகின்றன .
சமீபத்திய சாதனை -டிஜிட்டல் ஆயிரத்தில் ஒருவன் -மறுவெளியீடு ஆல்பட் அரங்கு -190நாள் , சத்தியம் அரங்கு -160நாள்
டிஜிட்டல் ரிக்ஷாக்காரன்-மறுவெளியீடு - இணைந்த 12 வது வாரமாக தமிழகத்தில் வெற்றி பவனி
1987 டிசம்பரில் புரட்சி தலைவர் மறைந்தபோது, சென்னைக்கு அஞ்சலி செலுத்த
வந்த மக்கள் தொகை ஏறத்தாழ 20 லட்சம் - செய்திகள் -தந்தி டிவி, பாலிமர் டிவி
மேற்குறிப்பிட்ட சாதனைகள் எல்லாம் சில துளிகள்தான் . எல்லாவற்றையும் பதிவிட திரியில் இடம் போதாது.
எனவே பொய்யர்கள் அவிழ்த்துவிடும் புளுகு மூட்டைகள் பற்றி கவலை வேண்டாம்.
சந்திரோதயம் திரைப்படத்தில் ஒரு வசனம் - நடிகர் எம்.ஆர். ராதாவிடம் வாதிடும் போது , என் எதிரி கூட எனக்கு சமமாக இல்லைன்னா அலட்சிய படுத்துகிறவன் நான் - என்று சொல்வார் மக்கள் திலகம்.
மன்னாதி மன்னன் திரைப்படத்தில், குலதெய்வம் ராஜகோபாலிடம், மற்றவரை தாழ்த்தி, நம்மை உயர்த்திக்கொள்ளும் நிலையில் நாம் இல்லை என்று, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பேசுவார்.
அது போல , நம்மை பொறுத்தவரையில், புரட்சி தலைவருக்கு சமமாக தமிழ்
திரையுலகிலோ, அரசியல் உலகிலோ வெற்றி பெற்றவர் எவரும் இலர்.
ஆகவே, எதை பற்றியும் கவலை கொள்ளாமல், புரட்சி தலைவரின் புகழ் பாடும் பணியில் நம்மை ஈடுபடுத்தி கொள்வோமாக . நன்றி.
சென்னை காமராஜர் அரங்கில் கடந்த 18/12/2016 ஞாயிறு அன்று மாலை 5 மணியளவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவ மெழுகு சிலை மற்றும் பிரபல பின்னணி பாடகி திருமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி சிலை ,பிரபல
இயக்குனர் திரு. பாரதிராஜா மற்றும் பின்னணி பாடகி திருமதி வாணி ஜெயராம்
ஆகியோரால் பலத்த கர கோஷத்துக்கிடையே திறந்து வைக்கப்பட்டது .
நிகழ்ச்சியில் வேல்ஸ் பல்கலை கழக நிறுவனர் திரு.ஐசரி கணேஷ், இசை அமைப்பாளர்கள் லஷ்மண் ஸ்ருதி, பிரபல வயலின் வித்வான் திரு.எல்.சுப்ரமணியன் ,பிரபல பின்னணி பாடகி திருமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் பேரன் திரு.ஸ்ரீநிவாசன் , பாரத் பல்கலை கழகத்தின் நிறுவனர்.திரு. தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/2yx432u.jpg
இசை அமைப்பாளர் திரு.லஷ்மண் ஸ்ருதி பேசும்போது
http://i64.tinypic.com/jrzqc2.jpg
வயலின் வித்வான் திரு.சுப்ரமணியன் பேசும்போது
http://i63.tinypic.com/4sd72c.jpg
திரு.ஐசரி கணேஷ் உரையாற்றும்போது
http://i65.tinypic.com/2quupmt.jpg
திரு.பாரதிராஜா புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பற்றி புகழுரை
http://i65.tinypic.com/2u6fnz4.jpg
திரு.பாரதிராஜாவிற்கு திரு.ஐசரி கணேஷ் மற்றும் திரு.லஷ்மண் ஸ்ருதி ஆகியோர் இணைந்து மாலை அணிவித்தல்
http://i64.tinypic.com/1zn98nm.jpg
திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி சிலை திறத்தல்
http://i68.tinypic.com/2qc1kjm.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு .அருகில் திரு.ஐசரி கணேஷ், திரு.பாரதிராஜா, திருமதி வாணி ஜெயராம் மற்றும் பலர்.
http://i67.tinypic.com/sqjn8o.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி சிலைகள்
http://i67.tinypic.com/2a0kmty.jpg
திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேத்தி ஐஸ்வர்யா ,எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைகள் அருகில்
http://i65.tinypic.com/2hehc08.jpg
உரிமைக்குரல் ஆசிரியர் திரு பி.எஸ். ராஜு மற்றும் திரு. பிரதீப் இருவரும் இணைந்து திரு. பாரதிராஜாவுக்கு பொன்னாடை அணிவித்து எம்.ஜி.ஆர். சிலை வழங்குதல் .
http://i68.tinypic.com/i6d1fk.jpg
வெள்ளித்திரையில்
http://i65.tinypic.com/107nj15.jpg
காமராஜர் அரங்கத்திற்கு வெளியில்
http://i68.tinypic.com/hts1mq.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.சிலையுடன் திரு. ஆர். லோகநாதன்.
http://i67.tinypic.com/5ysy9v.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.சிலையுடன் திரு. பாண்டியராஜ்
http://i64.tinypic.com/iwsp6e.jpg