"70-க்குப்பின் நடிப்பு சரியில்லை, 80-க்குப்பின் அறவே சரியில்லை, 90-க்குப்பின் முற்றிலும் சரியில்லை". என்றெல்லாம் சொல்பவர்கள், முதல் படத்திலிருந்து கடைசிப் படம் வரையில் ஒரே மாதிரி நடித்துவிட்டுப் போனவர்கள் பற்றியெல்லாம் வாயே திறப்பதில்லை.
Printable View
"70-க்குப்பின் நடிப்பு சரியில்லை, 80-க்குப்பின் அறவே சரியில்லை, 90-க்குப்பின் முற்றிலும் சரியில்லை". என்றெல்லாம் சொல்பவர்கள், முதல் படத்திலிருந்து கடைசிப் படம் வரையில் ஒரே மாதிரி நடித்துவிட்டுப் போனவர்கள் பற்றியெல்லாம் வாயே திறப்பதில்லை.
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி
"கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
குணத்துக்குத் தேவை மனசாட்சி
குணத்துக்குத் தேவை மனசாட்சி"
"மயிலைப் பார்த்து கரடி என்பார்
மானைப் பார்த்து வேங்கை என்பார்
குயிலைப் பார்த்து ஆந்தை என்பார்
அதையும் சிலபேர் உண்மை என்பார்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
...................... பார்த்தால் என்ன? "
அண்ணே! வாங்க அண்ணே. உங்க பதிவு பார்த்து ரொம்ப நாளாச்சி! நமக்கு ஒரு நடிகரை பிடிக்கவில்லை என்றால் அந்த நடிகரின் படம் ஓடவில்லையென்றால் அந்த நடிகர் ஒரு தோல்வி நடிகர் என்று சொல்வதும், அதே நடிகரின் படம் வெற்றி அடைந்தால் அது ஒன்றும் நல்ல படம் இல்லை என்று சொல்வதும் நாம் காலம் காலமாக கடைப்பிடிக்கும் பாணிதானே. இந்த மாதிரி பாணி யாருக்காவது இருக்குதா?
அப்புறம் கேட்டீங்களே அண்ணே ஒரு கேள்வி. இப்ப எங்க தில்லானா மோகனாம்பாள் ஓடிக்கிட்டு இருக்குன்னு? யாராவது பதில் சொன்னார்களா? உங்க கிட்ட இதே மாதிரி வேற யாராவது கேட்டிருந்தால், ஓடிக்கிட்டு இருக்குன்னு நிரூபிக்க முடியலைன்னா சொல்லியிருக்க மாட்டீங்களா ... வீடுகளில் டி*வி*டி-யில் ஓடிக்கிட்டு இருக்குன்னு. அடுத்து நீங்க சொன்ன கருத்து தாண்ணே ரொம்ப முக்கியம். அதுக்கு மேல நம்மால் கருத்து விளக்கம் சொல்ல முடியாது அண்ணே. உங்க கிட்டயே வந்து வெற்றிக்கு விளக்கம் கேட்பார்கள். நீங்க கொடுத்ததுதான் விளக்கம்-னு நீங்க விடாப்பிடியா இருங்க.அப்பதான் நவராத்திரி, தெய்வ மகன் படமெல்லாம் தோல்வின்னு நீங்க நிரூபிக்க முடியும். அப்புறம் ஒண்ணு அண்ணே. நாம சொல்றதுக்கு எல்லாம் யாரும் ஆதாரம் கேட்கிறது இல்லை. அது நமக்கு நல்ல வசதியா போச்சு.
உங்களால் நெறைய பேருக்கு நெறய கருத்துக்கள் இப்பிடியெல்லாம் தெரியணும்,
அடிக்கடி வாங்கண்ணே.
அற்புதமான பதிவு அண்ணே. புகழை எவ்வாறு அளக்கிறோம்-னு சொல்லிக்கொடுங்க அண்ணே. அப்பவாவது யாரு யாருக்கு எவ்வளவு புகழ் இருக்குன்னு அளந்து தெரிஞ்சிக்கட்டும். அதுக்கு பின்னாடி யாராவது இந்த அண்ணனை, புகழை மறப்பாங்களா? யாரோ ஒருத்தர், ஒரு ஊரிலே சிவாஜி-யை தெரியுமா-ன்னு கேட்டாராம். யாரு அது மராட்டிய மன்னந்தானே-ன்னு சொன்னாங்களாம். (எந்த ஊருன்னு எனக்கு தெரியவில்லை.சுமாரா வட கிழக்கு நாட்டுப்பக்கம்-நு வச்சிக்கோங்க). இதுல இருந்து என்ன தெரியுது???
RAJA SIR,
We know you are MGR Fan.I understood your anger .But your anger is not aceptable.Our acting god nadigarthilagam uncomparable.His style,Acting his dialoge deleivery are unimaginable by your favourite.May be some /few movies of our nadigarthilagam not successfully running at that time because of no of our god movies are released every month/sometimes even 15 days after 2nd run/subsequent release they are collected as more than your favorite star movie.our nadigarthilagam act never fails my dear rajaji
The first Tamil film to have rock ‘n’ roll dance.
From Times of India website at: http://timesofindia.indiatimes.com/e...w/20858743.cms
Quote:
http://timesofindia.indiatimes.com/t...hiran_1958.jpg
TNN | Jul 1, 2013, 04.01 PM IST
Sivaji Ganesan's Uthama Puthiran was the first Tamil film to have rock 'n' roll dance. The song — the classic Yaaradi Nee Mohini featuring Helen which was sung by T M Soundararajan, A P Komala, K Jamuna Rani, Jikki
Uthama Puthiran is a 1958 Indian Tamil historical fiction film directed by Tatineni Prakash Rao. The film stars Sivaji Ganesan, Padmini and M N Nambiar in the lead roles, while K A Thangavelu, Ragini and P. Kannamba play supporting roles. It is the first film to feature Sivaji Ganesan in two distinct roles.
நண்பர் கோபால் அவர்களே,
இரண்டு உதாரணங்களை கொடுத்து விதண்டாவாதங்களும் தேவையற்ற விமரிசனங்களும் எப்படி முறியடிக்கப்பட்டன என விளக்க விழைகிறேன்..
1) நாதுராம் கோட்சே விற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது.பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம்.உள்துறை அமைச்சர் ராஜாஜி பொறுமையாக கேட்டுகொண்டிருக்க, எதிர் கட்சியினர் அந்த தண்டனை கூடாதென ஆரவாரம் செய்கின்றனர்.ஒரு உறுப்பினர் எழுந்து சொன்னார்."இப்பொழுது காந்திஜி இருந்திருந்தால் அவரே இந்த தண்டனை கூடாது என சொல்லியிருப்பார்".இதற்குதான் காத்திருந்தது போல ராஜாஜி அவர்கள் துள்ளி எழுந்து சொன்னார்,"காந்திஜி இருந்திருந்தால் நாங்களும் கோட்சேவிற்கு தூக்கு தண்டனை அளித்திருக்க மாட்டோம்!"அவை கலகலத்தது..தண்டனைக்கு ஆதரவாக ஓட்டளித்தது.
2)சுப்புடு ஒரு பிரசித்தி பெற்ற இசை விமரிசகர்.குற்றங்குறை காண்பதில் வல்லவர்.பொதுவாக வித்வான்கள் பலருக்கு அவரைப்பிடிக்காது.ஒரு சமயம் பண்டிட் ரவிசங்கர் அவர்களின் சிதார் கச்சேரி டெல்லியில் நடந்தபோது,இவர் அதை கடுமையாக விமரிசனம் செய்திருந்தார்.அதில் எதோ ஒரு இடத்தில ஒரு ஸ்வரம் தவறியதைக்கூட பெரிது படுத்தி இருந்தார்.இதை ரவிசங்கர் அவர்கள் ரசிக்கவில்லை.சரியாக ஒரு மாதம் கழித்து சென்னை மியூசிக் அகாடமியில் அவர் கச்சேரி.முன் வரிசையில் சுப்புடு.ஒரு இடத்தில மீண்டும் ஸ்வரம் சிறிது பிரள .வசிப்பதை நிறுத்தி விட்டு அந்த மேதை மைக்கில் சொன்னார்.."இப்பொழுது சரியாக மணி 10:22.ஒரு ஸ்வரம் தவறிவிட்டது.தேவைபட்டோர் குறித்துக்கொள்ளலாம்.".அவை சிரிப்பில் அதிர,சம்பந்த பட்டவர் முகத்தில் ஈயாடவில்லை.
முடிவாக ஒரு குறிப்பு.
Inglourious Basterds படத்தில் எப்படி நடித்தாரோ,அதில் ஒரு தினையளவு மாற்றமின்றி "Django Unchained" படத்தில் நடித்திருக்கும் Christopher Waltz ற்கு,இரண்டு படத்திற்குமான சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டுள்ளது. இவர் வியன்னாவில் பிறந்ததால் தப்பித்தார்.ஒரு வேளை விழுப்புரத்தில் பிறந்திருந்தால் நாமே same side goal அடித்து விமரிசித்து தள்ளியிருப்போம்.
விஞ்ஞானிகளில் ஐன்ஸ்டைன் எப்படியோ,விளையாட்டு வீரர்களில் பிராட்மன் எப்படியோ,தலைவர்களில் ஆபிரகாம் லிங்கன் எப்படியோ,இசை மேதைகளில் பீதோவன் எப்படியோ,ஓவியர்களில் மைக்கேல் ஏஞ்சலோ எப்படியோ,அப்படித்தான் நடிகர்களில் நம்தலைவர்.
விமரிசிப்பவர்கள்,முதலில் உங்கள் நாற்பது அத்தியாயங்களை படித்து விட்டு வரட்டும்.
பாசத்திற்குரிய அருமை இளவல் ராஜாராம் அவர்களுக்கு,
இரண்டு வருடத்திற்கு முன்பு என்று நினைக்கிறேன். மதுரையில் சட்டம் என் கையில் ஓடிய நாட்களைப் பற்றிய ஒரு விவாதம் நம்மிடையே நடந்தது [43 நாட்கள் ஓடிய படத்தை நீங்கள் 100 நாட்கள் என்று சொன்னீர்கள்]. அதன் தொடர்ச்சியாக வேறு சில பல படங்களைப் பற்றியும் அவை ஓடிய நாட்களைப் பற்றியும் விவாதம் தொடர்ந்து இறுதியில் நீங்கள் என்னிடம் "நாம் இருவரும் ஒரே ஊர்காரர்கள். என்னை ஏன் எதிரி போல பார்கிறீர்கள்? என்னை உங்கள் இளைய சகோதரனாக நினைத்துக் கொள்ளுங்கள்" என்றீர்கள். நானும் அன்று முதல் உங்களிடம் எந்த வாதப் பிரதிவாதங்களிலும் ஈடுபடவில்லை. இப்போதும் என் நிலையில் மாற்றமில்லை. உங்கள் comment-ற்கு எனது பதில் no comments.
வெகு நாட்களுக்கு பிறகு நடிகர் திலகத்தின் திரிக்கு வந்ததற்கும், கருத்து சொன்னதற்கும் என்னை "பாராட்டியதற்கும்" நெஞ்சார்ந்த நன்றி.
அன்புடன்