http://i58.tinypic.com/w0ib5s.jpg
Printable View
http://www.raaga.com/player4/?id=204...96963375373667
சுதர்சனம் சார் இசையில்
மணிமகுடம் திரை படம் 1966
நம் பாடகர் திலகம் கான கந்தர்வ குயில் கண்ணிய பாடகி
http://3.bp.blogspot.com/-fYTcBAbemv...dam%2B1966.jpg
பாடல்
டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
அதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்
டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன
சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன
டி.எம்.எஸ்: அழகிய மலர்கள் சிரிக்கின்றன
சுசீலா: அவை அடுத்த உலகை நினைக்கின்றன
டி.எம்.எஸ்: பழகிய கிளிகள் துடிக்கின்றன
பழகிய கிளிகள் துடிக்கின்றன
சுசீலா: எங்கோ பறக்க சிறகை விரிக்கின்றன.....(சிரிப்பு)
டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா.... ஆ......
வானில் பறக்குது வெள்ளைப் புறா
சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்
டி.எம்.எஸ்: வானில் பறக்குது வெள்ளைப் புறா
சுசீலா: வேடன் வலையை விரித்தது அறியாமல்
டி.எம்.எஸ்: ஆடிக் களிக்குது தோகை மயில்
ஆடிக் களிக்குது தோகை மயில்
சுசீலா: தன் ஆட்டம் முடிவது தெரியாமல்.....
தன் ஆட்டம் முடிவது தெரியாமல்....
டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது
சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
டி.எம்.எஸ்: இதயம் எதையோ நினைக்கின்றது
சுசீலா: அதில் ஏன் இந்த மயக்கம் பிறக்கின்றது?
டி.எம்.எஸ்: புதிய பாதை தெரிகின்றது...
புதிய பாதை தெரிகின்றது
சுசீலா: அது போகும் பொழுதே முடிகின்றதே
டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
இந்த அழகு கோபுர சிலை மேலே
சுசீலா: இதில் ஆட நினைக்குது ஆசை மனம்
அது அறியாதோ வரும் அஸ்தமனம்
டி.எம்.எஸ்: ஆதவன் உதித்தான் மலை மேலே
Esvee போட்ட முதல்வரம்மா படங்களைப் பார்த்ததும் லேட்டஸ்டாக ஒரு நாள் அனாதை ஆனந்தன் படப்பாடலை
டி.வி.யில் போட்டபோது எங்க சொந்தக்காரர் சொன்னது நினைவுக்கு வந்தது.
"ரிசர்வ் பேங்க் சப்வே பக்கத்துல இப்படி தெருவில் டான்ஸ் ஆடும்போது இவங்க பக்கத்து செக்ரடேரியட் உள்ளே
முதலமைச்சராக உட்காருவோம்னு நினைச்சிருப்பாங்களா ? ஆஹா.. விதி எப்படி எல்லாம் விளையாடுது"
ஹிந்தியில் பத்மினி கொஞ்சம் ஸ்டவுட் ஆக ஆண்பிள்ளைத்தனமாக ஆடியதை தமிழில் ஜெயலலிதா கொஞ்சம்
மிருதுவாக ஆடியிருப்பார். லதா மங்கேஷ்கரின் தங்கப் பாடல்களை வைரம் இழைத்துக் கொடுக்கும் சுசீலா இதில்
ஆஷாவின் குரலில் ஒலித்த பாடலுக்கும் இன்னும் மெருகேற்றியிருப்பார்.
தமிழில் அனாதை ஆனந்தன்
http://youtu.be/6_yaMhaehGU
ஹிந்தியில் சந்தா அவுர் பிஜ்லி
http://youtu.be/EzhNFizkGpE
எல்லாரும் பக்திப் பாட்டா போடறாங்க..ஏதோ என்னாலானது :)
**
*
என்னவோ. நான் சின்னப் பையன் ஆனதுனால... இந்த ராதா காதல் வராதா நினைவு..:)
*
ஹரே நந்தா ஹரே நந்தா
ஹரே நந்தா ஹரே ஹரே..
கோகுல பாலா கோமகள் ராதா
ஆயர்கள் பாலா ஆனந்த ராதா..
ராதா காதல் வராதா
நவனீதன் கீதம் போதை தராதா
ராச லீலை தொடராதா
செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாலே
தாலாட்டும் புல்லாங்குழல்
செந்தூர நதியோடும்செவ்வாயின் இதழோரம்
கண்ணா உன் காதல் கடல்..
இடையணி இருக்க உடைமட்டும் நழுவி..
சுகமென்ன சொல்லடி ராதா..ராதா
மந்தார மழைமேகம் நின்றாடும் விழி வண்டு
கொண்டாடும் இசை என்னடி..
தாளாத இடைமீது தள்ளாடும் மணிசங்கு
ஆடாதோ என் கைவழி..
மார்கழி ஓடை போலொரு ஆடை
என்னிடம் ஏனடி ராதா..ராதா..
**
மதுஜி,
என்ன ஜி இப்படி சொல்லிட்டீங்க. அப்பவே போட்டுட்டேனே! பார்க்கலையா நீங்க. பதிவு எண் 3408 பாருங்க.
இருந்தாலும் மறுபடியும் போடுறேன்.
மது சார்,
இழுத்துக் கொண்டு வந்தாகி விட்டது. இதோ நீங்கள் கேட்ட 'கதாநாயகன்' படப்பாடல்
'சில நேரங்களில் சில மனிதர்களை'
சிந்தித்தித்துப் பார்த்தால் சிரிப்பு வரும்.
நான் அப்போது மிகவும் விரும்பிக் கேட்ட பாடல். மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி மது சார்.
http://www.mediafire.com/download/3y...Nerangalil.mp3
(இப்பாடலை இணையத்தில் தந்து உதவி செய்த அன்பு நண்பர் பாடல் பிரியன் அவர்களுக்கு நமது திரியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!)
காலம் வெல்லும்....
http://youtu.be/LSNZdo8E1i4
சரி நித்திரை அழைக்கிறது .. காலையில் சந்திக்கலாம்.
ராஜேஷ் சார் உங்களுக்கு
குலமகள் ராதை திரை படத்தில் நம் ஆலயம் பாடும் பாடல்
ஆருயிரே மன்னவரே அன்பு மயில் வணக்கம்
ஆசை நெஞ்சம் மாறியதேன் புரியவில்லை எனக்கும்
காரிருள் அகல் விளக்கை
தூதனுப்பி வைத்தேன் - அது
காற்றினில் ஒளியிழந்து திரும்பிடக் கண்டேன்
ஓருயிரை உனக்கெனவே வழியனுப்ப்பி வைத்தேன் - அது
உன்னிடமே தங்கியதால் உயிர் இழந்து நின்றேன்
காற்று மழை மின்னலையும் கடந்து வந்தேன் அய்யா - நான்
கண்ணீரில் எழுதி வைத்த கதைகள் எல்லாம் பொய்யா
வந்த துன்பம் என் உயிரை எடுத்துக் கொண்ட போதும் - நான்
மறு முறை பிறக்கும்போது மாலையிட்டால் போதும்
என் குட் நைட்
Thanks for "sila nerangalil sila manidhargalai" song Vasu ji..
கடைசி வரி காணாமல் போயிடுச்சு..
"குழந்தைக்குத்தான் நல்ல இதயம்.... ஆனால்...
சில நேரங்களில்..." என்று முடியும்..
ஹி ஹி... ( அசட்டுச் சிரிப்பு + தலை சொ....)
அதாகப்பட்டது கேட்டதை எல்லாம் கொடுக்கும் சிந்தாமணி, காமதேனு, கற்பக விருட்சம், அட்சய பாத்திரம் போல
இங்கே நம்ம நண்பர்கள் இருப்பதால்...
என் அடுத்த ரிக்வெஸ்டை வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
"கடவுள் தந்த செல்வம்" என்பது படத்தின் பெயர் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை..
பானுமதி நடித்து பாடிய
"உன்னோடு என் நெஞ்சமே ஒன்றாய் ஊஞ்சலாடுதடா
நீ ஆடினால் நான் ஆடுவேன் நிழல் போலுனை காத்திடுவேன்"
என்ற பாடல் எங்கும் தென்படவில்லை. கிடைத்தால் கேட்டு ரசிக்கலாம்.
கோரிக்கையை வைத்து விட்டேன்.. ப்ளீஸ் அன்பர்களே !!
க்ருஷ்ணா ஜி தாங்க்ஸ் :) ( ராச லீலா பத்தி ஒரு சிறு குறிப்பு எழுதி..அதைப் போடவில்லை)
ராதாபாடல்கள்னு யோசிச்சா நினைவுக்கு வர்றது..
உன்னை எதிர்பார்த்தேன்கண்ணா நீ வாராய்
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்றகோவல்ன் யாரோ
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி (2 வெர்ஷன்.. ந.தியோடது குறும்பு கொப்பளிக்கும்)
ராதே என் ராதே வாராதே..
சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
ம்ம் மிச்சம் நீங்க தான் சொல்லிடுவீங்களே :)
ஹைய்யோ மதுண்ணா மலை.. நான் மடு.. அவருக்குத் தெரிந்த பாடல்கள், மற்ற விஷயங்கள் அடியேனுக்குத் தெரியாது.. சுருக்கமாகச் சொன்னால் அவர் பத்மினி என்றால் நான் லத்து..(நடிப்பு,எக்ஸ்ப்ரஷனைப் பொறுத்த வரை)
சிக்கா..
லத்துன்னு சொல்றதிலேயே ஒரு கெத்து இருக்கே ?
அது சரி பத்மினின்னா யாரு... ? நாட்டிய பேரொளி, குட்டி பத்மினி, குமாரி பத்மினி, பத்மினி பிரியதர்சினி, பத்மினி சோளபூரி.. ச்சே.. கோலாபுரி இன்னும் எத்தனையோ ...
நாட்டியப் பேரொளி தான்..பின்ன இ.உல டி.ஆர்.ராமச்சந்திரனோட வொய்ஃபா வருவாங்களே அவங்களா..இல்லை இல்லை..
பந்தாட்டம் 1974
ஜெய் ஜெயசுதா ஜோடின்னு நினைவு
மனோரமா நாதஸ்வர வித்வானாகவும் மக்கள் கலைஞ்ர் ஜெய் அவர்கள்
மேளகாரர் ஆகவும் ஒரு பாடல் நினைவில் உண்டு
'உன் ராதையை பார் போதையிலே கண்ணா ' மனோரமா குரலில்
ராதையை பெண் பார்க்க கண்ணன் வந்தான் நெஞ்சில் ரகசியம் பரிமாற்ற மன்னன் வந்தான் "
'இன்றைய ஸ்பெஷல்' இப்ப போட மாட்டேன்பா. அடிக்கிற சுனாமியிலே காணாம பூடும். வாசு... ஜாக்ரதோ ஜாக்ரதோ... தப்பிச்சுக்கோடா.. தப்பிச்சுக்கோ:)
ராதைப் பாடல்களுக்கு நன்றி க்ருஷ்ணா ஜிஅண்ட் குட்டிக் க்ருஷ்ண அவ்தார் மதுண்ணா..
அந்த ராதையின் நெஞ்சமே கண்ணணுக்குச் சொந்தமே ஹிந்திப் பாட்டோட தழுவலோன்னோ..
தில் மேரா துனியஹா..ன்னு நினைவு..
//'இன்றைய ஸ்பெஷல்' இப்ப போட மாட்டேன்பா// எத்தன சுனாமி வந்தா என்ன நீங்க கோவிந்தராஜப் பெருமாள் மாதிரி.. நின்னுடுவேள்..
தெற்கத்தி கள்ளன்
நம்ம புரட்சி கலை மற்றும் சித்தி நடித்து வந்தது
இசை ஞானி இசை
ஜானகி பாடுவாங்க (நல்ல வேளை ஒருத்தர் தூங்க போயிட்டாரு .இன்னொருத்தர் 5000 மைலுக்கு அப்பாலே இருக்கார் தைரியமாய் சொல்லலாம் )
ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
...
பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே.. என் புன்னகையே
பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே
பூ மல்லிகையே.. என் புன்னகையே
மொட்டு விட்ட பூவைக் கட்டிக் கொள்ள வா.. வா..
மெட்டிச் சத்தம் கேட்டு மெட்டுக் கட்டு தேவா
நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர
ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்
...
ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
ihikhik வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
ஊடல் என்னும் நாடகம் ஏன்.. தேவையா
வா.. கட்டிக் கொள்ள.. நீ தொட்டுக் கொள்ள
மின்னல் இடை பாகம்.. கன்னி இவள் தேகம்
மன்னனுக்கு யோகம்.. மன்மதனின் யாகம்
பாரம் தீர.. தோளோடு தோளும் சேர
ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே மாலையாக.. கூடிடும் வேளையாக
உன்னை ராதா அழைக்கிறாள்.. காதல் ராகம் இசைக்கிறாள்
உன்னை ராதா.. ராதா.. ராதா..
மது
கடவுள் தந்த செல்வம் திரைப்படத்தில் பானுமதியின் இரண்டு பாடல்கள் பிரசித்தம். உன்னோடு என் நெஞ்சமே மற்றும் அல்லி மகள் மெல்ல வந்தாள்.
அல்லி மகள் மெல்ல வந்தாள் பாட்டுக்கான இணைப்பு தரவிறக்கிக் கொள்ள இதோ..
http://www.fileshut.biz/exit.php?q=A...-Banumathi.mp3
ராதா பாடறமாதிரி இந்தப் பாட்டு ஒலிக்குது மனசுல
வெண்ணிலா நேரத்திலே வேணுகானம்
மேல் மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணா…….. கண்ணா………
தொடங்கட்டும் கோகுல லீலைகளெல்லாம்
பின்பு தொடரட்டும் கண்ணனின் சேவைகளெல்லாம்
இசையரசியின் எனக்குப் பிடித்த பாட்ல்களில் ஒன்று..படம் அவசரக் கல்யாணம் பார்த்ததில்லை
செல்ல கண்ணா சார்
மது சார் க்கு குட்டி கிருஷ்ணா னு பேர் வைச்சாச்சா
அவருக்கு நான் குட்டி கண்ணன்னு (kk -மனதில் உறுதி வேண்டும் :) ) பேர் வைக்கலாம் னு நினைச்சேன்
சின்ன கண்ணன் நீ
நான் தந்தை என
நீ பிள்ளையென (ஜேசுதாஸ் பாடினால் பில்லையென )
ஒரு பந்தம் (ஜேசுதாஸ் பாடினால் பெந்தம்)
வந்தது நெஞ்சில் பாசம் வந்தது
க்ருஷ்ணா ஜி :)
வெண்ணிலா முகம் குஙகுமம் தரும்
நல்ல நாள் வரும் நு பாட்டு மனசுல ஒலிக்குது..என்னபடம்னு தெரியலையே
ம்ம்.. சுப்ரபாதம் படத்திலே வாணி ஜெயராம் குரலில் ஸ்ரீப்ரியா ஜிங்கு ஜிங்குன்னு ஆடும் "அடி ராதா.. ஸ்ரீகிருஷ்ணன் வந்தான் ரகசியம் பேச"
"அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்த பொல்லாத கண்ணனின் ராதை"..
வரிசையாக மனசுக்குள் பாட்டு ஜூக்பாக்ஸாக வந்துகிட்டே இருக்கே..
செல்வ மகள் படத்தில் ஜெய்சங்கர், ராஜஸ்ரீக்காக டி.எம்.எஸ், ஈஸ்வரி
http://youtu.be/gHswF5LmNVY