12.7.1974
http://i57.tinypic.com/2w6cmxv.jpg
Printable View
12.7.1974
http://i57.tinypic.com/2w6cmxv.jpg
4.7.1975
http://i59.tinypic.com/213i077.jpg
திரு உரிமைக்குரல் ராஜு அவர்களின் தாயார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துயரைத் தாங்கும் வலிமையை இறைவன் திரு ராஜு அவர்களுக்குத் தரவேண்டும்.
திரு ராஜூ அவர்களின் தாயாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
My heartfelt condolences to B.S.Raju sir...
Sent from my HM NOTE 1LTEW using Tapatalk
என் ரத்தத்தின் ரத்தமே:
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெற்று, தமிழக முதல்வராக, ஜூன் 30, 1977 -இல் பதவி ஏற்றார் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் சரித்திரத்தில் புதிய சகாப்தம் உருவான நாள் அது. அண்ணா சமாதியில் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விழாவுக்கு வந்தார். தமிழக கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி, சென்னை ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதை அடுத்து, அதுவரை தமிழகத்தில் எந்த முதல்வரும் செய்திராத சாதனையை செய்தார் எம்.ஜி.ஆர். பல லட்சக்கணக்கான மக்களை ஒருங்கே சந்தித்து, அவர்களுக்கு நன்றி கூறி, அவர்களின் நல் ஆசியுடன் தன் ஆட்சியை ஆரம்பித்தார்.
ராஜாஜி ஹால் நிகழ்ச்சியை அடுத்து, அண்ணா சாலையில், அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து, அருகே அமைக்கப்பட்டிருந்த பெரிய மேடைக்கு வந்தார். பதவி ஏற்றதுமே, மக்களைச் சந்திக்கவேண்டும், அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார் எம்.ஜி.ஆர்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் அங்கே இருந்தனர். தமிழகமெங்கும் இருந்து மக்கள் பலர் லாரி, வேன் பிடித்து சென்னை வந்து சேர்ந்தனர்.
ஜெமினி மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை வரை; மறுபக்கம் காசினோ தியேட்டர் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை; இன்னொரு பக்கம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் வரையிலும் எம்.ஜி.ஆரின் முகத்தை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் காலை 11 மணி வெயிலில் தார் ரோட்டில் மக்கள் உட்கார்ந்திருந்தனர்.
பெரும்பான்மையினர் எம்.ஜி.ஆரை நேரில் பார்க்க முடியாத நிலைமை இருந்தாலும், அவர் பேசுவதை நன்றாக கேட்கும் வகையில் மைக் ஏற்பாடுகள் எல்லா இடங்களிலும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. பேச ஆரம்பிப்பதற்கு முன்னர், மேடையின் எல்லா பக்கங்களுக்கும் சென்று, மக்களைப் பார்த்து கை அசைத்தார். அவர் கை அசைத்ததும், விசில் சத்தம், கை தட்டல், ஆரவாரம் பல நிமிடங்கள் தொடர்ந்து வானை பிளந்தன.
குறைந்தபட்சம் என்று கணக்கெடுத்தாலும் பத்து லட்சம் பேருக்கு அதிகமாக இருக்கும் தார் ரோடுகளிலும் கட்டிடங்கள் மேலேயும், மரங்களிலும், தரையிலும் எங்கிருந்தெல்லாம் எம்.ஜி.ஆரை அன்று பார்க்க முடியுமோ, அவர் பேசுவதை கேட்க முடியுமோ, அங்கெல்லாம் வேறு எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாது மக்கள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருந்தார்கள்.
'மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய தமிழக அமைச்சர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே, சட்டசபை அங்கத்தினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே' என்று எம்.ஜி.ஆர் பேச ஆரம்பித்தார். அடுத்து 'என் ரத்தத்தின் ரத்தமான என் அன்பு உடன்பிறப்புக்களே' என்று எம்.ஜி.ஆர் சொன்னதும் மீண்டும் கரகோஷம் விண்ணைத் தொட்டன. எங்கும் மகிழ்ச்சி, எங்கும் ஆரவாரம்.
கே.ராஜாராம், காளிமுத்து, ராஜா முகமது, பி.டி.சரஸ்வதி, அரங்கநாயகம், ராகவானந்தம், நாஞ்சில் சம்பத், எட்மன்ட் உட்பட அனைத்து அமைச்சர்களும், எம்.ஜி.ஆரின் பர்சனல் டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் அங்கு இருந்தார்கள்.
மேடையில், 'இந்த வெற்றி என் வெற்றி இல்லை; இது உங்கள் வெற்றி. நான் உங்களில் ஒருவன்; உங்களுக்காகவே பாடுபடுவேன். இது உங்கள் ஆட்சி; மக்கள் ஆட்சி. மக்களுக்கு செய்கிற தொண்டே, மகேசனுக்கு, ஆண்டவனுக்கு செய்கிற தொண்டு என்று நான் நம்புகிறேன். தமிழகமும், தமிழக மக்களும் செழிப்பாக இருக்க வேண்டும்; அது தான் என் லட்சியம். என் லட்சியத்தில் நான் வெற்றி பெற, உங்களுடைய ஆசிகளை வேண்டுகிறேன்...' என்று பேசினார் எம்.ஜி.ஆர்.
மக்களின் பெருத்த ஆரவாரத்தின் இடையே அவர் பேசிக்கொண்டு இருந்தார். அவ்வளவு மக்கள் பாசத்துடன், அன்புடன் அவரைப் பார்க்க, பேசுவதை கேட்க கூடி இருந்தது எம்.ஜி.ஆர் வாழ்க்கையிலேயே அவருக்கே மறக்க முடியாத நாள் என்றே நான் சொல்வேன்.
மக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, முதல்வர் பதவியை ஏற்க முதல்முறையாக அங்கிருந்து, தமிழக அரசின் நிர்வாக மையமும், தலைமைச் செயலகமான கோட்டைக்குச் சென்றார் எம்.ஜி.ஆர். தன் அறையில், சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை சந்தித்து நிர்வாகம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். மாலை நான்கு மணிக்குத் தான் வீட்டுக்கு திரும்பினார்.
Courtesy - net
எல்லா புகழும் புரட்சித்தலைவனுக்கே
உரிமைக்குரல் மாத இதழின் ஆசிரியர் சகோதரர் திரு.பி.எஸ்.ராஜூ அவர்களின் தாயார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், திரு.ராஜூ அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நன்றி திரு.குமார் சார்.
இதுவரை பார்த்திராத அரிய புகைப்படம். தலைவருக்கு அருகே இயக்குநர் ப.நீலகண்டன். அன்னை ஜானகி அம்மையார் அருகே இசையமைப்பாளர் திரு.எஸ்.எம்.சுப்பையா நாயுடு. ஏதோ நாடகத்துக்கு தலைவர் தலைமை தாங்கியபோது அந்த நாடகத்தை பார்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. நீங்கள் பதிவிட்டுள்ள புகைப்படங்களில் கூலிங்கிளாஸையும் ஊடுருவி தலைவரின் கண்கள் தெரிகின்றன. இதுபோன்று கண்கள் தெரியும்படி அவர் கூலிங்கிளாஸ் அணிந்திருப்பதை வைத்துப் பார்த்தால் 1971-72 காலகட்டமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
‘எந்த நாடு என்ற கேள்வியில்லை, எந்த ஜாதி என்ற பேதமில்லை’ என்று பாடிய தலைவரின் நாடு, மொழி, மதம், இனம் கடந்த மனிதாபிமானம் பற்றிய தகவலையும் தலைவரின் அட்டகாசமான, பொருத்தமான புகைப்படத்தையும் பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. முகநூலில் இதைப் பதிவிட்ட தலைவரின் பக்தருக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நக்கீரன் பத்திரிகையில் திரைப்பட தயாரிப்பாளர் திரு.கலைஞானம் சினிமா சீக்ரெட் என்ற தொடரை எழுதி வருகிறார். தலைவரின் விசுவாசியான சத்யா ஸ்டூடியோ திரு.பத்மநாபன் குறித்து அவர் எழுதியிருந்ததை சமீபத்தில் திரு.லோகநாதன் பதிவிட்டிருந்தார். அது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
கட்டுரையை படித்து விட்டு திரு.பத்மநாபனின் இரண்டு மகள்களே திரு.கலைஞானத்தின் வீட்டுக்கு வந்து, அழுதிருக்கிறார்கள் என்றால் இது ஒரு முக்கியமான ஆவணம்.
மேலும், தலைவர் மறைந்தபிறகு, திரு.பத்மநாபனின் நிலை குறித்து அவரது மகள்கள் திரு.கலைஞானத்திடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் கல் மனதையும் கரைய வைக்கும். ஆண்டவனுக்கு கூட இப்படிப்பட்ட பக்தர்கள் உண்டோ? என்னவோ? தமிழகத்தை ஆண்டவருக்கு எப்படிப்பட்ட பக்தர்கள் இருக்கிறார்கள்?
பதிவுக்கு நன்றி. திரு. லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/130.jpg
ஆண்டவரே வாழ்க! ஆள்பவரே வாழ்க!!
1977-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தலைவர் தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. உலகிலேயே ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரான முதல் நடிகர் என்ற பெருமையை தலைவர் பெற்றார்.
அந்த வகையில் முதல்வரானவர், தமிழகத்தின் முதல்வராகவும் 1977-ம் ஆண்டு இதே நாளில்தான் (ஜூன் 30) பதவியேற்றார். 38 ஆண்டுகள் கழித்து இதே நாளில், தனது அன்புக்குரிய தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அவர் தோற்றுவித்த மக்கள் இயக்கமான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 27-ம் தேதி ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
பதிவான மொத்த வாக்குகள் : 1,81,032
முதல்வர் செல்வி. ஜெயலலிதா (அதிமுக) : 1,60,432
திரு.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) : 9,710
அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் செல்வி. ஜெயலலிதா, 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திரு.மகேந்திரன் அவர்கள் உட்பட அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கடந்த அக்டோபர் மாதம் புரட்சித் தலைவர் அதிமுகவை தோற்றுவித்த நாளான 17ம் தேதியன்று செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.
கடந்த மே மாதம் 11ம் தேதி, பல்வேறு தடைகளையும் சதிகளையும் தகர்த்து, தமிழ் திரைப்பட வரலாற்றில் அதுவரை வெளியான படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்ததுடன், தலைவர் திரைப்படத்துறையில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படாமல் திகழ்ந்து பெருவெற்றி கண்ட திரைப்படமான உலகம் சுற்றும் வாலிபன் வெளியான அதே நாளில்தான், வழக்கில் இருந்து செல்வி. ஜெயலலிதா அவர்கள் விடுதலையானார்.
தமிழகத்தின் முதல்வராக தலைவர் முதன்முதலில் பதவியேற்று சாதனை படைத்த ஜூன் 30-ம் தேதியான அதே நாளில்தான் இடைத்தேர்தலில் செல்வி. ஜெயலலிதா அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
தலைவருக்கு மட்டுமல்ல, தலைவர் பெயரை உச்சரித்தாலே வெற்றிகள் தொடர்ந்து வரும் என்பதற்கு இன்றைய இடைத்தேர்தல் முடிவும் ஒரு உதாரணம்.
தலைவர் முதல்வராக பதவியேற்று சரியாக 38 ஆண்டுகள் கழிந்தும் கூட, ஏன்? அவர் உடலால் மறைந்து 28 ஆண்டுகள் ஆனாலும் கூட, அவர் தோற்றுவித்த இயக்கத்துக்கு இன்றும் மக்களிடம் அமோக ஆதரவும் செல்வாக்கும் உள்ளதென்றால் அதற்கு, மக்களின் இதய சிம்மாசனத்தில் மன்னாதி மன்னனாக வீற்றிருக்கும் தலைவருக்கு உள்ள செல்வாக்குதான் காரணம்.
தலைவர் தமிழகத்தை ஆண்டவர் மட்டுமல்ல, மக்களின் மனங்களை இ(எ)ன்றும் ஆள்பவர்.
ஆண்டவரே! ஆள்பவரே! வாழ்க நின்புகழ்!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன், சட்டசபை:
அமைச்சர் குழந்தைவேலு, எதிர்கட்சித் தலைவர் கருணாநிதி தேனிக்கு அருகில் தன மகன் அழகிரி பெயரில் சொத்துகளை அபகரித்துள்ளதாக புகார் வாசித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ,அரசியலை விட்டே விலகத் தயார் என்று சவால் விட்டார் கருணாநிதி.
சபாநாயகர் ராசாராம், ஆட்களை அனுப்பி விவரத்தை சேகரித்து சட்டசபையில் அறிக்கை ஒன்றை வாசித்தார்....
"எதிர்கட்சித் தலைவர் அவர்களின் மீது, அமைச்சர் குழந்தைவேலு கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை "
சபை முடிந்ததும், சபாநாயகரை தழுவிய எம்.ஜி.ஆர் "நடுநிலை தவறாமல் ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளீர்கள்" ராசாராமுக்கு நன்றி கூறினார்.
அதுதான் மக்கள்திலகம்.
காலங்கள் கடந்தாலும் எதிர்தரப்பு மக்களாலும் போற்றக்கூடியவர் எம்.ஜி.ஆர் என்றால் அது மிகையல்ல.
அண்ணாவுடன் மக்கள் திலகம்
http://i1170.photobucket.com/albums/...psi9hxta4k.jpg
எம்.ஜி.ஆரை நெகிழ வைத்த சாண்டோ சின்னப்ப தேவர்! ( நூற்றாண்டு விழா சிறப்பு பதிவு)
நடிகர்கள் சம்பளப் பிரச்னை, வெளியீட்டில் தாமதம், நடிகர்கள் ஆதிக்கம் என பற்பல பிரச்னைகளில் திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தயாரிப்பாளர் 4 முழ வேட்டியுடனும், சட்டை போடாத வெற்று உடம்போடும் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தார் என்பதும், பரபரப்பான அந்த கதாநாயகர்கள் அவருடைய படங்களில் நடிக்கும்போது பெட்டிப்பாம்பாய் நடந்து கொண்டார்கள் என்பதும் இப்போது வியப்புக்குரிய ஒன்றாக உள்ளது.
அரைகுறை ஆங்கிலத்தோடும் அடித்துவீசும் வார்த்தைகளோடும் அத்தனை நடிகர்களையும் கையாண்ட அவர் - சாண்டோ சின்னப்ப தேவர்.
சாண்டோ சின்னப்பா தேவருக்கு நூற்றாண்டு விழா துவக்கம் இன்று.பெரும் முதலாளிகள் கோலோச்சி வந்த அக்கால திரையுலகில், அரைகுறை ஆங்கிலமும் கொச்சைத் தமிழுமாக திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கியவர் சின்னப்பா தேவர்.
ஜுபிடர் படங்களில் சிறுசிறுவேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் சின்னப்பா தேவருக்கு எம்.ஜி. ஆருடன் தொடர்பு ஏற்பட்டது. எம்.ஜி. ஆருக்கும் அவருக்கும் இருந்த நட்பு திரையுலகில் அலாதியானது. இயல்பிலேயே உடற்பயிற்சி மற்றும் வீர தீர சாகசங்களில் ஆர்வமுடைய எம்.ஜி.ஆருக்கு, அதில் தேர்ச்சி பெற்றவரான சின்னப்பா தேவரை பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.
திரைத்துறையில் ஓரளவு வளர்ந்திருந்த எம்.ஜி.ஆரை அணுகி, தன் விருப்பத்தை சொல்ல அவரும் சம்மதித் தார். "தேவர் பிலிம்ஸ்" படக் கம்பெனி உருவானது. 4-9-1956-ல் வெளிவந்த "தாய்க்குப்பின் தாரம்" பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். எம்.ஜி. ஆர் கால்ஷீட்டுகளில் சொதப்புவார் என்ற சினிமா உலக கற்பிதத்தை, தேவர் படங்கள் உடைத்தெறிந்தன. தேவர் தயாரிப்பில் எம்.ஜி. ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்ட தகவல் திரையுலகை ஆச்சர் யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது. அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி. ஆரை தேவர், 'ஆண்டவனே..!' என்றும், எம்.ஜி. ஆர் தேவரை, 'முதலாளி...!' என்றும் அழைத்துக்கொள்வர்.
1967 ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது எதிர்காலம் குறித்து திரையுலகில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் தேவர் செய்த ஒரு செயல் எம்.ஜி.ஆர் உட்பட திரையுலகில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
மருத்துவமனையில் எம்.ஜி. ஆரை சந்தித்த தேவர், மருதமலை முருகன் கோவிலில் பூஜை செய்த பிரசாதத்தை தந்து, அவரது நெற்றியில் விபூதி இட்டதோடு, கணிசமான ஒரு தொகையை எம்.ஜி.ஆர் கைகளில் கொடுத்தார். “இது என் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் முருகா... சும்மா படுத்துக்கிடக்காம சீக்கிரம் வந்து நடிச்சிக்கொடுங்க!” என்றபோது எம்.ஜி.ஆர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
காரணம் அந்த வார்த்தைகள், அவரது மனநிலையில் ஏற்படுத்திய நம்பிக்கை. மீண்டு(ம்) வருவாரா, வந்தா லும் முன்போல இயங்க முடியுமா, வருவார் என்றால் அது எப்போது? என திரையுலகம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த சூழலில் தேவரின் செயல் எம்.ஜி. ஆரை நெகிழ வைத்தது.
அவரது இறுதிக்காலம் வரை எம்.ஜி.ஆர், அவர் மீது அளவற்ற அன்பு கொள்ள இதுவே காரணமானது. எம்.ஜி. ஆர் - ஜானகி திருமணத்தில் சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர் என்பதிலிருந்தே இருவருக்குமான நட்பை புரிந்துகொள்ளலாம்.
சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் உழைப்பால் உயர்ந்து பிறர் வாழ உழைத்து, அந்த கடுமையான உழைப்பினாலேயே நம்மை விட்டு மறைந்து இருக்கிறார். எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்த ஒரு நல்லவர். நம்பிக்கைக்கு உரியவர்; நாணயமானவர்; அவருடைய வார்த்தையில் சொல்லப்போனால், அவர் நம்பிய முருகனோடு இரண்டறக் கலந்துவிட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். எப்படி இருப்பினும் திரைப்படத்துறையில் ஒரு ஈடு செய்யமுடியாத, இனி எதிர்பார்க்க முடியாத உழைப்பிற்கு சொந்தக்காரரை, தனது உழைப்பால் உயர்ந்தவரை, சின்னப்பா தேவரைப் போல் ஒருவரை இனி காணப்போவதில்லை - கிடைக்கப்போவதும் இல்லை”-சின்னப்பா தேவர் மறைவின்போது எம்.ஜி. ஆர் பதிவு செய்தவை இவை.
திரைப்படங்களில் நடித்திராத கிருபானந்த வாரியாருக்கு மேக் அப் போட்டவர் தேவர். மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் நடிகர் ராஜேஷ் கன்னாவை வைத்து ’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற படத்தை எடுத்து இந்தி திரையுலகிலும் தேவர் பிரபலமானார்.
புகழ்பெற்ற முருகன் கோவில்களில், சிறப்பு நாட்களில் முருகனுக்கு கட்டும் கோவணம், பூஜை முடிந்ததும் தேவரை தேடி வரும். லட்ச லட்சமாய் சம்பாதித்தாலும் தேவர் வீட்டு பீரோவை அலங்கரித்தவை அவர் சேமித்த இந்த கோவணங்கள்தான். நாத்திக கொள்கை கொண்ட திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மருதமலைக்கு, தான் அமைத்திருந்த எலக்ட்ரிக் விளக்கு துவக்க விழாவிற்கு வரழைத்ததும் அவரது சாதனைதான்.
விடா முயற்சி, கடும் உழைப்பு, மற்றவர்களுக்கு உதவும் குணம் என்ற குணங்களோடு சாதனை மனிதராக திரையுலகில் உலாவந்த சின்னப்பா தேவர் என்ற மனிதரின் புகழ், திரையுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்!
விகடன் தொகுப்பிலிருந்து
different thalaivar fan in fb
இந்த தலைமுறையல்ல இன்னும் நூறு தலைமுறை கடந்தாலும் அவர்கள் மனதிலும் வாழும் இதய தெய்வம் நமது வாத்தியார் தான், இன்றைய இளைஞர்கள் மனதில் எவ்விதம் வாழ்கிறார் நம் புரட்சித் தலைவர் பாருங்கள்!!
பிற மாநிலத்தவர் தமிழ் சினிமாவில் இப்போதும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர் அவர்களை நான் ரசிப்பதில்லை பதிலுக்கு அவர்களை கேலி செய்கிறேன், ஆனால் இன்று எம்.ஜி.ஆர் உயிருடன் கூட இல்லை அவரும் பிற மாநிலத்தவர்தானே அவரை ஏன் ரசிக்கிறாய், விஜய் கமல் என்ற இரு தமிழர்களுக்கு முகநூலில் ரசிகர் பக்கங்கள் தொடங்கி நடத்தி வரும் நீ எம்.ஜி.ஆருக்கும் முகநூல் ரசிகர் பக்கம் துவங்கியது ஏன் என பலரும் என்னிடம் கேள்வி கேட்டுள்ளனர் நான் பதில் சொன்னதில்லை, இன்றாவது பதில் சொல்ல நினைக்கிறேன் இந்த பதிவின் மூலமாக!
நான் தீவிர விஜய் ரசிகன் அது நான் மறைந்தாலும் மாறாத ஒன்று சினிமாவில் விஜய்யை ரசித்ததை காட்டிலும் நிஜ வாழ்கையில்தான் அவரை அதிகம் ரசித்திருக்கிறேன், தன்னால் முடிந்த உதவிகளை ஏழைகளுக்கு தொடர்ந்து செய்து வருபவர்! கமல்ஹாசன் சினிமாவிற்காகவே பிறந்தவர் தன்னை சினிமாவிற்காக அற்பனித்தவர் சிவாஜி கணேசன் அன்று எப்படியோ அது போல் இன்றுள்ள சிவாஜி கணேசன் ரசிகர்களும் கமல்ஹாசனை தான் வாழும் சிவாஜியாக பார்க்கின்றனர், களத்தூர் கண்ணம்மா முதல் இன்றுவரை நடிப்பில் எவரும் அசைத்து பார்க்க முடியா சிகரம் அவர், இந்திய சினிமாவில் சிறந்த நடிப்பு என்றால் அனைவருக்கும் நியாபகம் வரும் ஒரே கலைஞர் கமல்ஹாசன்.
எம்.ஜி.ஆர் தமிழராக பிறந்தவரல்ல ஆனால் தமிழ் மக்களுக்காக வாழ்ந்தவர், தமி்ழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வாழ்ந்தவர், முதலமைச்சர் என்ற பதவியில் அவர் அமர்வதற்கு முன்பே ஒரு நடிகராக இருந்துகொண்டே ஏழைகளுக்கு பல நலதிட்ட உதவிகளை செய்து வந்தவர், இன்றும் அவரால் பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைக்கிறது மேலும் அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்து தமிழகத்திற்கு செய்த நன்மைகள் ஏராளம், அதையெல்லாம் விரிவாக பேசினால் அரசியல் பேசுகிறான் என்பார்கள் நான் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவனும் அல்ல.
தமிழக மக்களுக்காக ஓர் தமிழராக வாழ்ந்து தமிழராக தமிழ் மண்ணில் மறைந்தார், பூவுலகை விட்டு நீங்கி 30 வருடங்களாக போகிறது இன்றும் நல்லோர் மனதை விட்டு நீங்காத ஓர் நிஜ சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார் நமது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்!
நாளை (01/07/2015)இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " ஒளிபரப்பாக உள்ளது.
http://i57.tinypic.com/2echet2.jpg
.
தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்
உன்னை விடமாட்டேன்
https://www.youtube.com/watch?v=WOvD...lYDuuE42068a2M
ஜூலை மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் பட்டியல் - திரு குமார்
ஆண்டவரும் ஆள்பவரும் - கட்டுரை - திரு கலைவேந்தன்
உன்னை விட மாட்டேன் - திரு சைலேஷ்
மக்கள் திலகம் பற்றிய முக நூல் பதிவுகள் - திரு யுகேஷ் பாபு
மக்கள் திலகத்துடன் இசை சிற்பிகள் அபூர்வ நிழற்படம் - திரு ரவிச்சந்திரன்
அருமையான பதிவுகள் . நன்றி நண்பர்களே
சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் 27/06/2015 (சனிக்கிழமை ) அன்று இதயக்கனி மாத இதழ் ஆசிரியர் திரு. விஜயன் ஏற்பாடு செய்த புர ட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 98 வது பிறந்த நாள் மற்றும் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களின் 100 வது பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு.
http://i59.tinypic.com/1676phi.jpg
காமராஜர் அரங்கு முன்பு விற்பனைக்கு தயாராக உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய புகைப்படங்கள் /பேட்ஜ்கள் / பேனாக்கள் / சாவி கொத்துக்கள்
http://i60.tinypic.com/24fwvbp.jpg
புகைப்படக் கண்காட்சி பற்றிய புகைப்படங்கள்.
http://i58.tinypic.com/2s13mdl.jpg