http://i59.tinypic.com/29w1oqt.jpghttp://i57.tinypic.com/hty353.jpg
Printable View
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
பன்சாயீ - பாடலை பற்றிய ஆராய்ச்சி பதிவு பிரமாதம் .பல் வேறு தகவல்களுடன் பாடல் காட்சிகளை கோர்வையாக
பதிவிட்டு அசத்தி விட்டீர்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரிக்கு புதிய வரவான திரு சத்யா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் .
முத்தையன் சார்
சூப்பர் எக்ஸ்பிரஸ் -வேகம் தூள் பறக்கிறது .மக்கள் திலகம் உங்கள் இதயத்தில் எந்த அளவுக்கு குடி கொண்டு உள்ளார் என்பதை அறிய முடிகிறது . அசத்துங்கள்
சென்னையில் இன்று காலை நடை பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மக்கள் திலகத்தை பற்றி முன்னாள் நீதிபதிகள் பலரும் பாராட்டி உரையாற்றி உள்ளார்கள் . சென்னை நண்பர்கள் அந்த விழா பற்றிய பதிவுகளை வழங்குவார்கள் .
நண்பர் கலைவேந்தன் கூறியது போல் எங்கும் எதிலும் என்றும் எம்ஜிஆர் என்ற மந்திர சொல் ஒலித்து கொண்டே இருக்கிறது .
http://i1170.photobucket.com/albums/...ps577f56cf.jpg
எல்லோருக்கும் வழி காட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க்க காத்திருக்கிறேன்
தலைவர் கூறியது போல் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள் புதிதாக வந்த சத்யா அவர்களை வரவேற்கிறேன்
http://i1170.photobucket.com/albums/...psdaa5565b.jpg
இப்போது தேர்தல் நடத்தினால் அ.தி.மு.க. வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
சென்னை, நவ,23-
தமிழ்நாட்டில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் அது தொடர்பான மக்கள் மனநிலை பற்றி ‘‘மக்கள் ஆய்வகம்’’ எனும் நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்றத்தொகுதிகள் வாரியாக சுமார் 3320 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தி தகவல் சேகரிக்கப்பட்டது. பிறகு அவை ஆய்வு செய்யப்பட்டன.
கருத்துக்கணிப்பு ஆய்வு முடிவில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான முடிவுகளை ‘‘மக்கள் ஆய்வகம்’’ இயக்குனர் ராஜநாயகம் வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் இப்போது தேர்தல் நடத்தப்பட்டால், அ.தி.மு.க.வுக்கு 44 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும். தி.மு.க.வுக்கு 26 சதவீத ஓட்டுக்களும், பாரதீய ஜனதாவுக்கு 9 சதவீத ஓட்டுக்களும் கிடைக்கும்.
அ.தி.மு.க.வின் வெற்றிக்கு ஜெயலலிதாவின் நிர்வாக திறமையே அடிப்படை காரணமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மிகச்சிறந்த நிர்வாகத்தை தந்ததாக 58 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே ஜெயலலிதா அமோக ஆதரவுடன் தன்னிகரற்ற தலைவராக இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் 1530 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 20 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து நீடித்து வரும் அபரிதமான மக்கள் செல்வாக்கால், ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவதை மற்ற கட்சிகளால் தடுக்க முடியாது என்று தெரிய வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டுச்சேர்ந்தாலும் ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது தவிர்க்க முடியாதது என்பது கருத்துக்கணிப்பில் உறுதியாக உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது பற்றியும் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மக்களில் 53 சதவீதம் பேர், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை மிகக்கடுமையானது. ஏற்க இயலாதது என்று கூறியுள்ளனர்.
மேலும் 30 சதவீதம் பேர், ஜெயலலிதாவுக்கு இப்படியொரு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளனர். இதன் மூலம் சுமார் 83 சதவீதம் பேரின் அனுதாபம் ஜெயலலிதாவுக்கு கிடைத்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாக 14 சதவீதம் பேரே கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் ஆட்சி நிர்வாகம் மிக, மிக சிறப்பாக இருந்ததாக மக்கள் கூறியுள்ளனர். இந்த கருத்தை தெரிவித்த சுமார் 60 சதவீதம் பேர், ஜெயலலிதா நிர்வாகத்தில் இல்லாததால் கடும் வேதனை அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஜெயலலிதா நிர்வாகப்பொறுப்பில் நேரடியாக இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. வுக்கு சரிவு எதுவும் ஏற்படாது என்றும் கருத்துக்கணிப்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. தொடர்ந்து வெற்றி பெறும் என்று 31 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா நிர்வாகம் செய்யாவிட்டாலும் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பில் மாற்றம் வராது என்று 25 சதவீதம் பேர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 7–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக பாரதீய ஜனதா கட்சி அவதாரம் எடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பெரிய கட்சியாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் இரண்டாவது, மூன்றாவது இடங்களில் இருந்தன.
ஆனால் சமீபத்திய கருத்து கணிப்பில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்தப்படியாக பா.ஜ.க. மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு 43 சதவீதம், தி.மு.க.வுக்கு 26 சதவீதம், பா.ஜ.க.வுக்கு 9 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்த போது, நாடெங்கும் மோடி அலை வீசிய நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் மோடி அலை எடுபடவில்லை. இந்த நிலையில் மோடி பிரதமராகி விட்ட பிறகு தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பது கருத்து கணிப்பில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட பல விஷயங்களில் பா.ஜ.க. அரசின் அணுகுமுறை காரணமாக தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சி, மற்ற கட்சிகளான தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி விட்டதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் மோகம் தமிழ்நாட்டில் குறைந்து இருப்பதும் இந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. ரஜினி புதிய கட்சி தொடங்கலாம் என்று 17 சதவீதம் பேரும், விஜய் புதிய கட்சி தொடங்க 21 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் ரஜினி, விஜய் இருவரையும் அரசியல்வாதிகளாக பார்ப்பதை விட நடிகர்களாக பார்ப்பதையே விரும்புவதாக 90 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எனவே ரஜினி அரசியலில் ஈடுபடுவது பற்றி தமிழ்நாட்டு மக்கள் எந்தவித சலனமும் இல்லாமல் இருப்பதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
courtesy malaimalar
திரு முத்தையன் அவர்களின் புகைப்பட தொகுப்பு சூப்பர்
திரு வினோத் அவர்களின் நாடோடி மன்னன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் பட தகவல்கள் பற்றி கேட்டவுடன் உள்ளம் ஆனந்த கூத்தாடுகிறது :victory: ... Shift+R improves the quality of this image. Shift+A improves the quality of all images on this page.
மறு வெளியீட்டில் நேற்று இன்று நாளை என சாதனை படைத்து கொண்டு இருக்கும் நமது மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய செய்திகளை பதிவு செய்ய நாம் ஏன் புதிதாக ஒரு திரிதனை ஆரம்பிக்க கூடாது ? அப்படி ஒரு திரி இருந்தால் வருங்கால தலைமுறைகள் நமது தெய்வத்தின் காவியங்கள் எப்படி சாதனை செய்து உள்ளது என்று தெரிந்து கொள்ள எதுவாக இருக்கும் அல்லவா ?
இப்பொழுது உள்ள திரியில் நாம் பதிவு செய்கிறோம் ஆனால் மற்ற விஷயங்கள் இதில் உள்ளதால் நாளை யாராவது நமது தெய்வத்தின் திரைப்படங்கள் எப்பொழுது எல்லாம் மறு வெளியீடு வந்து உள்ளதை அறிந்து கொள்ள இந்த புது திரி உபோயகம் உள்ளதாக இருக்கும்
நமது திரியின் moderator திரு வினோத் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்
வார்த்தைக்கு மரியாதை ... அதை கர்ணனும் காத்தான் ... அவனுக்கு சற்றும் சளைக்காத வள்ளலாம் .. நமது மக்கள் திலகமும் காத்தார் ....
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படப் பிடிப்பு துவக்க நாள் அன்று , மக்கள் திலகம் ஒப்பனை அறையில் இருந்தார் . தயாரிப்பாளர் பந்துலு உள்ளே வந்தார் , பொதுவாகவே பந்துலு வந்தால் மக்கள் திலகம் எழுந்து நின்று மரியாதை அளிப்பார் , அன்றும் அவ்வாறே எழப் போக , பந்துலு அவரை அமரச் செய்து
" தம்பி , உங்களை வைச்சு படம் எடுக்க வந்தேன் , நஷ்டமில்லாம , கஷ்டமில்லாம மூணு படம் எடுத்துட்டேன் . இது நாலாவது படம் . என் லட்சியப் படம் . நான் இதோட வெற்றியையும் பார்த்துட்டு சாகனும் அதுக்கு நீங்க தான் உதவனும் " என்று சொன்னார் பந்துலு ....
அதற்கு மக்கள் திலகம் , ஒப்பனை நாற்காலியிலிருந்து இறங்கி வந்து பந்துலுவை கட்டிப் பிடித்து , " ஏன் , இந்த வார்தையெல்லாம் ? அவச் சொல் கூடாது . " என்றார் .
" என்னமோ என் மனசு சொல்லுது நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு " என்றார் பந்துலு .
" ச்சே .. ச்சே .. நீங்க காலாகாலமும் வாழனும் , எத்தனை படம் வேணும்னாலும் எடுங்க . என்னால முடிஞ்சதை செய்யறேன் . இந்தப் படத்துக்கு எத்தனை நாள் வேணும் ? எப்பப்ப வேண்டும்னு சொல்லிட்டா நான் எல்லா படத்தையும் இப்ப இருக்குற கட்சி வேலைகளையும் நிறுத்திட்டு வேலை செய்யறேன் " என்றார் மக்கள் திலகம்
இருவர் கண்களும் கலங்கின .... " இது என் கடைசி படமா இருந்தாலும் சரி , பிரமாண்டமா இருக்கணும் " என்றார் பந்துலு ....
"யாருக்கு கடைசி படம்னு அவனல்ல தீர்மானிக்கனும் , போய் ஷாட் வைங்க , இதோ வந்துட்டேன் " என்றார் மக்கள் திலகம் ....
இருவர் சொல்லும் பலித்தது , படத்தை முடிக்க பணம் புரட்டப் போன பந்துலு பெங்களூரில் மரணமடைந்தார் . அவரது மறைவுக்கு பின்னர் சித்ரா கிருஷ்ணசாமியை அழைத்த மக்கள் திலகம்
" பந்துலு சாருக்கு நீங்க நெருங்கிய நண்பர் , இந்தப் படத்தை நான் முடிக்கணும் , அவர் எப்படி எல்லாம் எடுக்க நினைத்தாரோ அப்படி எடுக்க நினைக்கறேன் . அதை முடிக்க ஒரு தயாரிப்பாளரை நீங்க கொண்டு வாங்க " என்றார்
" அந்தப் படத்துக்கு மட்டுமல்ல , பந்துலு சாருக்கும் என் காணிக்கையை அவுங்க பேசிய சம்பளத்தில் பாதி !பந்துலு சார் டைரெக்ட் செய்ய இருந்தாங்க . இப்ப அவர் இல்லே . அதனாலே நானே டைரெக்ட் செஞ்சு கொடுக்கறேன் . எனக்கு ஒன்னும் வேணாம் " என்றும் சொன்னார் மக்கள் திலகம் .
படத்தை செலவில்லாமல் சென்னையிலேயே எடுக்கலாம் என்று சொன்னப் பொழுது .... " வேணாங்க , ஜெயப்பூர் பந்துலு சார் தாய் வீடு . அந்த ஊரை நம்ம நாட்டுக்கு தெரிவைச்சவங்க அவுங்க . அங்கேயே போய் எடுக்கலாம் " என்றார் மக்கள் திலகம் ... அங்கேயே காட்சிகளும் படமாக்கப் பட்டது ... இத்தனைக்கும் அப்பொழுது 1976 தேர்தல் களம் ... அரசியல் பரபரப்பு ... அதற்கு இடையிலும் பந்துலு சாருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இடையுறாது உழைத்தார் மக்கள் திலகம் .
படமும் முடிந்தது , தேர்தலும் முடிந்தது .... டப்பிங் மட்டும் முடியாமல் இருந்தது . கட்சியின் வெற்றிக்கு பிறகு மக்கள் திலகம் முதல்வராக தேர்வு செய்யப் பட்டு பதவி ஏற்க வேண்டும் , நாடே எதிர்பார்த்து இருந்த சூழலில் , பதவியேற்பை சில நாட்கள் தள்ளிப் போட்டார் மக்கள் திலகம் ....
மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் உட்பட மூன்று படங்களின் டப்பிங் வேலையை முடித்துக் கொடுத்தார் ... பதவியேற்புக்கு ஒரு நாள் முன்னர் , மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் டப்பிங் லூப் முடிந்தது , மைக்கை தொட்டு முத்தமிட்டார் மக்கள் திலகம் , இரவு 11 மணிக்கு வாகினி டைபிங் தியேட்டருக்கு வெளியே வந்தார் மக்கள் திலகம் நிலத்தை தொட்டு முத்தமிட்டார் ..... பணியை முடித்த பெருமிதத்தில்
தகவலுக்கு நன்றி - எம் ஜி ஆர் பிச்சர்ஸ் ரவீந்தர்
courtesy kishore krishnasamy net
அகிலன் எழுதிய 'வேங்கையின் மைந்தன்' சரித்திர நாவல் 'சாகித்ய அகாடமி' விருது பெற்றதாகும். அதை சிவாஜிகணேசன் நாடகமாக நடத்தி வந்தார். போர்க் காட்சிக்காக, குதிரைகளை மேடையில் ஏற்றி பரபரப்பை உண்டாக்கினார்.
இந்த நாடகத்தை, சினிமாவாக தயாரிக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். ஆனால் சிவாஜிகணேசன், 'இதை நானே படமாக எடுக்கிறேன்' என்று கூறிவிட்டார்.
இதை அறிந்த எம்.ஜி.ஆர், அகிலனின் மற்றொரு சரித்திரக் கதையான 'கயல்விழி'யை படமாகத் தயாரிக்க எண்ணினார். அப்போது சென்னை ராயப்பேட்டையில் எம்.ஜி.ஆரும், அகிலனும் அருகருகே வசித்தனர். திடீரென்று ஒருநாள், அகிலன் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார்.
'கயல்விழி கதையை படமாக்க விரும்புகிறேன். நீங்களே வசனத்தையும் எழுதவேண்டும்' என்று அகிலனிடம் கூறினார்.
எம்.ஜி.ஆரின் அன்பில் நெகிழ்ந்து போன அகிலன், கயல்விழியை படமாகத் தயாரிக்கும் உரிமையை எம்.ஜி.ஆருக்குத் தர சம்மதித்தார். ஆனால், 'வசனத்தை நான் எழுதவில்லை. நீங்கள் விரும்பும் ஒருவரை வசனம் எழுத ஏற்பாடு செய்யலாம்' என்று தெரிவித்தார். 'கயல்விழி' என்ற பெயர், சினிமாவுக்காக 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' என்று மாற்றப்பட்டது.
படத்தை, பி.ஆர்.பந்துலு டைரக்ஷனில் பிரமாண்டமாகத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்ய, பி.ஆர்.பந்துலு கர்நாடக மாநிலத்திற்கு சென்றார். எதிர்பாராத வகையில், அங்கு திடீரென்று காலமானார்.
பி.ஆர்.பந்துலுவின் மரணத்தால் பெரிதும் துயரம் அடைந்த எம்.ஜி.ஆர், எப்படியும் படத்தை எடுத்து முடிக்க தீர்மானித்தார். 'சோளீஸ்வரா கம்பைன்ஸ்' என்ற பேனரில் படம் தயாராகியது. திரைக்கதை - வசனத்தை ப.நீலகண்டன் எழுத, எம்.ஜி.ஆரே டைரக்ஷன் பொறுப்பை ஏற்றார்.
எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக லதா, பத்மபிரியா ஆகியோர் நடித்தனர். மற்றும் எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சகஸ்ரநாமம் ஆகியோரும் நடித்தனர்.
தி.மு.க.வை விட்டு விலகி, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலகட்டம் அது. அரசியல் பணிகளுக்கு இடையே, படப்பிடிப்பையும் தொடர்ந்து நடத்தினார், எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர், டெல்லி, மைசூர் என்று பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், 1977 தேர்தல் வந்தது. ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. எமë.ஜி.ஆர். முதல்-அமைச்சராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' பூர்த்தியாக, ஒரு சில காட்சிகள் பாக்கி இருந்தன. அவற்றை இரவு - பகலாக எடுத்து முடித்து விட்டு, முதல்-அமைச்சராக பதவி ஏற்றார், எம்.ஜி.ஆர். அவர் பதவி ஏற்ற பிறகு, 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வெளிவந்தது.
முதல்-அமைச்சர் ஆன பிறகு எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்கவில்லை. எனவே, அவர் நடித்த கடைசி படம் என்ற சிறப்புக்குரியது 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
courtesy net
மக்கள் திலகம் காசு கொடுக்காத பொழுது - ஆமாம் அவர் வள்ளல் தான் , ஆனாலும் அவரே கொடுக்காமல் விட்ட தருணமும் உண்டு
அன்பே வா படத்தின் இரண்டாவது கட்ட படப் பிடிப்பு ... ஊட்டிக்கு செல்கிறார் மக்கள் திலகம் . அவருடன் ஜானகி அம்மையாரும் செல்கிறார் , மக்கள் திலகத்தின் உதவியாளர் சபாபதி , எம் ஜி ஆர் பிக்சர்ஸ் ரவீந்தர் என்று நால்வரும் காரில் சென்று கொண்டிருக்க , கூனூரைத் தாண்டிய பொழுது ... ஒரு முஸ்லிம் வயோதிகர் நடந்துச் செல்வதை காண்கிறார்கள் ....
மக்கள் திலகம் காரை நிறுத்தச் சொல்கிறார் , டிரைவரிடம் :
"இராமசாமி , அந்த பெரியவர் போற இடம் கேட்டு ஏத்திக்க , ரவீந்திரன் , நீங்க என் பக்கத்திலே வாங்க " - என்றார் .
அந்தப் பெரியவரை கூப்பிட்டதும் சற்று நேரம் உற்று பார்த்தார் , காரில் ஏறிக் கொண்டார் . கார் புறப்பட்டது
அவர் ஏதோ பிரார்த்தனை செய்வது போலிருந்தார் . அப்பொழுது மக்கள் திலகம் அவரைப் பார்த்து கேட்டார்
" பெரியவரே எங்க போயிட்டு வரீங்க ? "
"கீழே போய் விறகு வித்துட்டு வர்றேன் "
" இந்த வயசுல நீங்க வேலை செய்யனுமா ? ... உங்களுக்கு பிள்ளைக் குட்டி கிடையாதா ?"
" இருக்கிறாங்க , ஆனா அவங்களுக்கும் பிள்ளைங்க இருக்குதே .... " என்றார் பெரியவர்
மௌனம் நிலவியது .... சற்று தூரம் வந்தவுடன் பெரியவர் வண்டியை நிறுத்துச் சொல்லி , இறங்கிப் போய் விட்டார் ....
மக்கள் திலகம் ரவீந்தரைப் பார்த்து கேட்கிறார் :
" ரவீந்திரன் , இந்தப் பெரியவர் பற்றி என்ன நினைக்கறீங்க ? "
" ரொம்ப பெரியவர் . ஏன்னா நீங்க கேட்ட கேள்விக்கு அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்குதேன்னு ஒரு பெரிய விஷயத்தை சுருக்கமா சொல்லிட்டாரு " என்று ரவீந்தர் சொல்ல ....
அதற்கு மக்கள் திலகம்
" அட , அதை கேக்கலேய்யா , அவருக்கு என்னை தெரியலே , நீர் என்னமோ அன்னிக்கு நாட்டுலே என்னை தெரியாதவங்களே இருக்க மாட்டாங்கன்னு சொன்னீரே ! நீர் தோத்துப் போயிட்டீர் ..." என்று சிரித்தார் .
அப்பொழுது இன்னமும் கார் நின்றுக் கொண்டதை அறிந்த மக்கள் திலகம்
" ஏம்பா இராமசாமி நிக்குறே... போயேன் " என்றார்
" அந்தப் பெரியவர் என்னை நிக்க கை காட்டிட்டு , போனாருங்க . அதோ வரார் பாருங்க " என்றார் இராமசாமி
அந்தப் பெரியவர் வந்தார் , கைகளில் பழங்களுடன் ....
" ஐயா , நான் சாவுறதுக்கு முன்னால ஒரு தரம் உங்களைப் பார்க்கணும்னு இருந்தேன் . உங்க கூட உங்க கார்லே வர்றதை நினைச்சதும் எனக்கு பேச்சு மூச்சு இல்லை . என் அல்லா கிட்டே உங்களை நல்லாக்கி வைக்க வேண்டிக்கிட்டே இருந்தேன் . என் பிள்ளைங்க உங்க படம் பார்ப்பாங்க . நான் படம் பார்க்க மாட்டேன் . உங்க படத்தை சுவரொட்டியிலே பார்த்திருக்கேன் .. வெறுங்கையோட பார்த்துட்டோமேங்கற கவலை வேறே . அதைப் போக்கத் தான் இதுங்களை வாங்கியாந்தேன் . "மிஸ்கேன்" (யாசகன் ) தர்றேன் வாங்கிக்குங்க " என்றார் அந்தப் பெரியவர்
பொன் சிரிப்புடன் மக்கள் திலகம் அவற்றை பெற்றுக் கொண்டார் , கார் கிளம்பியது , ஜானகி அம்மையார் மக்கள் திலகத்தை பார்த்து கேட்டார்
" பாவம் .. எதாச்சும் அவருக்குக் கொடுத்திருக்கலாம் ,நான் கொடுக்கலாம்னு வந்தப்ப ஏன் தடுத்தீங்க ? "
அதற்கு மக்கள் திலகம் பதிலளித்தார் ...
" ஜானு , தன்மானதுக்காக தன பிள்ளைங்க கிட்டே கேட்காம , தானே விறகு வித்து சாப்பிடுறவர் கிட்டே , நாம பணம் கொடுத்தா வருத்தப் படுவாரு . அவர் ஒரு பெரிய கேரக்டரு ! சரி அவர் கொடுத்த இந்தப் பழங்களை பத்திரமாவை . நானே சாப்பிடப் போறேன் , யாருக்கும் கொடுக்க மாட்டேன் " என்று சின்னப் பிள்ளை போலச் சொன்னார்
மக்கள் திலகம் ....
இதனை விவரித்தவர் , எம் ஜி ஆர் பிக்சர்ஸ் ரவீந்தர் ,
குல்லா மாட்டிக் கொண்டு கஞ்சி உருஞ்சுவதால் மட்டும் வருவதில்லை பாசமும் அன்பும் புரிதலினால் வருவது அது
courtesy kishore k samy net
யார் முதல்வர் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் - கருணாநிதி
-------------------------------------------------------------------------------------------------------
இப்படித் தான் ... மக்கள் திலகத்தின் ஆட்சியின் பொழுது ... இதே கருணாநிதி அவரைப் பார்த்து , ஊமையன் நாட்டை ஆள்வதா என்று வீதி வீதியாக மேடை போட்டுக் கூவினார் ....
மக்கள் திலகம் மதுரை மாநாட்டை கூட்டினார் , தொண்டர்களைப் பார்த்து சில வார்த்தைகள் மட்டுமே பேசினார் ... அது என்ன ?
" நீங்கள் எல்லோரும் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் " என்பது தான் அந்த வார்த்தைகள் ....
என்னது கத்தி வைத்துக் கொள்ள முதல்வரே சொல்வதா என்று மேடையில் இருந்தவர்கள் ஊடகங்கள் என்று எல்லாத் தரப்பும் அதிர்ச்சிக்குள்ளாயின ....
உடனே அடுத்த சில நாட்களில் வீதி வீதியாக , முதல்வர் இப்படி பேசலாமா ? என்று மேடை போட்டு கருணாநிதி பேசத் துவங்கினார் ....
பொன் சிரிப்பு சிரித்தார் மக்கள் திலகம் .... ஊமையன் என்று சொன்ன அவரே அதே மேடைகளில் தோன்றி நான் பேசுகின்றேன் என்பதை ஏற்றுக் கொள்கிறார் பாருங்கள் என்றார் ....
அதே கதை தான் இப்பொழுதும் ... யார் முதல்வர் என்று கருணாநிதி அறிக்கையை படிக்கும் அனைவருக்கும் மீண்டும் பன்னீர்செல்வம் மனதில் வந்து போவார் ....
நன்றி மிஸ்டர் கருணாநிதி , நீங்கள் திருந்தாத ஜென்மமாக இருந்து எங்களுக்கு லாபம் தான்
இன்னைக்கு நடக்கும் கிளீன் இந்தியா நாடகத்தை அன்னைக்கே மக்கள் திலகம் உணர்ந்து தான் காட்சியமைதுள்ளார் ... அவசியம் பாருங்கள்
https://www.youtube.com/watch?v=41t6DNDIo50
நேற்று ஜெயா டிவியில் தலைவரின் அரசகட்டளை படத்தை ஒளிபரப்பு செய்தார்கள் ஆனால் முக்கியமான காட்சிகளை கட் செய்து விட்டார்கள் நமது டிவியில் இப்படியா என்று கேட்க்க தோன்றுகிறது
தலைவர் பதவி சுகத்தை பற்றி ஜெயாவிற்கு அறிவுரை செய்யும் காட்சி மற்றும் தலைவர் நம்பியார் போடும் காட்சி ( சரோஜா அவர்கள் கொடுத்த அன்பு சங்கிலி நம்பியார் பறிக்க முற்படும் போது ) சூப்பர் ஆன கத்தி சண்டை காட்சி கட் பண்ணி விட்டார்கள்
https://www.youtube.com/watch?v=u5lXbykMdcs
அரச கட்டளை நான் ரசித்த காட்சிகள்
1. வீரப்பா தலைவரிடம் நீ யார் என்று கேட்கும் பொழுது நான் குமரி நாட்டு குடி மகன் என்று மிகவும் தழு தழுத்த குரலில் சொல்லுவார் ( தலைவர் குண்டடி பட்டு பேசிய வசனம் அல்லவா )
2.வீரப்பா தலைவருக்கு கிரிடம் சுட்டி இந்த நாட்டை ஆள தகுதியானவன் நீ தான் என்று சொல்லும் காட்சி
3.ஓடு ஓடு என்று யார் சொன்னாலும் நாடு நாடு என்று நான் சொல்லுவேன்
4.சரோஜா அவர்கள் தலைவரை கண்களை கட்டி கொண்டு தன்னுடைய இருப்பிடத்திற்கு கொண்டு சென்றவுடன் நம்பியார் தங்கள் நாடு கொடி யான யானை படத்தை பெண் உதவியாளரிடம் கண்ணாலே அதை மூட சொல்லி ஜாடை செய்து அந்த படத்தை மூடும் பொழுது வரும் சத்தத்தை கொண்டு தைவரின் கண் கட்டை சரோஜா அவிழ்த்த வுடன் தலைவரின் பார்வை அந்த சத்தம் வந்த இடத்தை பார்க்கும் காட்சி அப்பா class
இப்படி நிறைய காட்சிகள் நேரம் கிடைக்கும்பொழுது எழுதுகிறேன்