நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.
இன்றைய புகைப்படம்(4)
'சம்பூர்ண ராமாயணம்' படப்பிடிப்பில் டைரக்டர் K.சோமு, வி.கே.ராமசாமி மற்றும் ஏ.பி.நாகராஜன் அவர்களுடன் 'பரதன்'
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/sr.jpg
Printable View
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.
இன்றைய புகைப்படம்(4)
'சம்பூர்ண ராமாயணம்' படப்பிடிப்பில் டைரக்டர் K.சோமு, வி.கே.ராமசாமி மற்றும் ஏ.பி.நாகராஜன் அவர்களுடன் 'பரதன்'
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/sr.jpg
சாப்பாட்டு ராமனையும், 'நடிகர் திலகம்' விஜயகுமாரையும் தரிசிக்கப் போகும் அன்பு நெஞ்சங்களுக்கு எனது பொறாமையுடன் கூடிய வாழ்த்துக்கள்.
http://www.shotpix.com/images/02312842086170597606.jpghttp://www.shotpix.com/images/08536754696266829192.jpg
The one and only style king in the world
இந்த ஒரு போஸிற்கு ஈடுஇணை உண்டா?!
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-38.jpg
சாதனை புரிந்த ராமன்
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-37.jpg
http://sim.in.com/db285f1d0db577dd03...da55_ls_lt.jpg
"மிஸ்டர் மைனர்...ரொம்ப நாழியா நீங்க நிக்கிறீங்களே... உக்காருங்க"... என்று பழிவாங்கும் படலத்தை பக்காவாகத் தொடங்குமிடம்.....
அதே போல நாற்காலியைத் தள்ளி மைனரின் தன்மானத்தைத் தவிடுபொடியாக்குமிடம்....
"மிஸ்டர் மைனர்... என்னைத் தெரியுதா?" (கூலிங் கிளாசை கழற்றிவிட்டு) "தெரியல?" என்றபடி நொடிப்பொழுதில் கோட்டைக் கழற்றி, பின் ஷர்ட்டையும் கழற்றி, முதுகைத் திருப்பி முன் அடிபட்ட தழும்புகளைக் காட்டும் ஆவேசம்....
"தெரியல...தெரியல"...என்று கேட்டபடியே ஷர்ட்டை சடுதி நேரத்தில் போட்டு பட்டன்களைப் போடாமல் அப்படியே பேன்ட்டுக்குள் செருகும் செம ஸ்டைல்...
"சாப்பாட்டு ராமன்" என்றபடி கைகளை தடதடவெனக் கொட்டி "கதவை இழுத்துப் பூட்டு" என்று கட்டளையிட்டு கர்ஜிக்குமிடம்...
"யாராவது இங்கிருந்து அசைஞ்சா சுட்டுப் பொசுக்கிடுவேன்" என்றபடி சென்று பிரம்பை எடுத்து (காமெராவின் லோ ஆங்கிளில்... நம்பியார் கீழே விழுந்தபடி பார்த்தால் எந்த ஆங்கிளில் தெரிவாரோ அந்த ஆங்கிளில்) வளைத்து, நம்பியாரை நோக்கி நான்கு ஸ்டெப்கள் படு ஸ்டைலாக நடந்து வந்து வந்து எட்டி உதைத்து விட்டு,
"அன்னைக்கு சொன்னேனே ஞாபகம் இருக்கா?... ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்"....என்று சவுக்கை ஓங்கும் வேகம்...ஒரு குட்டி பிளாஷ்பேக்கிற்கு பிறகு ஓங்கின பிரம்பை மெதுவாகக் கீழே இறக்கி சடேலேன உதறும் மின்னல் வேகம்....(அடாடடடா! என்ன ஒரு காட்சி! என்ன ஒரு வேகம்! என்ன ஒரு ஸ்டைல்!) அத்தனை மனக்குமுறல்களையும், கோபங்களையும், ஆத்திரங்களையும் அந்த ஒரு உதறலில் தீர்த்துக் கொள்வார்!
"கூப்பிடு உன் தங்கையை" என்று சொல்லி பதிலுக்குக் காத்திராமல் "தேவகி" என்றபடி மாடிப்படிக்கட்டுகளில் ஏறும் அசுர வேகம்... "தேவகி" என்று கூப்பிட்டபடியே தேவகியின் ரூமுக்குள் அவசர ஆனால் ஆழமான
தேடல்.(தேவகியின் பெட் அருகில் ஓடிப் போய் நிற்கும் போது ஸ்பீடைக் குறைக்க கால்களால் ஒரு அழகான பேலன்ஸ் பண்ணுவார்) பின் எதிர் ரூமிலும் தேடிவிட்டு 'சரசர'வென படிக்கட்டுகளில் படுவேகமாக இறங்கிவரும் ஆர்ப்பாட்டம்...(அது என்ன ஸ்பீடா?... ஸ்பீடான்னு கேட்கிறேன். மனுஷன் கண்மூடி கண் திறப்பதகுள் கீழே இறங்கி வந்து விடுவார்)
இன்னும் எப்படித்தான் எழுதுவது? எப்படித்தான் புகழ்வது? ஒன்றுமே தெரியவில்லை. புரியவில்லை. யானைத் தீனிக்கு சோளப்பொறிதான் போட முடிகிறது. தோண்டத் தோண்ட அதுபாட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்? படைத்த பிரம்மன் என் கடவுளைப் பற்றி எழுத இன்னும் பத்து கைகள் படைத்திருக்கக் கூடாதா?
நண்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
இன்று மாலை இந்த அதியற்புதக் காட்சியைக் நீங்கள் கண்டு களிக்கையில் கண்டிப்பாக அந்த நேரம் என்னை மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்பதே அது.
நன்றி!
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே .
வாசு தேவனை நினைத்தே படம் பார்க்க போவோருக்கு வாழ்த்துக்கள் .
ஆனால் இவ்வளவு சிரம பட்டு விஜயகுமார் தேடும் பெண் குண்டு புஷ்கி விஜயா !!!!!!?????
வாசுதேவன் சார்,
உங்கள் ஊரிலிருந்து ஊர்வலமாக வந்து கடலூரில் நடிகர் திலகத்தின் படத்தை வந்து பார்த்த அனுபவம், தெய்வத்தை காண பாத யாத்திரை போவதற்க்கு இணை. அற்புதமாக கொடுத்திருக்கிறீர்கள்.
வம்ச விளக்கு பட பாடல் காட்சி அபாரமானது. 80-களில் ஒரு தீபாவளி-க்கு கடலூர் வேல்முருகன் திரை அரங்கில் தீபாவளி அன்றே காலை காட்சியில் ரசிகர்கள் கொண்டாட்டங்களுடன் பார்த்து ரசித்தது நினைவிற்க்கு வருகிறது. இந்த பாடலுக்கு தியேட்டரே அதகளமானதுவும் மறக்கமுடியாமல் நெஞ்சில் இருக்கிறது. அற்புதமான இந்த பாடல் காட்சிக்கும், அதன் மூலம் என் இளமை காலத்தை நினைவில் கொண்டுவந்ததற்கும் நன்றி!!!
"ராமன் எத்தனை ராமணடீ" திரைப்பட காட்சிகளும், அதற்கான உங்கள் விவரிப்பும் பெருமையாக இருக்கிறது!!! இந்த காவியத்தையும் வேல்முருகன் திரை அரங்கில்தான் கண்டு களித்திருக்கிறேன்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தையே கட்டிப் போட வைக்கும் 'இருவர் உள்ளம்'
கலைஞர் தொலைக்காட்சியின் டிரெய்லர் இதோ காணொளியாக.
http://www.youtube.com/watch?feature...&v=SvQtzPiaoTE
டியர் கல்நாயக் சார்,
தங்கள் பாராட்டிற்கு மிகவும் நன்றி!
ஒரு சந்தோஷமான விஷயம். நீங்களும், நானும் ஒரே நாளில் ஒன்றாக கடலூர் வேல்முருகன் தியேட்டரில் 23-10-1984 தீபாவளியன்று காலை 9.30 மணி காட்சி (ரசிகர் ஷோ) பார்த்திருக்கிறோம். உள்ளே நடந்த ரகளைகளையெல்லாம் கவனித்திருப்பீர்கள்.
ஆனால் அந்த தீபாவளிக்கு முன்தினமே நாங்கள் 'வம்சவிளக்கு' படத்தை நாங்கள் பார்த்து விட்டோம். எப்படி என்கிறீர்களா? தீபாவளிக்கு முதல்நாள் இரவே (இரவு 10.30 மணி ஆட்சி) விழுப்புரம் ரசிகர்களின் அன்புத்தொல்லை தாளாமல் சீத்தாராம் தியேட்டரில் முன்னமே போட்டு விட்டார்கள். முன்கூட்டியே விழுப்புர நண்பர்கள் எங்களுக்குத் தகவல் தெரிவித்துவிட நாங்கள் தீபாவளி முன்தினம் ஆறுமணிக்கெல்லாம் கடலூரிலிருந்து புறப்பட்டு எட்டுமணிக்கெல்லாம் விழுப்புரம் சென்று செம ரகளையோடு இரவு அந்த ரசிகர் காட்சியைப் பார்த்து விட்டு பின் ஒரு வேனைப் பிடித்து மூன்று மணிக்கெல்லாம் கடலூர் வந்து பெயருக்கு வீட்டில் குளித்துவிட்டு தீபாவளியன்று வேல்முருகன் தியேட்டருக்கு காலையில் ஏழு மணிக்கெல்லாம் ஆஜர். நீங்கள் சொன்னது போல 'மனிதன் கதை இது' பாடலில் உச்சகட்டமாக தியேட்டர் அல்லோலகல்லோலப் பட்டது. அன்று நடந்தவைகளும் தங்களுக்குத் தெரியுமே!
'ராமன் எத்தனை ராமனடி' யும் வேல்முருகனில் பின்னிப் பெடல் எடுத்தது. ஒவ்வொரு காட்சியும் ஹவுஸ்புல் தான். ஒவ்வொரு காட்சிக்கும் திருவிழாக் கொண்டாட்டம்தான். நீங்களும் என்னுடைய பழைய நினைவுகளை அசை போட வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி. அடிக்கடி எழுதுங்கள்.
நண்பர்களே,
பரவசத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு என் நடிப்பு தெய்வம் எனக்கு வழங்கிய சொர்க்கானுபவத்தை ,கலைஞர் TV யில் 3.30-7.00 அனுபவித்தேன்
நான் முதல் முறை கிருஷ்ணவேணி திரையரங்கில்,1975 இல் பார்த்ததை விட கண்ணாடி மாதிரி சிறு கீறல் கூட இல்லாத print .என்ன அழகு அசல் முடியில் என் திலகம் !!!!
அப்பாடா, ஒரு திரைக் கதை,வசன வித்தகர்,ஒரு தேர்ந்த இயக்குனர்,ஒரு கேமரா வித்தகர்,ஒரு திரை இசை திலகம்,கவியரசு எல்லாம் சேர்ந்து .......
என்னை படைத்து இதை பார்க்க வைத்த கடவுளுக்கு கோடி நன்றிகள்.
என் ego ஐ தூக்கி எரிந்து விட்டு,இந்த நடிப்பு கடவுளின் தொடரை தொடருவேன்.
just enjoyed Iruvar Ullam. After Motor Sundaram Pillai this movie remains a monument for NT's subtle acting prowess, the reply to the so called over acting accusations. NT's magnetic charm remains throughout the movie whether he speaks or just stands in the court without uttering a single word, but watching SVR, MRR..... talking.
இருவர் உள்ளம் தொலைக்காட்சியில் பார்த்தவர், ராமன் எத்தனை ராமனடி நம்முடைன் பார்த்தவர் - இருவர் உள்ளமும் இன்று ஒரே நிலையில் தான் இருக்கும் - அந்த hangover தான் நம்மை இணைக்கும் பாலம் - அது தான் நடிகர் திலகம் என்கிற வைப்ரேஷன் - அதுவும் குறிப்பாக இன்று ரா.எ.ரா. பார்த்த அனைத்து நண்பர்களும் தங்களுடைய உணர்ச்சி வசப்பட்ட நிலையிலிருந்து மீள முடியாமல் தான் திரும்பிச் சென்றனர். தொலைக்காட்சியில் நடிகர் திலகம் நம்மையெல்லாம் கட்டிப் போடும் நிலையிலும் கணிசமான அளவில் ரசிகர்கள் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தது, அந்த ஒப்பற்ற தெய்வம் எந்த அளவிற்கு இந்த சாப்பாட்டு ராமன் ரூபத்தில் நம்மையெல்லாம் ஈர்த்துள்ளார் என்பதற்கு சான்று. ஆகஸ்ட் 15, 1970 முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் எந்தெந்த காட்சிகளில் கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தனரோ அதே காட்சிகளில் இன்றும் நடைபெற்றது .. ஒரு விஷயத்தை உறுதிப் படுத்தியது ... அது ... காலமும் தலைமுறைகளும் நடிகர் திலகத்திற்கு ஒரு பொருட்டல்ல ... அனைத்தையும் கடந்த கலைத் தெய்வம் என்பதை நிரூபித்தது.
படம் முடிந்து வணக்கம் எழுத்துகள் வரும் நிலையில் சிரிப்பிலிருந்து அழுகைக்கு மாறும் அந்த ஒரு வினாடி போதுமே .... வணக்கம் போடும் போது கூட அவர் நம்மை விடவில்லையே..
இன்னும் எவ்வளவோ எழுத ஆசை... ஒவ்வொரு நொடியிலும் நம் வாசுதேவன் சாரின் நினைவு படுத்திக் கொண்டே தான் பார்த்தேன். குறிப்பாக அந்த மாடிப்படியிலிருந்து வேகமாக இறங்கும் காட்சியைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் ..
ONE WILL BE SPELL BOUND ON THE SPEED HE CLIMBS DOWN ... AT THE AGE OF 43 ...
நடிகர் என்றால் நீங்கள் மட்டும் தான் ... நீங்கள் என்றால் அந்நியமாய் உள்ளது...
நீ தானய்யா நடிகன் ....
ஒய்.ஜி.எம். சொல்வது போல்
அவன் தான் நடிகன் ....
இருவர் உள்ளம் திரைப்படத்தில் தலைவரின் சூப்பர் ஸ்டைல் போஸ் ..
http://i1146.photobucket.com/albums/...ps97c23ab6.jpg
← 1953-இல் தமிழ் சினிமா
திரும்பிப் பார் →
திரும்பி பார் சிவாஜி பற்றி எம்ஜிஆர்
மார்ச் 21, 2009 by RV
1962ல், நடிகர் திலகம் கலைத் தூதராக அழைக்கப்பட்டு அமெரிக்க அரசால் கௌரவப்படுத்தப்பட்டார். இதற்காக, சிவாஜி அமெரிக்கா சென்று திரும்பிய போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலே எம்.ஜி.ஆர். சிவாஜி பற்றிச் சொன்னது அவ் விழாவில்தான். அப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.ஆர்.தான். அவ்விழாவில் எம்.ஜி.ஆர். சிவாஜி பற்றிச் சொன்னது
நல்ல குணங்களுள்ள பாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பெறுவது எளிது என்று கூறலாம். பாத்திரம் மக்கள் மனதில் பதியுமானால் அதனை ஏற்கும் நடிகரும் இடம் பெறுவது இயற்கை. ஆனால் மக்களால் வெறுக்கப்படும் பாத்திரங்களைத் தாங்கி, மக்கள் மனதில் இடம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல என்பதை நாம் அறிய வேண்டும். ‘திரும்பிப் பார்’ என்ற படத்தில் முழுக்க முழுக்க வில்லன் பாகத்தையே ஏற்றார் சிவாஜி. பல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்குமளவுக்கு, ‘ஆங்கில பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ் பெற்றார் அவர். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், ‘ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்த பாத்திரங்களைப் போலவே அவர் நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படம் எடுத்த போது) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புத மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும் தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்!
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.
இன்றைய புகைப்படம்(5)
http://i1087.photobucket.com/albums/...t%20-2/R-1.jpg
நன்றி ராகவேந்திரன் சார்!
'ராமன் எத்தனை ராமனடி' விழா நிகழ்சிகள் பற்றிய தங்களின் பதிவைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். கலந்து கொள்ள முடியாமல் போனாலும் இருவர் உள்ளத்தின் மூலம் ஈடு செய்து கொண்டேன். மொத்தத்தில் நேற்று நம் ரசிகர்களுக்கு தடபுடல் விருந்து.
கோபால் சார்,
நேற்று இருவர் உள்ளத்தை கண்டுவிட்டு உடனே அந்த மகிழ்வை என்னுடன் பகிர்ந்து கொண்டீர்கள் கை பேசியின் வாயிலாக. தங்களின் எல்லையில்லா ஆனந்தத்தை என்னால் உணர முடிந்தது. அப்பா! எப்படி ஒரு சந்தோஷம். உங்கள் உள்ளம் அதையே சுற்றி வந்தால் என் உள்ளம் ராமனையே நினைத்து நினைத்து சுற்றி வந்தது. இன்றுதான் இருவர் உள்ளம் பார்க்கப் போகிறேன் செல்போனை அணைத்துவிட்டு.
தம்பிக்கு அண்ணனின் பாராட்டு.
http://i1087.photobucket.com/albums/...20-2/mgr-1.jpg
உண்மை தமிழர்களுக்கு, சில தமிழர்களே எதிரியாக நின்றதால்தான்,தமிழினமே தலை குனிந்து நிற்கிறது. நமக்கு உரிய மரியாதையை ,இந்திய அளவிலோ,உலக அரங்கிலோ பெற முடியவில்லை.
ஒரு தாகூர் ,சத்யஜித் ரே வங்காள மாநிலத்தில் கொண்டாட படுவது போல உலக மேதைகள் பாரதியும்,சிவாஜியும் அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி கொண்டாட பட்டிருந்தால் ,நாம் உலக அரங்கில் கவனிக்க பட்டிருப்போம்.
இனியாவது உலக தமிழர்களே, ஒன்று படுங்கள்.
திரு கண்பட் அவர்களுக்கு
இந்த பாடல் உங்களுக்காக ...
..http://youtu.be/uLRBhxn0iFk
நன்றி அன்பு பம்மலார் சார்.
[நாகாஸ்திரம்]
http://i1110.photobucket.com/albums/...GEDC5093-1.jpg
[பிரம்மாஸ்திரம்]
http://i1110.photobucket.com/albums/...GEDC5094-1.jpg
வெளிநாடான இலங்கையிலும், 'கெப்பிடல்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி பெரும் வெற்றிக்காவியமாகத் திகழ்ந்தது.
Nadigar Thilagam Films in TV Channels this week
http://www.inbaminge.com/t/p/Pattum%...mum/folder.jpg
Tonight J Movies Channel 9.00 pm PAATTUM BHARATHAMUM
Zee Tamil
22.05.2013 – 2.00 PM – PESUM DEIVAM
Vasanth TV
21.05.2013 – 2.00 pm – KAL THOON
Raj TV
24.05.2013 – 10.00 pm – SAADHANAI
26.05.2013 – 10.30 pm – VIDUDHALAI
Raj Digital Plus
21.05.2013 – 10.00 am – ARUNODHAYAM
24.05.2013 – 8.00 pm – RAJA RAJA SOZHAN
Polimer TV
21.05.2013 – 2.00 pm – SATHIYA SUNDARAM
Murasu TV
21.05.2013 – 7.30 pm – BANDHAM
25.05.2013 – 7.30 pm – ANDHA NAAL
Mega TV
22.05.2013 – 12.00 noon – SANDHIPPU
Jeya TV
22.05.2013 – 10.00 am – DHAVANI KANAVUGAL
24.05.2013 – 10.00 am - BHAGA PIRIVINAI
J MOVIES
20.05.2013 – 9.00 pm – PAATTUM BARATHAMUM
தற்பொழுது ஜே மூவீஸ் தொலைக் காட்சியில் நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக் காவியம்
http://i1146.photobucket.com/albums/...psbd01a2d8.jpg
பாட்டும் பரதமும்
நடிகர் திலகத்தின் அரிய புகைப்பட வாரம்.
இன்றைய புகைப்படம்(6)
http://i1087.photobucket.com/albums/...82688538_3.png
50 ஆண்டுகளுக்கு முன்னர் டிஸ்னிலேண்டில் நடிகர் திலகம் வருகை புரிந்த போது எடுக்கப் பட்ட புகைப்படம், அதுவும் வண்ணப் படம் .... இப்போது நம் பார்வைக்கு மிக அபூர்வமான படமாகத் தந்த வாசு சாருக்கும் நம் அனைவரின் சார்பிலும் உளமார்ந்த நன்றி. அன்பர்களே, இந்த மாதிரி காணக் கிடைக்காத காட்சிகளை நாம் இங்கே பார்க்க மிகவும் தவம் செய்திருக்க வேண்டும். உலகத்தமிழர்களுக்கெல்லாம் புகழ் சேர்த்து தலை நிமிர்ந்து நடை போட வைத்த நடிகர் திலகத்தின் புகழைப் பாடுவதே யன்றி வேறொன்றறியேன் பராபரமே என உழைக்கும் வாசு சாருக்கும் கோபால் சாருக்கும் மற்றும் இது போல் அயராது உழைக்கும் அனைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் பாராட்டுத் தெரிவிப்பது நம் கடமை. பாராட்டுக்கள் வாசு சார்.
தொடருங்கள் வாரத்தை மாதமாக்குங்கள். மேலும் பல பொக்கிஷங்களை காண ஆவலாயுள்ளோம்.
காலமெல்லாம் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் மற்றோர் உன்னதத் திரைக்காவியம் பாட்டும் பரதமும். இப்படத்தைப் பற்றி விரிவாக எழுத வேண்டியுள்ளது. ஏராளமான நுணுக்கமான விஷயங்கள் உள்ளன. நெஞ்சை நெகிழ வைக்கும் இத்திரைப்படத்திலிருந்து சில நிழற்படங்கள் இப்போது நம் பார்வைக்காக
http://i1146.photobucket.com/albums/...ps90a7f058.jpg
http://i1146.photobucket.com/albums/...ps57c23a16.jpg
http://i1146.photobucket.com/albums/...ps4cf3f6ee.jpg
விழியில் மொழி பேசும் வித்தகரைப் பாருங்கள்
http://i1146.photobucket.com/albums/...ps507ab761.jpg
http://i1146.photobucket.com/albums/...ps7f84bda4.jpg
கற்பனைக்கு மேனி தந்து
http://i1146.photobucket.com/albums/...ps391a5c0b.jpg
http://i1146.photobucket.com/albums/...ps9c3ba703.jpg
வாசு,
சினம் தணிந்தேன். இனி எந்த - - வந்து எந்த பதிவுகள் இட்டாலும் பதில் சொல்லி நேரத்தை
வீணாக்க மாட்டேன். தொடரை தொடர்வேன். தங்கள் அபூர்வ புகை படங்கள் அபூர்வமே.
நாயகியர்,சண்டை காட்சி, உங்கள் ஊர் போன்ற தொடர்கள், ராகவேந்தர் சாரின் நல்லாசிகள்,மற்றும் P_R ,Joe ,கண்பட் ,சாரதி, முரளி போன்றோர் நமக்கு அறிவாளிகள் சபை என்ற நற்பெயரை தந்துள்ளனர். இனி எந்த provocation வந்தாலும் கவலை பட போவதில்லை.
பம்மலார் ஒரு புத்தகம் கொண்டு வரும் முயற்சியில் ஈடு பட்டுள்ளார். அனைத்து நடிகர்திலக நல்லிதயங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து அவர் முயற்சியை சீரியதாக்கும் பணியில் தோள் கொடுக்க வேண்டுகிறேன்.
டியர் கோபால் சார்
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷம் விலை மதிப்பற்ற ஒன்று என்றால், அதனை அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட பெருந்தன்மை கடலினும் மிகப் பெரிது. அவையெல்லாம் தமிழ்த் திரையுலகின் நூற்றாண்டின் சரித்திரத்தை எடுத்தியம்பும் பல்வேறு சாதனங்களில் ஒன்றாக எதிர்காலத்தில் மிளிரப் போவது திண்ணம். அதன் துவக்கமாகவே எம்.ஜி.ஆருக்கு அவர் தொகுத்துள்ள தனிப்படத் தொகுப்பாகும். நடிகர் திலகத்தின் தொகுப்பு தயாரிப்பில் உள்ளது. அதற்குத் தேவைப் படும் காலமும் அவகாசமும் சற்றே அதிகம். என்றாலும் விரைவில் அதுவும் வெளியாகும் என நம்புவோம். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். பற்றிய பருவ இதழ் ஒன்றும் வர உள்ளதாக நம் வினோத் அவர்கள் கூறியுள்ளார். இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, மற்ற கலைஞர்களைப் பற்றியும் தொகுப்பு நூல்கள் பம்மலார் அவர்களிடமிருந்து வரும் என எதிர்பார்க்கலாம். ஜெமினி கணேசன், ஜெய லலிதா உள்பட தமிழ்த்திரை வித்தகர்கள் அனைவரைப் பற்றியும் அவர் தொகுப்பு நூல்கள் வெளியிட வேண்டும்.
வெகு விரைவில் நடிகர் திலகத்தின் நூல் ஒன்றும் வெளி வர வேண்டும் எனத் தங்களைப் போல் நாம் அனைவருமே ஆவலாயுள்ளோம்.
மிகத் தெளிவான பாட்டும் பரதமும் வண்ணப்படங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ராகவேந்திரன் சார். தங்கள் சிரத்தையும் உழைப்பும் அபாரம். நேற்று ஜெயா மூவிஸில் முழுவதும் கண்டு களித்தேன். நம் கற்பனைகளுக்கு மேனி தந்த அந்த மாமேதையைப் போற்றுவதே அவருக்கு நாம் செய்யும் கடமை ஆகும்.
தேங்க்ஸ் கோபால் சார். அடுத்த தலைமுறை போற்றக்கூடிய தங்கள் அற்புதக் கைவண்ணத்தில் உருவாகும் அதிசயத்தை அருந்தி மகிழ ஆவலாய் உள்ளோம்.
என்னடா முடியும் உன்னால் என்று எதிரி கொக்கரித்தால்
இதுவும் முடியும் இன்னமும் முடியும் என்று எழுதுங்கள்.
அடிமை ரசிகன்.
நாட்டாமை, நான் எங்கே 'நான் அவனில்லை' என்று சொன்னேன்? எல்லாமே, எல்லாருமே நான்தான் என்றுதானே சொல்கிறேன். இவா அடி்ச்சா அவா வருவா - மட்டுமில்லை. இவா அடிக்காமலும் நானாகவும்தான் வந்து போய்கொண்டிருக்கிறேன். இனிமேலும் நீங்கள் இப்போது என்னை அழைத்தது போல் அழைத்தால் வருவேன். பதில் தருவேன். இல்லையென்றால் sowrirajann sri என்ற பெயரில் பதிவுகள் இடுவே்ன். நான் பாட்டிற்கு திரியில் படித்து பதியாமல் செல்வதை 'கல்நாயக் வந்துவிட்டான்' என்று களேபரம் செய்து என்னை பதிய வைக்கிறீர். ஆம் சொல்ல மறந்துவிட்டேன். ஆதிராமுக்கு தகவல் தந்து விட்டேன்.
முடிச்சு போடாமல் ஆணித்தரமாக எழுதியதற்க்கு மீண்டும் என் வாழ்த்துக்களை வழங்குகிறேன். பதிலுக்கு என்னால் நிச்சயமாக கோடாரித்தனமாக எழுத முடியாது. இதுக்கு மேலே நான் இங்கே இருந்தால் சிக்கலார் கோபித்துக்கொள்வார்.
Don't Miss It
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள் (வீடியோ தொடர்) 9.
படம்: நேர்மை
வெளிவந்த ஆண்டு: 1985
தயாரிப்பு: KRG பிலிம் சர்க்யூட்
சண்டைப்பயிற்சி : 'ஜூடோ K.K.ரத்னம்
நடிகர் திலகம் மோதும் வில்லன்கள் : அடியாட்கள் க்ரூப்
இயக்கம்: 'பில்லா' கிருஷ்ணமூர்த்தி
1985-லும் புலி போல தன்னால் பாய முடியும் என்று தலைவர் நிரூபித்த படம். வீட்டில் அடியாட்கள் திமிர்த்தனத்துடன் அமர்ந்திருக்க, ஒவ்வொருத்தராக நோட்டம் விட்டபடி வருவார். அவமரியாதை செய்யும்போது சகித்துக் கொள்வார். பின்னர் 'கும்கும்'தான். புயல் வேகம், மின்னல் வேகம் என்பார்களே அதைவிடவும் வேகம் காட்டுவார். இரண்டு இடங்களைத் தவிர டூப்பே இல்லாமல் அந்த வயதில் அருமையாக சண்டையிட்டுருப்பார். மிக மிக ஆச்சர்யமாக இருக்கும். ஒரு அடியாளை தொடர்ந்து இடது கையால் தாக்கிக் கொண்டே செல்வது அதகளம். நான்கு அடியாட்கள் தங்கள் கைகளால் இவர் கழுத்தைக் கவையாய் பின்னும்போது அவர்களை வெறித்து நோக்கும் பார்வை சண்டமாருதம். பின் அந்த நால்வரையும் ஒரே வீச்சில் சிதறடிப்பார். 'ஜூடோ' ரத்னம் அவர்களின் அருமையான பயிற்சியை உள்வாங்கி இளவயது அடியாட்களுடன் அவர்களைவிட இளவயது வாலிபன் ரேஞ்சுக்கு சுறுசுறுப்பு காட்டுவார். வயது அவருக்கு ஒரு பொருட்டா?... என்னால் எந்த நேரத்திலும், எதுவும் செய்ய முடியும் என்று கர்ஜித்து அதை செய்து காட்டிய வீரத் திலகமல்லவா!
பலர் இந்த சண்டைக் காட்சியை மறந்து விட்டிருக்கக் கூடும். இப்போது அனுபவித்துப் பாருங்கள். இன்னும் அவர் அருமை, பெருமைகள் நமக்குத் தெரியும்.
முதன்முறையாக இணையத்தில் உங்களுக்காக
http://www.youtube.com/watch?v=AiqtZ1EJlzc&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
திரு வாசுதேவன் அவர்களுக்கு
அருமையான சண்டை காட்சி...! அந்த பஞ்ச் விடும்போது அந்த பவர் காட்டும் விதம் பிரமாதம்...!
அதே போல தாங்கள் ராஜா திரைப்படத்தில் கவர்ச்சி வில்லன் கண்ணனுடன் மோதும் அந்த அனல் பறக்கும் சண்டை காட்சி இங்கு இடுகை செய்யுங்கள் சார்..!
சண்டை காட்சியில் நடிகர் திலகத்தால் சோபிக்க முடியாது என்ற ஒரு கருத்தை மனதில் கொண்டுள்ள அனைவரும் தங்களுடைய என்னத்தை நேர்மையாளனாக இருந்தால் மாற்றிகொள்வர்.
நேர்மையற்றவர் பற்றி நமக்கு கவலை இல்லை !
வாசுதேவன் சார், நான் ஸ்டில் கேட்டால் வீடியோ பதிவே தந்து விட்டீர்கள். மிக அற்புதமாக புலியின் பாய்ச்சலில் சண்டையிடும் திறன் நடிகர் திலகத்திற்கு நன்றாகவே அமைந்திருக்கிறது. அருமையான பதிவு. பாராட்டுக்கள். அவ்வப்போது இப்படி தாங்கள் தரும் சண்டைக்காட்சிகள், கதாநாயகியர் தொடர்கள் திரிக்கு அழகூட்டி நடிகர் திலகத்தின் இந்த திரியை பெருமை படுத்துகின்றன.
மிக்க நன்றி சவுரி சார், கல்நாயக் சார்.
பக்கத்து பக்கத்தில் உங்கள் பெயர்களைக் குறிப்பிடக் கூட பயமாய் இருக்கிறது பக்கத்துக்கு பக்கம் சண்டை (செல்ல)வந்து விடுமோ என்று... ஹி...ஹி.. ஹி.. தமாசு....
ஒரு திரைப்படத்தில் வில்லன் என்பவன் கதாநாயகனுக்கு இணையான சக்தியும் புத்தியும் உள்ளவனாக இருப்பது தான் ஞாயம்..
கதாநாயகன் மட்டும் வில்லனை அடித்துக்கொண்டு இருந்து..வில்லன் மட்டும் தொம்மயாக அடிவாங்கிகொண்டிருந்தால் அந்த சுவாரஸ்யம் போய்விடும்.
நாம் ஆங்கிலப்படம் பார்த்தல் நமக்கு நன்றாக புரியும்..சொல்லபோனால் கதாநாயகனை விட வில்லன் பலசாலியாக இருப்பான் எல்லாவிதத்திலும்..
நம் அன்றைய, இன்றைய தமிழ் சினிமாவில் மட்டும் அது ஒரு 75% விதி விலக்கு. ..
கதாநாயகனை விட வில்லன் ஆஜானுபாகுவாக இருந்தாலும் பாவம் கதாநாயகனிடம் கூம்..கூம் என்று அடிமட்டுமே வாங்கிவந்தது...வாங்கிவருவது ......அஏய் என்ன அடிச்சுட்டல...உன்ன அப்றமா கவனிச்சுகறேன் என்று முகவாஇகட்டயை தேய்த்துக்கொண்டு சென்றுவிடுவது வழக்கம் ! அவர்கள் தலையெழுத்தை காட்டுகிறது...
ஆனால் நடிகர் திலகம் அவர்களுடைய திரைபடங்கள் மட்டும் அதற்க்கு விதி விலக்கு.
அவர்படங்களில் வில்லன்கள் நாயகனுக்கு சமமாக பலசாலிகளாக இருப்பார்கள்...நடிகர் திலகத்துடைய பட சண்டை காட்சியை பார்த்தல் நம்மக்கு அழகாக தெரியும்...சண்டை காட்சி ஒருதலை பட்சமாக என்றுமே இருக்காது...!
நாயகரே ! உங்களுடைய இன்பாக்ஸ் தகவலுக்குQuote:
Originally Posted by kalnayak
கோ,
எங்கே பாராட்டு? நீ கெஞ்சிக் கூத்தாடிதானே அதைப் போட்டேன். இப்ப ஒண்ணும் தெரியாத மாதிரி இருக்க? படவா...