Results 1 to 10 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #11
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    Don't Miss It

    நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைகாட்சிகள் (வீடியோ தொடர்) 9.

    படம்: நேர்மை

    வெளிவந்த ஆண்டு: 1985

    தயாரிப்பு: KRG பிலிம் சர்க்யூட்

    சண்டைப்பயிற்சி : 'ஜூடோ K.K.ரத்னம்

    நடிகர் திலகம் மோதும் வில்லன்கள் : அடியாட்கள் க்ரூப்

    இயக்கம்: 'பில்லா' கிருஷ்ணமூர்த்தி


    1985-லும் புலி போல தன்னால் பாய முடியும் என்று தலைவர் நிரூபித்த படம். வீட்டில் அடியாட்கள் திமிர்த்தனத்துடன் அமர்ந்திருக்க, ஒவ்வொருத்தராக நோட்டம் விட்டபடி வருவார். அவமரியாதை செய்யும்போது சகித்துக் கொள்வார். பின்னர் 'கும்கும்'தான். புயல் வேகம், மின்னல் வேகம் என்பார்களே அதைவிடவும் வேகம் காட்டுவார். இரண்டு இடங்களைத் தவிர டூப்பே இல்லாமல் அந்த வயதில் அருமையாக சண்டையிட்டுருப்பார். மிக மிக ஆச்சர்யமாக இருக்கும். ஒரு அடியாளை தொடர்ந்து இடது கையால் தாக்கிக் கொண்டே செல்வது அதகளம். நான்கு அடியாட்கள் தங்கள் கைகளால் இவர் கழுத்தைக் கவையாய் பின்னும்போது அவர்களை வெறித்து நோக்கும் பார்வை சண்டமாருதம். பின் அந்த நால்வரையும் ஒரே வீச்சில் சிதறடிப்பார். 'ஜூடோ' ரத்னம் அவர்களின் அருமையான பயிற்சியை உள்வாங்கி இளவயது அடியாட்களுடன் அவர்களைவிட இளவயது வாலிபன் ரேஞ்சுக்கு சுறுசுறுப்பு காட்டுவார். வயது அவருக்கு ஒரு பொருட்டா?... என்னால் எந்த நேரத்திலும், எதுவும் செய்ய முடியும் என்று கர்ஜித்து அதை செய்து காட்டிய வீரத் திலகமல்லவா!

    பலர் இந்த சண்டைக் காட்சியை மறந்து விட்டிருக்கக் கூடும். இப்போது அனுபவித்துப் பாருங்கள். இன்னும் அவர் அருமை, பெருமைகள் நமக்குத் தெரியும்.


    முதன்முறையாக இணையத்தில் உங்களுக்காக


    அன்புடன்,
    வாசுதேவன்.
    ஒரு திரைப்படத்தில் வில்லன் என்பவன் கதாநாயகனுக்கு இணையான சக்தியும் புத்தியும் உள்ளவனாக இருப்பது தான் ஞாயம்..

    கதாநாயகன் மட்டும் வில்லனை அடித்துக்கொண்டு இருந்து..வில்லன் மட்டும் தொம்மயாக அடிவாங்கிகொண்டிருந்தால் அந்த சுவாரஸ்யம் போய்விடும்.
    நாம் ஆங்கிலப்படம் பார்த்தல் நமக்கு நன்றாக புரியும்..சொல்லபோனால் கதாநாயகனை விட வில்லன் பலசாலியாக இருப்பான் எல்லாவிதத்திலும்..
    நம் அன்றைய, இன்றைய தமிழ் சினிமாவில் மட்டும் அது ஒரு 75% விதி விலக்கு. ..

    கதாநாயகனை விட வில்லன் ஆஜானுபாகுவாக இருந்தாலும் பாவம் கதாநாயகனிடம் கூம்..கூம் என்று அடிமட்டுமே வாங்கிவந்தது...வாங்கிவருவது ......அஏய் என்ன அடிச்சுட்டல...உன்ன அப்றமா கவனிச்சுகறேன் என்று முகவாஇகட்டயை தேய்த்துக்கொண்டு சென்றுவிடுவது வழக்கம் ! அவர்கள் தலையெழுத்தை காட்டுகிறது...

    ஆனால் நடிகர் திலகம் அவர்களுடைய திரைபடங்கள் மட்டும் அதற்க்கு விதி விலக்கு.

    அவர்படங்களில் வில்லன்கள் நாயகனுக்கு சமமாக பலசாலிகளாக இருப்பார்கள்...நடிகர் திலகத்துடைய பட சண்டை காட்சியை பார்த்தல் நம்மக்கு அழகாக தெரியும்...சண்டை காட்சி ஒருதலை பட்சமாக என்றுமே இருக்காது...!
    Last edited by Sowrirajann Sri; 21st May 2013 at 11:21 AM. Reason: may create conflict

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •