உண்மையான விவரம். பாலாஜி முதலில் அணுகியது தேவராஜ் மோகனை. அவர்கள் எதனாலோ மறுத்து விட அடுத்து அணுகியது சி.வீ.ஆர் ஐத்தான் .அவர் ஈகோ hurt ஆனதால், subject பிடிக்கவில்லை என மறுத்து விட பிறகு விஜயன் வந்தார். இது அத்தனையும் உண்மையான உண்மை.
Printable View
Thanks Ganse, Parthasarathy,S.L.
நண்பர்களே,Quote:
ஓஹோஹோ, 305 முத்துக்களில் ஒன்று சொத்தையாமோ.. வாந்தி எடுப்பது போன்ற சிரஞ்சீவி காட்சி ,(ஒரு திரியை களங்க படுத்த.அது இலக்கணமாம்.இது போன்ற ஆட்களுக்கு....)சிரஞ்சீவி என்ற கேவலத்தை பார்த்தால் ,உலகத்தில் அனைத்து படங்களும் சிறப்பே. தாம்பத்யம் உட்பட. சிரஞ்சீவியை போட்டு திரியை அசுத்த படுத்திய உம்மை..... நற.....நற.....
பொறுமை கடலினும் பெரிது என்பர். அந்தக் கடலையும் வற்ற வைக்கும் அளவிற்கு நெருப்பை உமிழும் எழுத்துக்களால் நடிகர் திலகம் என்னும் உன்னதக் கலைஞனை களங்கப் படுத்துவதை நான் இனிமேல் ஏற்க முடியாது.
மய்யம் என்பது பொதுவான விவாத மேடை. ஒருவருக்கு பிடித்தது இன்னொருவருக்கு பிடிக்காமல் போகலாம். அது நியாயமே. அதற்காக அளவிற்கு மீறி தன் கருத்தில் வன்மத்தைத் திணித்தால் அது ஏற்க முடியாது. இது ஒருவருடைய தனி உடமைச் சொத்து அல்ல. இங்கு எனக்குப் பிடித்ததை நான் எழுத எனக்கு உரிமை உண்டு. தன் மனதில் தோன்றுவதை எழுத அவரவர் தனியாக புத்தகத்தை எழுதட்டும். அல்லது தனியாக இணைய தளத்தை உருவாக்கி எழுதிக் கொள்ளட்டும். அங்கு தனக்கு வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுத்து கருத்துக்களைப் பகிரந்து கொள்ளட்டும். இதை விட்டு இங்கு வந்து சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்வது நியாயமில்லை.
என்னைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் அத்தனை படங்களிலும் அவர் நடிப்பை நான் ரசிக்கிறவன், தாம்பத்யம் உள்பட. அதனை முன்னர் ஒரு காட்சியைக் குறிப்பிட்டு எழுதியுள்ளேன்.
திரும்பத் திரும்ப இதே போல எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் வேண்டுமென்றே எழுதுவதைப் பார்த்தால் நான் இங்கு எழுதக் கூடாது என அவர் சபதம் எடுத்திருப்பதைப் போலத் தெரிகிறது. அதற்கு அவருக்குத் துணையாய் சிலர் இருப்பதாகவும் எனக்கு மனதில் படுகிறது.
கோபாலின் அணுகுமுறையை ஏற்றுக் கொள்கிறவர்கள் இருக்கும் வரை நான் இங்கு எழுதுவதில் அர்த்தமில்லை.
KCS sir,you have rightly pointed it out that immolation attempts were never supported by NT,but let us salute Mr.Jayakumar, let our people fight the issue in other methods.I prey for his speedy recovery.
Ragavender sir please don' t take seriously our gopal sir comments/comedy you are the crown of fans of acting god nadigarthilagam gopal sir always jovial person with vide knowledge making others to bring this thread with energetic
mood to nadigarthilagam fans
ஆஹா ,அருமையான யோசனை. அதைத்தான் செய்ய போகிறேன் வேந்தரே. பொது மேடை என்பது இப்போதுதான் புரிகிறதோ?அதை எழுதாதே இதை எழுதாதே என்று என்னை,கார்த்திக் சாரை,ஜோ சாரை,முரளியை மிரட்டிய போது புரியவில்லையா?
நாங்கள் கஷ்ட பட்டு உழைத்து அவரை பற்றி புரிய வைக்க முயலும் போது, அவரின் தோற்றம், கதையமைப்பு, நடிப்பு ,படமாக்கம் எதிலும் உதவாத படங்களை போட்டு ,தேவையில்லாமல் பிடிவாதம் பிடிக்கும் உங்களுடன் இன்னுமா உறவாட போகிறேன்?
இதில் வேறு நான் ஆள் வைத்து கொண்டிருக்கிறேனாம். நான் எதில் irritate ஆவேன் என்று தெரிந்தே ஸ்கூல் of acting திரியில் நீங்கள் பண்ணிய திரிசம வேலையெல்லாம்....
வேண்டாம் விடுங்கள். உங்கள் மேல் கொண்ட மரியாதையினால் கேவலமான கெட்ட வார்த்தையை சொல்லாமல் தவிர்க்கிறேன்.
கிட்டத் தட்ட பதினான்கு ஆண்டுகள் ஆகி விட்டன என நினைக்கிறேன்.. இந்த மன்ற மையம் ஃபாரம் ஹப் என்று வந்து கொண்டிருந்த வேளை..
எனக்குப் பிடித்த திரிகளான மிஸ்ஸ்லேனியஸ் போயம்ஸ் என்ற திரிகளைப் படித்துக் கொண்டிருந்த காலம்..உதயா குழ்ந்தைவேலு என்ற கவிஞர் ஆங்கிலக் கவிதை எழுதிக் கொண்டிருந்தார்.. மற்றவர்களும்.. நான் மெளன ரசிகனாய் இருந்தேன்.. இருந்தும் என்னையும் பேச வைத்து எழுதவும் வைத்தவர் ஒரு நபர்..
அவர் பெயர் சிவக்குமார்..அதற்கு முன் உதயா எழுதிய கவிதையின் தமிழாக்கம்..
அந்தப் பெண் என்
பதினாலாவது மாடி ஃப்ளாட்டிற்கு எதிர்
பில்டிங்கில் அதே மாடியில்
உள்ள அலுவலகத்தில் இருக்கிறாள்..
தினமும் காலை என் அலுவலகத்திற்கு
வந்தேனென்றால் ஜன்னலில் இருந்து பார்க்கையில்
அவள் தெரிவாள்..
அன்றும் அப்படித் தான்
என் ப்ரேக்பாஸ்டிற்கான சாண்ட்விச்சைக்
கையில் வைத்தபடி ஜன்ன்லில் பார்த்த போது
அவள் தெரிந்தாள்..
பார்வையில் கலவரம்
ஒரு வித அமைதியின்மை..
ஒவ்வொரு முறை டெலிஃபோன் ஒலிக்கும் போதும்
தாவிச் சென்று எடுப்பதும்
பின் ஏமாந்து அமர்வதும் என..
நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
என்னாயிற்று அவளுக்கென..
பத்தாவது தடவை போன் ஒலிக்க
அவள் எடுக்க
அவள் முகம் மலர்ந்தது.
நாற்காலியில் அமர்ந்து
ஒரு கண் மூடி
செவ்வாயில் முத்துப் பூக்கள் மலர்ந்திட
சிரித்துச் சிரித்துப் பேசும்
அவளைப் பார்க்கையில் எனக்குப்
புலப்பட்டது ஒன்றே ஒன்று
தெய்வீகம்...
*
இதை உதயா எழுதிப் போட்டிருக்க சிவக்குமார் என்ன எழுதியிருந்தார்.. யோவ் உதயா
உன்னால் என்ன பிரயோசனம்..உன் கவிதையால் உலகத்திற்கு என்ன உபயோகம்..ஒய் டிட் யூ ரைட்..
என்றெல்லாம்..
படித்த எனக்கே பிபி எகிறியதென்றால் எழுதிய கவிஞருக்கு எப்படி இருந்திருக்கும்.
நான் என்ன செய்தேன்.ம்ம் அதை அடுத்த போஸ்டில் சொல்கிறேனே..
நான் என்ன செய்தேன்..ம்ம் மக்களின், மன்றமைய வாசகர்களின் போறாத காலம் எனச் சொல்லலாம் ;) எனது எழுதும் ஆசையை அவிழ்த்து விட்டேன்..
என் கற்பனைக் கன்றுக்குட்டி கோபத்தில் கட்டவிழ்த்து நகராட்சித் தண்ணீர் லாரிகள் போலத் தாறுமாறாய் ஓடியது..விழுந்தது ஒரு பதிவு..
எனக்கு ரோஜா பிடிக்கும்
என் மனைவிக்கு முல்லை
என் நண்பனுக்கு மரிக்கொழுந்து..
அவரவர் ரசனைக்கேற்ப பூக்களைப் பிடிப்பது
தப்பில்லை..
அதற்காக மரத்தையே பூக்காதே என்றால்
எப்படி..
அர்ச்சிக்கப் படும் பூக்களில்
சிலசமயம்
முட்களும் கலந்திருக்கும்
அதற்காக ஆண்டவன் கவலைப் படுவதில்லை..
உதயா கீப் இட் அப் என எழுதிப் போஸ்ட் செய்யப் போகையில் ஒரு குழப்பம்..என் பெயர் கண்ணன் ரா.. அப்ப்படியே நிறைய பேர் இருக்கிறார்கள்
புனைபெயரில் அழகான பெண்கள் பெயர்களை பல எழுத்தாளர்கள் வைத்துக் கொண்டு விட்டார்கள்..எனில் டிஃபரன்ஷியேட்ட் செய்வதற்காக கே.ஆர்.ஐயங்கார்
என எழுதிப் போஸ்ட் செய்து விட்டேன்..(சின்னக் கண்ணன் என்பது பிற்பாடு வைத்துக் கொண்டது).. சில நிமிடங்களிலேயே எனது மெய்லிற்கு
உதயாவிடமிருந்து பதில். நன்றி நவின்று..
ஆமாம் இதை நான் எதற்கு இங்கு சொல்கிறேன்..
//அவரவர் ரசனைக்கேற்ப பூக்களைப் பிடிப்பது
தப்பில்லை..
அதற்காக மரத்தையே பூக்காதே என்றால்
எப்படி..// இந்த வார்த்தைகளுக்காக.. இங்கோ மரமோ பூக்க மாட்டென் என்கிறது.. அஃப்கோர்ஸ் ராகவேந்தர் சார் சற்றே குண்டாக இருக்கலாம்..இருந்தால் ஆலமரம் எனலாம்..;) ராகவேந்தர் சாரைப் பொறுத்தவரை அவருடைய எண்ணங்கள் சிவாஜியின் எல்லா நடிப்பும் பிடிக்கும்..கோபால், சின்னக் கண்ணன் போன்றோருக்கு செலக்டிவ்வாகப் பிடிக்கும் அவ்வளவே..
ராகவேந்தர் சார்.. நீங்கள் எழுதவேண்டியதை எழுதுங்கள்.. அது உங்கள் கருத்து. மாற்றுக் கருத்தாக கோபால் அவர் கருத்தை சொல்லி வருகிறார்.. எங்களுக்கெல்லாம் மாற்றுக் கருத்துச் சொல்ல வராது.. எனில் நாங்கள் எல்லாம் சின்ன வெள்ளைப் புறாக் குட்டிகள் :)
நடிகர் திலகம் ஒரு இமயமான உயர்ந்த நடிகர். அவர் சில வேளைகளில் சில படங்களில் சில விதங்களில் சில சந்தர்ப்பங்களில் நடித்திருந்தது அவருக்கே பிடிக்காமல் இருந்திருக்கும்..இருந்திருக்கலாம். எனில் நான் சொல்ல வருவது என்னவென்றால் (ஹாஆஆவ்வ்வ் :) )
(கடைசியில் ரவி சார் பாணியில் nt பற்றி ஒரு வரி எழுதிவிட்டேன் :) )
சி.க சொன்னது போல நீங்கள் எழுதுவதை எழுதுங்கள், அவர் எழுதுவதை எழுதட்டும். மய்யத்தில் பல திரிகள் "monopoly" ஆகிவிட்டன. இப்படித்தான் எழுதவேண்டும் என்று நிர்பந்திப்பவர்கள் தான் அதிகம்.. இந்த திரியும் அப்படி ஆகிவிட வேண்டாம். இப்படி சண்டைகள் வந்ததால் தான் பல திரிகள் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கின்றன..
என் உற்ற நண்பன் வாசு கூட இந்த விஷயத்தில் சிறிதே சறுக்கி விட்டார். ராகவேந்தர் மனம் கோண கூடாதே என்று நானும் ,முரளியும் பதிவுகளை நீக்கினோம்.(இன்று பொது,யார் வேணும்னாலும் எது வேணும்னாலும் எழுதலாம் என்று பேசும் வாய் அன்று எங்களை பிரஷர் கொடுத்தது என்ன ஜனநாயகம்?)
வாசுவிடம், நடிப்பிலக்கணம் திரியில் தரமற்ற பதிவுகள் வந்தால் எங்கள் உழைப்பே நகைப்புக்குரியதாகும் என மரியாதையுடன் வேண்டி கேட்டும் ,எந்த மதிப்பும் கொடுக்கவில்லை என்றால் ,ராகவேந்தர் என்ன வேண்டுமானாலும் கோஷ்டி சேர்த்து ஆடலாம், நான்,முரளி,கார்த்திக், ஜோ போன்றார் அவருக்கடங்கி எங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும்.என்ன அநியாயம்?
(நல்ல துவைத்து அயர்ன் பண்ணி போட்ட என் favourite சட்டையில்,காக்கை எச்சமிட்டது போல வந்த சிரஞ்சீவி பதிவு???அதிலும் கண்ட்றாவி visual வேறு????????????????????)
நடிகர்திலகத்தை தெய்வமாக தொழுபவன் நான். அவருக்கு மீறி ஒரு நடிகன் பிறந்ததும் இல்லை,பிறக்கவும் இல்லை,பிறக்க போவதும் இல்லை. ஆனால் எல்லா படங்களிலும் அவர் பங்களிப்பு சூப்பர் என்பதை, அவர் பக்தர்களே ஒப்ப மாட்டார்கள். தர்மராஜா படத்தில் நடிக்க ,அவர் என்ன கராத்தே கற்று பாத்திரத்தை justify பண்ணினாரா?அமர காவியம் போன்ற படங்களில் ஏனோதானோ என்று வந்து போகவில்லையா?சிரஞ்சீவி போன்ற படங்களை பார்த்து நொந்து போனது எத்தனை ரசிகர்கள்? ஓங்கி சொல்கிறேன். 81 க்கு பிறகு வந்த 90% படங்கள் தரமற்ற குப்பைகளே. அவற்றில் நடித்ததற்கு ,நடிகர்திலகத்தை மன்னிக்கவே முடியாது. அவர் நடிப்பும் பெரிய imaginative ஆக,அவர் திறமைக்கேற்ப அமையவில்லை. அதை பற்றி ராகவேந்தர் எங்கு,எப்போது எழுதினாலும் என் எதிர் கருத்து வரத்தான் வரும்.
சிவந்த மண்- 1969 -சில நினைவுகள்.(9th Nov )
ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.
தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்த மண் .இரண்டும் பெரும் பொருட்செலவில் தயாரிக்க பட்ட பிரம்மாண்டங்கள். முதல் முறை வெளிநாட்டில் தமிழ் படம். ஹேமமாலினி நடிப்பதாக இருந்த படம்.(கஸ்டடி battle கோர்ட் கேஸ் இருந்ததால் ஹேமா மாலினி நடிக்க முடியவில்லை. பெரிதும் வருந்தி தமிழில் ஒரே படம்தான் நடிப்பேன்.அது சிவாஜி கணேசனுடன்தான் என்று பேட்டி கொடுத்தார்). 1967 என்று நினைவு. சிவாஜி,ஸ்ரீதர் கலந்து கொண்ட கூட்டத்தில் ,ஸ்ரீதர் இந்த படத்தை அறிவித்து ,தமிழிலேயே முத்த காட்சி இடம் பெற போகும் முதல் படமாக இருக்கும் என்றார். பின்னால் பேசிய சிவாஜி, அதெல்லாம் சரிதான்,என் மனைவி இருக்கும் போதா இதை சொல்வது என்று ஜோக் அடித்தார். தமிழ் நாடே திரு விழா கோலம் பூண்டு இந்த படத்தை வரவேற்றது. சிவாஜி வேறு ஆனந்த விகடனில் "அந்நிய மண்ணில் சிவந்த மண்" என்ற தொடர் எழுதி இருந்தார்.
சிவந்த மண் போல் பிரம்மாண்டம் கொண்ட படம் ,இந்திய திரையுலகம் இது வரை கண்டதில்லை. வெளி நாடுகள்(அதுவும் ஐரோப்பிய) படபிடிப்பு, கப்பல்,ஹெலிகாப்ட்டர், காட்டாறு,சுழல் மேடை என்று ஏக தட புடல். படமும் மிக மிக பிரம்மாண்ட வெற்றி படமாய் பத்து திரையரங்குகளில் நூறு நாள் கண்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் ஐம்பது நாட்களும், repeat ரன்களில் பிரமாதமாய் ஓடி(பைலட் தியேட்டரில் 80 களில் 75 நாட்கள்)
எனக்கு தெரிந்த எந்த சிவாஜி படத்திலும்,heroine அறிமுகம் ஆகும் முதல் காட்சி இவ்வளவு அமர்க்களமாய் வரவேற்பு பெற்றதில்லை.(காஞ்சனா போன் பேசும் காட்சி). சிவந்த மண்ணின் சிறப்பே அதுவரை வந்த action படங்களில் இருந்து மாறு பட்டு ,கதாநாயகன் திட்டமிடுவார். வில்லன் ரியாக்ட் செய்வார். திட்டங்கள் படு சுவாரஸ்யமாய் ,படம் விறு விறுப்பாய் செல்ல உதவும். மூன்று மணி நேர இன்ப பயணம்.helocopter fight , கப்பல் வெடிகுண்டு காட்சி,தொடரும் சேஸிங், பட்டத்து ராணி, ரயில் பால வெடிகுண்டு காட்சி, அமர்க்களமாய் மாறி மாறி ஊசலாடும் உச்ச காட்சி என்று தமிழில் வெளி வந்த மிக மிக சிறந்த action ,adventure படமாய் இன்றளவும் பேச படுகிறது.
எம்.எஸ்.விஸ்வநாதனின் பங்களிப்பு இந்த படத்தின் பிரம்மாண்டத்தை தூக்கி நிறுத்தியது.(கார்த்திக் சார் சொன்னது போல் அவரின் மிக சிறந்த படம்)ஒரு ராஜா ராணியிடம், முத்தமிடும் நேரமெப்போ, ஒரு நாளிலே உறவானதே,பட்டத்து ராணி, பாவை யுவராணி கண்ணோவியம்,சொல்லவோ சுகமான என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை பாணி,ஒவ்வொரு நாட்டு இசை கோர்ப்பு, பின்னணி இசை(முக்கியமாய் கப்பலில் ராதிகா டான்ஸ்,மாறும் காட்சிகளுகேற்ப மாறும் இசை,) ஹாட்ஸ் ஆப் எம்.எஸ்.வீ சார். உங்களுக்கு கடன் பட்டுள்ளோம்.
சிவாஜி இந்த படத்தில் மிதமான make -up ,natural hair style , rugged ,manly , subtle உடையலங்காரங்களில் படு படு படு இளமையாய், handsome ஆக இருப்பார்.காஞ்சனா பொருத்தமான ஜோடி. என் தூக்கத்தை பல இரவுகள் கெடுத்த romance சீன் ஒரு நாளிலே உறவானதே. ஒரு ஷாட்டில் கட்டி அணைத்து, சிவாஜி சொக்கி போவார்.எந்த வேடத்திலும் ,எப்படிபொருந்துகிறார் சிவாஜி?? அராபிய உடையிலும் !!! action ,ரொமான்சில் கூட சிவாஜியிடம் யாரும் நெருங்க முடிந்ததில்லை.
ஹெலிகாப்ட்டர் காட்சி ,கப்பல் காட்சி, ஜெயில் சண்டை காட்சிகள் மிக மிக சிறப்பாக வந்திருக்கும். தேங்காயுடன் விமான சண்டை,செஞ்சி கிருஷ்ணனுடன் ஆற்றில் சண்டை, உச்ச கட்ட பலூன் சண்டைகள் சொதப்பல். (ஷ்யாம் சுந்தர் down down ) .வெளி நாட்டு காட்சிகள் சிறப்பாக படமாக்க பட்டிருக்கும்.(ஓடம் பொன்னோடம் படமாக்கம் படு மோசம் . பனி சறுக்கு காட்சியில் இசை உச்ச வேகம் பிடிக்கையில் skate செய்து கொண்டிருப்பவர் நின்று விடுவார்!!)
ஸ்ரீதரின் திரைக்கதையமைப்பு புத்திசாலிதனமாய்,விறு விறுப்புடன் இருக்கும். இயக்கம் கேட்கவே வேண்டாம். சிவாஜி-ஸ்ரீதர் இணைவில் மிக சிறந்த படைப்பு இதுதான்.அடிமை பெண்ணிற்கு போட்டியாக வந்திருக்க வேண்டியது ,தீபாவளிக்கு தள்ளி போனது. அதனால் என்ன,நமக்குதான் தீபாவளி ராசியாயிற்றே.!!! இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவாஜி பிலிம்ஸ் ஒரு படத்தை கீழை நாடுகளில் (ஜப்பான் உள்ளிட்ட) படமாக்க திட்டமிட்டு ,திட்டம் கசிந்து விட்டதால்,மாற்று முகாம் அள்ளிதரித்த அவசர கோலத்தில் முந்தி கொண்டது.(மணியன் என்ற ........)
உற்ற நண்பர் கோபாலுக்கு,
தங்களுக்கு மீண்டும் என்னுடைய இதயபூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
நிச்சயமாக நீங்கள் நினைப்பது போல் அல்ல. எனக்கு ராகவேந்திரன் சாரும், நீங்களும் வெவ்வேறல்ல. இருவருமே சம நிலையில் மனதில் கோலோச்சுபவர்கள்தாம். இதில் அவர் ஒஸ்தி இவர் மட்டம் என்று என்றுமே நான் பார்த்ததில்லை. உங்களுக்குள் வாக்குவாதங்கள், பிரச்சனைகள் வந்த போது ஒரு நடுநிலையாளனாகத்தான் அதைத் தீர்க்க பாடுபட்டு வந்துள்ளேன். இதில் நான் சறுக்க வேண்டிய அவசியமே இல்லை. உங்களுக்குள் உள்ள பிரச்னை தீர்க்கப்படவேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் எனக்கு.
தாங்கள் நிச்சயமாக என் வேண்டுகோளின் படி அல்லது என் அன்புக் கட்டளையின்படி சில பிரச்சனைக்குரிய பதிவுகளை நீக்கியுள்ளீர்கள். அதற்கு மிகவும் நன்றி சொல்லக் கடமைப் பட்டவன் ஆகிறேன். திரியில் உங்கள் மனநிலைமையை ராகவேந்திரன் சாருக்கும், அவருடைய எண்ணங்களை உங்களுக்கும் பலமுறை ஒரு தூதுவனாக எடுத்துச் சொல்லியும் இருக்கிறேன்.
ஆனால் பிரச்னை என்பது ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சில பதிவுகள் வேண்டாம் என்பது தங்கள் கருத்து. ஏன் வேண்டாம் என்பது ரசிக வேந்தரின் கருத்து. இதில் சமாதான முயற்சியை ஓரளவிற்கு ஏன் அதற்கு மேலும் என்னால் ஆனதை நான் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்தும் இருக்கிறேன்.
என்னை விடுங்கள். இதில் நான் நியாயவாதி என்று சொல்வதற்காக இந்தப் பதிவல்ல.
இனி ஆக வேண்டியது என்ன என்று பார்ப்போம். நீங்கள் தரமான படங்களின் பதிவுகள் மட்டுமே வேண்டும் என்று நினைப்பவர். ராகவேந்திரன் சார் சுமாரான படங்களிலும் நடிகர் திலகம் கொடி நாட்டியுள்ளார் என்று வாதிடுபவர்.
இப்போது நீங்களே சொல்லுங்கள். இதில் எது நியாயம், எது அநியாயம் என்று நானோ அல்லது திரி நண்பர்களோ எப்படி முடிவெடுப்பது?
என்னுடைய மன நிலைமையில்தான் திரி நண்பர்களும் இருக்கக் கூடும் என்று நம்புகிறேன். அதனால்தான் ஒரு சிலர் தவிர பல நண்பர்கள் மௌனம் காத்தோ அல்லது பட்டும் படாமலுமோ ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
இப்படியே போனால் இதற்கு தீர்வுதான் என்ன? எதுவாய் இருந்தாலும் ஒரு முடிவு வேண்டுமல்லவா? அது ஒரு சுமூகமான தீர்வாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும்.
ராகவேந்திரன் சாரும், நீங்களும் என்ன ஜென்ம பகையாளிகளா? இல்லையே! எதனால் உங்களுக்குள் கருத்து வேறுபாடு வருகிறது? இது என்ன சொத்துப் பிரச்னையா? அனைவருமே நம் இதயதெய்வத்தைப் மட்டுமே போற்றிப் புகழ்ந்து வருகிறோம். அதில்தானே சில கருத்துக்கள் மாறுபடுகின்றன?
அந்தக் கருத்துக்கள் வன்மமாகவோ அல்லது சொந்தப் பகை போலவோ மாறவேண்டாம் என்பதுதான் என் வேண்டுகோள். உங்கள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் ஆத்மார்த்தமான அன்பும், நட்பும் உள்ளது என்பதை உங்களால் மறுக்க முடியுமா? பின் ஏன் இந்த முரண்பாடுகள்?
ராகவேந்திரன் சார் பல விஷயங்களில் தன்னை டிஸ்டர்ப் செய்வதாக கோபால் நிஜமாகவே வருத்தப்படுவதாக தெரிகிறது. அதே போல வயதில் மூத்தவரான பழுத்த அனுபவசாலியான ரசிகவேந்தரும் கோபாலின் சில பதிவுகளால் வருத்தப்படுகிறார் என்பதும் புரிகிறது.
இனி நாம் தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் தினத்தந்தி கன்னித்தீவு கதையாக இது தொடரும்.
இப்போது என்னுடைய நிலைமையை நான் சொல்லி விடுகிறேன். இதில் மழுப்பல்களோ ஒளிவு மறைவோ இல்லை.
சின்னக் கண்ணன் சாரும், ராஜேஷ் சாரும் அழகாக தங்கள் பதிலைத் தந்து விட்டார்கள். கோபால் அவருடைய எண்ணப்படி விமர்சனங்களை எழுதட்டும். அவர் தகுதியான படங்களை மட்டுமே எடுத்துக் கொள்பவர். ஆதலால் அதில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. மாறாக அது போற்றி வைத்துக் கொண்டாடத்தக்க வகையில் இருக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ராகவேந்திரன் சார் நடிகர் திலகத்தின் பிந்தைய நாட்களின் படங்களைப் பற்றி எழுதினால் கோபாலுக்கு அவமானம் பிடுங்கித் தின்கிறது. இப்போது அதுதான் பிரச்னை.
இனி ராகவேந்திரன் சார் எழுதுவதை கோபால் தடுக்க வேண்டாம். அதே போல் கோபால் எழுதுவதற்கு ராகவேந்திரன் சாரும் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டாம்.
கோபால் சாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்க உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. உங்கள் எதிர்ப்பை பிரதிபலிக்கவும் உரிமை உண்டு.
ஆனால் நீங்கள் உங்கள் கருத்தை தெரிவிக்கும் முறைதான் முரண்படுகிறது. வாந்தி, பூச்சாண்டி போன்ற வார்த்தைகள் நாமே மால்லாந்து படுத்து நம் மேல் எச்சில் துப்பிக் கொள்வது போல. என்றும் இளமையாக இருக்க நடிகர் திலகம் மார்கண்டேயன் அல்லவே! நீங்களே உலகில் நான் வணங்கும் ஒரே நடிப்புக் கடவுள் சிவாஜிதான் என்று உள்ளார்ந்த, ஆத்மார்த்தமான, உலகம் போற்றும் நடிப்பிலக்கணத்தை படைத்து விட்டு நீங்களே நடிகர் திலகத்தை ஒரு பொதுத் திரியில் அதுவும் பார்வையாளர்கள் அதிகம் உள்ள திரியில் பூச்சாண்டி, வாந்தி வருகிறது என்று எழுதி புண்படுத்தலாமா? மற்றவர்கள் நம்மாளை எள்ளி நகையாட நீங்கள் காரணாமாய் இருக்கலாமா? நீங்களே வழிவகுத்துக் கொடுக்கலாமா?
உங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் நிரம்பவும் மதிப்பவன் நான் என்பது தங்களுக்கே நன்கு தெரியும். உங்கள் கருத்துக்களை உங்கள் எதிர்ப்புகளை இங்கே நாசூக்காகவும் நயமாகவும் பதியலாமே!
இனி திரி நண்பர்களுக்கு,
கண்டிப்பாக இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க உங்களால்தான் முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை.
இப்போது எதையும் சுற்றி வளைக்க வேண்டாம். ஒரு ஓட்டெடுப்பு போல இதை ஒவ்வொருவரும் கண்டிப்பாக செய்வோம் என்பதை என் சிரம் தாழ்ந்த வேண்டுகோளாக இங்கு வைக்கிறேன்.
1. சிரஞ்சீவி, தாம்பத்யம் போன்ற நடிகர் திலகத்தின் பின்னாளைய படங்கள் இங்கு விவாதிக்கப் படலாமா? வேண்டாமா?
2. தரமுள்ள படங்களில் இருந்துதான் நடிகர் திலகத்தின் நடிப்பு அலசப்பட வேண்டும் என்ற கோபாலின் எதிர்பார்ப்பு சரியா? அல்லது தவறா?
3. எல்லாப் படங்களிலுமே நடிகர் திலகம் முத்திரை பதித்திருக்கிறார்... அதைப் பற்றி எழுதுவதில் என்ன தவறு என்ற ராகவேந்திரன் சாரின் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதா? இல்லையா?
4. அல்லது கோபாலுக்காக தொடங்கப் பட்ட தனி ஸ்கூல் ஆப் ஆக்டிங் திரியில் தரமுள்ள படங்களின் அலசல் என்று மட்டுமே வைத்து விட்டு
இங்கே நமது மெயின் திரியில் எல்லாப் படங்களையும் அலசலாமா?
மேற்கண்ட நான்கு கேள்விகளுக்கும் இந்தத் திரியின் அங்கத்தினர்கள் அவசியம் பதில் தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். வாழ்க்கைப் பிரச்னை என்பார்களே அது போல இது திரியின் பிரச்னை. திரியின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. திரியின் மேன்மை சம்பந்தப்பட்டது. திரியின் கௌரவம் சம்பந்தப்பட்டது.
ஆகவே ஒவ்வொருவரும் கண்டிப்பாக நேரம் இல்லாவிடினும் ஒரு ஐந்து நிமிடங்கள் இதற்காக ஒதுக்கி தங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக பதியுங்கள். அனைவர் கருத்துக்களும் வந்தவுடன் ஒரு நல்ல முடிவாக எடுக்கலாம்.
இப்போது என்னுடைய கருத்தை சொல்லி விடுகிறேன்.
நமது மெயின் திரியில் நடிகர் திலகத்தின் எந்தப் படங்களையும் அலசலாம். அதில் கோபால் அவருடைய கருத்துக்களைக் கூறலாம், விமர்சனங்கள் அளிக்கலாம். ஆனால் அது தலைவரோ அல்லது பதிவாளர்களையோ hurt பண்ணும்படி நிச்சயம் இருக்கக் கூடாது. கவனிக்கவும். நிச்சயம் இருக்கக் கூடாது. அல்லது பிடிக்காமல் போனால் பேசாமல் இருந்து விடலாம்
(கோபால் சார், இது என்னுடைய வேண்டுகோள்).
கோபால் சாருக்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட school of acting திரியில் மிகத் தரமான நடிகர் திலகத்தின் படங்கள், நடிப்பு மட்டும் அலசப்படட்டும். அங்கு கோபால் பின்னடைவாக நினைக்கும் படங்களைப் பற்றி யாரும் பதிவுகள் போட வேண்டாம்.
(ராகவேந்திரன் சார், நீங்களும் அது போன்ற படங்களின் விமர்சனங்களையோ, நடிப்பைப் பற்றியோ அங்கு எழுத வேண்டாம். மெயின் திரியிலேயே எழுதுங்கள்.
இது என்னுடைய வேண்டுகோள்.).
நடக்க இருப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.
இந்தி திரி நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்தைக் கூறவும்.
என் கருத்தை பிரதிபலித்த தங்களுக்கு 100% நன்றி வாசு.எனக்கு ராகவேந்தர் சார் மீது தனி பட்ட எந்த வருத்தமும் இல்லை. அவர் சேவைக்கு நான் அவருக்கு என்றுமே கடன் பட்டவன்.நம் கருத்துக்கள் மதிக்க பட வேண்டுமென்றால் ,நாம் தூக்கி பிடிப்பது ,மற்றவர்களுக்கு புதிய கோணத்தை உணர்த்தி,அவர்களுக்கு நடிகர்திலகத்தின் முழு பரிமாணத்தையும் உணர்த்த வேண்டும். ராகவேந்தர் தன் தனி பட்ட பிடிவாதத்தை எல்லார் மீதும் திணித்து, பொது கருத்தை உதாசீனம் செய்வதுடன்,நம்
எழுத்துக்களின் மாண்பையே குலைக்கிறார்.அது மட்டுமே என் குறை.
நான் மிக மிக விரும்பும் துணை,வாழ்க்கை,முதல் மரியாதை,தேவர் மகன் போன்ற படங்களில் அவர் இளைஞர் அல்லவே!!!!!!!!!நான் வெறுத்தது அவர் முதுமையை அல்ல. பட தேர்வுகளில் அவர் சறுக்கல்களையே.
Hello vasu sir,
1. We can & must discuss about all NT movies, as I have watched/watching many movies of NT based on our discussion (movies after 1980s pre dominantly)
2. NO none must post provocative / statements to hurt NT or his fans writings
3. Gopal sir can post in main thread also analyse in NT school of acting
நமது மெயின் திரியில் நடிகர் திலகத்தின் எந்தப் படங்களையும் அலசலாம்
நான் இதில் கருத்து கூறவேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் வாசு சார் கூறியதுமாதிரி, பிரச்சினைகளின்போது அதனைத் தீர்க்க முயல்வதுதான் பண்பாடு என்ற அடிப்படையில் எனது கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் திரு.சின்னக்கண்ணன் மற்றும் திரு.வாசுதேவன் ஆகியோருடைய கருத்துக்களில் உடன்படுகிறேன்.
நான் நடிகர்திலகம் திரியில் இணைந்த பிறகு வேறு எந்தத் திரியையும் பார்த்ததில்லை. நடிகர்திலகம் சம்பந்தப்பட்ட மற்ற திரிகளையேகூட பார்ப்பது மிகவும் அரிதே. இந்நிலையில் ராகவேந்திரன் சாரின் பதிவுகளும், கோபால் சாரின் ஆய்வுப் பதிவுகளும் இதே திரியில் இடம்பெற்றால் இந்த ஒரு திரியை மட்டுமே வாசிக்கும், பங்கேற்கும் என்னைப்போன்றவர்களுக்கு, எல்லாவற்றையும் ஒரே திரியில் பார்க்கும் வாய்ப்பு கிட்டும் என்பதே என்னுடைய வென்டுகோள்.
நதிகள் உற்பத்தியாகுமிடம் வெவ்வேறாக இருந்தாலும், பாயுமிடம் வெவ்வேறாக இருந்தாலும், இறுதியில் கலக்குமிடம் கடலாக இருப்பதுபோல், திரு.ராகவேந்திரன் மற்றும் திரு.கோபால் ஆகியோரின் பதிவுகள், பார்வைகள் வெவ்வேறாக இருந்தாலும், புகழ் சேர்ப்பது என்னவோ நம் நடிகர்திலகத்துக்குத்தான்.
இனி திரி சிறப்பான முறையில் பயணிக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
டியர் கோபால் சார்,
தங்களது சிவந்த மண் நினைவுகள் அருமை. நான் ஏற்கனவே இத்திரியில் வந்த சிவந்த மண் நினைவுகள் பற்றிய ஒரு பதிவை சேமித்து வைத்திருந்தேன். Over to சாரதா மேடத்தின் பதிவு
அந்தப் பதிவினை தங்களுடைய பதிவிற்கு சப்போர்ட்டாக தற்போது அளிக்கிறேன்.
'சிவந்த மண்' நினைவுகள்
வெளிநாட்டில் படப்பிடிப்பு மேற்கொண்ட நாள் முதலே, மக்கள் மத்தியில், குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் 'சிவந்த மண்' பற்றிய எதிர்பார்ப்பு வளர்ந்து வந்தது. போதாக் குறைக்கு, ஆனந்த விகடன் பத்திரிகையில் நடிகர்திலகம், தான் பங்கேற்ற வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றி 'அந்நிய மண்ணில் சிவந்த மண்' என்ற தலைப்பில் எழுதிவந்த தொடர் கட்டுரையும் ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தது. தன்னுடைய ஒரு சாதாரண படத்தையே அனுபவித்துப் படமாக்கும் இயல்பு கொண்ட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஸ்ரீதர், சிவந்தமண்ணை அணு, அணுவாக செதுக்கிக் கொண்டிருந்தார்.
ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் "சிவந்த மண்" படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி அமைந்திருக்கும். அதற்கு அருமையான ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணனின் கைவண்னத்தில் camera angles செட் செய்த இயக்குனர் sreedhar க்கு பாராட்டுக்கள். சிவந்த மண் என்றதும் பெரும்பாலோர் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகளையே சொல்வார்கள்
சொல்லப்போனால் வெளிநாட்டுக்காட்சிகளை விட உள்நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளே நம்மை பிரமிக்க வைக்கும். லைட் எஃபெக்டுகள் எல்லாம் அற்புதமாக அமைந்திருக்கும்.
உதாரணத்துக்கு சில:
1) நாகேஷ் - சச்சு நடத்தும் மதுபானக்கடையின் (பார்) அரங்க அமைப்பும், லைட்டிங்கும் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக அமைந்திருக்கும்.
2) கிளிமாக்ஸ் காட்சியில் ராணுவ ஜீப்கள் அனிவகுத்து வேகமாகப் பறந்து செல்லும் காட்சியமைப்பில் ஒளிப்பதிவு சூப்பர்.
3) எலிகாப்டர் காட்சியிலும், ஒளிப்பதிவாளரின் பங்கு அருமை. இயக்குனரும் கூட. குறிப்பாக, புரட்சிக்காரர்கள் ஓடி வந்து திடீரென்று தரையில் படுத்துக்கொள்ள அவர்களை ஒட்டியே குண்டுகள் வந்து விழும்போது, நம் ரத்தம் உறைந்து போகும். அதுபோல சிவாஜி ஓடிவந்து பள்ளத்தில் குதிக்க, அவர் தலையை உரசுவது செல்லும் எலிகாப்டர். இவற்றில் டைமிங் அருமையாக கையாளப்பட்டிருக்கும்.
4) கப்பலில் வெடிகுண்டு வைக்க புரட்சிக்காரர்கள் செல்லும்போது, கையாளப்பட்டிருக்கும் நைட் எஃபெக்ட் லைட்டிங்கும், கயிறு வழியாக சிவாஜி ஏறுவதை, கப்பலின் மேலிருந்து காட்டும் சூப்பர் ஆங்கிளும். அதே நேரம், கப்பலின் உள்ளே நடக்கும் ராதிகாவின் நடனமும், அதற்கு மெல்லிசை மாமன்னரின் இசை வெள்ளமும்.
5) ரயில் பாலத்துக்கு வெடிகுண்டு வைக்க சிவாஜி போவதை, கீழேயிருந்து படம் பிடித்திருக்கும் அற்புதக்கோணம், அப்போது சிவாஜியின் கால் சற்று சறுக்கும்போது நம் இதயமே சிலிர்க்கும்.
6) ஒளிந்து வாழும் சிவாஜி, தன் அம்மாவைப்பார்க்க இரவில் வரும்போது, மாளிகையைச்சுற்றி அமைக்கப்பட்டிகும் நைட் எஃபெக்ட் லைட்டிங்.
7) நம்பியாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட சிவாஜி, ஜெயில் அதிகாரியை பிணையாக வைத்துக்கொண்டு, அத்தனை துப்பாக்கிகளையும் தன் வசப்படுத்தியதோடு, தன் கைவிலங்கை துப்பாக்கி குண்டால் உடைத்துக்கொண்டு தப்பிக்கும் காட்சி.
8) வாகினி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட, சுழன்று சுழன்று தண்ணீர் ஓடும் ஆறு. அதை இரவு வேளையில் காண்பிக்கும் அழகு.
9) அரண்மனை முன்னால் போராட்டம் நடத்த வந்த கூட்டத்தினரை, துப்பாக்கி ஏந்திய குதிரை வீரர்கள் விரட்டியடிக்க மக்கள் சிதறி ஓடும் காட்சி.
10) எகிப்திய நாட்டிய நாடகம நடத்தும் முன், தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தில், அந்த நாட்டியத்துக்கான மேடை அமைப்பை ஒத்திகை பார்ப்பார் பாருங்க... என்ன ஒரு யதார்த்தம். (நம்ம வி.ஐ.பி.ங்க, டி.வி.ஷோவுல இதெல்லாம் சொல்ல மாட்டாங்க. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் 'வானம் பொழிகிறது... பூமி விளைகிறது...')
11) ஜூரிச் விமான நிலையத்தில், காஞ்சனாதான் இளவரசி என்று தெரிந்துகொள்ளும்போது காட்டும் அதிர்ச்சி.
12) விமான விபத்தில் தப்பிப்பிழைத்து, தன் வீட்டுக்குக்கூட நேராகப்போகாமல் நண்பனைச்சந்திக்கும்போது அடையும் ஆனந்தத்தின் உணர்ச்சி வெளிப்பாடு. (இப்படம் முத்துராமனின் கிரீடத்தில் ஒரு வைரம்).
13) செத்துப்போய்விட்டதாக நினைத்து மகனுக்கு பூஜை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தாய் தந்தை முன் தோன்றி, அவர்களை அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தருணம். அந்த இடத்தில் நடிகர்திலகம் நடிக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா?. நிஜமாகவே உயிர் தப்பிவந்த ஒருவரைப்போல எத்தனை உணர்வுகள் கலந்த வெளிப்பாடு. அதற்கு முற்றிலும் ஈடு கொடுத்து சாந்தகுமாரி, மற்றும் ரங்காராவிடம் இருந்து வெளிப்படும் அபார நடிப்புத்திறன்.
14) போராட்டத்தில் பலியான நண்பனையும், அந்த அதிர்ச்சியில் இறந்த அவன் தாயையும் மயானத்தில் எரித்து விட்டு, ரத்தக்கறையுடன் ஆக்ரோஷமாக தன் மாளிகையில் நுழைந்து, தன் தாயுடனும் அந்நேரம் அங்கு வரும் சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியான தந்தையுடனும் பேசும்போது காட்டும் ஆக்ரோஷம், இறுதியில் அடிக்கும் அந்த அட்டகாசமான சல்யூட் (இந்தக்காட்சிக்கு பெரிய பெருமை.... மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்கூட பலமாகக் கைதட்டிவிட்டு சொன்ன வார்த்தை 'இதுக்கெல்லாம் கணேசன்தான்யா'). வீராவேசத்திடன் செல்லும் மகனைப்பார்த்து, புன்னகைத்துக்கொண்டே ரங்காராவ் சொல்லும் பதில் "உன் மகன் முட்டாள் இல்லை, புத்திசாலி".
இக்காட்சிக்குத்தேவையான அவரது பாடி லாங்குவேஜ். குறிப்பாக கீழ்க்கண்ட வசனங்களின்போது....
"....... அதற்கு உங்கள் ஆட்சி கொடுத்த பரிசு உயிர்ப்பலி, ரத்தம்" இந்த இடத்தில் அவரது கையசைவு.
"......... திவானைக் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும். அல்லது அந்தப்பதவியையும் அதற்கான உடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு" (இந்த இடத்தில் அவர் கையசைவு) "திவானுக்கு எதிராக புரட்சிக்குரல் எழுப்ப வேண்டும்".
"பாராட்டு... வெறும் வார்த்தையில் இருந்தால் போதாது. செயலிலே காட்ட வேண்டும்" (இந்த இடத்தில் அவரது அந்த நாட்டிய முத்திரை).
"ஒரு தேச விரோதிக்கு உங்கள் சட்டம் பாதுகாப்பு தருகிறதென்றால், அந்தச்சட்டத்தை உடைத்தெறியவும் தயங்க மாட்டோம்" (இந்த இடத்தில் கையை உயர்த்தி இரண்டு சொடக்குப்போடுவார்)
"இல்லையம்மா... நான் இந்த சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்" (இந்தக் கட்டத்தில் அவர் கண்களில் தெரியும் தீர்க்கம்)
இறுதியாக தியேட்டரையே அதிர வைக்கும் அந்த சல்யூட்.
இன்றைக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இருக்கும் உணர்ச்சிமயமான சூழ்நிலையில், சிவந்த மண் திரையங்குகளில் திரையிடப்பட்டால், ரசிகர்களின் அலப்பறையில் மேற்சொன்ன காட்சியில் ஒரு வசனம் கூட கேட்க முடியாது என்பது திண்ணம். (அதற்கென்று தனியாக இன்னொரு நாள் பார்க்க வேண்டியிருக்கும்). அந்த அளவுக்கு இந்தக்காட்சியில் வார்த்தைக்கு வார்த்தை கைதட்டலும் விசிலும் பறக்கும்.
15) எலிகாப்டரை சுட்டு வீழ்த்திவிட்டு, அந்த மலையுச்சியில் நின்று நண்பர்களுக்கு எழுச்சிமிக்க 'அன்று சிந்திய ரத்தம்' பேருரை ஆற்றும்போது, முகத்தில் தோன்றும் ரௌத்ரம். (இதெல்லாம் வேறு யாராவது செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா?).
16) தான் வீட்டுக்கு வந்திருப்பது திவான் நம்பியாருக்குத் தெரிந்துபோய், தன்னைக்கைது செய்யும் இக்கட்டான நிலையில் தந்தையைத் தள்ள, கணவரின் பெருமைகாக்க தன் தாயைக்கொண்டே தன்னைக்கைது செய்ய வைக்கும்போது காட்டும் கண்டிப்பு கலந்த பெருமிதம்.
17) ரயிலுக்கு குண்டுவைக்கும் முயற்சியை தன் மனைவியே செயலிக்கச் செய்துவிட்டாள் என்று தெரியும்போது முகத்தில் எழும் ஆதங்கம், அதை தன் சக புரட்சிக்காரர்களுக்குச் சொல்லும்போது முகத்தில் தோன்றும் ஏமாற்றம் கலந்த இயலாமை. (சில வினாடிகளுக்குள் எத்தனை உணர்ச்சிகள்தான் அந்த முகத்தில் தோன்றி மறையும்..!!!!).
'பாரத்'துக்கும் வசந்தி (என்கிற சித்திரலேகா) வுக்கும். எதிர்பாராவண்னம் திருமணம் நடந்துவிடும் அந்தச்சூழல் மிகவும் சுவையானது. ராணுவத்தின் துரத்தலுக்குத் தப்பி, ஒரு திருமண வீட்டில் தஞ்சம் புக, தேசப்பற்று மிக்க அம்மக்களால் நடிகர்திலகமும் காஞ்சனாவுமே திருமண தம்பதிகளாய் மாற்றப்பட,
மந்திரம் தெரியாமல் தடுமாறும் ஐயர் நாகேஷ்,
கண்ணடித்தவாறே டிரம்ப்பட் வாசிக்கும் (இயக்குனர்) விஜயன்,
ஸ்டைலாக தலையாட்டிக்கொண்டே பேண்ட் டிரம் வாசிக்கும் மாலி,
என அந்த சூழலே களை கட்டுகிறது.
('ஜெனரல் பிரதாப்' ஆக வருபவர், எம்.எஸ்.வி.யின் உதவியாளர் ஹென்றி டேனியலா...?)
இன்றைக்கு ஐந்து இயக்குனர்களை ஒரு படத்தில் நடிக்க வைத்திருப்பதாக பெருமைப்படும் முன், அன்றைக்கே மூன்று இயக்குனர்களை (ஜாவர் சீதாராமன், விஜயன், தாதாமிராஸி) தனது சிவந்த மண்ணில் நடிக்க வைத்த பெருமை ஸ்ரீதருக்கே. (இயக்குனர்கள் எல்லாம் படங்களில் தலைகாட்டாத காலம் அது).
எடுத்தவரை யில் அவ்வப்போது போட்டுப் பார்க்கும்போதெல்லாம் படம் அவருக்கு திருப்தி யளிக்கவே, படம் தயாராகும்போதே ஒரு முடிவு செய்தார். தன்னுடைய படத்தை தமிழ்நாடு முழுதும், அந்தந்த ஊர்களில் சிறந்த தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. இது விஷயமாக அவ்வப்போது விநியோகஸ்தர்களிடம் கலந்து பேச, அவர்களும் அந்தந்த ஏரியாக்களில் நல்ல தியேட்டர்களாக புக் செய்து வைக்க, படம் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஏற்கெனவே புக் பண்ணி வைத்திருந்த தியேட்டர்கள் கைமாறிப் போய்க்கொண்டிருந்தன.
1969 மே மாதத்திலேயே வெளியிடுவதாக ஏற்பாடு செய்திருந்த படம், நினைத்த வேகத்தில் முடியாததால், பின்னர் ஆகஸ்ட் 15 சுதந்திர தின வெளியீடு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியும் முடியவில்லை. முரளி அவர்கள் சொன்னது போல, வாகினி ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த ஆற்று வெள்ளம் செட் உடைந்து, வடபழனி கடைகளுக்கெல்லாம் தண்ணீர் புகுந்த சம்பவமும் ஒரு காரணம். (முதலில் ஏன் மே மாதத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கு காரணம் அன்றைய ரசிகர்களுக்கு தெரியும். 'அவரது' சொந்தப்படத்தை தன் படத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்பது ஸ்ரீதரின் எண்ணம். 'அன்று சிந்திய ரத்தம்' என்ற படத்தலைப்பைச்சொன்னால் போதும். அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். புரியாதவர்கள் விட்டுவிடுங்கள்). இறுதியாக 1969 தீபாவளி வெளியீடு என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அதற்கேறாற்போல தியேட்டர்கள் புக் செய்யப்பட்டன.
சென்னை மவுண்ட் ரோடு ஏரியாவில் 'குளோப்' தியேட்டர் என்பது கடைசி நேரத்தில் முடிவானதுதான். இப்போது இருக்கும் அதிநவீன தியேட்டர்கள் எல்லாம் அப்போது கிடையாது. தேவி காம்ப்ளக்ஸ், சத்யம் காம்ப்ளெக்ஸ் எல்லாம் கூட அப்போது இல்லை. இருந்தவற்றில் சிறந்தவைகளாக (சித்ராலயாவின் கோட்டையான) காஸினோ, சாந்தி, ஆனந்த், சஃபையர் காம்ப்ளெக்ஸ் இவைகள்தான். இதில் சாந்தியில் தெய்வமகன், மிடலண்ட்டில் நிறைகுடம் ஓடிக்கொண்டிருந்தன. காஸினோவில் வேறு படம் புக் ஆகிவிட்டது. ஆகவே ஸ்ரீதர் குறி வைத்தது ஆனந்த் தியேட்டரைத்தான். கடைசி நேரத்தில் அது மிஸ்ஸாகிப்போக, வேறு வழியின்றி குளோப் அரங்கை புக் செய்தனர்.
அதே சமயம், வட சென்னையில் அப்போதைக்கு மிகச்சிறந்த தியேட்டராக விளங்கிய 'அகஸ்தியா'வையும், மூன்றாவது ஏரியாவான புரசைவாக்கம் பகுதியில் அப்போதைக்கு சிறந்த தியேட்டராக இருந்த 'மேகலா'வையும் சைதாப்பேட்டையில் 'நூர்ஜகான்' தியேட்டரையும் புக் செய்தனர்.
குறிப்பாக மேகலா தியேட்டரில் படம் வெளியாகப்போகிறது என்றதும் ரசிகர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. காரணம், அந்த ஏரியாவில் 'புவனேஸ்வரி' நடிகர்திலகத்தின் கோட்டையாகத்திகழ்ந்ததுபோல, மேகலா, திரு எம்.ஜி.ஆரின் கோட்டையாகத்திகழ்ந்தது. ஏற்கெனவே நான் குறிப்பிட்டதுபோல, அந்த தியேட்டரில் 100 நாட்களைக்கடந்த படங்களின் பட்டியலை ஒரு ப்ளாஸ்டிக் போர்டில் அழகுறப் பதித்து வைத்திருந்தனர். அதில் சிவந்தமண் வெளியாவதற்கு முன் வரை (1964 - 1969) எட்டு படங்கள் 100 நாட்களைக்கடந்து ஓடியதில், 'எதிர்நீச்சல்' படம் தவிர மற்ற ஏழு படங்கள் (வேட்டைக்காரன், பணக்கார குடும்பம், எங்கவீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, காவல்காரன், அடிமைப்பெண்) என எம்.ஜி.ஆர். படங்கள்தான். நடிகர்திலகத்தின் நல்ல படங்களெல்லாம் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி காம்பினேஷனில் வரும்போது, புவனேஸ்வரிக்குப் போய்விட்டதால் (அல்லது அதைவிட்டால் ராக்ஸி) 'சிவந்த மண்' மூலம் எப்படியும் எதிரியின் கோட்டையில் கொடியேற்றி அந்த போர்டில் இடம் பெற்றுவிட வேண்டும் என்பது ரசிகர்களின் தணியாத தாகமாக இருந்தது.
அதிலும் நடிகர்திலகத்தின் கோட்டையான புவனேஸ்வரியில் 'குடியிருந்த கோயில்' 100 நாட்கள் ஓடியதிலிருந்து, அண்ணனுக்கு ஒரு படமாவது மேகலாவில் 100 நாட்களைக் கடந்து ஓடியாக வேண்டும் என்ற ரசிகர்களின் ஆவலைப்பூர்த்தி செய்து, சென்னையில் 100 நாட்களைக்கடந்த நான்கு அரங்குகளில் ஒன்றாக மேகலாவில் 'சிவந்த மண்' 100 நாட்களைக்கடந்து ஓடி, வெற்றிகரமாக அந்த போர்டில் இடம்பெற்றது. மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும்
//ஆயிரம் படங்கள் வரலாம்,போகலாம், ஆனால் ,சில படங்கள் குறிஞ்சி மலர் போல மனதில் தங்கி, நினைக்கும் தோறும் இனிக்கும்.
தமிழ் திரை பட உலக சரித்திரத்திலேயே இவ்வளவு hype உடன் வெளியான இரண்டே படங்கள் சந்திரலேகா, சிவந்தமண் //மேகலாவில் அந்த போர்டையும், ஷீல்டு காலரியில் 'சிவந்த மண்' 100வது நாள் ஷீல்டையும் பார்க்கும்போது நமக்கு ஒரு பெருமிதம் தோன்றும் //
வாவ்..கோபால் சார், சந்திர சேகர் சார்..சிவந்தமண்ணைப் பற்றி எழுதி என் என்..(அவசரத்திற்கு உவமை வரலையே..சரி இதுஓகேயா இருக்குமா) நினைவுக்கடலில் பட்டர்ஃப்ளை ஸ்ட்ரோக் அடித்து பின்னால் போக வைத்து விட்டீர்கள்.. சில பல விஷயங்கள் புதிது..ம்ம் நன்றி..
தாதா மிராஸி யாராக வருவார்..
// டியர் கோபால் சார்,
தங்களது சிவந்த மண் நினைவுகள் அருமை. நான் ஏற்கனவே இத்திரியில் வந்த சிவந்த மண் நினைவுகள் பற்றிய ஒரு பதிவை சேமித்து வைத்திருந்தேன். சாரதா மேடத்தின் பதிவு என்று நினைக்கிறேன். (மன்னிக்கவும்) //
No doubt Chandrasekar sir, that is Saradha mam's post. I read it several times.
// தாதா மிராஸி யாராக வருவார்?//
Mr. Chinnakannan,
Dadamirasi is the one who come as Portugese representative in two occations, who is talking with Nambiar with the help of a translator.
வருடமிருமுறை இத்திரியில் நடந்தேறும் நண்பர்கள் 'ராகோ' நடத்தும் 'நீயா நானா' நிகழ்ச்சியை நான் தவிர்த்துவிடுவது வழக்கம்,இதற்கு முக்கிய காரணம் நான் "கோ"வின் குழாமை சேர்த்தவன் என இங்கு சிலரால் கருதப்படுவதால்.(இதில் எனக்கு சந்தோஷமே)ஆனால் கிட்டதட்ட உச்ச கட்டம் வந்துவிட்ட நிலையில் என் கருத்தையும் ஒரு ஓரமாக வைக்க விரும்புகிறேன்.
கடவுளில் வேறுபாடு இல்லை எல்லாகடவுளும் ஒன்றுதான் ..அதேபோல அவரை உபாசிக்கும் கோவில்களிலும் எந்த வித்தியாசமும் கிடையாது என்பதை நாம் கருத்தளவில் ஒப்புக்கொண்டாலும் திருப்பதி,மதுரை,பழனி,குருவாயூர் சிதம்பரம் சமயபுரம் சபரிமலை போன்ற கோவில்களுக்கு விசேஷ புகழ் இருப்பதையும் மறுப்பதில்லை.அதே போல நடிப்பின் கடவுளாகிய தலைவர் நடித்தபடங்கள் அனைத்தும் அவரை நாம் உபாசிக்கும் கோவில்களே என்றாலும் அவற்றிலும் சில கோவில்கள் விசேஷமானவை என்பதை மறுக்கமுடியாது.
இப்படியும் சொல்லலாம்..
தலைவர் ....
உலக நடிகர்களுக்கு சவால் விட்டு நடித்தவை ஒரு அறுபது படங்கள்
மற்ற இந்திய நடிகர்களுக்கு சவால் விட்டு நடித்தவை ஒரு இருநூறு படங்கள்
மற்ற தமிழ் நடிகர்கள் போல நடித்தவை மீதி படங்கள்.
மேற்கண்ட ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு திரி தேவைப்படும்
ஒன்றோடு ஒன்றினைக்கலப்பது... குங்குமப்பூவை, குருமாவில் போடுவதற்கொப்பாகும்
எனக்கு இரண்டும் பிடிக்கும்; ஆனால் கலந்தால் பிடிக்காது.
அம்புட்டுத்தேன்!!
Naan varaindha oviam....
'புதிய பறவை' உருவாக்கம் பற்றி ஆரூர்தாஸ் அவர்கள் 'தினத்தந்தி' (8-11-13) நாளிதழில் எழுதியுள்ள கட்டுரை.
http://i812.photobucket.com/albums/z...ps32d0a834.jpg
http://i812.photobucket.com/albums/z...psaf705bd6.jpg
கோபால் சார்
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.
தர்மராஜா திரைப்படத்தை பற்றி மற்றும் 80கலிர்க்கு அப்புறம் வந்த திரைப்படங்களை பற்றிய தங்கள் கருத்து, தங்களுடைய வாதம் சரியல்ல, ஏற்க்கமுடியாதது என்வரையில் ! !
கராத்தே முறையாக கற்றுக்கொண்டு நடிக்க அது ஒன்றும் ஒரு கராத்தே வீரரை பற்றிய கதையல்ல ! ஆகவே நீங்கள் அதில் நடிகர் திலகம் முறையாக கராத்தே கற்றுக்கொண்டு நடித்திருந்தால் அதை ஒத்துகொண்டிருப்பீர்கள் என்ற ரீதியில் உள்ள பதில் ஏற்புடையதாக இல்லை !
மேலும் காலங்கள் மாறும்போது கதைகளம் மாறும்போது அதற்கேற்றார்போல மாறும் தன்மை கொண்டவன்தான் நடிகன் !
நடிகர் திலகம் திரைப்படத்தில் நடித்திருக்க கூடாது என்பது விதண்டாவாதம்.
காரணம் அதை கூற உங்களுக்கும் சரி, எனக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி எந்த உரிமையும் கிடையாது.
நடிப்பு நீங்கள் கூறியது போல imaginativaaga இருபதற்கு அவரிடம் கூறப்பட்ட கதைகள் ஒத்துழைத்ததா என்பதை நீங்கள் நினைத்துபாருங்கள் ? அப்படி அமைந்த சில கதைகளில் 80உக்கு பிறகும் கூட அவர் கொலோச்சியிருப்பர் என்பதும் தாங்கள் உணரவேண்டிய ஒன்று உதாரணம் : மிருதங்க சக்ரவர்த்தி, துணை, வா கண்ணா வா, மருமகள் மற்று பல !
ரசிகர்களின் ரசிப்புத்தன்மை மாறும்போது அதற்கேற்றார்போல கதைகள் உருவாக்கபடுகின்றன ! அப்படி உருவாக்கப்பட்ட கதைகளுக்கும் நடிகர் திலகத்தின் appearance ஒரு பலமாக இருந்ததால்தான் தயாரிப்பாளர்கள் அப்போதும் இனிப்பை மொய்க்கும் ஈக்களைபோல மொய்த்தார்கள் !
அவர் என்றுமே கதையை இப்படி மாத்து...அப்படி மாத்து...என் கதாபாத்திரம் இப்படி இருக்கவேண்டும்...அப்படி இருக்கவேண்டும்...என்று தேவையில்லாத தொந்தரவை கதாசிரியர்களுக்கு, வசனகர்த்தாக்களுக்கு, இயக்குனர்களுக்கு ஒருபோதும் கொடுத்ததில்லை என்பதையும் நீங்கள் நினைவில்கொள்ளவேண்டும் ! HE IS A 100% PROFESSIONAL !
புது நடிகர்கள் பலர் வந்தும் இந்த நிலை என்றால் நடிகர் திலகத்தின் MARKET VALUE ஒரு EVER GREEN MARKET VALUE என்பதை நீங்கள் உணரவேண்டும்.
அப்படியிருந்தும் மிருதங்க சக்ரவர்த்தி, துணை, வா கண்ணா வா மற்றும் பல தரம் வாய்ந்த படங்களையும் நடித்து கொடுத்தவர் நடிகர் திலகம்.
மேலும் நடிகர் திலகம் RIGHT FROM DAY ONE ஒரு தயாரிப்பாளரின், விநியோகஸ்தர்களின், இயக்குனரின் நடிகராக மட்டுமே இருந்துள்ளார் என்பது உலகறிந்த விஷயம்.
பிடிக்கவில்லைஎன்றால் நீங்களோ நானோ மற்றவர்களோ பார்க்காமல் போகவேண்டியதுதானே ! அதை விடுத்து உங்கள் கருத்தை மற்றவர்களுக்குள் இப்படி திணிப்பது ஞாயமே இல்லை.
வர வர இந்த அரூர்தாஸ் எழுதுவது படிக்கவே கடுப்பாக இருக்கிறது !
சரியான ஜால்ரா பேர்வழியாக இருந்திருப்பார் போல !
என்ன ஒரு தலைகனம் !
தனக்கு தானே மானியம் விட்டுகொள்வது போல ஒரு எழுத்து ! தேவையில்லாத வாக்கியங்கள் ..!
அவர் தொலைபேசி இருந்தால் கொடுங்களேன் யாராவது ! Noziating megalomania ! Just wanted to give a piece of my mind !
ராகவேந்தர் 5000 முடித்த கையோடு வாசுவின் 4000. இவர்கள் உழைப்பை நினைத்தால் மலைப்பு. இத்தனைக்கும் ஏனோதானோ ஒரு வரி போட்டு ஒப்பேத்திய பதிவுகள் கிடையாது. எல்லாமே மிக உழைப்பை கோரும் மெனக்கிட்ட பதிவுகள். எழுந்து நின்று உங்கள் இருவருக்கும் standing ovation கொடுத்து,தொப்பியை எடுத்து தலை வணங்குகிறேன்.நாமெல்லாம் 2000 கே திணறி அலையும் கேஸ் .வாசு, நீங்கள் பம்மலாரோடு திரி 9 ஐ நகர்த்திய அழகு.(மிக பெரிய ஹிட்ஸ் வாங்கிய ஒன்று) துரதிர்ஷ்ட வசமாக நீங்கள் ஆரம்பித்த 10 ஐ தொடரும் சுமை என்மேல். அதனால் நான் ஆரம்பித்த 11 ஐ தொடரும் சுமையை உங்கள் மேல் ஏற்றி சுவையாக பழி தீர்த்து, எல்லாருக்கும் சுவாரஸ்யம் ஆக செய்து விட்டேன். தொடருங்கள் .ரசிக்க ஒரு பொது கூட்டமே உங்கள் பின்னால்.
கேள்வி ; இணய தளத்தில் கூட மறைமுகமாக எம்ஜியாரின் சாதனைகளை பற்றி பிரபல
அறிவாளிகள் - உயர் பதவியில் இருப்பவர்கள் -அந்நிய மண்ணில் இருப்பவர்கள்
புனை பெயரில் வருபவர்கள் கூட விமர்சனம் செய்கிறார்களே ?
பதில் என்ன சார் செய்வது ? அவர்களின் மன நிலை நன்கு புரிகிறது . எதோ ஒரு ஏமாற்றம்
அவர்கள் உள்ளத்தில் புகைந்து கொண்டே இருக்கிறது . மேலும் எம்ஜிஆரின் புகழ்
உலகமெங்கும் பரவி உள்ளதும் , ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள பற்றும் ஒற்றுமையும் கண்டு கலங்கி இருப்பார்கள் .
வினோத் சார்,
உங்களின் கேள்வியும் நானே,பதிலும் நானே செம காமெடி. இந்த மாதிரி "ரசிகர்களை" நினைத்து உலகமே "கலங்கி போகாமல்" என்னதான் செய்வது?
டியர் வாசுதேவன் சார்,
4000 முத்தான பதிவு என்ற மைல்கல்லை எட்டும் தங்களுக்கு வாழ்த்துக்கள். எப்போதும்போல் திரு.வினோத் சார் முந்திக்கொண்டு முதல் வாழ்த்தை தெரிவித்துவிட்டார். திரு.கோபால் சார் தெரிவித்தமாதிரி தங்களுடைய ஒவ்வொரு பதிவும் ஏனோ தானோவென்ற பதிவுகள் இல்லை. ஒவ்வொரு பதிவும் சிறப்பாக அமைய தாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு, உழைப்புக்கு salute .
Congrats to you Mr. (Neyveli) Vasudevan, for your wonderful 4,000 posts.
Each and every post is a valuable one, I never find any wastage posts or filling the thread posts, from you. That means your 4,000 is equal to 40,000 by their value of informations and collections.
Your effort behind every post is un-imaginable.
In Bharathi's words... "ingivanai yaam peravey enna thavam seydhu vittom".
Hats off.
Vasu Sir
http://i1146.photobucket.com/albums/...ps856acc2c.jpg
Golden words....Quote:
Congrats to you Mr. (Neyveli) Vasudevan, for your wonderful 4,000 posts.
Each and every post is a valuable one, I never find any wastage posts or filling the thread posts, from you. That means your 4,000 is equal to 40,000 by their value of informations and collections.
Your effort behind every post is un-imaginable.
In Bharathi's words... "ingivanai yaam peravey enna thavam seydhu vittom".
Hats off.
ஆய்வுப்பெட்டகம் வாசுதேவன் சார்
இந்த திரியில் தாங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு பதிவும் நடிகர் திலகத்தின் புகழை உலகரியச் செய்யும் உன்னதமான உயர்ந்த நல் முத்து.
அந்த வகையில் 4000 வது பதிவை கண்டுள்ள தங்களூடைய உழைப்பிற்கும் தொடர்ந்து நீங்கள் தலைவரின் படங்க்ளூக்காக செய்யும் ஆய்வும் மேன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
இப்போது தான் நடிகர் திலகத்தின் சிலைக்காக நாகர் கோவிலில் இருந்து மோட்டர் சைக்கிளில் 15 ரசிகர்கள் இன்பா தலைமையில் திருச்சி வழியாக சென்னை செல்கிறார்கள். அவர்களை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் வரவேற்பு அளித்து வழியனுப்பினோம். அவர்கள் பயணமும் சிலை முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்
c. Ramachandran
ஒரு சில நடுநிலயாளரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் .
--------------------------------------------------------------------------------------
கேள்வி ; உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
பதில் ; அன்றும் இன்றும் என்றும் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் தான் .
கேள்வி ; இருவரின் படங்களையும் பார்த்ததுண்டா ?
பதில் ; இருவரின் படங்களையும் பல முறை பார்த்துள்ளேன் .
கேள்வி ; உங்களுக்கு பிடித்த சிவாஜி கணேசன் படம் எது ? உங்களுக்கு பிடித்த எம்ஜிஆர் படம் எது
பதில் ; மன்னிக்கவும் . எனக்கு அவர்கள் நடித்த பெரும்பான்மையான படங்களும் பிடிக்கும்
கேள்வி ; ஏன் சிவாஜி கணேசன் உங்களுக்கு பிடிக்கும் ? ஏன் எம்ஜிஆரை உங்களுக்கு பிடிக்கும் ?
பதில் , சிவாஜி கணேசன்- குடும்பத்தின் மீது எந்தளவிற்கு பற்று இருக்கவேண்டும், குடும்பத்தில் பிரச்சனை வந்தால் எப்படி தீர்க்கவேண்டும், அதை அணுக வேண்டும் என்ற அறிவுரை, தாய் தந்தை, அண்ணன், தங்கை சுற்றாருடன் எப்படி பழகவேண்டும் என்ற அணுகுமுறை, எப்படி தேசபக்தியுடன் இருக்க வேண்டும் இப்படி பல சமுதாயத்தை உண்மையிலயே நல வழி நடத்தி செல்லும் அறிவுரைகளை கதாபாத்திரத்தின் வாயிலாக அவர் கூறிய விதம் வன்முறையற்ற அவரது அணுகுமுறை, சிறு குழந்தைகள் கூட கண்டுகளிக்கும் வண்ணம் கவர்ச்சியே இல்லாத அவருடைய பெருவாரியான படங்கள். இப்படி பல நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் தேவையான உண்மையான விஷயங்கள் அவர் படங்களில் இருப்பதால் பிடிக்கும். !
mgr - அவருடைய பாணியில் நடிப்பு - அறிவுரைகள், சண்டை காட்சிகள் - கொள்கைகள் - பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் .
கேள்வி ; ஒரு சிலர் சிவாஜியின் நடிப்பை மிகை நடிப்பு என்று நடிப்பை குறை கூறுகிறார்களே ?
பதில் ; சிவாஜியை விரும்பாதவர்கள் அவருடைய நடிப்பை மட்டுமா குறை கூறுகிறார்கள் .
அவருடைய திரை உலக வெற்றிகளை ஜீரணிக்க முடியாதவர்கள்
அவருடைய சாதனைகளை ஏற்று கொள்ளாதவர்கள் -
நடிப்புக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கூட, நடிப்பே என்னவென்று தெரியாதவர்கள் கூட பல்வேறு விமர்சனங்களை கூறி வருவது அவர்களுடைய கருத்து சுதந்திரம் .இதை ஜனநாயகம் என்றும் கூறலாம் !
கேள்வி ; இணய தளத்தில் கூட மறைமுகமாக சிவாஜியின் சாதனைகளை பற்றி பிரபல அறிவாளிகள் - உயர் பதவியில் இருப்பவர்கள் -அந்நிய மண்ணில் இருப்பவர்கள்
புனை பெயரில் வருபவர்கள் கூட உண்மையாக நடந்த சம்பவங்களை கூட ஆவணங்கள் பதிவு செய்த பிறகும் இருட்டடிப்பு, பொய் தகவல்கள் மூலம் மறைக்க, மறுக்க பார்கிறார்களே ?
பதில் என்ன சார் செய்வது ? அவர்களின் மன நிலை நன்கு புரிகிறது . எதோ ஒரு ஏமாற்றம் அவர்கள் உள்ளத்தில் புகைந்து கொண்டே இருக்கிறது . மேலும் சிவாஜியின் புகழ்
உலகமெங்கும் பரவி உள்ளதும் , ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள பற்றும் ஒற்றுமையும் கண்டு கலங்கி இருப்பார்கள் .இன்னும் சொல்லபோனால், மற்றவர்கள் தொட முடியாத சிகரங்களையும், நினைத்துப்பார்க்க முடியாத சரித்திரங்களையும், சஹாப்தங்களையும் படைத்தவர் சிவாஜி கணேசன். பல வெளிநாட்டு விருதுகளை வாங்கிய முதல் இந்திய நாட்டின் நடிகன் அல்லவா ! ஆகையால் மற்றவர்களுக்கு அந்த வயிற்ரேரிச்சலும் காழ்புணர்ச்சியும் இருக்கத்தானே செய்யும் ?
உலக சினிமா அரங்கில் ஆசியா, ஐரோப், அமெரிக்க மற்றும் ஆப்ரிக்க கண்டங்களின் சினிமா வர்த்தக குழுக்களால், அந்தந்த கண்டங்களின் அரசாங்கத்தால் விருதும், கௌரவமும் வழங்கப்பட்ட ஒரே இந்திய நடிகர் இன்று வரை சிவாஜி கணேசன் மட்டும் தன்.
கேள்வி ; பலரும் எம்ஜிஆரை புகழ்கிறார்களே ?
பதில் . நல்ல குணங்கள் இருந்தால் அதை புகழ்வதில் ஆச்சர்யமும் அதிசயமும் இல்லையே !
கேள்வி ; ரசிகனாக நீங்கள் சிவாஜி கணேசன், எம்ஜிஆரின் சாதனைகள பற்றி கூறுங்களேன் ?
பதில் ; சார் தென்னிந்திய பட வரலாற்றில் சந்திரலேகா படம் வசூலில் பிரளயம் செய்து இருந்தது .அதை முறியடித்து வெற்றி கண்ட படம் நாடோடிமன்னன் . பின்னர் 1977 வரை அவருடைய சாதனைகள் பற்றி நாடே அறியும் .
அதே போல சிவாஜி கணேசன் - முதல் படமான பராசக்தியே தமிழ் திரையுலகம் அதுவரை என்றுமே கண்டிராத சகாப்தம் படைத்தது ! புரட்சி என்ற வார்த்தையை முதல் முதலாக புரட்சிகரமான படம் என்று திரையுலகமே பேசதுடங்கியது என்றால் பாருங்களேன்.
நடிக்கவந்த 1952 முதல் 1983 வரை அதிக நூறு நாள் படங்கள், வெள்ளிவிழா படங்கள், அதிக வசூல் சாதனை படங்கள் கொடுத்தவர் இவர்தான். உதாரணமாக கருப்பு வெள்ளை படங்களில் அதிக வசூல், கலர் திரைப்படங்களில் பல முறை அதிக வசூல் சாதனை போன்றவை.
2) எந்த நடிகருக்கும் உலகில் உள்ள எந்த நாட்டிலும் மாநிலத்திலும் நிகழ்த்தாத சாதனை - இவரது இரு படங்கள் ஒரே நாளில் வெளிவந்து இரண்டு படங்களும் 100 நாட்களை கடந்து பிரமாண்ட வெற்றியும் வசூலும் பெற்றதுந்து - பல முறை இந்த சாதனையை நிகழ்த்தியவர் சிவாஜி ஒருவர் தான்.
3) அதுமட்டுமா நடிக்க வந்த 7 வருடதிலயே ஆசிய ஆப்ரிக்க நாட்டில் நடந்த உலக திரைப்பட விழாவில், ஆசியா ஆபிரிக்காவின் சிறந்த நடிகர் என்று முதன் முதலில் ஒரு இந்தியா நடிகர் பெற்றது சிவாஜி தான்.
4) 1960ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் john f kennedy அழைப்பின் பெயரில் இந்திய அமெரிக்க கலாசார விருந்தினராக அழைக்கப்பட்டது இன்றுவரை இவர் மட்டுமே.
5) பிறகு, அமெரிக்க நாட்டின் நயாக்ரா நகரின் ஒரு நாள் மேயர் பதவியும் கொடுத்து அந்த நகரின் மாதிரி "தங்க சாவி " கொடுத்து கௌரவிக்கபட்டார். இன்று வரை அதாவது 2013வரை அந்த பெருமையை பெற்றவர் அன்றைய பாரத பிரதமர் பண்டித ஜவர்ஹர்லால் நேஹ்ருவே தவிர வேறு ஒரு நடிகரும் இல்லை.
6) பின்பு, 1995ஆம் ஆண்டு இதே போல அமெரிக்க நாட்டில் உள்ள columbus நகரின் ஒரு நாள் கௌரவ மேயர் பதவி கொடுத்து அமெரிக்க தமிழ் சங்கத்தின் ப்ரெசிடென்ட் ஆகவும் கௌரவிக்கபட்டார்.
7) இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல washington post இவரை இந்தியாவின் clark gable என்று உலகிற்கு பறைசாற்றியது !
8) ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இவருடைய மூன்று வேதா நடிப்பில் வெளிவந்த "தெய்வ மகன்"
9) ஒரு நடிகனால் ஒன்பது வெவேறு கதைக்கு தேவையான கதாபாத்திரத்தை ஒன்பது விதமாக எல்லாவிதத்திலும் செய்யமுடியும் என்றும் நிரூபித்து காட்டிய ஒரே நடிகர் சிவாஜி கணேசன் தான். திரைப்படம் உங்களுக்கே தெரியும் நவராத்திரி.
7) இதுமட்டுமா...ஐரோப்பாவின் france நாட்டின் மிக உயர்ந்த விருதான மாவீரன் napolean அவர்கள் அறிமுகபடுத்திய செவாலியே விருதும் இவருடைய திறமைக்காக கொடுக்கப்பட்டது கௌரவிக்கப்பட்டது.
8) ஒரு நடிகனுக்கு பொற்சிலை தமிழகத்தில் சென்னை, மதுரை, பாண்டிச்சேரி ஆகிய நகரங்களில் முதல்வர்களாலும், மத்திய மந்திரிகளாலும் திறக்கப்பட்டது. இந்த பெருமை உலகில் வேறு எந்த நடிகனுக்கும் இல்லை.
9)திரை துறையில் தமிழகம், அண்டை மாநிலமான கேரளம், ஆந்திரம், கர்நாடகம், பிறகு மும்பை என்று அனைத்து மாநில தயாரிப்பாளர், நடிக நடிகைகளால் மிகவும் விரும்பப்பட்ட, மரியாதை கொடுக்கப்பட்ட ஒரே நடிகர் சிவாஜி கணேசன் தான். தயாரிபாலர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மிகுந்த லாபம் கொடுப்பது இவர் படங்கள். இன்னும் எவ்வளவோ பட்டியலிடலாம் இவரின் ஒவொரு விஷயமும் சாதனை மட்டும் அல்ல, சரித்திரம், சகாப்தம்.
(கேள்வி கேட்பவர் அதிசயித்து வாயடைத்து ஆச்சர்யத்தில் மூழ்கி போகிறார் )
கேள்வி மக்கள் திலகம் பற்றி ?
பதில் ; நடிகனும் நாடாளமுடியும் என்பதை ரோனல்ட் ரேகனை விட ஒரு படி மேலே சென்று நிரூபித்தவர். ஏழைகளுக்கு மக்களுக்கு நல்ல மனிதராகவும், முதலமைச்சராகவும் இருந்து சாதனை படைத்தவர். மேலும் உலகளவில் என்றும் விரும்பப்படும், மதிக்கப்படும் ஒரு சில மனிதர்களில் இவரும் முக்கியமான ஒருவர்.
கேள்வி கேட்பவர் நன்றி .அருமையான பதில்கள்
பதில் மீண்டும் சந்திப்போம் . வணக்கம் .
தினமலர் வாரமலர் 10-11-2013
நான் சுவாசிக்கும் சிவாஜி (6) - ஒய்.ஜி. மகேந்திரா
http://img.dinamalar.com/data/uploads/E_1383904822.jpeg
http://i812.photobucket.com/albums/z...psa082cd80.jpg
http://i812.photobucket.com/albums/z...psc7a99560.jpg
(கீழே தெளிவாக)
இசை அமைப்பாளர் எம்.எஸ்.வி.,யும், கண்ணதாசனும் பெரிய ஜீனியஸ்கள். சிவாஜி படங்களுக்கு பணிபுரியும் போது, இருவரும் சேர்ந்து தங்கள் திறமைகளை கொட்டி, பாட்டு அமைத்து, இதில், சிவாஜி எப்படி நடிக்கிறார், பிரத்யேகமாக என்னவெல்லாம் செய்கிறார் என்று பார்க்க, சவால் மாதிரி, சில பாட்டுக்களைக் கொடுப்பர்.
'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக் கொண்டே அழுகிறேன்...' என்ற பாடலில், ஒரே பிரேமில், சிரிப்பது, அழுவது, அழுது கொண்டே சிரிப்பது, பாடிக் கொண்டே நடந்து வருவது என, நான்கு வித உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார் சிவாஜி. இந்தக் காட்சியின் சிறப்பு குறித்து, இயக்குனர் பீம்சிங்கை பாராட்டுவதா, எம்.எஸ்.வி.,யை பாராட்டுவதா, டி.எம். சவுந்திரராஜனை பாராட்டுவதா, பொருள் நிறைந்த வார்த்தைகளை கொடுத்த கண்ணதாசனை பாராட்டுவதா என்று யோசிக்கும் போது, எனக்கு தோன்றுவது ஒரே பதில் தான். இந்த நால்வருக்கும், சிவாஜியின் நடிப்பின் மீது உள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இக்காட்சி.
நீதி அரசர் இஸ்மாயில், கம்பராமாயணம் குறித்து, ஆற்றிய சொற்பொழிவுகள் அனைவருக்கும் தெரியும். பாவ மன்னிப்பு படத்தில், முஸ்லிம் இளைஞராக நடித்த போது, சிவாஜிக்கு ஒரு சந்தேகம் வந்தது. அது, சுத்தமான தமிழில் பேச வேண்டுமா அல்லது முஸ்லிம் என்பதால், 'ஸ்லாங்' பேச வேண்டுமா என்பது. (எதற்கு என்பதை, என்னாத்துக்கு என்பது போல) இது குறித்து, நீதி அரசர் இஸ்மாயிலிடம் கேட்டார்.
அதற்கு அவர்,'முஸ்லிம் பாத்திரங்களில் நடிக்கும் போது, நல்ல தமிழிலேயே பேசலாம். 'ஸ்லாங்'க்கு மாற வேண்டாம். நீங்கள், நல்ல தமிழில் பேசுவது தான், எங்கள் சமுதாயத்திற்கு, நீங்கள் செய்கிற பெருமை...' என்று பதில் கூறியிருக்கிறார்.
சத்தியமாக சொல்கிறேன், பாவ மன்னிப்பு படத்தை பார்த்து விட்டு, தியேட்டரை விட்டு வெளியே வரும் போது, நம் முஸ்லிம் சகோதரர்கள் ஒவ்வொருவர் மீதும், நமக்கு மதிப்பும், பாசமும் கண்டிப்பாக வரும். மூன்று பெரிய சமயங்களை சேர்ந்தவர்களிடையே, நல்ல ஒரு பிணைப்பு வரும்.
நான் படங்களில் நடித்துக் கொண்டு மிகவும் பிசியாக இருந்த காலத்திலும் சரி, இன்றும் சரி, எனக்கு அதிகமான கடிதங்கள், இ-மெயில்கள் மின்னஞ்சல்கள் வருவது இஸ்லாமிய நண்பர்களிடமிருந்து தான். என் மனைவி சுதா, கீழக்கரையில், ஒரு திருமணத்திற்கு சென்றிருந்த போது, முஸ்லிம் அன்பர்கள், 'எங்க வீட்டு மாப்பிள்ளை வரவில்லையா?' என்று உரிமையாக கேட்டுள்ளனர். எங்கள் நாடக குழு, யு.ஏ.ஏ.,விற்கு, முதல் தலைவர், சங்கு மார்க் லுங்கி அதிபர் அப்துல் காதர் தான்.
தேசிய ஒருமைப்பாட்டின் மேல், மிகுந்த அக்கறை கொண்டவர் சிவாஜி. தேசப்பற்றை வெளிப்படுத்தும் பாத்திரம் என்றால், 'மாட்டேன்...' என்று சொல்ல மாட்டார். என் நெருங்கிய நண்பரும், பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான சேரனின் அனுபவத்தை, இங்கே நான் குறிப்பிட வேண்டும்.
சேரனின், தேசிய கீதம் படத்தில், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ள பெரியவர் பாத்திரத்தில், சிவாஜியை நடிக்க வைக்க, அவர் விரும்பினார். கதை கேட்பதற்கு, காலை, 7:00 மணிக்கு வீட்டிற்கு வர சொல்லியிருந்தார் சிவாஜி. சேரன் 6:45க்கு அங்கு சென்ற போது, சிவாஜி, 6:30 மணிக்கே தயாராகி, சேரனுக்காக காத்துக் கொண்டிருந்தார். கதை கேட்கும் போதும், அவருடைய பாத்திரத்தை விவரிக்கும் போதும், முகத்திலே அதற்கு தேவையான உணர்ச்சிகளை கொண்டு வந்ததைப் பார்த்த சேரன், வியந்து போனார். சேரனும், சிவாஜியும் பேசிக் கொண்டிருந்த போது, சிவாஜியின் மகளும், அவரது கணவரும் உள்ளே வந்தனர். 'நான் கதை கேட்டுக் கொண்டு இருக்கும் போது ஏன் தொந்தரவு செய்றீங்க...' என்று, அவர்களை அனுப்பி விட்டார் சிவாஜி. தன் தொழில் மீது, எவ்வளவு பக்தி இருந்தால், தன் மகள், மாப்பிள்ளையிடம் இப்படி சொல்ல முடியும்!
கிளைமாக்ஸ் பற்றி, சேரன் சொல்லிக் கொண்டிருந்த போது, 'இப்படி செய்தால் எப்படி இருக்கும்...' என்று கேட்டு, சிவாஜி நடித்தே காண்பித்தாராம். படத்தின் கதையும், அவர் பாத்திரமும் மிகவும் பிடித்துப் போய், சிவாஜி, 'ஓ.கே.,' சொல்லி விட்டார். ஆனால், 'படப்பிடிப்பு எல்லாம் அவுட்டோரில் தான்...' என்று சேரன் கூறினார். உடல்நிலை காரணமாக, டாக்டர்கள் ஆலோசனைப்படி, அவரால், இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. சிவாஜியை இயக்கும் வாய்ப்பு, தனக்கு அமையவில்லையே என்று, இன்றும் வருந்துகிறார் சேரன்.
எத்தனையோ தேசிய தலைவர்கள், சரித்திர நாயகர்களை தன் நடிப்பின் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தி யிருக்கிறார் சிவாஜி. பாட்டி மடியில் உட்கார்ந்து கேட்ட புராண, இதிகாச பாத்திரங்களை, என் போன்றோர், கண்கூடாக பார்த்தது, சிவாஜி மூலமாக தான். எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம், வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை பார்த்திருப்பதுடன், மேடை நாடகத்தையும் மிக அருகே இருந்து ரசித்திருப்பது தான். சிவாஜி, மேடையில் பேசிய, தீக்கனல் தெறிக்கும் வசனத்தின் சூட்டை, நான் உணர்ந்திருக்கிறேன். நாடகத்தோடு அவர் நிறுத்தியிருக்கலாம். ஆனால், உலகமெங்கும் உள்ள தமிழர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் எனும் வீரனை பற்றி, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற, உயர்ந்த எண்ணத்தோடு படத்திலும் நடித்தார். நாடகத்திலும், திரைப்படத்திலும் வரும் ஒரு அற்புதமான காட்சியை பற்றி சொல்ல விரும்புகிறேன். கட்டபொம்மனிடம், ஒற்றன் வந்து, கும்பினிக்காரர்கள் சொன்ன விஷயங்களை சொல்வான். இவர், ஒரே வார்த்தையில், 'அதாவது' என்று மட்டும் சொல்வார். அந்த ஒரே சொல்லை, அடுத்தடுத்து, ஏழு முறை பயன்படுத்தும்போது, ஒவ்வொரு முறையும், மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவார். தியேட்டரில் கை தட்டல், விண்ணை முட்டும்.
தர்ம காரியத்திற்காக நிதி திரட்ட, என் தந்தை ஓய்.ஜி.பி., ஒரு நட்சத்திர கலை விழா நடத்தினார். அந்த நிகழ்ச்சியின் கடைசி நிகழ்ச்சியாக, கட்டபொம்மன் நாடகத்தின், கிளைமாக்ஸ் காட்சியை, நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார் சிவாஜி. இசை, நடன நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்திலிருந்த சிவாஜி, என் தந்தை, ஒய்.ஜி.பி.,யின், தோள் மீது கை போட்டு, ரிலாக்சாக சிகரெட் பிடித்தபடி இருந்தார். வீர பாண்டிய கட்டபொம்மன் சிகரெட் பிடித்துக் கொண்டு, காஷுவலாக இருப்பதை பார்க்க, சுவாரசியமாக இருந்தது. மணி 9:15 இருக்கும். அப்பாவை ஒதுக்கி விட்டு, மேக்-அப் அறைக்கு வெளியே, சுவர் அருகே, தயாராக நின்று கொண்டார். நான்கு சேவகர்கள், அவரை சங்கிலியால் பிணைத்து இழுத்துக் கொண்டிருந்தனர். மணி 9:30. கட்ட பொம்மனாகவே மாறிய சிவாஜி. உடல் முழுவதையும் முறுக்கி, நான்கு சேவகர்களையும் தடுமாறச் செய்து, அண்ணாமலை மன்றத்தின் மேடைக்குள், சுவற்றை காலால் உதைத்து, புயலென நுழைந்தார். அவர் மேடைக்கு வந்ததும், பயங்கர கைத்தட்டல், ஆரவாரம். கடைசி கோர்ட் சீனில், தூள் கிளப்பினார். அந்தக் காட்சி முடிந்ததும், 'ரொம்ப சிரமப்பட்டு நடிச்சிருக்கீங் களே... இவ்வளவு, 'ஸ்ட்ரெயின்' செய்து நடிக்க வேண்டுமா...' என்று, சிவாஜியிடம் கேட்டார் என் தந்தை.
'உனக்கு தெரியாதது இல்ல ஒய்.ஜி.பி., முழு நாடகத்தை, இரண்டரை மணி நேரம் போடும் போது, ஆடியன்ஸ், ஆரம்பத்திலிருந்து, நம்ம கூட இருப்பாங்க. அவங்களுக்கும் மெதுவாக, அந்த உணர்வு வந்து விடும். இங்கே அப்படி இல்லை. பாட்டு, டான்ஸ் என்று பல நிகழ்ச்சிகள் பார்க்கிறாங்க. வேற, 'மூட்ல' இருப்பாங்க. கட்டபொம்மன் துாக்கில் இடப்படும் சூழ்நிலைக்கு, அவங்களை கொண்டு வர வேண்டும். அதற்காக, அதிகமாக வீராவேசம் காட்டணும், சத்தமா வசனம் பேசணும். அப்போ தான், ஓரிரு நிமிடங்களில், இந்த காட்சியோடு ஒன்றிப் போவாங்க; அதனால் தான் இந்த, 'எக்ஸ்ட்ரா ஸ்ட்ரெயின்'. முப்பது நிமிடத்துக்குள் மொத்த டிராமாவின், 'எபெக்ட்'டையும் தரணும்...' என்று விளக்கினார். நடிப்புக்காக தன்னை அர்ப்பணித்தவர்களால் மட்டுமே, இப்படி எல்லாம் சிந்திக்க முடியும்.
மும்பை நகரில் உள்ள சத்ரபதி சிவாஜியின் சிலை, சிவாஜியின் முக சாயலில் தான் அமைக்கப்பட்டது என்பது, நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய விஷயம். பிரபல பாடகி, லதா மங்கேஷ்கர் சிவாஜியின் நெருங்கிய தோழி; உடன்பிறவா சகோதரி. சிவாஜியிடமிருந்து அவரது புகைப் படத்தை பெற்று, அதை மும்பை நகர நிர்வாகிகளிடம் தந்தார் லதா. அந்த புகைப்படத்தின் அடிப்படையில், சிவாஜியின் முகத்தையும், உருவத்தையும் கொண்டதாக, அந்த சிலை உருவாக்கப்பட்டது.
- தொடரும்.
எஸ்.ரஜத்
வாசுதேவன் சார்
நான் சுவாசிக்கும் சிவாஜி பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.
தங்களுடைய ஒவ்வொரு பதிவும் விலைமதிக்கமுடியாதவை. காரணம், ஒவ்வொரு விஷயத்தையும், தாங்கள் எந்தளவிற்கு ரசித்திருந்தால், அனுபவித்திருந்தால் இப்படி ஒரு எழுத்தோட்டம் வரும் !
பிரமாதம் போங்கள்! தங்களுடைய தமிழ் நடை ஒரு தனி ராஜ நடை !
ஒவ்வொரு பதிவிற்கும் குறைந்தது சுமார் 6 மணிநேரமாவது எடுத்திருக்கும் அல்லவா ?
நடிகர் திலகத்தின் ஆசிகள் உங்களுக்கு எப்போதும் உண்டு சார் ! ஆத்மார்த்தமாக அந்த தெய்வத்தை கண்ணை மூடி ஒரு நிமிடம் நினைத்தால் போதும் ...தங்களுக்கு பிரித்யக்ஷம் அவர் !
அருமையான பதிவுகள் சார் ! ஆடைகளுகேன்றே பிறந்த ஆணழகர் - எக்காலத்தினரும் தெரிந்துகொண்டு உணர்ந்துகொள்ளவேண்டிய, புரிந்துகொள்ளவேண்டிய ஒரு தொடர்.
4000 வது போஸ்ட் காணும் எங்கள் திரியின் "விளயாட்டுபிள்ளைக்கு" வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சார் !
எத்தனை சத்தியமான வார்த்தைகள் காட்சியின் முடிவில்...நடிகர் திலகத்தின் வாயிலாக !
https://www.youtube.com/watch?v=hYynckRbsl8