-
8th November 2013, 08:37 PM
#11
Senior Member
Senior Hubber
நான் என்ன செய்தேன்..ம்ம் மக்களின், மன்றமைய வாசகர்களின் போறாத காலம் எனச் சொல்லலாம்
எனது எழுதும் ஆசையை அவிழ்த்து விட்டேன்..
என் கற்பனைக் கன்றுக்குட்டி கோபத்தில் கட்டவிழ்த்து நகராட்சித் தண்ணீர் லாரிகள் போலத் தாறுமாறாய் ஓடியது..விழுந்தது ஒரு பதிவு..
எனக்கு ரோஜா பிடிக்கும்
என் மனைவிக்கு முல்லை
என் நண்பனுக்கு மரிக்கொழுந்து..
அவரவர் ரசனைக்கேற்ப பூக்களைப் பிடிப்பது
தப்பில்லை..
அதற்காக மரத்தையே பூக்காதே என்றால்
எப்படி..
அர்ச்சிக்கப் படும் பூக்களில்
சிலசமயம்
முட்களும் கலந்திருக்கும்
அதற்காக ஆண்டவன் கவலைப் படுவதில்லை..
உதயா கீப் இட் அப் என எழுதிப் போஸ்ட் செய்யப் போகையில் ஒரு குழப்பம்..என் பெயர் கண்ணன் ரா.. அப்ப்படியே நிறைய பேர் இருக்கிறார்கள்
புனைபெயரில் அழகான பெண்கள் பெயர்களை பல எழுத்தாளர்கள் வைத்துக் கொண்டு விட்டார்கள்..எனில் டிஃபரன்ஷியேட்ட் செய்வதற்காக கே.ஆர்.ஐயங்கார்
என எழுதிப் போஸ்ட் செய்து விட்டேன்..(சின்னக் கண்ணன் என்பது பிற்பாடு வைத்துக் கொண்டது).. சில நிமிடங்களிலேயே எனது மெய்லிற்கு
உதயாவிடமிருந்து பதில். நன்றி நவின்று..
ஆமாம் இதை நான் எதற்கு இங்கு சொல்கிறேன்..
-
8th November 2013 08:37 PM
# ADS
Circuit advertisement
Bookmarks