அதுல என்ன சந்தேகம் ? :)
Printable View
Prabhu adaiyaalamE theriyala
I happened to watch Hey Ram more intently yesterday. What a purposeful art piece!(Page a minute -perfect execution.)Imagery sur-realisic scenes have been picturised to perfection.Raja has given a perfect feel in songs and RR. People somehow preferred the shallowest ,shoddy movies like Bombay and let Hey Ram down. Well done Kamal.Hats off to the sishyan (elder son?)of NT.
He was bit unlucky .
வியட்நாம் வீடு- பகுதி- 6
இந்த படத்துக்கு NT க்கு ஒத்திகை தேவையே இருந்திருக்காது. (பல முறை மேடையில் இதே ரோல்) .ஆனால் பத்மினி பிரமாதமாக காம்ப்ளிமென்ட் பண்ணி ,நடிப்புக்கு சரியான ஜோடி என்பதை உணர்த்தி விடுவார். (ஆனால் முரளி favourite ஜி.சகுந்தலாவின் மேடை நடிப்பு இதை விட பிரமாதம் என்போர் உண்டு). முக்கியமாய் தன அம்மாவிடம் ,தன மகன்களை குறை சொல்லிய பிரின்சிபாலை பொரிந்து கட்டும் இடம்.ஒரு தாயின் மனநிலையை அழகாக பிரதிபலிப்பார். எல்லோரும் நன்கு பண்ணியிருப்பார்கள்.(தங்கவேலு,நாகேஷ் உறுத்தல்.ஆனால் வியாபார தேவை போலும்).
மாதவன் ஒரு நல்ல creative இயக்குனர் என்று சொல்ல முடியா விட்டாலும், ஒரு நல்ல executive இயக்குனர். எல்லா genre படத்தையும் நன்கு பண்ணியுள்ளார்.(குறிப்பிட வியட்நாம் வீடு,ஞான ஒளி,பட்டிக்காடா பட்டணமா,தங்க பதக்கம்,பாட்டும் பரதமும், ராஜபார்ட் ரங்கதுரை).ஸ்ரீதர் உதவியாளராய் இருந்தவர். தேவராஜ்-மோகன் போன்ற நல்ல உதவியாளர்களை கொண்டவர்.
கே.வீ.மகாதேவன் இந்த படத்திற்கு பலம். எந்த படம் என்றாலும் நன்றாக பண்ண கூடியவர். (விஸ்வநாதன் சார் ஆள் பார்த்து இசையமைக்கும் அரசியல்வாதி) .சில சமயம் தோன்றும்.நம் படங்களில் கே.வீ.எம், டி.கே.ராமமூர்த்தி போன்றவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்திருக்கலாமோ?ஏனென்றால் 65 இல் இருந்து 72 வரை, வசூலில் முதலிடம் பிடித்த அத்தனை தமிழ் படங்களின் இசையமைப்பாளர் கே.வீ.எம் தான்.(68 , 71 நீங்கலாக)
இந்த மாதிரி பாவனைகள் அற்ற,நேரடியான, நேர்மையான கதை சொல்லும் படங்களை பார்ப்பதில் உள்ள சுவையே தனி. ஆனால் அதற்கு regress ஆகும் கலை மனம் வேண்டும் .பழைய ஓவியங்கள்,இலக்கியங்கள், கதைகள்,சரித்திரம் எல்லாம் ரசிக்க இந்த வகை தயாரிப்பு ரசிகனுக்கோ,வாசகனுக்கோ மிக அவசியம்.நாம் நம் இளைய தலைமுறையை சரியான aesthetic sense இல் வளர்ப்பதே இல்லை.
வியட்நாம் வீடு- நடிப்பில் ஒரு வடக்கு நோக்கி.வழிகாட்டி.(கமல் பாணியில் மலையாளத்தில்) .எந்த கமர்சியல் compromise இன்றி மாபெரும் வெற்றி பெற்ற NT படங்களில் ஒன்று.(அவர் ஸ்டார் ஆக இருந்தும் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.)
(முற்றும்)
திரு. கோபால்,
தாங்கள் ஆய்வு செய்த நடிகர் திலகத்தின் "வியட்நாம் வீடு" மிக நேர்த்தியாகவும், சுவையாகவும் இருந்தது.
இந்தப் படமும், அதில், நடிகர் திலகம் ஏற்று, செதுக்கிய ப்ரெஸ்டிஜ் பத்மநாபய்யர் பாத்திரமும், அவர் தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருந்த பல சோதனை முயற்சிகளில் மிக முக்கியமானது எனலாம். சோதனை முயற்சி என்பது அவர் துவக்க காலத்திலிருந்தே செய்து கொண்டே வந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
பொதுவாக, இந்தியாவில் வெளி வந்து கொண்டிருந்த அனைத்து முக்கியமான மொழிப் படங்களும் (மலையாளம், வங்காளம் நீங்கலாக), வியாபார நோக்கத்தை நோக்கி அறுபதுகளின் இறுதியில் சாய ஆரம்பித்தது. அது வரை, பொழுது போக்கு மட்டுமே சினிமா என்றில்லாமல், தரமான படங்களையும் கொடுத்துக் கொண்டே வந்த நிறுவனங்களும், கலைஞர்களும், வியாபார சமரசம் செய்து கொள்வது தவிர்க்க முடியாமல் போன சூழ்நிலையில், நடிகர் திலகமும் அந்த பாட்டையில், "தங்கை" (1967) படத்திலிருந்து பயணம் செய்யத் துவங்கிய நேரம். இருப்பினும், நடிகர் திலகம் மட்டுமே, தொடர்ந்து, இரண்டு குதிரைகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்து கொண்டே இருந்தார். இந்த வகையில், என்னைப் பொறுத்த வரை, அறுபதுகளின் பிற்பாதியில், அவர் நிகழ்த்திய சாதனைகளே (சோதனை முயற்சிகளும் தான்!) அளப்பரியது! பெரிய ரசிகர் கூட்டத்தையும் பெருக்கிக் கொண்டே போய், அதே நேரத்தில், இளம் வயதினரையும் தரமான படைப்புகளை வரவேற்கக் கூடிய மன நிலைக்கு பக்குவப் படுத்திக் கொண்டே வந்தார்.
இந்த வகையில், தில்லானா மோகனாம்பாள் சிக்கல் சண்முக சுந்தரம் பாத்திரமும், வியட்நாம் வீடு ப்ரெஸ்டிஜ் பத்மநாபய்யர் பாத்திரமும், தலையாய இடம் பெறுகின்றன. தில்லானாவைப் பற்றி ஏற்கனவே திரு. முரளி அவர்களின் நீண்ட ஆய்விற்கு பதில் அளிக்கும் வண்ணம் எழுதி இருக்கிறேன் - அந்த முக ஒப்பனை, ஒரு பாடல் கூடக் கிடையாது. வியட்நாம் வீட்டிலோ, முற்றிலும் வயதான தோற்றம் (எல்லோரும் விரும்பிய படி ரொம்பவே ஸ்லிம்மாக மாறி, இன்னும் அழகாக மாறியிருந்த நேரம்) மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டுமே கவரக்கூடிய அபாயம்!
பிற்காலத்தில் வந்த நடுத்தரக் குடும்பத்தைப் பற்றிய அனைத்துப் படங்களுக்கும் இதுவே முன்னோடியானது. இந்தப் படத்தில் தான், எனக்குத் தெரிந்து, ஒரு நடுத்தரக் குடும்பத்தில், வயதான தந்தை மற்றும் தாய் பிள்ளைகளால் உதாசீனம் செய்யப்படுவது, படம் நெடுகிலும், விஸ்தாரமாகக் கையாளப் பட்டது. அந்த வகையில், இன்னுமொரு முன்னோடி முயற்சியை, நடிக்க வந்து பதினெட்டு வருடங்கள் கழித்து, மறுபடியும், நடிகர் திலகம் செய்தார். புதிதாக எதையேனும் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற அந்த தாகம் கடைசி வரை இருந்து கொண்டே இருந்ததில், அவருக்கு இணை அவர்தான்!
நடிக்க வந்து பதினைந்து வருடங்கள் கழிந்து, திரையில் தோன்றினாலே, அது சிவாஜி தான் என்று தீர்மானித்து, பாத்திரத்தை விட நடிகனை மட்டுமே திரையில் மக்கள் பார்க்கின்ற ஒரு சூழ்நிலையில், சிவாஜி என்னும் அந்த நட்சத்திரத்தை மீறி, அந்தப் பாத்திரங்களை மட்டும் ஒரு இடம் கூட விடாமல் பிரதிபலிக்க முடிந்ததால், இந்த இரண்டு கதாபாத்திரங்கள் சிரஞ்சீவித் தன்மை பெற்று விட்டன. இந்த வகையில், இன்னும் எத்தனை வருடங்கள் ஓடினாலும், நடிகர் திலகத்தை விஞ்சுவதற்கு அவரே இன்னொரு பிறவி எடுத்து வந்தாலும் முடியாது!
நன்றியுடன்,
இரா. பார்த்தசாரதி
ஜோ,
திரு.ஜாக்கி அவர்களின் தெய்வமகன் பற்றிய பதிவை இங்கே பதிந்ததற்கு மனமார்ந்த நன்றி. அதுவும் அந்த அற்பதமான காட்சியை அப்படியே கண் முன் கொண்டு நிறுத்தியதற்கு அவருக்கு நன்றி கூறவும்.
அன்புடன்
NTs bodily appearances were varying from time to time. In Palum Pazhamum for instance his salt and pepper hairstyle with a chubby body made the terrific impact in the minds of the viewers on the characterization of a devoted doctor. In no way that appearance was taken as a negative point and the movie's mega success with the ever green song sequences are still enjoyable. Whenever I use to hear the song Naan Pesa Ninaippadellam.... i keep off all my works and run to the TV or radio to enjoy reminiscence! NT is an all time great unlike the short span of the hollywood super actors like Brando or Heston or Ronald Coleman.