Page 96 of 401 FirstFirst ... 46869495969798106146196 ... LastLast
Results 951 to 960 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #951
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வியட்நாம் வீடு- பகுதி-3

    மற்ற எல்லாப்படங்களிலும் நடிகர்திலகம் நடித்த காட்சிகளில் ஹை லைட் என்று சொல்லும் காட்சிகள் இருக்கும். வியட் நாம் வீட்டில் அத்தனை காட்சிகளும் highlight . மேக்-அப் மிக சிறப்பாக இருக்கும். புருவம்,காது மயிர் உட்பட அத்தனை தத்ரூபம்.வியட்நாம் வீடு சுந்தரம் என்ற பிராமண குலத்தை சேர்ந்த ஏழை இளைஜெர் மிக சிறப்பாக வசனத்தை (அன்றாடம் பிராமணர்கள் வீட்டில் உபயோகிக்கும் பேச்சுக்களையே ) கொடுத்திருப்பார்.

    சிவாஜியின் பிராமண பேச்சு அவ்வளவு அழகாக இருக்கும். அந்த modulations சாத்திரி என்று மனைவியை அழைக்கும் தொனியில் இருந்து எல்லாமே அருமை.(கண்ணதாசன் பாலக்காட்டு பாடலில் கோட்டை விட்டிருப்பார். இது பாலக்காடு பிராமணர் பேச்சு வழக்கு அல்ல.மனைவியும் புதியவள் அல்ல)ஆனால் பாடலின் அழகு கருதி (Puppet பாணி அற்புத நடன அசைவுகள்) மன்னித்து விடலாம்.

    இந்த படத்தில், பின்னால் வரும் காட்சிகளை விட ஆரம்ப காட்சிகள் மிக நன்றாக இருக்கும். நகைச்சுவை மிக இயல்பாக கதையுடன் ,பேச்சு வழக்கை ஒட்டி இருக்கும். ஆரம்ப கிரக பிரவேச காட்சி,ஆபீஸ் புறப்பட தயார் ஆகும் காட்சி, வீட்டுக்கு வந்த பெண்ணின் நண்பிகளை கலாய்க்கும் காட்சி, ஆபிசில் அக்கௌன்டன்ட் நந்த கோபாலை கண்டிக்கும் காட்சி ,வீட்டின் அன்றாட காட்சிகள்,முள் குத்தி கொண்டு வீடு வரும் காட்சி,சின்ன மகன் முரளியின் மேல் கம்ப்ளைன்ட் வந்ததும் படிப்பை நிறுத்தி விட்டு தொழிலாளியை வேலைக்கு அனுப்பும் காட்சி,Retire ஆகும் காட்சி(லாஜிக் உதைத்தாலும்),மனைவியுடன் குடும்ப நிலை விவாதிக்கும் காட்சி, கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டில் மதிப்பிழக்கும் காட்சிகள், மகன்களை இயலாமை வாட்ட கண்டிக்கும் காட்சிகள், retire ஆனா பிறகு ஆபிஸ் வரும் காட்சி,அறுவை சிகிச்சைக்கும் புறப்படும் காட்சி எல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டிய அற்புதம். பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை பார்த்திராத ஒரு சிவாஜி.(உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே)

    ஒரு பிராமண குலத்து உயர் குடும்ப(கஷ்டப்பட்டு முன்னேறிய) பாத்திரத்தை அவ்வளவு perfection உடன் மற்ற பிராமண நடிகர்கள் கூட செய்ததில்லை. இதில் அவர் easy chair ,ஊஞ்சல் ஆகியவற்றை மிக கவனமாய் உபயோகித்து மூட், pasture , கொண்டு வருவார்.

    (தொடரும்)
    Last edited by Gopal.s; 2nd October 2012 at 03:17 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #952
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வியட்நாம் வீடு- பகுதி-4

    இந்த படத்தில் inflexible preachy disciplinarian & ethical careerist ஆக வரும் பத்மநாபன் சாருக்கு பால்ய அரட்டை நண்பரகள் யாரும் இல்லாதது by design or default எப்படி இருந்த போதிலும் அருமையான விஷயம். அவருக்கு எல்லோரும் எதிர் நிலைதான். இரண்டே பேர் அவரிடம் நேர்மையாய் உள்ளவர்கள் அத்தை(நடு நிலை) அவரது சம்பந்தி justice ரங்கநாதன்(முழுக்க உடன்பாடு ஆனால் தள்ளி நின்று) . Open rebellions அவர் அக்கௌன்டன்ட் நந்த கோபால் ,அவரது மகன் முரளி,மருமகள் மாலா. தொழில் முறை நண்பர்கன் டாக்டர் ,சாஸ்திரிகள். மற்றபடி அவருடன் உடன் படாதவர்கள் மனைவி சாவித்திரி,மகன் ஸ்ரீதர்,மகள் அகிலா,ஆபிஸ் மேல் அதிகாரிகள், கீழ பணிபுரிவோர், அந்த தெரு ஆட்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் எதிர் வினை புரிவார்கள்.வேலையாள் முருகன் உட்பட.

    இதில் முரளிக்கு காந்தியின் மகன் நிலைதான். சாவித்திரி மகன்களுக்கு சிறிது இடம் கொடுக்கிறாளா அல்லது மௌன எதிர் வினையா?மாலா தந்தை,மாமா இவர்களை சேர்த்து எதிரியாக பாவிக்கிறாள் என்பது பூடகம்.மகள் அகிலாவோ அளவு மீறிய கட்டுப்பாட்டுக்கு எதிர் வினை புரிகிறாள்.(வலுவாகவே) நந்தகோபால் நல்ல திறமை சாலி.(அல்லது பத்மநாபன் சிபாரிசு செய்வாரா).ஆனால் பத்மநாபனின் british cum brahmin work culture உடன் உடன் பட மறுத்ததால் ,கீழ் நிலை ஊழியர்கள் எதிரில் அவமதிக்க படுகிறான்.அவன் எதிர் வினை மிக சரியானது. மேலதிகாரிகளுக்கும் காலத்தோடு மாறாத அவரை extend பண்ணாமல் retire பண்ணுவது ஒரு எதிர்வினை.

    காலத்தோட ஓட்ட ஒழுகாத பத்மநாபன் செயல். மேல் நிலை அடைந்தும் தன் பிடிவாத socio -cultural குணங்களை மட்டுமல்ல ,ஒரு விவசாய குடும்ப மனநிலையில் கூட்டு குடும்பம் பேணி, தனது inefficient finance planning (ஏதாவது எனக்கு தெரியாமல் சேத்து கீத்து வச்சுரிக்கியா-மனைவியிடம்) விளைத்த பிரச்சினையை ,ஒழுங்காக வாழக்கை நடத்தி வரும் மூத்த மகன் மேல் சுமத்தும் சராசரியாகவே உள்ளார்.சவடால் நிறைந்த prestige ,கவைக்குதவாமல் போனதில் ஆச்சர்யம் என்ன?

    Retirement scene குறையாக சொல்வோரிடத்தில், பத்மநாபனின் வேலையிலோ,நேர்மையிலோ,விசுவாசத்திலோ குறை காண இயலாத அவர் மேலதிகாரம்,அவரை காலத்துக்கு ஒவ்வாதவர் என்ற காரணத்தால் ,சிறிய சலுகையும் காட்டாமல் அனுப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் பார்த்தால் அந்த காட்சியில் புது சுவை தெரியும்.அதனால் இந்த படம் protogonist கோணத்திலேயே பயணித்தாலும் பூடகமாய் புரிந்து கொள்ள நிறைய உண்டு.. ஒரு நேர்மையான திரை கதையமைப்பே அதுதானே?அதுவும் real life characters வைத்து பின்ன பட்ட இந்த படத்தில்?மற்றோருக்கு spacing கொடுக்காமல் உறவிலோ , அதிகாரத்திலோ ,imposing ஆக உள்ளோர் ,இந்த அடியை ,தான் பலவீன படும் பொது ,பிறரை சார்ந்து உள்ள போது பட்டுத்தானே ஆக வேண்டும்?

    (தொடரும்)
    Last edited by Gopal.s; 2nd October 2012 at 03:19 PM.

  4. #953
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    தமிழ்நாட்டு கலையுலகின் திலகமே ! நீ பிறந்தாய் ..நாங்கள் ரசிகனாய் பிறந்தோம்.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  5. #954
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வருடம் போனால் என்ன; மெல்ல
    வயதும் ஆனால் என்ன;
    உருவத்தை பாரடி மெல்ல;
    முகம் இருபதை தாண்டியதல்ல


    இது நடிகர் திலகத்தைப் பார்த்து மற்றவர்கள் பாடுவதாக அமைந்த பாடல் வரிகள்.

    இதையே எங்களைப் போன்ற ரசிகர்களுக்கு பொருத்திப் பார்க்கும் போது

    வருடம் போய்க் கொண்டிருக்கிறது;மெல்ல
    வயதும் ஆகிக் கொண்டிருக்கிறது;
    உருவமும் மாறிக் கொண்டிருக்கிறது! ஆனால்
    உள்ளமோ என்றும் அவர் புகழ் பாடிக் கொண்டிருக்கிறது.

    நேற்றாய் இன்றாய் என்றுமாய் என்றென்றுமாய்

    உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகத்திற்கு நாங்கள் சூட்டும் பாமாலை அவர் பாடல் வரிகள்தான்!

    நீயே உனக்கு என்றும் நிகரானவன்!


    மற்றொரு பாடல் வரி [சற்றே மாறுதலுக்கு உட்படுத்தி]

    காலத்தில் அழியாத காவியங்கள் தர வந்த

    மாபெரும் கலை மன்னனே உனக்கு

    நானொரு மொழி சொல்லுவேன்

    பல்லக்கு பரிவாரம் படையுடன் முடியும் உன்

    சொல்லுக்கு விலையாகுமே மகனே உன்

    தோளுக்குள் புவி ஆளுமே


    வாழ்வாங்கு வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்!

    அன்புடன்

  6. #955
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    30,480
    Post Thanks / Like


    You would have been 85 today!
    Happy Cinema Day!
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  7. #956
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கள் நடிப்பு தெய்வத்தின் அவதார நாள்- எங்கள் திருவிழா இன்றுதான்.

    கணினி வருமுன்னே கடவுச்சொல் எங்களுக்கு உண்டு. சிவாஜி என்ற பெயர் மட்டுமே உயர் நட்புக்கான கடவு சொல். இன்று வரை மாறா கடவு சொல்.

    அவ்வப்பொழுது காங்கிரஸ் மேடைகளில் ,முக்கிய தலைவர்கள் வருமுன் முழங்கியதுண்டு மாணவர் அணி சார்பில்.பெருந்தலைவரிடம் என்னை கொண்டு சேர்த்தவர்கள் பெரியாரும்(பச்சை தமிழன்),நடிகர் திலகமும் ஆவர். தலைவர்(nt) பிரசார கூட்டத்துக்கு வருகிறார் என்றதும் ,முட்டி மோதி ,குட்டி தலைவர்களின் தயவால் முக்கிய இடத்தில் நின்று தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம்.ஒரு 8 நண்பர்கள். என் இதயத்தை இந்த மாபெரும்நடிகனிடம் ஆறு வயதில் தொலைத்து விட்டேன். என் இதயத்தை நானே காண ஆவலுடன் நின்றேன். ஆறு என்று சொல்லி ஆறு மணிக்கே வந்த அதிசய தலைவன்.

    பாய்ந்து பாய்ந்து நாங்கள் கேட்டு மகிழ்ந்த சிம்மக்குரல் ,அன்று என் செவியை எட்டாததற்கு நீயே பொறுப்பு.உன்னை தரிசித்த பிரமிப்பு.நீதான் எத்தனை ஆண்மை நிறை திராவிட அழகன்?

    பிறகு நீ ஒரு விருந்தினர் மாளிகையில் சிறு ஓய்வுக்கு வருகிறாய் என்றறிந்து உன்னை நெருக்கமாய் நேரின் காண ஓடி வந்தோம். வந்தாய் நீ. கலைந்த தலையோடு.வேர்வை படிந்த உடையோடு. ஓய்வெடுத்து ,எங்களை காண்பாய் என்று எண்ணியதற்கு மாறாய்,நேராய் எங்களிடம் வந்தாய். நீங்கெல்லாம் படிக்கிற பசங்க. ஏம்பா நேரத்தை வீண் பண்றீங்க? போங்க. எனைத்தான் சினிமாவில் பார்க்கிறீர்களே? என்று என்னை பார்த்து உன்னை பார்த்தால் பார்ப்பன பையன் மாதிரி இருக்கியே? நீங்கள்ளான் கூடவா? போங்க.போங்க. என்றார்.

    அந்த ஞான தந்தையின் ஆசியால் இன்று நான் நன்கு படித்து முன்னேறியுள்ளேன். இதுதான் இந்தியாவின் தேசிய தலைமை பண்பாக இருந்திருக்க வேண்டுமோ?
    Last edited by Gopal.s; 2nd October 2012 at 03:15 PM.

  8. #957
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அரை நூற்றாண்டுக்கும் மேலாக, தமிழ்க் கலாசாரத்தின் ஏகப் பிரதிநிதியாக இருந்த தமிழ்க் கடவுளே,

    உன்னை நினைக்காமல் நினைவு தெரிந்த நாளில் இருந்து, ஒரு நாளும் சென்றதில்லை; இனி செல்லப் போவதுமில்லை!
    உன்னை மறந்தால் தானே நினைப்பதற்கு!!

    இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று தத்துவ ரீதியாய்ச் சொல்வார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் பிறந்து கொண்டே இருக்கிறாய் ஒவ்வொரு புதிய ரசிகனின் மனதில். தமிழும், கலையும், உலகும் உள்ளவரை, ஒவ்வோர் நாளும், நீ புதிதாய்ப் பிறந்து கொண்டே இருப்பாய். புதிது புதியதாய் ரசிகனும் பிறந்து கொண்டே இருப்பார்கள்.

    இருப்பினும், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - யாருக்கு? தமிழுக்கு, கலைக்கு, அந்தக் கலைக்கடவுளுக்கு!

    என்றும் உன் நினைவுடன்,

    இரா. பார்த்தசாரதி

  9. #958
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. #959
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வியட்நாம் வீடு- பகுதி-5

    சிவாஜியின் நடிப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் ஒரு அந்நிய கலாசார,சமூக ,பேச்சு வழக்கை கொண்டு இயங்கும். முற்பகுதி ( ஒய்வு பெரும் வரை) அவர் உச்சத்தில் இருந்து மற்றோருடன் ஆதிக்கம் செலுத்துவார். ஒரு டாமினன்ட்,assertive ,எள்ளலுடன் எல்லாவற்றையும் அணுகுவார். என்னை பொறுத்த வரை இந்த பகுதிதான் மிக மிக சிறந்தது. இந்த பகுதியில் அவர் பின்னால் பலவீனப்படப்போகும் போது இருக்க போகும் மனநிலையை உணர்த்துவது கண்ணாடி பீஸ் காலை கிழித்து அவர் பண்ணும் அதகளம். இரண்டாவது பகுதியில், எதிர்பாராத retirement அதிர்ச்சியில்,எப்படியாவது குடும்பத்தினர் உதவியுடன் சமாளிக்கலாம் அல்லது தன காலில் நிற்கலாம் என்று நம்பும் போது ,கண்ணெதிரேயே அவருடைய நிலை படி படியாக தாழும் நிலை. நிலைமையுடன் சமரசம் செய்ய முயன்று ,தோற்று ,புலம்பி ,சோர்வார். மூன்றாவது பகுதியில் சிறிது பொங்கி, நிலைமை படி படியாக சீரமையும் பகுதியில் ,வெளிப் படும் இயலாமை கோபம்,சாபம் கொடுக்கும் பாணி அறிவுரைகள் என்று போகும்.

    வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனங்கள் சிவாஜிக்கு அப்படி ஒரு தீனி போடும்.non -repetitive situation based punchlines பிரமாதமாக இருக்கும்.(சற்றே பாலச்சந்தர் பாணி!!??) பேய்க்கு வாழ்க்கை பட்டால் என்று சொல்லும் போது இவ்வளவு நாள் ஜாடை மாடையாய் புள்ளெல திட்ற மாதிரி வைவாள். இப்போ நேரிடையாய், you must stand on your own legs ,every action there is a reaction , position -possession , prestige -justice , இவ கெடுத்தா எல்லாத்தையும் என்ற லைன்கள் popular மட்டுமல்ல. அன்றாடம் நான் கேட்டவை . நான் பார்த்த இரண்டு பள்ளி கூட வாத்தியார்கள் , என் தாத்தா மற்றும் அவர் நண்பர்கள்,எனக்கு தெரிந்த ஒரு பிரபலம் எல்லோரும் பத்மநாப ஐயர் சாயல் கொண்டு இருந்ததால், NT நடிப்பின் வாழ்க்கைக்கு உள்ள reach என்னை அதிசயிக்க செய்யும்.( வாசன் அவர்கள் இந்த நாடகத்தை,படத்தை பார்த்து அதிசயித்து அழுதாராம்.சிவாஜியை மீறிய உலக நடிகரே இல்லை என்று சொன்னார் )

    அவர் சம்பந்தி பிணங்கிய மகன்,மருமகளை வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியில் ஒடுங்கி படுத்திருப்பார். அந்த படுத்த நிலையில் எழுந்திருக்க முயன்று, சம்பந்தியை உபசரிக்க முயல்வார். இதற்கு ஈடான ஒரு நடிப்பை நான் எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

    உன்கண்ணில் நீர் வழிந்தால் காட்சி சிவாஜி-பத்மினி ,எப்படி இணைந்து எல்லா வயதிலும் இந்த chemistry தர முடிந்தது என்பது ஆச்சர்யம்.(உடனிருந்து காலமெல்லாம் மணம் பரப்பிய இதயமல்லவா).முதல் stanza முழுவதும் பழைய இனிய பரவச நாட்களை நினைவு படுத்தும் போது easy சேரில் மடிந்து மடியில் மனைவியை கிடத்தி வருடுவார். இரண்டாவது stanza எல்லோராலும் கை விட பட்டு மனைவியால் அரவணைக்க படும் ஆதங்கம் ஊஞ்சலில் மார்பில் சாய்வார். கடைசி stanza விரக்தியில்,பிள்ளை போல் மடியில் படுத்து தேம்புவார். சிவாஜியின் நடிப்பும்,பத்மினி reaction எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது. கொழந்தேள்லாம் ஒம மேல ஆசையாதாண்டி இருக்கா. ஒனக்கொண்ணுன்னா துடிச்சி போறா. என்னைத்தாண்டி வெறுக்கிரா என்ற புலம்பல் ஒவ்வொரு ஆணின் மிடில்-ஏஜ் ,ஓல்ட்-ஏஜ் crisis வெளியீடு.அது நடிகர்திலகம் சொல்லும் விதம் மனதை கிண்டி காயப்படுத்தும். கடைசியில் என்ன பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிருப்பேன்,இவ கெடுத்தா எல்லாத்தையும் என்று மனைவியிடம் இயலாமை சீறல் ,நான் பல குடும்பங்களில் பார்த்த கேட்ட அனுபவம்.அவ்வளவு இயல்பாக தைக்கும்.

    இந்த படத்துக்கு துன்பியல் முடிவு தேவையில்லாத ஒட்டாத ஒன்று. surprise twist என்று பார்த்தாலும் ,அந்த காலகட்டத்தில்,அவரை சாகடிக்காமல் விட்டால் தான் ரசிகர்களுக்கு surprise . கை கொட்டி சிரிக்கும் காட்சியில் எங்க ஊர் ராஜா பாணி வருவதை தவிர்த்திருக்கலாம்.(அதே இயக்குனர்!!)
    (தொடரும்)
    Last edited by Gopal.s; 2nd October 2012 at 03:11 PM.

  11. #960
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    30,480
    Post Thanks / Like
    Sivaji Family?


    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •