திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திய நடிகர் திரு. சார்லி
http://i40.tinypic.com/2lxz02g.jpg
Printable View
திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திய நடிகர் திரு. சார்லி
http://i40.tinypic.com/2lxz02g.jpg
http://i44.tinypic.com/2n87tsl.jpg
மக்கள் திலகத்தின் மாபெரும் ரசிகனான சிறுவன் அ.சிவனேஷ், , பிரான்ஸ் எம்ஜிஆர் விழாக்களில், எம்ஜிஆர் வேடமணிந்துகொண்டு நடனம் ஆடுவான். இவன் விருப்பத்திற்கிணங்க திருமண மண்டப வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர். உள்ளே திருமண ஹாலில், அங்கிள், வெளியே பேனரைப் பார்த்தீங்களா? என்று அவன் கேட்டபோது அவன் கண்களில் தலைவர்மேல் இருந்த பக்தியைக்கண்டு அனைவரும் நெகிழ்ந்தோம். இது போன்ற ரசிகர்கள் இருக்கும்வரை தலைவரின் புகழ் அடுத்தடுத்த தலைமுறைக்கு செல்வது நிச்சயம்.
திருமணத்தின்போது வாசிக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் வாழ்த்து!
http://i39.tinypic.com/whdzcy.jpg
புதுச்சேரியின் எம்ஜிஆர்-சேகர்
புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் பங்க் கடை வைத்திருப்பவர் திரு. சேகர். அவர் கடையைக் கடக்கும்போது மக்கள் திலகத்தின் பாடலைக் கேட்டுக்கொண்டே போகலாம். கடை திறந்திருக்கும் அனைத்து நேரங்களிலும் புரட்சித்தலைவர் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்
http://i42.tinypic.com/2l9idro.jpg
திரு. சேகர் கூறியது: சிறு வயது முதல் எம்ஜிஆரின் தீவிர ரசிகர், பின்னர் தொண்டராகி, இப்போது எம்ஜிஆர் பக்தர் ஆகிவிட்டேன். இந்த பங்க் கடை, பக்கத்தில் இருக்கும் கரும்புச்சாறு கடை, இவற்றில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, என்னால் ஆன சிறு சிறு உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வருகிறேன். 1989 முதல் ஒவ்வொரு வருடமும் தவறாமல் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளைத் தவறாமல் நடத்தி வருகிறேன். அண்ணா மற்றும் எம்ஜிஆர் பிறந்த நாட்களில் அன்னதானம் செய்து வருகிறேன். எல்லா கடவுளருக்கும் மத்தியில் வைத்து என் தெய்வத்தை அன்றாடம் வணங்குகிறேன்.
http://i42.tinypic.com/2ur6v01.jpg
நான் நன்றாக இருக்கும் இந்த நிலைக்கு என் தலைவர்தான் காரணம். எந்த நிலையிலும் அவர் என்னைக் கைவிட்டதே இல்லை. என் தாயார், என் மனைவி, என் பெண்கள், பிள்ளை அனைவரும் எம்ஜிஆர் மேல் பற்று கொண்டவர்கள். அனைத்து நிகழ்சிகளிலும் என் தாயார் உட்பட அனைவரும் தவறாமல் கலந்து கொள்வார்கள். ஆனால் இப்போது என் தாயார் இல்லை. அதுதான் எனக்கு ஒரு பெரிய வருத்தம். அவர் மேலும் கூறியது: அந்த கடைவழியே காரில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செல்லும்போது, பெரிதாகத் தெரியும் தலைவர் படத்தைப் பார்த்து வணங்கிவிட்டு செல்வார். நான் முதல்வருக்கு பத்திரிகை வைக்கும்போது, சேகர் என்று போடாதே. எம்ஜிஆர் சேகர் என்று போட்டால் தான் எனக்கு தெரியும் என்பார" என்று கூறுகிறார். மேலும் சேகர் கடை என்பதை விட எம்ஜிஆர் கடை என்றால்தான் தெரியும் என்று கூறி பெருமிதம் கொள்கிறார்
http://i41.tinypic.com/25zp3et.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்படும் மக்கள் திலகம்
http://i44.tinypic.com/2a80mk2.jpg
திரு. எம்ஜிஆர்-சேகர் அவர்கள் கடையில் உள்ள இந்த ஆண்டு தினசரி காலண்டர். இது என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் கட்சியின் தலைமைக்கொறடா திரு. நேரு அவர்களால் வெளியிடப்பட்டது. இவர் என்.ஆர். கட்சியைச் சார்ந்திருந்தாலும் தலைவர்மேல் மிகுந்த பற்றுகொண்டவர். மிகச்சிறந்த சமூகப் பணியாளர். அவர் நடத்தி வரும் மனித நேய மன்றத்தில் தலைவர் பெயரைப் போட்டே, பேனர் மற்றும் போஸ்டர் அச்ச்சடிப்பார்.
1989ம் ஆண்டுமுதல் தவறாமல் பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சிதலைவர் நிகழ்சிகளை தவறாமல் நடத்தி வரும் திரு.எம்ஜிஆர் சேகர், அந்நிகழ்ச்சிகளைப் புகைப்படம் எடுத்து ஒரு பெரிய ஆல்பமே வைத்திருக்கிறார். அதிலிருந்து சில படங்கள்.
http://i41.tinypic.com/or10xt.jpg
http://i39.tinypic.com/54cfg5.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
திரு. சேகர் கடையில் உள்ள புகைப்படம் ஒன்றில்
புரட்சித்தலைவருடன் அவரது மனைவியார் திருமதி ஜானகி ராமச்சந்திரன்
http://i40.tinypic.com/11gh6pc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகத்துடன் பல கதா நாயகிகள் நடித்திருக்கிறார்கள் . முக்கியமான நடிகைகள் மற்றும் முக்கியமான படங்கள் .
வி.என் . ஜானகி- மருத நாட்டு இளவரசி
பானுமதி -மலைக்கள்ளன்
சரோஜா - கூண்டுக்கிளி
ராஜசுலோச்சனா - நல்லவன் வாழ்வான்
ராஜகுமாரி - புதுமைபித்தன்
ஈ .வி .சரோஜா - கொடுத்து வைத்தவள்
எஸ் .வரலக்ஷ்மி - சக்ரவர்த்தி திருமகள்
ஜி .வரலக்ஷ்மி - குலேபகாவலி
சரோஜாதேவி - திருடாதே
பத்மினி - மதுரை வீரன்
ராகிணி - பரிசு
மாலனி - சபாஷ் மாப்பிளே
வைஜயந்திமாலா - பாக்தாத் திருடன்
சௌகார் ஜானகி - பணம்படைத்தவன் - ஒளிவிளக்கு
விஜயலட்சுமி .எல் - கொடுத்து வைத்தவள்
சாவித்திரி - வேட்டைக்காரன் - பரிசு - மகாதேவி
ராஜஸ்ரீ - நேற்று இன்று நாளை
தேவிகா - ஆனந்த ஜோதி
ரத்னா -தொழிலாளி
விஜயா .கே .ஆர் - விவசாயி
ஜெயலலிதா - ஆயிரத்தில் ஒருவன்
காஞ்சனா - பறக்கும் பாவை - நான் ஏன் பிறந்தேன்
வாணிஸ்ரீ -கண்ணன் என் காதலன்
லக்ஷ்மி - சங்கே முழங்கு
சந்திரகலா- உலகம் சுற்றும் வாலிபன்
மஞ்சுளா - ரிக்ஷாக்காரன் - இதயவீணை
லதா - உரிமைக்குரல் - நாளை நமதே
ராதா சலூஜா - இதயக்கனி - இன்று போல் என்றும் வாழ்க
பத்மப்ரியா - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்
http://i42.tinypic.com/2h3za6e.jpg
FORWARDED BY MR.V.P.HARIDASS, COIMBATORE
http://i40.tinypic.com/262a2ps.jpg
FORWARDED BY MR.V.P.HARIDASS, COIMBATORE
மக்கள் திலகம் திரை உலகில் நடித்து கொண்டிருந்த நேரத்தில்
1960க்கு பின் வந்த மலர்கள்
நடிகன் குரல்
சமநீதி
மதி ஒளி - சிறிது காலம் மட்டும்
திரை செய்தி
திரை உலகம்
திரை நீதி
புரட்சியார் ரசிகன்
1977 வரை வந்த இந்த மலர்கள் நாளடைவில் ஒன்றன் பின் ஒன்றாக மறைய தொடங்கின .1977 முதல் 1987 வரை மக்கள் திலகத்தின் ஆதரவு என்று பல இதழ்கள் வந்தன .
மக்கள் திலகம் மறைவுக்கு பின் மீண்டும் பல புத்தகங்கள் - கட்டுரைகள் - தனிப்பட்ட நபர்களின் புத்தகங்கள் என்று இன்று வரை வந்து கொண்டிருப்பது மக்கள் திலகத்தின் பெருமைகளுக்கு சான்றாகும் .
குறிப்பாக ''இதயக்கனி '' என்ற மாத இதழ் மற்றும் உரிமைக்குரல் மாத இதழ் பல வருடங்களாக வந்து கொண்டிருக்கிறது .
புதிய சிந்தனை ..... புதிய படைப்பு - மலர்மாலை ...
http://i39.tinypic.com/m96d51.jpg
நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் , வசந்த மாளிகை ஆசிரியரும் ,மையம் திரியின் ஆவண திலகமுமான இனிய நண்பர் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களின் முழு முயற்சியில் அயாராத உழைப்பில் உருவான
''மக்கள் திலகம் மலர் மாலை -1'' சிறப்புக்கள் .
1.உலகளவில் முதல் முறையாக ஒரு நடிகருக்கென்று பிரத்யோகமாக சோலோ ஸ்டில் படங்கள் .
2.உயர்தர அச்சில் மெகா ஸைசில் புத்தகம்
3. மக்கள் திலகத்தின் அபூர்வ படங்கள்
4. தரமான -இது வரை யாரும் பதிவிடாத பதிப்புரை .
5.கண்ணை கவரும் வண்ண புத்தகம் .
6. எம்ஜிஆர் ரசிகர்கள் எல்லோரும் போற்றி பாது காக்க வேண்டிய பெட்டகம் .
எம்ஜிஆரின் பெயரை உதட்டளவில் பேசியும் , எம்ஜிஆர் உருவத்தை ஸ்டாம்ப் அளவில் அச்சிட்டும் , தேர்தல் நேரத்தில்
மட்டும் அவர் பெயரையும் படங்களையும் பாடல்களையும் ஒலி பரப்பி ஆதாயம் தேடும் நன்றி கெட்ட மனிதர்கள் மத்தியில் உண்மையான மக்கள் திலகத்தின் ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கத்தையும் , கனவினையும் மிக குறுகிய காலத்தில் தீர்த்து வைத்த பெருமை திரு பம்மாலாருக்கு சேரும் .
மலர் மாலை புத்தகம் வெளி வர அவர் எடுத்து கொண்டநேரம் - அயாராத உழைப்பு -படங்கள் சேகரிப்பு - அவர் எடுத்து கொண்ட
முயற்சி பாராட்டுக்குரியதாகும் .
உலக தர வரிசையில் மக்கள் திலகத்தின் மலர் மாலை -1
என்றென்றும் பேசப்படும் .அந்த புகழுக்கு சொந்தக்காரர் திரு பம்மலாருக்கு நம்முடைய மக்கள் திலகம் திரியின் சார்பாக வாழ்த்துகிறோம் . தொடர்ந்து நம்முடைய ஆதரவை அவருக்கு வழங்குவோம் .
Mgr சேகர் பற்றிய செய்தியும் அவர் சம்பந்தமான புகைப்படங்களையும் வெளியிட்ட
puducherry கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி.
எஸ் ரவிச்சந்திரன்.
திருச்சி-கெயிட்டி -திரைஅரங்கத்தில் தினசரி 4 காட்சிகள் 30-08-2013 முதல் சங்கே முழங்கு ...புதிய பிரிண்ட்... திருச்சி- அருணா- குடியிருந்த கோயில் தினசரி 3 காட்சிகள் திரையிட பட்டுள்ளது என நண்பர் பாலு தகவல் சொன்னார் ...
Dear Suharam sir
thanks for the information about makkal thilagam movies running at Trichy this week .
http://i41.tinypic.com/2eppt12.jpg
நன்றி பேசும்படம் நாளை நமதே வண்ணப்படத்தில் மக்கள் திலகமும் வெண்ணிறஆடை நிர்மலா அவர்களும்
" நம்முடைய புரட்சி நடிகர் எம்ஜியார் அவர்கள் ' மழை அணி 'வழங்கும் இந்தச் சீரிய காரியத்தைக் குறித்து, பலர் பலவிதமாகப் பேசுவதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை. புகழுக்காகத்தான் இதை எம்.ஜி.ஆர். செய்கிறார் என்று சொன்னால் இப்படிப் புகழ் பெறுவதிலே ஒன்றும் தவறில்லை.
இந்த விழா எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்காக அல்ல; அவருடைய புகழுக்காக என்றால் நாங்கள் இங்கு இருக்கமாட்டோம்; நீங்கள் வந்திருக்கமாட்டீர்கள்; நாமெல்லாம் கூடியிருக்க மாட்டோம். நாட்டுக்கு நல்லது செய்யும் விழா இது; அதனால்தான் கூடியிருக்கிறோம். நாட்டுக்கு எங்கு நல்லது என்று படுகிறதோ அதனை வரவேற்போம், மற்றவைகளை எதிர்ப்போம்.
எம்.ஜி.ஆர் ஈட்டுகின்ற புகழ் அவருக்கு மட்டுமல்ல அவர் மூலம் நாட்டுக்குக் கிடைத்த நல்ல காரியமாகும்.
எம்.ஜி.ஆர் ஒருவரின் புகழுக்காக என்றால் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டியதில்லை. வீட்டிலிருந்து கொண்டே எம்.ஜி.ஆர் ரிக்ஷாக்காரர்களை ஒவ்வொருவராக அழைத்துக்கொடுத்திருந்தால் அந்த மழை அங்கி அவர்களின் உடலிலே ஒட்டிக்கொள்ளாதா’ ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று அவர்களும் சொல்லியிருக்க மாட்டார்களா? தானாகவே ‘எம்.ஜி.ஆர் வாழ்க’ என்று கூறக்கூடியவர்கள், மழை அங்கி வாங்கிக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்?
இதை இவ்வளவு பெரிய விழாவாக நடத்தியதற்குக் காரணம், ஒவ்வொருவருக்கும், ‘நாம் என்ன உதவி செய்ய வேண்டும்?’ என்ற எண்ணம் உருவாகவேண்டும் என்பதற்குத்தான். ‘அவர் மழை அங்கி தருகிறார் நாம் ஏதாவது தருவோம்; அவர் பெரும் பொருள் ஈட்டுகிறார்-அவர் தருகிறார், நாம் ஈட்டுகிற அளவுக்கு ஏதாவது செய்வோம்’ என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் .
எம்.ஜி.ஆர் மக்களுக்கு அறிமுகமாகாதவரல்ல; அவர் தலையைக் கண்டாலே, ‘எம்.ஜி.ஆர். வாழ்க. எம்.ஜி.ஆர். வாழ்க’ என்ற குரலெழுப்புகிறார்கள். எம்.ஜி.ஆர் தலைகாட்டப் பயப்படுகிறார்; காரணம், மக்கள் அன்புத்தொல்லை கொடுப்பதால்.
‘ஐயோ, மக்களைப் பார்த்தால் என்ன ஆகுமோ?’ என்று பயப்படுகிறார்கள், மற்றவர்கள்.! "
= சென்னையில் ரிக்சா ஓட்டுனர்களுக்கு மக்கள் திலகம் , மழைக் கோட்டு
வழங்கும் நிகழ்ச்சியில் அண்ணா . 4 - 12 - 1961 நம்நாடு இதழில் .
நன்றி திரு.சந்திரன் சார்.
நண்பர்களே, ஜெமினி சினிமா இதழ் 1981-1985 வருடங்களில் வெளி வந்த ஒரு நல்ல திரைகலை நவீனம்... அவிதழ்ல்களை உறுப்பினர்கள் யாரேனும் வாசிதிரிக்கிரர்ர்களா ? அச்சமயம் அதில் முக்கனிகளில் சிறந்த கனி எது? என மக்கள்திலகம், கலைஞர் முக, நடிகர்திலகம் - இதில் மூவரில் யார் சிறந்தவர்? என்று கட்டுரை போட்டி நடத்தியது. இதில் மூவரை பற்றியும் சில வருடங்கள் கட்டுரை அவரவர் அபிமானிகள் எழுதி பரிசும் பெற்று வந்தனர் ...எல்லா கட்டுரையும் சுவைபட வந்தன -அந்த பதிவுகள் எவரேனும் வைத்திருந்தால் பதிவிடலாமே...
திரு பம்மல் சுவாமிநாதன் அவர்கள் வெளியிட்ட மக்கள்திலகம் மலர் மாலை-1 சில நாட்களுக்கு முன் தான் இனிய ஒரு நண்பரால் காண முடிந்தது... என்ன ஒரு உயர்தரம், சர்வதேச சினிமா இதழ் போன்ற தோற்றத்துடன் விளங்கியது...ஆசிரியரின் உழைப்பையும், ரசிகர்களின் நல்லாதரவையும் பாரடம்மால் இருக்க முடியாது ... அடுத்த 2-ஆம் படைப்பையும் வெகு நேர்த்தியாக எதிர்பார்கிறோம் ...
Ithayakkani Full movie.
http://www.youtube.com/movie/idhayakkani
பல்லாண்டுகளுக்குமுன் சோவியத் ரஷ்யா நாட்டில் உலக திரைப்பட விழா (1970) வாக்கில், நடந்ததாகவும் அதில் மக்கள்திலக நடித்த ஆயிரத்தில் ஒருவன் -ஓடும் மேகங்களே பாடல் காட்சியும், ரகசியபோலீஸ் 115 காட்சியும், அடிமைபெண்- காட்சியும் கலந்து கொண்ட படங்களில் பரிசு பெற்று பின்னர் அவிழாவை செய்தி சுருளாக எல்லா திரைகளிலும் காண்பித்தனர் என்று மூத்த சகோதரின் நண்பர் கூறியதைத்தான் இங்கு பதிவிட்டு உள்ளேன் .இதை யாராவது பகிர்ந்து விளக்கம் அளியுங்கள் ...
இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் சார்
நீண்ட இடைவெளிக்கு பின் திரியில் உங்களின் அருமையான ஆவணங்கள் பதிவகள் களை கட்டுகிறது .
இதயக்கனி - ஆல்பம்
மக்கள் திலகத்தை பற்றி குமரி ஆனந்தன் - நடிகர் கமல் பற்றிய கட்டுரை .
இன்னும் பல மக்கள் திலகத்தின் சுவையான தகவல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் .
மக்கள் திலகம் அவர்களின் ''ராஜா தேசிங்கு '' 2.9.1960
54 வது ஆண்டு துவக்கம் .
மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் நடித்த செஞ்சி கோட்டை பற்றிய கதை . மக்கள் திலகம் இரட்டை வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் . அருமயான பாடல்கள் - சண்டை காட்சிகள் - வசனங்கள் நிறைந்த படம் .
http://i43.tinypic.com/wjghlh.jpg