Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் அவர்களே,
பெரும்பாலோரால் அதிகம் அறியப்படாத 'இளைய தலைமுறை' படம் பற்றிய ஆவணங்கள் அனைத்தும் அருமை. படப்பிடிப்பு நிகழ்வுகளை நேரில் காண்பது போலிருந்தது பொம்மை இதழின் கவரேஜ். அவற்றையும், மற்றும் அழகான விளம்பரப்பதிவுகளையும் தந்தமைக்கு மிக்க நன்றி.
ராகவேந்தர் சார், தங்களின் தகவல்களும் அற்புதம். ஆனால் அவர் படத்தில் பேராசிரியராக நடிக்கவில்லை. கல்லூரியின் விடுதிக்காப்பாளராக (வார்டன்) பாத்திரமேற்றிருந்தார். பிரின்ஸிபாலாக நடித்தவர் வீரராகவன்.
இளைய தலைமுறை திரைப்படம் குறித்து முன்பு சாரதா அவர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரையின் இணைப்பு இத்திரியின் முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.