-
9th June 2012, 08:31 AM
#11
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்.
எந்தத் தலைமுறைக்கும் பொருந்தும் அட்டகாசமான அரிதான ஆவணங்களைத் தந்து கொண்டிருக்கும் தங்களின் இளையதலைமுறை ஆவணங்களைக் கண்டு ஸ்தம்பித்துப் போய் விட்டேன்.
மிக மிக மிக மிக அரிதான நடிகர் திலகத்தின் படம் இளையதலைமுறை. முதல் வெளியீட்டிற்குப் பிறகு மறு வெளியீடே இல்லை என்றுதான் நினைவு. பல பேருக்கு இந்தப்படத்தின் காட்சிகள் நினைவில் இருக்க நியாமில்லை.
ராகவேந்திரன் சார் குறிப்பிட்டது போல அரிதான அருமையான பாடல்கள். குறிப்பாக 'கேட்டாயே ஒரு கேள்வி' பாடல்.
இளைய தலைமுறை படப்பிடிப்புக் கட்டுரை (பொம்மை இதழ்) அற்புதம். படப்பிடிப்பை அப்படியே கண்முன் நிறுத்தும் கட்டுரை. கட்டுரையை பதிப்பித்த பம்மலாருக்கு ஒரு பக்கா 'சல்யூட்'
'
இளைய தலைமுறை' இருபதாவது நாள் விளம்பரம், நான்காவது வார விளம்பரம் இரண்டும் மனதைக் கொள்ளை கொள்கின்றன. வசூல் வேட்டை விவரங்கள் நான்காவது வார விளம்பத்தில் தூள்.
தினத்தந்தி இருபதாவது நாள் விளம்பரம் தவறைக் கூட மிகச் சரியாகக் கண்டுபிடித்து பத்தொன்பதாவது நாள் என்று திருத்தியிருக்கும் தங்களின் உண்மையான நேர்மையான பதிவுப்பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.
தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்படவேண்டிய அற்புத பொக்கிஷங்களைத் தந்த உங்களைப் போற்றிப் புகழ வார்த்தைகள் இல்லை.
Last edited by vasudevan31355; 9th June 2012 at 08:45 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
9th June 2012 08:31 AM
# ADS
Circuit advertisement
Bookmarks