http://www.tamilmagan.in/2008/10/2.html
Printable View
கட்டபொம்மனுக்கு மும்பையில் கிடைத்த கெளரவம்!
13-6-2012 தேதியிட்ட 'குமுதம்' இதழில் வெளியாகியுள்ள அற்புதக் கட்டுரை.
வட இந்திய நட்சத்திரங்களின் புகழாரத்தில் நடிகர் திலகம்.
இந்தியில் பேசி கலக்கிய 'இமயம்'
பக்கம் 78 & 79
http://i1087.photobucket.com/albums/...1355/final.jpg
பக்கம் 80
http://i1087.photobucket.com/albums/...n31355/vk3.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
வாசு சார்,
அது யார் அந்த நபர்?வாணிஸ்ரீ யை அண்ணியாக நினைக்கும் இளைய தலைமுறை ரசிகர்? யாரோ முகம் தெரியாத ரசிகர்களுக்காக அபூர்வ படங்களை வெளியிட்டதற்கு கோடானு கோடி நன்றிகள்.
நடிப்பில்,உருவ அமைப்பில்(மூக்கு உட்பட),காதல் காட்சிகளில் ,பிற்க்கால அறுபதுகள்,முற்கால எழுபதுகளின் மிக சிறந்த ஜோடி சிவாஜி-வாணிஸ்ரீ.
இவர்கள் நடித்த பிற படங்கள்(ஜோடியாக)-
உயர்ந்த மனிதன்-1968
நிறை குடம்-1969
வசந்த மாளிகை-1972
சிவகாமியின் செல்வன்-1974
வாணி ராணி-1974
ரோஜாவின் ராஜா-1976
இளைய தலைமுறை-1977
புண்ணிய பூமி-1978
நல்லதோர் குடும்பம்-1979
நடிகர் திலகம் தனக்கு பிடித்தமான நடிகைகளுள் ஒருவராக பொம்மை கேள்வி-பதிலில் வாணிஸ்ரீயை குறிப்பிட்டுள்ளார்.
வாணிஸ்ரீக்காக விட்டு கொடுத்து எழுபத்து நாலில் உச்சத்தில் இருந்த பொது கதாநாயகிக்கு அதிக வாய்ப்புள்ள இரு படங்களையும்,பின்னால் எழுபத்து ஏழில் ஒரு படத்தையும்,தெலுங்கு படம் ஒன்றில் அவரின் வேண்டுகோளை முன்னிட்டு ஒரு கௌரவ வேடத்தையும் ஏற்றுள்ளார்.
இளைய தலை முறை பற்றி சுவையான இன்னும் இரண்டு தகவல்கள்.
--இந்த படத்தில் நடிக்க முதலில் அணுக பட்டவர் ஹேமமாலினி.(இன்னும் இரு படங்கள் கிட்ட தட்ட -சிவந்த மண்,லாரி டிரைவர் ராஜாகண்ணு)
--Gay செக்ஸ் பிரச்சினையை முதலில் தொட்டு காட்டிய தமிழ் படம்.
'குமுதம்' நடிகர் திலகம் நிழற்படம் குளோஸ்-அப்பில்
http://i1087.photobucket.com/albums/...n31355/vk2.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Vasu Sir,
Wonderful article from Kumudham. Recent &Contemporary articles are also important and we need to compile all in this thread.
தங்கள் அசத்தல் பாராட்டிற்கு நன்றி அருமை கோபால் சார். அந்த வாணிஸ்ரீ பைத்தியம் யார்? எனக்கு தெரியலப்பா!
http://www.rebuildingyou.com/images/...s/hats-off.jpg
Gay செக்ஸ் பிரச்சினையை முதலில் தொட்டு காட்டிய தமிழ் படம் ('இளையதலைமுறை') என்று மறக்காமல் யாருக்கும் அவ்வளவாகத் தெரியாத விஷயத்தை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு தேங்க்ஸ். இன்னொரு விஷயம்... அவமானப்பட்டு நடிகர்திலகத்திடம் வசனமேயில்லாமல் அழும் காட்சியில் திரு.நீலகண்டன் அவர்களின் நடிப்பு இருக்கிறதே! Excellent and simply superb. ('கலியுகக் கண்ணன்' திரைப்படத்தில் கண்ணனாக நடித்தாரே! அந்த நீலகண்டன்தான்.) மறுபடியும் சொல்கிறேன். அரிதான கட்சியை அற்புதமாக நினைவில் வைத்திருக்கும் தங்கள் நினைவாற்றலுக்கும், ரசனைக்கும் hats-off.
Dear Mr.Ragha(Vendhar),
Many Many Thanks for Society article.Pl.Tear the pages and take a proper copy to enjoy it more and more.
Gopal
கட்டபொம்மனுக்கு மும்பையில் கிடைத்த கெளரவம்!
13-6-2012 தேதியிட்ட 'குமுதம்' இதழில் வெளியாகியுள்ள அற்புதக் கட்டுரை.
டியர் வாசுதேவன் சார்,
நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் செல்லும்போது ரயிலில் குமுதம் இதழைப் படித்தேன். கட்டபொம்மன் பற்றிய செய்தியை நாளை திரியில் பதியவேண்டும் என்று நினைத்துக்கொண்டே திரியைப் பார்த்தால், நாளை என்ற டிரைலர் மற்றும் பதிவும் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சியை அளித்தது.
பதிவிற்கு நன்றி.
[QUOTE=pammalar;875206]
வீரபாண்டிய கட்டபொம்மன்
வரலாற்று ஆவணம் : கலைத்தோட்டம் : 15.6.1959
டியர் பம்மலார்,
கட்டபொம்மன் பற்றிய "கலைத்தோட்டம்" - செய்தி மிகவும் அருமை.
வரலாற்றுப் பொக்கிஷத்தை அளித்தமைக்கு நன்றி.
குமுதம் வார இதழில் வெளிவந்த கட்டுரையை பதிப்பித்தமைக்கு பாராட்டுக்கள். வாசுதேவன் சார்.
பெங்களூருவில் கர்ணன் வெளியீட்டையொட்டி நடைபெற்ற அலங்காரங்களை நிழற்படங்களாக அன்பு நண்பர் குமரேசன் அவர்கள் அனுப்பியுள்ளார். அவற்றில் சில.
http://a8.sphotos.ak.fbcdn.net/hphot...54785599_n.jpg
http://a2.sphotos.ak.fbcdn.net/hphot...58343869_n.jpg
http://a3.sphotos.ak.fbcdn.net/hphot...05966358_n.jpg
http://a5.sphotos.ak.fbcdn.net/hphot...51349575_n.jpg
http://a7.sphotos.ak.fbcdn.net/hphot...02044581_n.jpg
http://a1.sphotos.ak.fbcdn.net/hphot...60168300_n.jpg
டியர் ராகவேந்திரன் சார்,
society - இதழ் பதிவு அருமை.
மகாலட்சுமி திரையரங்க புகைப்படப் பதிவுகள் சிறப்பு.
இளையதலைமுறை படத்தில் அறிமுகமான சங்கீதா மூலம், நீங்களும் வாசுதேவன் சாரும் சேர்ந்து ஒரு சங்கீத (சங்கீதா) சாம்ராஜ்யமே நடத்திவிட்டீர்கள்.
நன்றி.
87th Day - Karnan records HOUSEFULL @ ESCAPE CINEMALL 6.30pm
http://i1234.photobucket.com/albums/...80091562_n.jpg
நடமாடும் ஆவணம் பம்மலார் அவர்களே. நன்றிகள் பல.
மும்பையில் சிவாஜி நாடக மன்றம் நடத்திய நாடக விழாவிற்கான விளம்பரங்களின் நிழற்படங்கள்.
http://i872.photobucket.com/albums/a.../PLAYADS01.jpg
http://i872.photobucket.com/albums/a.../PLAYADS02.jpg
:( இந்த வாசகங்களை அனைத்துலக வாணிஸ்ரீ ரசிகர் மன்றம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
இதன் பின்னணியில் தேவிகா ரசிகர்களின் தூண்டுதல் இருப்பதால் இதனைக் கண்டித்து தேவிகா கொடும்பாவி எரிப்பு போராட்டம், விரைவில், தங்கத் தலைவியின் வசந்த மாளிகை திரைப்படம் வெளியாகும்போது நடத்தப்படும்.
அருமை நண்பர் வாசுதேவன் அவர்கள் யதார்த்தமாக 'வாணி பைத்தியம்' என்று குறிப்பிட்டாரே தவிர வேறெவரின் தூண்டுதலும் அதில் இல்லை. நண்பர் மகேஷ் அவர்கள் தேவையில்லாமல் தங்கத்தலைவி தேவிகா பெயரை இழுத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு என்றைக்கும் ஒரே அண்ணிதான், அது எங்கள் தேவிகா மட்டுமே என்பதை ஆணித்தரமாக பதிய வைக்கிறோம். நிறையப்படங்களில் சேர்ந்து நடித்தவர்களெல்லாம் அண்ணியாகிவிட முடியாது. இது விஷயத்தில் பத்மினியையும், கே.ஆர்.விஜயாவையுமே நாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை எனும்போது உங்கள் வாணி எம்மாத்திரம்?.
நடிப்புத்தென்றல், எழிலரசி தேவிகாவின் கொடும்பாவியை எரித்தால், எரித்தவர்கள் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.
சில மாதங்களுக்கு முன்பு சாரதாவின் 'விஸ்வரூபம்' திரைப்பட 100வது நாள் விழாப்பதிவைப் பார்த்ததும், நான் பார்த்த 'பைலட் பிரேம்நாத்' படத்தின் 100வது நாள் விழாவை விவரித்தால் என்ன என்று நினைத்து எழுதத் துவங்கினேன். அது பாதியிலேயே நின்றுபோய், இப்போதுதான் அதைப் பதிப்பிக்க நேரம் வந்தது.ஆனால் அத்தனை துல்லியமான நினைவுகளாக இருக்காது. இருந்தாலும் நினவுக்கெட்டிய வரையில் பார்ப்போமே என்ற முயற்சி. (ஏற்கெனவே சென்னை சித்ரா தியேட்டரில் நடந்த 'நான் வாழ வைப்பேன்' 100வது நாள் விழாவை விவரித்திருக்கிறேன்).
பைலட் பிரேம்நாத் விழா, திரையரங்கில் நடைபெறவில்லை. எழும்பூரில் நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம் நாயருக்குச்சொந்தமான சுதர்ஸன் இண்ட்டர்நேஷனல் என்ற மூன்று நட்சத்திர ஓட்டலில் நடந்தது. (இப்போது அந்த ஓட்ட்லின் பெயர் அம்பாஸிடர் பல்லவா). சரி தியேட்டரில் நடந்தால் கலந்துகொள்ள வாய்ப்புண்டு. நட்சத்திர ஓட்டலில் நடக்கப்போகும் விழாவில், அதுவும் அழைப்பு எதுவுமில்லாமல் கலந்துகொள்ள முடியுமா?. விழாவுக்கு முதல்நாள் சாந்தி வளாகத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது, பல்லவன் போக்குவரத்து அலுவலகத்தில் வேலை செய்த நண்பன் ‘விஜி’ (என்கிற விஜயகுமார்) என்னைத்தனியே சந்தித்து, 'நாளைக்கு சாயந்திரம் சீக்கிரம் வந்திடு, எக்மோர் சுதர்ஸன் ஓட்டலில் போய்ப்பார்ப்போம். ஒருவேளை குருஜி வந்தால் உள்ளே அழைத்துப்போய் விடுவார். இல்லாவிட்டால் வேறு வழியிருக்கிறதா பார்ப்போம்' என்று சொன்னவன் 'முடியைக்கட்டி மலையை இழுப்போம், வந்தால் மலை' என்று பழமொழியெல்லாம் வேறு சொன்னான். எனக்கும் அட போய்த்தான் பார்ப்போமே என்று தோன்றியது. மறுநாள் நானும் விஜியும் மட்டும் போய் ஓட்டல் வாசலில் இருந்த ஒரு மரத்தின் பின்னே நின்று கொண்டிருந்தோம். நாங்கள் எதிர்பார்த்த குருஜி வரவில்லை.
வி.ஐ.பிக்கள் ஒவ்வொருவராகக் காரில் வரத்துவங்கினர். அந்த நேரம் பார்த்து ஒரு முக்கால் சைஸ் மினி லாரி ஓட்டல் கேட் முன் வந்து நின்றது. உள்ளே போக முடியவில்லையா அல்லது அனுமதியில்லையா தெரியவில்லை. லாரியின் பின்பக்க கதவைத்திறந்து விட்டார்கள். லாரியினுள் ஜமுக்காளமும் அதற்கு மேல் வெல்வெட்டும் விரிக்கப்பட்டு, அதன் மீது படத்தின் ஷீல்டுகள் வரிசையாக ஒன்றோடொன்று உரசாமல் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஓட்டலின் உள்ளே கொண்டுபோக வேண்டும். ஷீல்டுகளைக்கண்டதும் அவற்றை அருகே போய்ப்பார்த்துக்கொண்டு நின்றோம்.
அப்போது ஒரு காரிலிருந்து இறங்கி வந்த சபாரி சூட் அணிந்த ஒருவர், ஓட்டல் சிப்பந்திகளை அழைக்க இரண்டு பேர் மட்டுமே வந்து ஷீல்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு விழா நடக்கபோகும் இடத்தில் கொண்டுபோய் வைத்து விட்டு வந்து மீண்டும் எடுத்துச்சென்றார்கள். அப்போது அந்த ஸபாரி சூட் ஆள் என்னையும் விஜியையும் பார்த்து, 'தம்பி, கொஞ்சம் Help பண்ணுங்க. நீங்களும் இவைகளை உள்ளே கொண்டு போய் வையுங்களேன்' என்று சொல்ல, ‘ஆகா, ஓட்டல் உள்ளே போக இப்படியும் கூட சான்ஸ் கிடைக்குமா’ என்ற ஆனந்தத்தில் நாங்களும் ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டு உள்ளே கொண்டுசென்று அவர்கள் சொன்ன இடத்தில் வைத்தோம். சுமார் நாலைந்து முறை கொண்டு போனதும், வண்டியில் இன்னும் மூன்றே ஷீல்டுகள்தான் இருந்தன. திரும்பி வெளியே வரும்போது யாரும் அவற்றைக்கொண்டுபோய் விட்டால், மீண்டும் உள்ளே போக முடியாது. கிடைத்த சான்ஸை விடக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த தடவை உள்ளே போனதோடு, வைத்து விட்டு ஒரு மூலையில் ஆளுக்கொரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டோம். பாக்கியிருந்ததை ஓட்டல் சிப்பந்திகள் கொண்டுவந்து வைத்து விட்டுப்போனார்கள்.
அப்போதுதான் கவனித்தோம். ஏதோ தியேட்டர் போன்ற பெரிய அரங்கத்தில் நடக்கும் விழா போல இருக்கும், நடுவரிசையில் உட்கார்ந்து கொள்ளலாம் என்று நினைத்த எங்களுக்கு, அங்கே ஒவ்வொரு மேஜையையும் சுற்றி நான்கு சேர் போட்டு, ஏதோ பார்ட்டி போல அரேஞ்ச் பண்ணியிருப்பதைப்பார்த்து பயம் தொற்றிக்கொண்டது. ஆகா, வரக்கூடாத இடத்துக்கு வந்துட்டோம் போலும். யாராவது ஏதாவது கேட்பதற்குள் வெளியேறி விடுவோம் என்று விஜியிடம் சொல்ல, 'அதெல்லாம் ஒண்ணும் ஆகாது பயப்படாதே'ன்னு அவன் தைரியம் சொல்வானென்று பார்த்தால், அவனும் 'எனக்கும் அப்படித்தான்யா தோணுது. வா போயிடலாம்' என்று அச்சத்தைக் கிளப்ப மெல்ல கிளம்பினோம்.
'என்னடா இது, விழாவைப்பார்க்கலாம்னு ஆசையா வந்தால், இம்மாதிரி ராயல் செட்டப்பைக்காட்டி பயமுறுத்திட்டாங்களே. கஷ்ட்டப்பட்டு உள்ளே வந்து பலனில்லாமல் போச்சே'ன்னு பேசிக்கொண்டே கேட்டை நெருங்கியபோது, அந்த சபாரி ஆசாமி பார்த்து விட்டார். 'ஏம்ப்பா போறீங்க?' என்று கேட்டதும், ஒண்ணு விடாமல் எல்லாத்தையும் அவரிடம் சொன்னோம், 'ஓ அப்படியா? நீங்க வி.ஐ.பி. பகுதியில போய் உட்கார்ந்துட்டீங்க போலிருக்கு. நீங்க விழாவைத்தானே பார்க்கணும். வாங்க வேறு இடத்துல உட்கார வைக்கிறேன்'னு அழைச்சிக்கிட்டுப்போய், கடைசியாக வரிசையாக சேர் போட்டிருந்த இடத்தில் உட்கார வைத்தார். ஏற்கெனவே அங்கும் சிலர் உட்கார்ந்திருந்தனர்.
அந்த இடத்திலும் ஐஸ்கிரீம், கட்லெட், சாண்ட்விட்ச் என்று என்னென்னவோ பறிமாறினார்கள். ஆனால் அதிலெல்லாம் எங்களுக்கு நாட்டமில்லை. நாம் அதற்காகவா வந்தோம்?. விழாவை திருப்தியாகப் பார்த்தால் போதும் என்றிருந்தது. விழா நிகழ்ச்சிகள் சரியாக நினைவில் இல்லை, அதற்குக்காரணம் முதலில் ஏற்பட்ட மன சஞ்சலங்கள்தான்.
நடிகர்திலகம் வந்திருந்தார். ராம்குமார், தேங்காய் சீனிவாசன், ஜெய்கணேஷ், விஜயகுமார், மஞ்சுளா, ஜெயசித்ரா, சத்யப்பிரியா, ஏ.சி.டி. என்று ஏகப்பட்ட வி.ஐ.பிக்கள் வந்திருந்தனர். ஜெய்கணேஷ் மனைவியைப்பார்த்தபோது இவ்வளவு அழகான இவரை எப்படி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் படத்தில் நடிக்காமல் விட்டு வைத்தார்கள் என்று தோன்றியது. நடிகை மாலினி பொன்சேகா வந்த மாதிரி தெரியவில்லை.
விழா, ஒரு மேட்டுக்குடி விழா போல நடந்ததால் சாதாரண ரசிகர்களான எங்கள் மனதில் ஒட்டவில்லை என்பதுதான் உண்மை. திரும்பி வரும்போது இருவரும், 'இவங்க இப்படி நடத்துனதுக்கு பதிலாக, கலைவாணர் அரங்கம் போன்ற பொது இடத்தில் நடத்தி, ரசிகர்களையும் அனுமதிச்சிருக்கலாம். எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்' என்று பேசிக்கொண்டு வந்தோம். உண்மையிலேயே பைலட் பிரேம்நாத் 100 வது நாள் விழா எங்களுக்கு ஒரு புதிய அனுபவம்.
mr_karthik,
என்ன ஒரு சுவாரஸ்யமான அனுபவ பகிர்தல் :clap:
அன்புள்ள ராகவேந்தர் சார்,
பெங்களூருவில் 'கர்ணன்' பட கொண்டாட்டங்களின் நிழற்பட வரிசை வெகு ஜோர். அனுப்பிவைத்த குமரேசன் பிரபு அவர்களுக்கும் பதிப்பித்த உங்களுக்கும் நன்றிகள். (கடைசி படத்திலுள்ள ராட்சத மாலை, ரசிகர்களின் அன்பு அளவைத்தாண்டி விட்டதோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது)
அதுபோல மகாலட்சுமி திரையரங்கில் நடிகர்திலகத்தின் வாரம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அலங்கார அணிவகுப்பை அழகுற அளித்தமைக்கு மிக்க நன்றி. படங்கள் ஒவ்வொன்றும் நெஞ்சை அள்ளுகின்றன. (ஒருகாலத்தில் கவனிப்பாரற்று இருந்த மகாலட்சுமி திரையரங்கு இன்று இரு திலகங்களின் ரசிகர்களின் கைங்கர்யத்தால், வாரந்தோறும் விழாக்கோலம் காணும் அரங்காகி விட்டது)
எல்லாவற்றையும் விட, 51 ஆண்டுகளுக்கு முன் பம்பாயில் நடந்த நடிகர்திலகத்தின் நாடக விழா பற்றிய நோட்டீஸ் மலைப்பை ஏற்படுத்தியது. அடேயப்பா, எவ்வளவு அரிய ஆவணங்கள் எல்லாம் காணக்கிடைக்கின்றன என்று மூக்கில் விரல் வைக்கிறோம்.
மூவரும் போட்டிபோட்டுக்கொண்டு அசத்துகிறீர்கள். நாங்கள் கட்டணமில்லாமல் கண்டுகளித்துக் கொண்டிருக்கிறோம். வளர்க உங்கள் தொண்டு.
அன்புள்ள வாசுதேவன் சார்,
மும்பையில்.. ஸாரி பம்பாயில் நடந்த நாடகவிழா விவரங்களின் இதழ்களைப்பதித்தமைக்கு நன்றி. தலைவர் இந்தியில் பதிலளித்த கம்பீரம் நிச்சயம் வடநாட்டவர்களுக்கு மனதைக் கவர்ந்திருக்கும் என்பது திண்ணம்.
அன்புள்ள சந்திரசேகர் சார்,
87-வது நாளன்று கூட கர்ணன் அரங்கு நிறைந்த விவரத்தை, 'சார்ட்'டை ஆதாரம் காட்டியே 'சிலரை' வாயடைக்க வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி. அப்படியும் திருந்த மாட்டார்கள், இன்னும் வேறென்ன வழிகளில் கர்ணனின் வெற்றியில் குறை காணலாம் என்று மனதைப் போட்டு குடைந்துகொண்டிருப்பார்கள்.
Lot of interesting news are being shared by our sivaji fans which keeps the thread very much active now a days. keep it up and all of us meet in KARNAN 100 DAYS CELEBRATIONS. Already festive moods has set in and always NADIGARTHILAGAM is great and SUPERSTAR for ever.
"இளைய தலைமுறை" ஆல்பம் இன்பமயம், வாசு சார்..!
இரண்டு 'சங்கீதா'க்களுமே 'சிவாஜி சங்கீதா' க்கள் என்று சங்கீதக்கச்சேரியே நடத்திவிட்டீர்கள்..! கூடவே நமது ராகவேந்திரன் சாரும் மேலும் இரண்டு 'சங்கீத'ங்களுடன் தங்களுக்கு தக்கவாறு 'ஸ்ருதி' மீட்டியிருக்கிறார்.
'நான் ரசித்த வசனம்' : 'ஆனந்த விகடன்' மறுபதிப்பு அருமை என்றால் 'கட்டபொம்மனுக்கு மும்பையில் கிடைத்த கௌரவம்' குறித்த சமீபத்திய 'குமுதம்' இதழின் புகைப்படக் கட்டுரை அசத்தல்..!
தாங்கள் வழங்கிய உள்ளம் குளிரவைக்கும் பாராட்டுக்கு உளங்கனிந்த நன்றிகள்..!
பாராட்டுக்கும், பட்டத்துக்கும் பாங்கான நன்றிகள், அடிகளாரே..!
'கோபால் அடிகள்' ஆகிய தாங்கள், அருமையான 'லிங்க்'குகளை தொடர்ந்து அளித்து வருவதால், இன்று முதல் 'Linkaeswaran' ('லிங்க்'கேஸ்வரன்) என்றும் அழைக்கப்படுகிறீர்கள் ('Lankaeswaran' [லங்கேஸ்வரன்] அல்ல).
என்ன லிங்க்கேஸ்வரரே, பட்டம் OKவா...?!
சென்னை 'மஹாலட்சுமி'யில் தற்பொழுது வெற்றிகரமாக நடைபெற்றுவரும் சிவாஜி வாரத்தின் சண்டே கொண்டாட்டங்களை நிழற்படங்களில் நிரந்தரமாக்கிய ராகவேந்திரன் சாருக்கு நன்றி முத்தாரங்கள்..!
சமீபத்திய பெங்களூரூ "கர்ணன்" கொண்டாட்டப் புகைப்படங்கள், மிக அருமை. திரு.குமரேசன் பிரபு அவர்கள் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
Dear Raghavendran Sir,
Thank you so much for the twin treasures from 1961 'Kalki', that specifies the programme schedule of Shivaji Nataka Mandram's Drama Festival at Bombay. These documents are archival materials of a very rare kind. Thanks again for sharing..!
Warm Wishes & Regards,
Pammalar.
நெல்லை 'சென்ட்ரல்' திரையரங்கில், 8.6.2012 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, வெற்றிநடைபோட்டு வருகிறார் "எங்கள் தங்க ராஜா".
கோவை 'டிலைட்'டில், 9.6.2012 சனிக்கிழமை முதல், மேட்னி மற்றும் மாலைக் காட்சிகளில், சக்கைபோடு போடுகிறார் "ராஜபார்ட் ரங்கதுரை".
இனிக்கும் இந்த இரு தகவல்களை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு இனிய நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
சென்னை எழும்பூர் மூன்று நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற "பைலட் பிரேம்நாத்" 100வது நாள் விழாவுக்கு தாங்கள், தங்கள் நண்பருடன் சென்றுவந்த அனுபவம் வெகு சுவாரஸ்யம். நினைவுகள் பின்னோக்கி நகரும்போது நமக்கு என்னவெல்லாம் கிடைக்கின்றன..!
தங்களின் அனுபவப்பதிவுக்கு அகம்குளிர்ந்த நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
Karnan - 100th day - write up in today (12th June 2012) Times of India.
http://timesofindia.indiatimes.com/c...w/14037987.cms
அன்பு பம்மலார்,
தங்கள் பாராட்டுக்களுக்கு உளம் கனிந்த நன்றிகள்.
நெல்லை சென்ட்ரலில் பட்டாக்கத்தி பைரவரின் பவனியும் கோவை டிலைட்டில் ரங்கதுரையின் ராஜபாட்டையும் சூப்பர் அந்த செய்தியைத் தந்த தங்களுக்கும் தங்கள் மூலமாக ராமஜெயம் அவர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.
அன்புடன்
For the benefit of our friends, the Society magazine article page by page
http://i872.photobucket.com/albums/a...e12cover01.jpg
http://i872.photobucket.com/albums/a...e12cover02.jpg
http://i872.photobucket.com/albums/a...ne12artl01.jpg
http://i872.photobucket.com/albums/a...ne12artl02.jpg
http://i872.photobucket.com/albums/a...ne12artl03.jpg
http://i872.photobucket.com/albums/a...ne12artl04.jpg
My wholehearted thanks to our friend who sent me these images.
நமக்குள் என் இந்த வேறுபாடு?அற்புதமாக சென்று கொண்டிருக்கும் திரியில் என் இந்த கொலை வெறி? நமக்கு தேவி,வாணி இருவருமே இரு கண்கள் போன்றவர்கள். இதில் எந்த கண் உயர்ந்தது என்ற பாகுபாடு தேவையில்லை.இரண்டு தரப்பினரும் தங்கள் தவறுகளை உணர்ந்து கொடும்பாவி எரிப்பு போராட்டங்களை கை விட கோருகிறேன். நமக்குள் இந்த வேறு பாடுகளை தூண்டி விட்டு குளிர் காயும் மஞ்சுளா ரசிகர் மன்ற தலைவரை வன்மையாக கண்டிக்கிறோம்
பம்மலார் அவர்களே,
நீங்களாக பார்த்து எந்த பட்டம் அளித்தாலும் தலை வணங்கி ஏற்கிறேன்.
கார்த்திக் அவர்களே,
தங்கள் பைலட் பிரேம்நாத் அனுபவம் அருமை. சாரதாஜி க்கும் ,தங்கள் எழுத்துக்கும் அதி அற்புத ஒற்றுமை உள்ளது.இருவரும் திரியின் அற்புத தூண்கள்.
ராக(வேந்தரே),
மிக்க நன்றி.அற்புத பதிவுகள்.பகிர்வுகள்.
தேவிகா வாணி கண்கள் என்றால் மற்றவர்கள்..
சரோஜாதேவி மூக்கு, பத்மினி இதயம், என்று உறுப்பு வாரியாக பிரிக்க வேண்டுமா...
NOTHING DOING....
all are equal...
அனைத்து நடிகையர் ரசிகர் மன்றம் [மாதுரி தேவி, பண்டரிபாய், மைனாவதி, சாவித்திரி, மாலினி, மாலினி பொன்சேகா, கீதா, அனுராதா, ஜெயபாரதி,. உஷாநந்தினி, கே.ஆர்.விஜயா, சௌகார் ஜானகி, எம்.என்.ராஜம், மற்றும் நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடித்த அனைவரின்] சார்பாக இந்த பாரபட்சத்துக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்
Ragavendar Sir,
George orwell's quote.All are equal but some are more equal.
நடிகர் திலகம் மொத்தம் 95 இயக்குனர்களுடன் 300 படங்களில் பணி புரிந்துள்ளார்.
அதிக பட்சம் திருலோக் சந்தர்- 20 ,பீம்சிங் -18 , மாதவன்-15 , சி.வீ. ராஜேந்திரன்,கே.விஜயன்-தலா-14 , ஏ .பீ.நாகராஜன், டீ.யோகானந்த்-தலா-12 .
5 க்கும் மேற்பட்ட படங்கள்-ஸ்ரீதர்,கே.சங்கர்,வீ.ஸ்ரீநிவாசன்,ஆர்.கிருஷ்ணமூர்த் தி,கிருஷ்ணன்-பஞ்சு,பீ.ஆர்.பந்துலு,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்,எல்.வீ. பிரசாத்,ராமண்ணா,கே.சோமு,கே.எஸ்.பிரகாஷ் ராவ்.
அறுபது கதாநாயகிகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். அவர் ஜோடியாக மட்டும்(சேர்ந்து நடித்தவை இன்னும் சற்று அதிகம்) நடித்த படங்கள்,முக்கிய கதாநாயகிகள் வரிசை.
பத்மினி,கே.ஆர்.விஜயா-தலா 32 ,ஜெயலலிதா-18 , சரோஜாதேவி-17 , சுஜாதா-16 , தேவிகா-12 , ஸ்ரீப்ரியா,சௌகார்,சாவித்திரி-தலா 11 ,
வாணிஸ்ரீ,மஞ்சுளா-தலா 9, பண்டரி பாய்,பானுமதி,லட்சுமி,எம்.என்.ராஜம்,ஜமுனா-தலா 7, .
மொத்தம் ஐம்பது இசையமைப்பாளர்களுடன் பணி புரிந்துள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன்-95 , கே.வீ.மகா தேவன்-38 , விஸ்வநாதன்-ராமமூர்த்தி-24 , இளைய ராஜா-23 , ஜி.ராமநாதன்-18 ,
ஐந்துக்கு மேற்பட்ட படங்கள்-சங்கர்-கணேஷ்,எஸ்.வீ.வெங்கட்ராமன்,டி.ஜி.லிங்கப்பா,கங் கை அமரன்,டி.ஆர்.பாப்பா,எஸ்.எம்.சுப்பையா நாயுடு,.