-
10th June 2012, 12:43 PM
#11
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்.
தங்கள் உயரிய பாராட்டிற்கு நன்றி!
'வீரபாண்டிய கட்டபொம்மன்' 'கலைத்தோட்டம்' சிறப்பு மலர் உண்மையிலேயே சிகர மலர். உள்ளதை உள்ளபடி உளமாரப் பாராட்டும் கலைத்தோட்டத்தின் பாங்கு பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது. சிறப்பு மலர் ஏன் என்பதற்கான விளக்கம் அருமை.
'கட்டபொம்மனும் காந்தியும்' என்ற தலைப்பில் சிலம்புச் செல்வர் அவர்களின் கருத்தாழமிக்க கட்டுரை கவனத்தை ஈர்க்கிறது. கட்டபொம்மனாக நடிகர் திலகம் வாழ்ந்து காட்டியதை அற்புதமாகப் பாராட்டி சிலம்புச் செல்வர் நம் எல்லோரது மனதிலும் இரண்டறக் கலந்து விட்டார். சிலம்புச் செல்வர் மட்டுமா! அருமையான பதிவுகளை அளிக்கும் பதிவுச் செல்வராகிய தாங்களும்தான்.
கதாசிரியர்-வசனகர்த்தா சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் உரை உண்மைக்கோர் உரைகல்.
நடிகர் திலகத்தின் நடிப்புக்கு உவமை கூற முடிந்தால் பம்மலார் அவர்களின் ஆவணப்பதிவு சேவைக்கு உவமை கூற முடியும்.
நன்றி!
Last edited by vasudevan31355; 10th June 2012 at 01:11 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
10th June 2012 12:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks