Page 129 of 185 FirstFirst ... 2979119127128129130131139179 ... LastLast
Results 1,281 to 1,290 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #1281
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 31.3.1962


    முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 8.4.1962

    [img]http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/GEDC5719-1.jpg[img]

    முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 13.4.1962



    முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 5.5.1962



    50வது நாள் விளம்பரம் : The Hindu : 2.6.1962



    10வது வார விளம்பரம் : The Hindu : 17.6.1962



    75வது நாள் விளம்பரம் : The Hindu : 27.6.1962



    75வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 27.6.1962



    14வது வார விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 20.7.1962



    100வது நாள் விளம்பரம் : The Hindu : 22.7.1962



    குறிப்பு:
    அ. இக்காவியம் 100 நாள் விழா கொண்டாடிய அரங்குகள்:
    1. சென்னை - மிட்லண்ட் - 105 நாட்கள்
    2. சென்னை - பிராட்வே - 104 நாட்கள்
    3. மதுரை - நியூசினிமா - 112 நாட்கள்
    4. திருச்சி - ராஜா - 105 நாட்கள்
    5. சேலம் - ஓரியண்டல் - 100 நாட்கள்

    ஆ. சென்னை 'சயானி'யில் 84 நாட்கள் மற்றும் தென்னகமெங்கும் பல அரங்குகளில் 50 நாட்கள் முதல் 70 நாட்கள் வரை ஓடி ஜெயக்கொடி நாட்டிய "படித்தால் மட்டும் போதுமா", ஒரு சூப்பர்ஹிட் காவியம்.
    மேற்காணும் தகவல்கள் மற்றும் நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1282
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    அருமை ராகவேந்திரா சார் - உங்களை பார்த்து எவ்வளவு தான் நாங்கள் கோடுகள் போட்டு கொண்டாலும் - புலியாக கத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன் - பூனையாக இருந்தாலும் இந்த திரியில் இருப்பதற்காக பெருமை படுகிறேன் - உங்கள் பதிவுகளை படிப்பதில் பூரிப்பு அடைகிறேன் - தொடருங்கள்

    அன்புடன் ரவி


  4. #1283
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    படித்தால் மட்டும் போதுமா? 1962

    எனக்கு மட்டுமல்ல ,பல சிவாஜி ரசிகர்களின் சிறந்த வரிசையில் ,நிச்சயம் இடம் பிடித்திருக்கும்.

    அற்புதமான,புதுமையான வங்காள கதை களம் . பீம்சிங் ,ஆரூர்தாசை சரியாக வேலை வாங்கி இருப்பார்.(அளவோடு) .பாடல்கள் ஓஹோ ரகம்.(மாயவ நாதனின் தண்ணிலவு முதல் இடம்)

    இந்த மாதிரி மேக் அப் உடன் நடிக்கவே ,ஒரு துணிவு வேண்டும்.தமிழ் பட உலகின் முதல் இட ஸ்டார் எத்தனை துணிச்சல் இருந்தால் இதை செய்வார்?

    இந்த பட கோபால், பணக்காரனுக்குரிய தோரணை,வேட்டை காரனுக்குரிய தடாலடி(சிறிதே செயல் கோபம்),படிக்காததினால் ஒரு தயக்கம் கலந்த தாழ்வுணர்வு (மனைவியின் உதாசீனத்தில் இன்னும் கூடும்),மற்றவர்களின் மீது இயல்பான வாஞ்சை,அக்கறை,என்று ஒரு கலவையான ,கனமான பாத்திரம். இது என்ன பெரிய கனம் என்று சுகமான சுமையாக ஊதி தள்ளுவார் அற்புதமாய்.

    நல்லவன்,நான் கவிஞனுமில்லை,பொன்னொன்று பாடல்களை முரளி,சாரதி அலசி விட்டார்கள்.

    இந்த படத்தின் highlight ,கடைசி பதினைந்து நிமிடங்கள் (இறுதி காட்சி வரை) வசனமே இல்லாமல் (NT க்கு) படம் நகரும். ஒரு magic போல படம் இறுதியை அடையும்.

    பார்த்தே ஆக வேண்டிய பா வரிசை.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #1284
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    79. பலே பாண்டியா Bale Pandiya



    தணிக்கை 01.05.1962
    வெளியீடு 26.05.1962
    தயாரிப்பு – B.R. பந்துலு, பத்மினி பிக்சர்ஸ்
    மூலக்கதை – மா.ரா., ஜோஷி
    திரைக்கதை – தாதா மிராஸி
    வசனம் – மா.ரா
    பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன்
    இசை – விஸ்வநாதன் – ராம மூர்த்தி
    டைரக்ஷன் - B.R. பந்துலு

    நடிக நடிகையர் [பாட்டுப் புத்தகத்தில் உள்ளவாறு]
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – அப்பாவி பாண்டியன், ரௌடி மருது, விஞ்ஞானி சங்கர்
    நடிகவேள் எம்.ஆர்.ராதா – தனவந்தர் அமிர்தலிங்கம் பிள்ளை, கள்ளர் தலைவன் கபாலி
    பாலாஜி, தேவிகா, சந்தியா, வசந்தி, எம்.எஸ்.எஸ்.பாக்கியம், எம்.ஆர்.சந்தானம், கே.வி.சீனிவாசன், தங்கராஜ், எஸ்.ஏ.ஜி.சாமி,


    மல்யுத்தம் – கோபராஜ் குழு
    ஒளிப்பதிவு வி.ராம மூர்த்தி
    ஒலிப்பதிவு – பாடல்கள், ரீரிக்கார்டிங் – பி.வி. கோடீஸ்வர ராவ்
    ஒலிப்பதிவு – வசனம் – டி.வி.நாதன், எம்.சிவராவ், பத்மினி பிக்சர்ஸ்
    ஒப்பனை – ஹரிபாபு, ஆர்.ரங்கசாமி, கஜபதி, எம்.கே.சீனிவாசன், பத்ரையா, எஸ்.பார்த்தசாரதி, எம்.ராமசாமி
    கலை – எம்.வர்தூர்கர்
    எடிட்டிங் – ஆர்.தேவராஜன்
    ஆடை அலங்காரம் – பி.ராமகிருஷ்ணன்
    அரங்க நிர்மாணம் – என்.கிருஷ்ணன், வி. கண்ணன்
    அரங்க ஓவியம் – ஆர்.முத்து, ஆர்.ராதாகிருஷ்ணன்
    அரங்க அலங்கார பொருட்கள் சினி கிராப்ட்ஸ், டாக்டர் கிரி மியூஸியம்
    அரங்க உதவி – எம்.சுப்ரமணியம், எம். மணி
    புகைப்படம் – ஆர். வெங்கடாச்சாரி
    எலக்ட்ரீஷியன் டி.எம்.தட்சிணா மூர்த்தி
    ஸ்டூடியோ பரணி, நிர்வாகம் – ஏ.எல்.எஸ்.ப்ரொடக்ஷன்ஸ், அருணாச்சலம் ஸ்டூடியோஸ்
    ப்ராஸஸிங் – விஜயா லேபரட்டரி, by வி.டி.எஸ்.சுந்தரம்
    Recorded on Westrex & Stancil Hoffman Sound Systems
    தயாரிப்பு நிர்வாகம் – கே. ராகவன்
    பாடல்கள் உதவி – பஞ்சு அருணாச்சலம்
    இசை உதவி – வெங்கடேஷ்
    உதவி டைரக்ஷன் – கே.சிங்கமுத்து, இரா. சண்முகம், மதுரை எம்.ஆர்.கணேசன், பழ.செல்வராஜ்

    பலே பாண்டியா விளம்பர, விமர்சன நிழற்படங்கள் - ஆவணத்திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து ..
    பொக்கிஷப் புதையல்

    காவிய விளம்பரம் : சுதேசமித்ரன் : 8.3.1962


    முதல் வெளியீட்டு [இன்று முதல்] விளம்பரம்: சுதேசமித்ரன் : 26.5.1962



    முதல் வெளியீட்டு [Full Prints] விளம்பரம்: The Hindu : 9.6.1962



    குறிப்பு:
    பதினோரு நாட்களில் எடுக்கப்பட்ட "பலே பாண்டியா", சென்னை மற்றும் தென்னகமெங்கும், பல அரங்குகளில், 7 வாரங்கள் [49 நாட்கள்] ஓடி, நல்ல வெற்றி கண்டது.

    காவிய விமர்சனம் : ஆனந்த விகடன் : 1962



    Last edited by RAGHAVENDRA; 15th April 2014 at 03:46 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1285
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பலே பாண்டியா பாடல்கள்

    1. வாழ நினைத்தால் வாழலாம் – கண்ணதாசன் – t.m.s., p.s.
    2. நான் என்ன சொல்லி விட்டேன் கண்ணதாசன் – t.m.s.
    3. யாரை எங்கே வைப்பது என்று - கண்ணதாசன் – t.m.s.
    4. நீயே உனக்கு என்றும் நிகரானவன் – கண்ணதாசன் – t.m.s., m.ராஜு
    5. ஆதி மனிதன் காதலுக்குப் பின் – கண்ணதாசன் – p.b.s., k.ஜமுனா ராணி
    6. அத்திக்காய் காய் – கண்ணதாசன் - t.m.s., p.s. P.b.s., k.ஜமுனா ராணி
    7. வாழ நினைத்தால் வாழலாம் – பி. சுசீலா
    8. அத்திக்காய் காய் – கண்ணதாசன் - t.m.s., p.s. P.b.s., k.ஜமுனா ராணி, எம்.ராஜு
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1286
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பலே பாண்டியா திரைப்பட நிழற்படங்களுக்கான இணைப்பு... உபயம் நிழற்படத் திலகம் நெய்வேலி வாசு சார்

    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post870840

    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post870853
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1287
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பலே பாண்டியா திரைப்படத்தைப் பற்றிய முரளி சாரின் கட்டுரை ... மீள் பதிவ

    இணைப்பு 1 - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post264028


    பலே பாண்டியா

    தயாரிப்பு: பத்மினி பிக்சர்ஸ்

    இயக்கம்: பந்துலு

    இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி

    வெளியான தேதி : 26.05.1962

    கட்டபொம்மன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் என்ற மாபெரும் படங்களுக்கு பிறகு பந்துலு எடுத்த ஒரு லைட் என்டர்டைனர். குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியான படம்.
    (நடிகர் திலகத்தின் கமெண்ட் " நான் அமெரிக்காவிற்கு போவதற்கு முன் நடித்து முடித்து நான் அமெரிக்கா போய் விட்டு வந்த பின் வெளியான படம்."). நடிகர் திலகம் மூன்று வேடங்களிலும் நடிகவேள் இரண்டு வேடங்களிலும் நடித்த படம். "ப" என்று பெயர் ஆரம்பித்தாலும் பீம்சிங் டைரக்ட் செய்யாத படம். கதை,திரைக்கதையை பொறுத்தவரை லாஜிக் பார்க்காமல் பார்க்க வேண்டிய படம்.

    கதாநாயகனான பாண்டியன் ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து தற்கொலைக்கு முயற்சிக்க முற்படுவதோடு படம் ஆரம்பம். பாண்டியனை பார்க்கும் கபாலி (ஒரு திருட்டு கும்பலின் தலைவன்) அவனை காப்பாற்றுகிறான். கிழே நிற்கும் கூட்டத்தில் காரில் வந்து இறங்கும் கீதாவும் அவரது தந்தை அமிர்தலிங்கம் பிள்ளையும் அடக்கம். மேலே இருந்து கீதாவை பார்க்கும் பாண்டியனுக்கு அவளை பிடித்து போய் விடுகிறது. ஒரு திருடன் அப்போது கீதாவின் கை பையைஅறுத்துக்கொண்டு ஓடுவதையும் பாண்டியன் கவனித்து விடுகிறான். கிழே வந்து அந்த திருடனை பிடித்து பையை வாங்கும் பாண்டியன் ஆனால் அதை கீதாவிடம் கொடுப்பதற்குள் அவள் போய் விடுகிறாள். கபாலியுடன் அவன் வீட்டுக்கு செல்கிறான். அங்கே ஒரு கூட்டமே இருக்கிறது ஆனால் பாண்டியன் கண்ணில் யாரும் தென்படுவதில்லை. கபாலியிடம் அடியாளாக வேலை செய்யும் மருது பாண்டியனை போலவே இருக்கிறான். பாண்டியனை ஒரு மாதம் தன்னுடன் இருக்க சொல்கிறான் கபாலி. அவன் திட்டம் என்னவென்றால் ஒரு மாதம் கழித்து பாண்டியனை கொன்று விட்டு மருது இறந்து விட்டதாக செய்தியை பரப்பி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அடைவது. (இது எப்படி சாத்தியம் என்பது தெளிவாக இல்லை). இதற்கிடையில் கீதாவை தேடி போகும் பாண்டியனை முதலில் விரட்டும் அவள் பிறகு தன் சம்மதத்தை சொல்கிறாள். கீதாவின் அத்தை மகன் ரவி, கீதாவின் வீட்டிலேயே இருக்கிறான். இதற்கிடையில் ஒரு மாதம் முடிந்து விடுகிறது.

    தன் திட்டப்படி பாண்டியனை கொல்ல கபாலி முற்படுகிறான். அவனிடமிருந்து தப்பித்து வரும் பாண்டியனுக்கு காரை ஒட்டி கொண்டு வரும் ஒரு பெண் லிப்ட் கொடுக்கிறாள். சிறிது தூரம் சென்றபிறகு தான் அந்த பெண்ணிற்கு கார் ஓட்ட தெரியாது என்றும் மனோ நிலை பாதிக்கப்பட்டவள் என்றும் புரிகிறது. ஆனால் அதற்குள் கார் ஒரு மரத்தில் மோதி விபத்துகுள்ளாகிவிடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அந்த பெண் விபத்தில் பட்ட அடியால் இயல்பான நிலைக்கு திரும்புகிறாள். அவளின் தந்தை ஒரு பெரிய எஸ்டேட் முதலாளி. பாண்டியன் யாருமற்ற ஆள் என்று தெரிந்ததும் அவனை தன் மகனாக ஏற்றுகொள்கிறார். எஸ்டேட் செல்லும் பாண்டியனால் கீதாவை சந்திக்க முடியவில்லை. சிறிது நாள் கழித்து செல்லும் பாண்டியனை தன் தந்தையை வந்து சந்திக்க சொல்கிறாள் கீதா. தந்தையிடமும் அனுமதி வாங்குகிறாள்.

    பாண்டியனை கொல்ல முயன்று தோல்வியுற்ற கபாலி அவனை தேடிக்கொண்டிருக்கிறான். கீதாவை சந்திக்க வரும் பாண்டியனை பார்த்து விடும் கபாலி அவனை சிக்க வைக்க போலீஸ் கண் முன்னால் ஒரு திருட்டை மருது மூலமாக நடத்துகிறான். பாண்டியன் சிக்கி கொள்ள அவனுக்கு சிறை தண்டனை கிடைக்கிறது. சொன்ன நாளில் வராததால் கீதாவின் தந்தை பாண்டியன் மேல் கோபமாக இருக்கிறார். சிறையிலிருந்து வெளி வரும் பாண்டியன் ரவியை சந்தித்து அவனோடு கீதாவின் வீட்டிற்க்கு செல்கிறான். அங்கே கீதாவின் தந்தையும் கபாலி போல் இருக்க கடுமையாக பேசி விட்டு வெளியே வர அங்கே வாசலில் கபாலி. உண்மை புரிந்து கபாலியிட்மிருந்து தப்பித்து எஸ்டேட் வந்து சேருகிறான். அங்கே வளர்ப்பு தந்தை இறந்து போன விவரம் தெரிகிறது. இத்தனை நாள் எங்கே போனீர்கள் என்ற வசந்தியின் (எஸ்டேட் முதலாளியின் மகள்) கேள்வியிலிருந்து தப்பிக்க, இல்லாத ஒரு அத்தை மகனை பற்றி கதை அடிக்க அது வசந்தியின் மனதில் ஒரு உறவிற்கு அச்சராமிடுகிறது. மீண்டும் கல்யாண விஷயமாக ரவியை சந்திக்கும் பாண்டியனின் கையில் இருக்கும் வசந்தியின் புகைப்படத்தை பார்த்து விட்டு யார் என்று கேட்க, எல்லாவற்றையும் பாண்டியன் சொல்லி விடுகிறான். பாண்டியன் ஊருக்கு செல்வதற்கு முன் ரவி சென்று வசந்தியிடம் தன்னை அத்தை மகனாக அறிமுகப்படுத்திக்கொள்ள அவர்கள் இருவருக்கும் காதல் அரும்புகிறது.

    ஊருக்கு திரும்பி வரும் பாண்டியன் மூலம் உண்மை தெரிந்தும் கூட வசந்தி தன் முடிவில் உறுதியாக இருக்கிறாள். இதே நேரம் கல்யாணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் தந்தையிடம் சண்டை போட்டு பாண்டியனை தேடி கீதா வந்து விட, இரு ஜோடிகளும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். இந்த விஷயத்தை அறிந்து கொண்டு விடும் கபாலி, அமிர்தலிங்கம் பிள்ளையாக கல்யாணத்திற்கு வந்து கலந்து கொள்கிறான். இரவு பாண்டியனை கடத்த திட்டம் போடுகிறான். இதற்குள் மனது மாறி அமிர்தலிங்கம் பிள்ளை மகளை தேடி வர குழப்பம் உருவாகிறது. விளக்கை அனைத்து விட்டு பாண்டியனை கடத்தி கொண்டு போய் விடுகிறான். அப்போது கேட்கும் கூக்குரலில் கீதா இறந்து விட்டதாக பாண்டியன் தவறாக புரிந்து கொள்கிறான். தனி அறையில் அடைத்து வைக்கப்படும் பாண்டியன் எஸ்டேட் வக்கீலிற்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் தன் பங்கிற்கு உள்ள சொத்தை நிர்வகித்து அதில் வரும் வருமானம் தன்னை வளர்த்த அண்ணனுக்கு மாதா மாதம் கொடுக்க வேண்டும் என்றும் தான் உயிரோடு திரும்பி வந்தால் இதை மாற்றி கொள்ளலாம் என்றும் அதில் எழுதி வைத்து விடுகிறான்.

    பாண்டியனை நடுக்கடலிலே கொண்டு போய் போட்டு விடுகிறார்கள். ஆனால் வேறொரு படகில் இருக்கும் மீனவர்கள் இதை பார்த்து விடுகிறார்கள். கபாலியும் மருதும் போலீஸ் கண்ணில் இருந்து தப்பிபதற்காக வேறொரு ஊருக்கு செல்ல அங்கே பாண்டியனை போல் இருக்கும் சங்கர் என்ற வயதானவரை பார்க்கிறார்கள். (இவர்தான் பாண்டியனின் அண்ணன்). அவரை பின் தொடர்ந்து செல்ல அவர் ஒரு ஆராய்ச்சியாளர் என்பதும் தன் ஆராய்ச்சிக்காக நிறைய கடன் வாங்கி இருப்பதும் கடன்காரர்களின் தொல்லையில் அவதிப்படுவதும் தெரிகிறது. ஒரு வேலைகாரனாக அந்த வீட்டில் சேர்கிறான் கபாலி. அந்த நேரத்தில் எஸ்டேட் வக்கீல் வந்து பாண்டியன் லெட்டர் விவகாரத்தை சொல்கிறார். பாண்டியனாக எஸ்டேட் சென்றால் முழு சொத்தையும் அனுபவிக்கலாம் என்று திட்டம் போடும் சங்கரின் மனைவி தன் கணவனை பாண்டியனாக மாறும்படி வலியுறுத்துகிறாள். மனைவி சொல்லை தட்டாத சங்கர் அதற்கு ஒப்பு கொள்கிறார். வக்கீல் சொல்வதை ஒட்டு கேட்ட கபாலி மருதுவை பாண்டியனாக்கி அனுப்ப முடிவு செய்கிறான். இதற்கிடையில் சங்கர் வீட்டிற்க்கு வரும் கீதா, வசந்தி, ரவி எல்லோரும் வேஷம் மாறி நிற்கும் சங்கரை பாண்டியன் என்று நினைத்து கொள்கிறார்கள். கீதா தன் கணவன் என்று நெருங்கி பழக சங்கருக்கு தர்ம சங்கடம் என்றால் அவரது மனைவிக்கு அளவிட முடியாத ஆத்திரம்.

    மீனவர்களால் காப்பாற்ற படும் பாண்டியன் வக்கீலை வந்து சந்திக்க கீதா உயிருடன் இருப்பது தெரிந்து அவளை சந்திக்க தன் அண்ணன் வீட்டிற்க்கு செல்ல அங்கே உச்ச கட்ட குழப்பம். பாண்டியனை சுடும் கபாலியின் துப்பாக்கி குண்டிற்கு மருது இரையாக, அதை பார்த்து கபாலி தன்னை தானே சுட்டுக்கொண்டு சாக, சங்கர் பாண்டியன் குடும்பங்கள் ஒன்றாகின்றன.

    (தொடரும்)

    அன்புடன்
    இணைப்பு 2 - http://www.mayyam.com/talk/showthrea...l=1#post264106

    பலே பாண்டியா - Part II


    பலே பாண்டியாவை பொறுத்தவரை நடிகர்திலகம் மற்றும் ராதா இருவரின் வேடங்களுக்கு பொருத்தமாக ஒரு திரைக்கதை உருவாக்கபட்டது என்றே சொல்ல வேண்டும். நடிகர் திலகம் அமெரிக்கா செல்வதற்கு முன்னால் படத்தை முடிக்க வேண்டும் என்பதால் லாஜிக் எல்லாம் பார்க்காமல் திரைக்கதை எழுதப்பட்டது.. ஒரே உருவமுடைய இரண்டு பேர் இடம் மாறும் போது ஏற்படும் குழப்பங்களை வைத்து நிறைய படங்கள் வந்திருக்கின்றன என்றாலும் இது ஆள் மாறாட்டம் செய்ய முயற்சிக்கும் ஒருவனது கதையை சொல்லியது.

    நடிப்பை பொறுத்தவரை முதல் மார்க் பாண்டியனுக்குதான். அந்த வெகுளியான கதாபாத்திரத்தை வெகு இயல்பாக செய்திருப்பார். முதல் காட்சியில் தன்னை காப்பாற்ற வரும் கபாலியிடமிருந்து பேசுவதில் ஆரம்பித்து (" Binocular சார் ") கடைசி வரை அதே momentum maintain ஆகும் கபாலியின் வீட்டை பார்த்து மலைத்து போய் கமெண்ட் அடிப்பது( இது வீடா சார்? அரண்மனை. ஆனால் அநியாயம் சார். அவனவன் இருக்க இடம் இல்லாம இருக்கிறான். இங்கே நூறு பேர் தாராளமாக இருக்க கூடிய இடத்திலே நீங்க தனி ஆளா இருக்கீங்க.") . தேவிகாவின் வீட்டுக்கு போய் பாண்ட் ஷர்ட் போட்டிருக்கும் அவரை ஆண் என்று நினைத்து பேசுவது.( "நீங்க நல்ல பேசுறீங்க. உங்க தங்கச்சி தான் எரிஞ்சு விழறாங்க") , உண்மை தெரிந்தவுடன் அசடு வழிவது எல்லாமே அக்மார்க் NT முத்திரை. அது போல் கபாலியின் சுய ரூபம் தெரியாமல் அன்பாக இருப்பது, வளர்ப்பு தங்கை மேல் வைக்கும் பாசம், அவள் ரவியைதான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கும்போது கெஞ்சாத குறையாக பேசுவது( "வசந்தி, இவனை நீ உண்மையிலே விரும்பிறியா ?" அதற்கு ஆமாம் என்று வசந்தி சொல்ல " கெடுத்துட்டான் கெடுத்துட்டான் " என்று புலம்புவது, மறுபடியும் "அம்மாடி! உண்மையிலே கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைபடுறியா" அதற்கும் ஆமாம் என்று பதில் வர "ரொம்ப கெடுத்துட்டான்" என்று முனுமுனுப்பது) இவை எல்லாமே கிளாஸ். இந்த படத்தில் உணர்ச்சிவசப்படும் கட்டங்கள் குறைவு என்றாலும் வளர்ப்பு தந்தை இறந்து விட்டார் என்று தெரிந்ததும் வசனங்கள் இல்லாமல் சட்டென்று மாறும் முக பாவம்,அவரால் மட்டுமே முடியும்.

    பாண்டியன் characterodu ஒப்பிடும் போது மருதுவிற்கு சின்ன ரோல்தான். ஆனால் அந்த லுங்கி கட்டிக்கொண்டு பீடியை உதட்டில் அப்படியும் இப்படியும் உருட்டிக்கொண்டு (45 வருடங்களுக்கு முன்பே) வருவது அவரது ஸ்டைல் முத்திரை. ஒரு கதாபாத்திரத்தை முழுமையாக புரிந்து கொண்டு நடிப்பவர் நடிகர் திலகம் என்பதற்கு ஒரு உதாரணம் மருது, பாண்டியனாக வேஷமிடும் போதும் அணிந்திருக்கும் பாண்டை லுங்கி போல மடக்க முயற்சிப்பது. வசனங்கள் குறைவு என்கின்றபோதும் மருது வரும் காட்சிகளில் எல்லாம் நடையிலும் உடல் அசைவிலும் ஸ்டைல் காட்டியிருப்பார்.

    கடைசி அரை மணி நேரம் மட்டுமே வரும் கேரக்டர் ஷங்கர். ஆனால் கடன் தொல்லையால் அவதிப்படும் அந்த Hen pecked கேரக்டர்-ஐ வேறு யாராவது இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஒவ்வொரு வார்த்தையையும் இரண்டு முறை சொல்வது( நடிக்க சொல்லும் மனைவியிடம் "It is not correct"),மனைவியின் முகத்தை பார்த்து விட்டு உடனே " நீ சொல்லி நான் எதை செய்யாமல் இருந்திருக்கேன்?" என்று அடங்கி போவது, தம்பி மனைவி தன்னை தம்பி என்று நினைத்து கொண்டு நெருங்கி வரும் போது ஒரு பக்கம் தர்ம சங்கடம் மறு பக்கம் தன் மனைவியின் முகத்தில் வெடிக்கும் கோபத்தை பார்த்து விட்டு நான் என்ன செய்வது என்பது போல் முகத்தை வைத்து கொள்வது, இப்படி சின்ன வாய்ப்பிலும் சிக்ஸர் அடிப்பார். ஒரே ஆள் எப்படி மூன்று வேடங்களையும் வித்யாசமாக செய்ய முடியும் என்பதற்கு காட்சிகளை அடுக்கி கொண்டே போகலாம்.

    நடிகவேளின் திரைப்பட வரலாற்றில் இந்த படத்திற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. இரண்டு வேடங்களையும் அழகாக கையாண்டிருப்பார்.. கபாலி அவருக்கே உரித்தான நக்கல் கேலி நையாண்டி கேரக்டர். ( வீட்டை பற்றி பேசும் பாண்டியனிடம் " பங்களவிற்கு வந்து politics பேச கூடாது" ). சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் ஸ்டைல் வெளிப்படுத்த தயங்க மாட்டார்.. அமிர்தலிங்கம் பிள்ளையாக அடக்கி வாசித்திருப்பார். இரண்டு ராதாக்களும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சி சுவையாக இருக்கும். (நிலை கண்ணாடிக்கு பதிலாக இன்னொரு ராதாவே நிற்பது).

    கீதாவாக தேவிகா அழகு என்றால் ரவியாக பாலாஜி smart and handsome. வசந்தியாக மாலினி, ஷங்கரின் மனைவியாக (குமுதம்?) சந்தியா (JJ -வின் தாய்) கொடுத்ததை நன்றாக செய்திருப்பார்கள்.

    பந்துலுவை பொறுத்தவரை பெரிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் குழப்பமில்லாமல் கொண்டு போயிருப்பார். மா.ரா வின் வசனங்களும் Down to Earth.. படத்தின் இன்னொரு மிக பெரிய பலம் மெல்லிசை மன்னர்கள் - கவியரசு கூட்டணியில் வந்த பாடல்கள்.

    1. வாழ நினைத்தால் வாழலாம் - ஆரம்பத்தில் வரும் இந்த பாடல் climax-irkku முன்பும் வரும். அப்போது பாடலின் பின்னணி இசை சிறிது வேறுபடும்.

    2. நான் என்ன சொல்லிவிட்டேன் – TMS பாடல். NT - தேவிகா நடிக்க அழகாக எடுத்திருப்பார்கள்.

    3. யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே - NT சிறையில் இருக்கும் போது பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த பாடலின் பின்னணிக்கு ஒரு சம்பவத்தை சொல்வார்கள். இந்த படம் வெளி வந்த காலத்தில் (1962) தமிழகத்திற்கு சட்டமன்ற பொது தேர்தல் வந்தது. திமுக தலைவர் அண்ணாதுரை காஞ்சிபுரம் தொகுதியில் தோற்று போனார். இதற்கு முன்னரே திமுகவை விட்டு வெளியேறிய கண்ணதாசன் தமிழ் தேசிய கட்சி என்ற அமைப்பை நிறுவி இருந்த போதிலும், அண்ணாதுரையின் தோல்வி அவரை பாதித்ததாகவும் அதனால் இந்த பாடல் எழுதினார் என்றும் சொல்லுவார்கள். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.[இதை போலவே தெய்வ மகன் படத்தில் வரும் தெய்வமே பாடலின் போது "முத்து போல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன்! அட என் ராச என் தம்பி வாடா" என்று TMS குரலில் பாடி விட்டு திடீரென்று NT தன் குரலில் அண்ணா! அண்ணா! என்று மூன்று தடவை சொல்லுவார். Top Angle Shot-aga எடுத்திருப்பார்கள். அது வெளி வந்த போது (1969 செப்டம்பர்) அண்ணாதுரை இறந்து விட்டார். (1969 Feb). NT- அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தியதாக சொல்லுவார்கள். இதுவும் உறுதி செய்யப்படாத தகவல்]

    4. நீயே என்றும் உனக்கு நிகரானவன் - ரொம்ப பிரபலமான பாடல். மாமா மாபிள்ளை பாடல் என்றும் சொல்லுவார்கள்.

    5. ஆதி மனிதன் காதலுக்கு பின் - PBS, ஜமுனா ராணி - பாலாஜி, மாலினி ஜோடி பாடல்.

    6. அத்திக்காய் காய் காய் – TMS, PS, PBS, ஜமுனா ராணி.

    இந்த பாடலை பற்றி சொல்லவே வேண்டாம். என்றும் பசுமையாக இருக்கும் பாடல்.

    மொத்தத்தில் சிரித்து ரசிக்க ஒரு படம்.

    அன்புடன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1288
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடல் காட்சிகள் காணொளிகள்
    முழுப்படம்



    நீயே உனக்கு என்றும் நிகரானவன்


    அத்திக்காய்


    வாழ நினைத்தால் வாழலாம்


    நான் என்ன சொல்லி விட்டேன்


    ஆதி மனிதன்


    யாரை எங்கே வைப்பது
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1289
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "Bale Raghavendra Sir" for the presentation of "Bale Pandiya"

  11. #1290
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.எனது பெயர் கோபாலகிருஷ்ணன்.நான் ஓய்வு பெற்ற ஓர் அரசு ஊழியர்.நான் திருநெல்வேலியில் வசித்து வருகிறேன்.இந்த திரிகளில் உள்ள பதிவுகளை இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து படித்து வருகிறேன்.என்னுடைய பத்து வயது முதலே நான் தீவிர சிவாஜி கணேசன் ரசிகர்.இனி என்னுடைய பதிவுகள் இத்திரியில் தொடரும்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •