Results 1 to 10 of 536

Thread: Maestro Ilayaraja News and Tidbits 2014

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    ஆனந்த விகடன்

    15 Oct, 2014

    இனிய இசைஞர்கள்!
    ஆர்.சரண், ம.கா.செந்தில்குமார், ஓவியங்கள்: ரவி

    இளையராஜா

    சிச்சுவேஷன் சொன்னதுமே, 'மாங்குயிலே... பூங்குயிலே...’ பாடலுக்கான நோட்ஸை 15 நிமிடங்களில் எழுதி முடித்து, 'கம்போஸிங் போகலாம்’ என எழுந்தவர் இளையராஜா. 1,000 படங்களுக்கு இசையமைத்தவரின் இசைப் பயணத்தில் பாடகர்கள், பாடலாசிரியர்கள், இயக்குநர்கள் என எத்தனையோ பேர் மாறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ஆனால், இப்போது வரை ஒலிப்பதிவுக்கூடத்தை அவர் மாற்றவே இல்லை. பிரசாத் லேப் ஸ்டுடியோவின் ஒட்டுமொத்த வளாகமே மாறிவிட்டாலும், ராஜாவின் ஆடியோ ஸ்டுடியோ மட்டும் பழைமை மாறாமல் பராமரிக்கப்படுகிறது.

    நினைத்த மாத்திரத்தில் கிளம்பி திருவண்ணாமலைக்குச் சென்றுவிடுவார். அந்த ஊரின் மலையடிவாரத்தில் யாரையோ பார்த்து, 'என்ன இது... இளையராஜா மாதிரி தெரியுதே’ என உங்களுக்குத் தோன்றினால், சந்தேகமே வேண்டாம்... அது ராஜாவேதான்.

    அதிகாலையில் ஸ்டுடியோவுக்கு வருபவர், நாள் முழுவதும் இசையிலேயே இருப்பார். மாலை வீட்டுக்குச் சென்று தியானம், பூஜை, பேரப் பிள்ளைகளுடன் விளையாட்டு என இளைப்பாறுவார். எப்போது படிக்கிறார் எனத் தெரியாது. ஆனால், தமிழின் சமீப நூல்களை வாசித்து முடித்திருப்பார். எப்போதும் பிடித்த எழுத்தாளர் ஜெயகாந்தன்.
    தன் அண்ணன் பாவலர் வரதராஜனின் நினைவு நாள் அன்று அசைவத்தைத் துறந்தவர், கடந்த 30 ஆண்டுகளாக சுத்த சைவம். உணவில் எப்போதும் வேண்டும்... ரசம்.

    தான் இசையமைத்த பாடல்களை ரிலாக்ஸ் மூடில் முணுமுணுப்பது, அதைப் பற்றி பேசுவது என்பதெல்லாம் அபூர்வம்.

    ஊர் உலகத்தில் உள்ள இசையமைப்பாளர் களுக்கு எல்லாம் ஆதர்சம், இளையராஜா. ஆனால், இவரின் ஆதர்ச இசையமைப்பாளர் யார்? என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த 'மணமகள்’ படத்தின் இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பாராமன். பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே’ பாடலுக்கு இசையமைத்தவர் சுப்பாராமன்!


  2. Likes K, Russellmtp liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •