Page 386 of 397 FirstFirst ... 286336376384385386387388396 ... LastLast
Results 3,851 to 3,860 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3851
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 96

    சமுத்திர கரையிலே ஒரு நாள் -

    ஆதவனே - நீ பிறப்பதை பார்க்கிறேன் - வளர்வதையும் பார்க்கிறேன் - யாரும் உனக்கு நன்றி சொல்லவில்லை , புகழவில்லை ; அதற்காக என்றும் நீ ஏங்குவதும் இல்லை , வருத்தமும் அடைவதில்லை . உன் கடமைக்காக கூலியும் பெறுவதில்லை ; அழைக்காமல் வருகிறாய் - தடுத்தாலும் மறைகிறாய் . வெறும் ஒளியை தந்துவிட்டு ஒன்றுமே எடுத்துக்கொள்ளாமல் செல்கிறாய் . நாங்கள் மறைவதைப்பற்றி சிந்திப்பதில்லை - வாழும் பொழுது இருளை பரப்பிகிறோம் - அறியாமையை அரவணைக்கிறோம் - உதவி செய்தவுடன் பலனை எதிர்பார்க்கிறோம் ; எங்கள் ஆயுளை குறைத்துக்கொண்டு பணம் சேர்ப்பதில் அந்த ஆயுளை தாரை வார்த்து தருகிறோம் . அருணா shanbaug போன்றவர்களை மனிதன் என்ற போர்வையில் மிருகமாக வேட்டை ஆடுகிறோம் - 42 ஆண்டுகள் அருணாவை கோமா வில் தள்ளி எங்கள் தாய் திரு நாடு என்று சொல்லிக் கொண்டு பெருமை பட்டுக்கொள்கிறோம் .. உன் மடியில் கணம் இல்லை - மறையும் போதும் சிரிக்கிறாய் - நாங்கள் எதையுமே எடுத்துக்கொண்டு போகா விட்டாலும் செய்யும் பாவங்களின் பளுவினால் அசைய முடியவில்லை . நாங்கள் மறையும் போது நாங்கள் சேர்த்து வைப்பது நம்மைப்பார்த்து சிரிக்கும் கூட்டத்தைதான் !!!


  2. Likes vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3852
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 97

    இரவு முடிந்துவிடும் - முடிந்தால்
    பொழுது விடிந்துவிடும் - விடிந்தால்
    ஊருக்கு தெரிந்து விடும் - தெரிந்தால்
    உண்மைகள் புரிந்துவிடும் !

    மூடிவைக்கும் தவறுகளை போர்வையாக போத்துபவன் அல்ல கதிரவன் . இரு அன்பு கரங்கள் இணைந்து பாடும் பாடல் இது .


  5. Likes vasudevan31355, Russellmai liked this post
  6. #3853
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 98

    Sooraj ki baahon mein, ab hai yeh zindagi
    Kirne hain saanson mein, baaton mein roshni

    அருமையான இன்னுமொரு பாடல் - இன்னுமொரு முறை கிடைக்கப்போவதில்லை இந்த வாழ்க்கை - வாருங்கள் சேர்ந்து கொண்டாடுவோம் !!

    Sooraj Ki Baahon Mein - Zindagi Na Milegi Dobara (2011)


  7. Likes vasudevan31355 liked this post
  8. #3854
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 99

    பொழுது புலர்ந்தது பூப் போலே ---

    படம் : சித்ராங்கி


    பாடியவர் : கான சரஸ்வதி பி .சுசீலா


  9. Likes vasudevan31355, Russellmai liked this post
  10. #3855
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 100

    பொழுது புலர்ந்தது - பாம்பே ஜெயஸ்ரீ

    பாடலின் உரிமையாளர் - பாரதி யார் ??

    அருமையான பாடல்!



    ஆயிரம் கரங்கள் நீட்டி நம்மை அரவணைக்கும் கதிரவனை பாரதியின் இந்த பாடல் மூலம் வணங்கி எல்லோர் வாழ்விலும் எல்லா மங்களமும் பொங்கி வழிய அந்த ஒளிக்கடவுள் அருள் செய்வான் என்ற என் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் என் இந்த நீண்ட பதிவை முடித்துக்கொள்கிறேன் - பல பாடல்கள் என் கவனத்திற்கு வராமல் இருந்திருக்கலாம் - எல்லா மொழிகளிலும் அவனை எனக்கு தெரிந்த தமிழில் ஆராதித்துள்ளேன் - தவறுகள் இருக்கலாம் -
    எழுத்துப்பிழைகளும் இருக்கலாம் . அதற்கு முன்னதாகவே என் மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன் . பொறுமையுடன் 100 பதிவுகளையும் படித்து பாராட்டிய , பாராட்டும் , பாராட்டப்போகும் நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் . திரு கல்நாயக் அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள் - அவர் என்னை உற்ச்சாகம் செய்யாமல் இருந்திருந்தால் கதிரவனை என்னால் இவள்ளவு தூரம் வணங்கி இருக்க முடியாது - அனுபவித்தும் இருந்திருக்க முடியாது .

    சில நாட்கள் மற்றவர்கள் இங்கு போடும் அருமையான பதிவுகளை படித்து ரசிக்கும் பொறுப்பை மட்டும் எடுத்துக்கொள்கிறேன் .

    அன்புடன்
    ரவி

  11. Thanks kalnayak, chinnakkannan thanked for this post
    Likes kalnayak, vasudevan31355, Russellmai liked this post
  12. #3856
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like








    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes kalnayak liked this post
  14. #3857
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 101



    எப்படி இந்த பாடலை விட்டு விட்டேன் என்று புரியவில்லை - நிலா நண்பர்கள் ஒரு clue கூட கொடுக்காதது கூட ஒரு காரணமாக இருக்கலாம் . Even நம்பருடன் முடிக்கவேண்டாம் என்று எண்ணி 101 வது பதிவாக இந்த பாடலை பதிவிடுகிறேன் . முதல் மரியாதை என்றுமே கணேசனுக்குத்தானே - அணைக்கின்ற தாயே போற்றி என்று ஆரம்பித்து வைத்த கணேசனுக்கு முதல் மரியாதை செய்து விட்டால் , கதிரவனின் அருள் நமக்கு கிடைப்பது வெகு நிச்சியம் .

    சூரியன் கருக்குமா ??? என்றுமே இல்லை .. இங்கே கலங்கும் ஒரு சூரியனனின் கண்களில் வரும் கண்ணீரைத் துடைக்கின்றாள் ஒரு பெண் - அவளின் அன்பான வார்த்தைகள் அவனுக்கு , மயில் இறகுகளினால் ஒத்தடம் கொடுக்கின்றன . கிடைக்காத இன்பம் அவள் வார்த்தைகளில் காணுகிறான் . தொலைந்த சொர்க்கம் அவளின் வார்த்தைகளின் அரவணைப்பில் அவனுக்கு கிடைக்கிறது - மெத்தையை வாங்கினவனுக்கு , அவள் உறக்கத்தை அன்பாக தருகிறாள் ..... யாரோ அவள் -- எங்கோ இருந்தாள் - சூரியன் போல அவன் மனதில் உதயமானாள் - ஒளிக்கதிர்கள் போல அவனுடைய இருண்ட இதயத்திற்கு வெளிச்சம் தருகிறாள் - அவன் மனது காத்தாடி போல பறந்தது - புதிய நம்பிக்கை பிறந்தது - புதிய வாழ்வை வரவேற்றான் . பூங்காற்று திரும்பியது - உலகம் அவன் பாட்டை விரும்ப ஆரம்பித்தது ...பாராட்ட , மடியில் வைத்து தாலாட்ட ஒரு தாய் மடி அவனுக்கு கிடைத்து .

    கதிரவனால் நமக்கு கிடைக்காது என்று ஒன்றுமே இல்லை ----


  15. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355 liked this post
  16. #3858
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி, கல்நாயக்,

    உங்கள் இருவரின் உழைப்பைப் பாராட்டி இருவருக்குமாக என்னுடைய ஒரே பரிசாக ஒரு பாடல்.

    'சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே'

    'அமரன்' படத்தின் அருமையான பாடல்.

    நடிகர் திலகமே தெய்வம்

  17. #3859
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - ரொம்பவும் நன்றி - உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டவைகள் தான் பதிவுகள் போட ஒரு காரணமாக இருந்தன . என்னை எழுத தூண்ட செய்தவைகளில் சில :

    K - கடமை உணர்ச்சிகள்
    A - அருமையான மன நிலை
    T - தமிழின் மீது இருந்த காதல்
    H - happiness ( மகிழ்ச்சியான ஈடுபாடு )
    I - "I " என்ற எண்ணம் இல்லாத எழுத்தோட்டங்கள்
    R - ரம்மியமான நண்பர்களின் ஊக்கம்
    A - ஆதவனின் தாக்கம்
    V - வேண்ட வேண்ட தோன்றும் அவனுடைய புகழ்மாலை
    A - அன்பான நண்பர்கள்
    N - நன்றி சொல்லும் மனம்

    அன்புடன்
    ரவி

  18. Likes kalnayak, rajeshkrv liked this post
  19. #3860
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வெல்டன் ரவி.. உங்கள் தாயாருக்கு என் நமஸ்காரங்கள்..

    மாதவம் செய்திருப்பாள் மங்கை யுமைப்போல
    ஆதவன் பெற்றிடத்தான் ஆம்

    அப்படியே டகடக ஜிகுஜிகுன்னு எழுதிக் குவிச்சுட்டீங்க..வாழ்த்துக்கள்.. நமக்கெல்லாம் நூறுல்லாம் வந்ததே கிடையாது..(ஜஸ்ட் பாஸாவது ஆனதில்லையேடா.. மன்ச்சு.. நான் பேசறது ஸ்கூல் பத்தி இல்லை ) ஏதோ தோணறதை எழுதறேன். உழைக்கறதுல்லாம் கிடையாது..(என்னடா பொற்ற்றாமையா..ஷ்ஷ் மன்ச்சு )! அதுபோல கான்செப்டும் கிடைக்கலை..ம்ம்

    ரொம்ப gap எடுத்துண்டுடாதீங்க..எழுத எழுதத் தான் திருந்தும் ( யார் நீயா..நேத்து முழுக்க ராஜேஷூக்குப் பிடிச்சவங்கன்னு ஜெயப்ரதா பாட்டா கேட்டு ஜொள்ளு விட்டயேடா.. ஷ்ஷ்..மனசாட்சி இவ்ளோ சத்தமாச் சொல்லாதே நான் சொன்னது வேற) அதாவது எழுத்து.. இன்னும் ப்ரகாசிக்கும்..

    நிறைய எழுதுங்கள்..ம்ம்
    Last edited by chinnakkannan; 19th May 2015 at 08:34 PM.

  20. Thanks rajeshkrv thanked for this post
    Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •