Results 1 to 10 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sathya VP View Post
    ‘செல்வர்கள் நீதி நன்றோ?’


    நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்களுக்கான 5 ஆண்டுகால ஊதிய மாற்று ஒப்பந்தம் 31-12-2011-ல் முடிந்து விட்டது. 2012 ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் ஆகியும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதுவரை 22 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில், தொழிலாளர்கள் 20-ம் தேதி இரவு முதல் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

    வேலை நிறுத்தம் தொடர்ந்தால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே மின்பற்றாக்குறை இருக்கும் நிலையில், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டால் மக்களுக்கும் கஷ்டம். ஆனாலும், என்.எல்.சி. நிர்வாகம் ஊதிய உயர்வு கிடையாது என்று விடாப்படியாக உள்ளது. தொழிலாளருக்கான ஊதியம் மற்றும் இதர சலுகைக்கான தொகை இப்போது ஆண்டுக்கு ரூ.1,330 கோடி. ஊதியத்தை உயர்த்தினால் அது ரூ.1,500 கோடியாக உயரும் என்று கூறுகிறது. மேலோட்டமாக பார்த்தால், ‘‘பாவம்.....என்.எல்.சி. நிறுவனமும்தான் என்ன செய்யும்? ரூ.1,500 கோடிக்கு எங்கு செல்லும்?’’ என்று தோன்றும். ஆனால், இப்போது செலவாகும் 1,330 கோடியுடன் ஒப்பிட்டால் வெறும் ரூ.170 கோடி மட்டுமே ஆண்டுக்கு கூடுதலாக செலவாகும் என்பதே உண்மை..

    என்.எல்.சி. நிறுவனத்தின் ஆண்டு லாபம் எவ்வளவு? 2013-14-ம் நிதி ஆண்டில் ரூ.1,500 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளது. அதில் ரூ.170 கோடி தொழிலாளருக்காக ஊதியம் அளித்தால் என்ன? ஊழியர்கள் 24 சதவீத ஊதிய உயர்வு கோருகின்றனர். ஊழியர்கள் கேட்பது ஊதிய மாற்று ஒப்பந்தம். அது 5 ஆண்டுகளுக்கானது. இப்போது, ஊதியம் நிர்ணயிக்கப்பட்டால் அது, அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பொருந்தும். அப்படிக் கணக்கிட்டால் ஊதிய உயர்வு ஆண்டுக்கு தோராயமாக 5 சதவீத்துக்கும் குறைவாகவே இருக்கும்.

    ஒரு வாதத்துக்கு நஷ்டம் என்றே வைத்துக் கொள்வோம். தொழிலாளருக்கு நியாயமான ஊதியம் வழங்கி, மக்களுக்கும் சேவை செய்யத்தான் அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் உள்ளனவே தவிர, லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளரையும் மக்களையும் சுரண்டுவதாக அவை இருக்க முடியாது.

    நிலக்கரி நிறுவனம் செயல்படுவது தமிழ்நாட்டில். அங்கு கிடைக்கும் லாபம் மத்திய அரசுக்கு. இதற்காக, தமிழகத்துக்கு மத்திய அரசு ராயல்டி தொகை மட்டுமே கொடுக்கிறது. அதுவும் பல கோடி ரூபாய் நிலுவை. இங்கிருந்து அண்டை மாநிலத்துக்கு மின்சாரம் செல்லும். ஆனால், அவர்கள் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். தென் மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் செல்லும். ஆனால், அவர்கள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்க மாட்டார்கள். தெலுங்கு சினிமா உலகமே சென்னையில் இருந்து செயல்பட்டது ஒரு காலம். ஆந்திராவின் பொருளாதார மையமாகவும் சென்னை திகழ்ந்தது. ஆனால், பாலாற்றின் குறுக்கே அணைகளை கட்டி தண்ணீர் இல்லாமல் தவிக்க விடுவார்கள். இவற்றை எல்லாம் மத்திய அரசு கண்டு கொள்ளாது. ‘நீ அரிசி கொண்டு வா. நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து இருவரும் ஊதி ஊதி தின்னலாம்’ என்பதற்கு பெயர்தான் தேசியம் நண்பர்களே.

    அதற்காக, நான் பிரிவினை பேசவில்லை. சீன ஆக்கிரமிப்பின்போதே பேரறிஞர் அண்ணா அவர்கள் பிரிவினையை கைவிட்டு விட்டார். அப்போது நாடாளுமன்றத்தில் அவர் பேசிய வரலாற்று சிறப்பு மிக்க உரையில், ‘‘நாம் ஒன்றாக இருந்தால் நமக்குள் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக நாம் ஆக்கிரமிக்கப்பட்டால் நிலைமை என்னாகும்? எனவே, நாட்டு நலன் கருதி பிரிவினை கோரிக்கையை கைவிடுகிறோம். ஆனால், பிரிவினை கோருவதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’’ என்றார். பேரறிஞர் அண்ணா சொன்ன அந்தக் காரணங்கள் 50 ஆண்டுகள் கடந்தும் இன்னும் தொடர்கின்றன... வலுவாக.. என்பதுதான் வருத்தம்.

    என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் அதனால், ஏற்படும் நஷ்டம் எவ்வளவு? அதை தொழிலாளர்களுக்கு கொடுத்தால் மகிழ்ச்சியாக பணியாற்றுவார்களே? சென்னையில் நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. நெய்வேலியில் நாளை உண்ணாவிரதம் இருக்க தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்கப்படும் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

    மக்கள் திலகம் நடித்த ‘நான் ஏன் பிறந்தேன்?’ திரைப்படத்தில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் ‘சித்திரச் சோலைகளே..’ பாடல் தொழிலாளர்களின், உழைத்து உருக்குலைந்து போன அவர்களின் நிலையை, அப்பட்டமாக சொல்லும்.

    ஒயிட் & ஒயிட்டில் ஒளிமயமாக தலைவர். பாடலின் ஆரம்பத்தில் பியானோ வாசித்துவிட்டு ஸ்டைலாக இருக்கையில் இருந்து (வலது புறம் மேடை இருக்க, நாம் எதிர்பாராமல் இடதுபுறம் அழகாக) அரைவட்டமாக திரும்பி, எழுந்து, இசையினூடே ரிதத்துடன் மேடையின் படிகளில் ஏறி அசால்டாக மைக்கை பிடித்து ‘சித்திரச் சோலைகளே....’ என்று ஆரம்பிக்கும்போது காலப் பிரமாணம் ஒரு விநாடி கூட தவறாமல் .... என்ன ஒரு டைமிங் சென்ஸ்.

    பாதாம் அல்வாவை நாவில் எச்சில் ஊற பார்ப்பதுபோல, மக்கள் திலகத்தின் அழகையும் சுறுசுறுப்பையும் மகிழ்ச்சி பொங்க விரியும் விழிகளால் விழுங்கும் காஞ்சனாவை குறை சொல்ல முடியாதுதான். மக்கள் திலகத்தைப் பார்த்தால் அந்த நிலைதான் ஏற்படும். படம் வெளியாகும்போது மக்கள் திலகத்துக்கு 55 முடிந்து 56 வயது என்றால்... வெளிநாட்டினர் நம்புவது கடினம்.

    ஒரு இடத்தில் குழந்தைகளிடம் தனக்கு உள்ள அன்பையும் ஆசையையும் நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு மேஜையாக பரிமாற கேக்கை எடுத்துச் செல்லும்போது புயல் வேகமாகச் செல்பவரின் கண்களில் ஒரு குழந்தை பட, அப்படியே நிதானித்து, வேகம் குறைத்து கண்களில் கருணை வழிய குழந்தைக்கு கேக் கொடுக்கும் பாசமும் அழகும்.... ஏதோ படத்துக்காக நடிப்பது போலவே தெரியாது.

    மத்திய அரசின் நவரத்தினா எனப்படும் லாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த அளவுக்கு அந்நிறுவனத்தை உயர்த்தியிருப்பது யார்? படத்தில் மக்கள் திலகம் பாடும் வரிகளில் சொன்னால்...

    ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே
    உங்கள் ஆதியந்தம் சொல்லவோ?
    நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
    உதித்தது மெய்யல்லவோ?...

    ஏற்கனவே வறுமையால் மக்கள் வாடிய நிலையில், பிரான்சில் புரட்சி வெடிக்க காரணமாக அமைந்தது ஆணவம் பிடித்த அரசியின் கிண்டல். ‘ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன? மக்களை கேக் சாப்பிடச் சொல்லுங்கள்’ என்ற வார்த்தைகள்தான் பிரெஞ்சுப் புரட்சியை தவிர்க்க முடியாததாக்கி விட்டன. அந்த அரசியைப் போன்ற செல்வந்தர்களின் நிலையை புரட்சித் தலைவர் தோலுரிக்கிறார், புரட்சிக் கவிஞரின் பாடல் வழியாக....

    தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு
    சாட்சியும் நீயன்றோ?, பசி தீரும் என்றால்,
    உயிர் போகும் எனச் சொல்லும் செல்வர்கள் நீதி நன்றோ?
    ....செல்வர்கள் நீதி நன்றோ?

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 23rd July 2015 at 09:16 PM.

  2. Likes ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •