Page 81 of 401 FirstFirst ... 3171798081828391131181 ... LastLast
Results 801 to 810 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #801
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,
    அருமை சகோதரர் திருச்சி பாஸ்கரின் கருத்துக்களால் நான் மட்டுமின்றி பல நண்பர்கள் மனம் புண்பட்டிருப்பதாக என்னிடம் முகநூல் தனியஞ்சல் மூலமும் நேரிலும் பகிர்ந்து கொண்டார்கள். இருந்தாலும் நமது மக்கள் தலைவரின் புகழ் பரப்பும் பணியில் அடியேனுடைய தொடர்களைத் தொடர்ந்து படிப்பதாகவும் அவற்றைத் தொடர்ந்து எழுத வேண்டும் என்றும் மிகவும் வற்புறுத்தியுள்ளார்கள். இதன் மூலம் நமது மய்யம் இணையதளமும் அதில் நடிகர் திலகம் இழைகளும் எந்த அளவிற்கு நம் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. மிகவும் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இருக்கிறது. மேலும் நம்முடைய தொடர்களை நிழற்படங்களுடனும் ஆவணங்களுடனும் படிக்கும் பொழுது ஒரு புத்தகத்தைப் படிக்கும் உணர்வு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இதற்கு மய்யம் வடிவமைப்பைத் தான் நாம் பாராட்ட வேண்டும். அந்த வகையில் நமது மய்யம் இணைய தளத்திற்கு என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புச் சகோதரர் திருச்சி பாஸ்கர் மட்டுமல்ல அனைவருக்குமே நான் தாள் பணிந்து ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

    நடிகர் திலகத்தின் முடிவுகள் தவறானவை என்று சில நண்பர்கள் நினைக்கலாம். என்னைப் பொறுத்த மட்டில் அவர் என்றுமே தர்மம், நியாயம், நேர்மை வழியே பயணித்திருக்கிறார். அதில் தோல்வி ஏற்பட்டிருக்கலாமே தவிர தவறு ஏற்பட வாய்ப்புள்ளதாக நான் நினைக்கவில்லை.

    என்றாலும் நடிகர் திலகத்தின் சமுதாயப்பணி, அரசியல் தொண்டு, பெருந்தலைவருக்கும் தேசிய இயக்கங்களுக்கும் அவருடைய பங்களிப்பு,அதன் மூலம் சமூகத்தில் அவற்றின் தாக்கங்கள் இவையெல்லாவற்றையும் மக்களிடம் மிகப் பரவலாக கொண்டு சேர்க்க வேண்டியது சிவாஜி ரசிகர்களின் கடமையாக நான் நினைக்கிறேன். இந்த விஷயத்தில் நானும் பாஸ்கரின் கருத்துடன் ஒத்துப் போகிறேன். அதாவது நடிகர் திலகத்தை வெறும் நடிகராகப் பார்க்காமல் மக்கள் தலைவராக எடுத்துச் செல்ல வேண்டியது ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் கடமையென நான் எண்ணுகிறேன். மற்றவர்கள் எப்படியோ என்னுடைய நிலைப்பாடு அதுவே.

    அவர் மறைந்து விட்டாலும் கூட மக்களிடம் வரலாற்றில் அவருடைய தூய்மையான, உண்மையான, நேர்மையான பொது வாழ்வு, சமுதாயத்தொண்டுகளில் அவருடைய பங்களிப்பு, முக்கியமாக மக்களுக்கு அவர் கொடை வள்ளலாக அளித்துள்ள புரிந்துள்ள ஏராளமான உதவிகள், இவற்றைக் கொண்டு சென்று, அவருடைய சிறந்த மனிதாபிமானத்தை, தொண்டர்களிடம் அவரின் எளிமையான அன்பான அணுகுமுறைகள் இவற்றையெல்லாம் மக்கள் தெரிந்து கொள்ள நம்முடைய பங்களிப்பு அமைய வேண்டும்.

    வரலாற்றில் நடிகர் திலகம் என்ற மாபெரும் நடிகர் இருந்தார் என்பதோடு நிற்காமல், சிவாஜி கணேசன் என்கின்ற மாபெரும் மனிதர், மாபெரும் தலைவர் இருந்தார் என்பதை நிலைநிறுத்த வேண்டும்.

    இதுவே ஒவ்வொரு சிவாஜி ரசிகருக்கும் என் வேண்டுகோள்.

    என்னுடைய பங்களிப்பும் இந்த அடிப்படையிலேயே இருக்கும் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

    தொடர்ந்து மக்கள் தலைவரின் புகழ் பாட அன்புச் சகோதரர் திருச்சி பாஸ்கர் உள்ளிட்ட அனைத்து நண்பர்களையும் அழைக்கிறேன்.
    Last edited by RAGHAVENDRA; 24th August 2015 at 07:41 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks J.Radhakrishnan, uvausan thanked for this post
    Likes J.Radhakrishnan, Russellmai, uvausan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #802
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,
    மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே வார்த்தைகளில் கொண்டு வர எண்ணுவதால், சில சமயம் பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. நமக்காக மற்றவர்கள் எழுதிக் கொடுப்பதாக இருந்தால், அதுவும் எழுத்திலே திறமை வாய்ந்தவர்கள் எழுதிக் கொடுப்பதாக இருந்தால் நம்முடைய பதிவுகள் இன்னும் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் அல்லாமல் என் மனதில் தோன்றும் எண்ணங்களை நானே எழுத முயற்சிப்பதால் அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

    இந்நேரம் திருவிளையாடலின் இக்காட்சி தான் மனக்கண்ணில் நிழலாடுகிறது.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Russellmai, uvausan liked this post
  6. #803
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Today' Dinamalar
    பதிவு செய்த நாள்
    24ஆக
    2015
    04:30
    சென்னை:நடிகர் சிவாஜி கணேசன் நடித்து, 56 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம், மீண்டும், 100 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் படத்தை விரும்பி பார்ப்பதாக, தியேட்டர் நிர்வாகிகள் கூறினர்.சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பத்மினி நடிப்பில், பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம், 1959ல் வெளிவந்தது.

    இப்படம், ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட மன்னன் கட்டபொம்மனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டதால், மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. வசனம், பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகின. இந்த படம், அப்போது, 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.இளைய தலைமுறையினரும் கண்டு ரசிக்கும் வகையில், இப்படம், 56 ஆண்டுகளுக்கு பிறகு, 70 எம்.எம்., திரைப்படமாக, டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் வண்ண மாற்றத்துடன், வசனம், பாடல்கள் நவீன ஒலிப்பதிவு மூலம் மெருகேற்றப்பட்டும், சென்னையில், 12 தியேட்டர் உட்பட, தமிழகம் முழுவதும், 100 தியேட்டர்களில் தற்போது திரையிடப்பட்டு உள்ளது.
    'படத்தை, இளைய தலைமுறையினர் அதிகம் பார்க்கின்றனர். பள்ளிக் குழந்தைகள் பெற்றோருடன் வந்து பார்த்து மகிழ்கின்றனர். நவீன தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது, புதிதாக படத்தை பார்ப்பது போல உள்ளதாக, குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் கூறுகின்றனர்' என, சென்னையில் படத்தை திரையிட்டுள்ள, தியேட்டர் நிர்வாகிகள் கூறினர்.

  7. Thanks Russellbzy, eehaiupehazij thanked for this post
  8. #804
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அதிர்ந்தது அரங்கம்

    குலுங்கியது சாந்தி





    நேற்று மதியம் மூன்று மணிக்கெல்லாம் நானும், என் மகனும் சாந்திக்கு சென்று விட்டோம். மதியம் மேட்னிக்கு நல்ல கும்பல். நான்கு மணியிலிருந்து சாந்தி திரையரங்கம் திருவிழாக் கோலம் பூண்டது. கடலூரில் இருந்து ரசிகர்கள், பெங்களூருவிலிருந்து ரசிகர்கள், சென்னை ரசிகர்கள் என்று கூட்டம் கூட்டமாகத் திரள ஆரம்பித்தார்கள். 5 மணி வாக்கில் தியேட்டர் வாயிலில் நிற்க இடமில்லை. இதற்கே ஈவ்னிங் ஷோ ஆன்லைன் புக்கிங்கில் ஏற்கனவே ஃபுல். ஆனால் தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம்.

    கர்நாடகாவிலிருந்து ரசிகர்கள் ஏராளாமான மாலைகள் கொண்டு வந்திருந்தனர். சாந்தி தியேட்டர் வாயிலில் இருந்து சிறிது தூரம் தள்ளிச் சென்று, அங்கிருந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க, மாலைகளை அனைவரும் பிடித்தபடி ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பி ஊர்வலமாக வந்தார்கள். மாலைகளை தியேட்டரின் முன் பிரம்மாண்டமாய் பேனரில் நிற்கும் நம் கட்டபொம்மனுக்கு ஒவ்வொன்றாக அணிவித்து அழகு பார்த்தார்கள். ரசிகர்களின் கரகோஷமும், கூச்சலும், அலம்பல்களும் அலப்பரைகளும் எல்லை மீறியது. பேண்டு வாத்தியங்கள் 'என்னடி ராக்காம்மா'வை முழங்க சும்மா பெரியவர், சிறியவர் என்றில்லாமல் அனைவரும் ஆட்டம் போட்டு அதகளம் பண்ணி விட்டனர்.

    எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். குழுமம் குழுமமாக ஆட்டம். 'தலைவர் வாழ்க' கோஷம். 'சிவாஜி எங்கள் உயிர்' என்ற உயிர்த் துடிப்பான குரல்கள். படம் பார்க்க வந்திருந்த திரளான பெண்கள் இந்த உற்சாகக்
    களியாட்டாத்தைக் கண்டு ரசித்தனர். இளைஞர்கள் பட்டாளமும் அதிகம்.

    வெளியே மவுண்ட் ரோட்டில் போலீஸ் வந்திருந்தது. வாயிலின் நுழைவில் இருக்கும் பேனருக்கு மாலைகள் போடப்பட்டன. 1000 வாலாக்கள் வெடித்துச் சிதறின. ஹெல்மெட் தலைகளில், அட்டைப் பெட்டிகளில் கற்பூரம் கொளுத்தப்பட்டு ஆராதனை நடைபெற்றது. மவுன்ட்ரோட் ஸ்தம்பித்தது ஒருகணம்.

    நேரமாக ஆக ரசிகர்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அமர்க்களம் பண்ண ஆரம்பித்து விட்டனர். எங்கு பார்த்தாலும் டான்ஸ்தான். பின் தொடர் அதிர்வேட்டுகள் முழங்க ஆரம்பித்தன. வானில் ஒவ்வொன்றும் வெடித்துச் சிதறி மத்தாப்புகள் அங்கிருக்கும் கட்டபொம்மனின் பேனரில் பூக்கள் போலச் சிதறி விழுந்தது கண்கொள்ளாக் காட்சி.

    நமது அன்பு ஹப்பர்கள் முரளி சார், ராகவேந்திரன் சார், பம்மலார், சித்தூர் வாசுதேவன் சார், ராதாகிருஷ்ணன் சார், பார்த்தசாரதி சார், சிவாஜி தாசன் சார் என்று அனைவரும் வந்திருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு அனைவரையும் சந்தித்ததில் மிக மகிழ்ச்சியாய் இருந்தது. கிரிஜா மேடம், எம்.எல்.கான் அனைவரிடமும் அளவளாவி மகிழ்ந்தேன்.

    நமது அருமை நண்பர் பேரவைத் தலைவர் சந்திரசேகரன் சார் குடும்பத்துடன் வந்திருந்து படத்தைக் கண்டு களித்தார். அவரிடமும் பேசியதில் மகிழ்ச்சி.

    அரங்கத்தினுள் நுழையும் போது அனைவருக்கும் ஜாங்கிரி இனிப்பு வழங்கப்பட்டது. உள்ளே ஒரே ஆரவாரம். கட்டபொம்மனின் அறிமுகக் காட்சியில் சாந்தியே குலுங்கியது. ஸ்க்ரீனை விட்டு மக்கள் நகரவேயில்லை. படம் முழுதும் கைத்தட்டல்களும் விசிலும்தான். கட்டபொம்மனின் ஒவ்வொரு அசைவிற்கும் ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு செய்தனர். முக்கியமாக ஜாக்ஸனுடன் மோதும் அந்த உலகப் புகழ் பெற வீர 'வரி' வசனம், தானாபதிப் பிள்ளையிடம் நெல் கிடங்கு கொள்ளை சம்பந்தமாய் கொட்டித் தீர்க்கும் ஆத்திரம், திருச்செந்தூர் கோவிலிலே பறங்கியரின் படையெடுப்பு பற்றிக் கேட்டவுடன் மிருதுவான குரலில் ஆரம்பித்து படிப்படியாக சிங்க மிருகத்தின் குரலில் நாட்டோரை போருக்குத் தயாராக்க முழங்குவது, போருக்கு செல்லுமுன் ஜக்கம்மாவிடம் விடைபெற்றுச் செல்லும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சிகள் (எதைச் சொல்வது எதை விடுவது) என்று ஒவ்வொரு காட்சியும் ஆரவாரப் பொறி பறந்தது. அதுவும் அந்த 'அசல் வித்து' வசனத்திற்கு கூரை இடிந்து விழாத குறைதான்.

    அதே சமயம் ஒவ்வொருவரும் கட்டபொம்மனோடு ஒன்றி, அந்த நடிப்பில் மெய்மறந்து, தங்களை அவனோடு இணைத்துக் கொண்டு, அனைவரும் ஒரு இறுக்கமான சூழ்நிலையில் இருந்ததும் நிஜம். கண்கூடு. அதுதான் அந்தக் கட்டபொம்மக் கடவுளுக்குக் கிடைத்த நிஜ வெற்றி. அந்தக் கட்டபொம்மன் துரதிருஷ்டவசமாக ஆங்கில ஏகாதிபத்தியத்திடம் வீரமாகத் தோற்றுப் போனான். இந்த பொம்மனோ தன் அங்க அசைவுகளால் அகிலத்தில் உள்ள மனங்கள் அனைத்தையும் வென்றான்.

    கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்டதும் அசாத்தியமான மௌனம் நிலவியது அரங்கில். அரங்கே சோக முகத்துடன், வாட்ட முகத்துடன்தான் திரும்பியது. அதுவரை பண்ணிய ஆர்ப்பாட்டங்களும், அலம்பல்களும் அரை நொடியில் காணாமல் போயின.

    இன்னொரு கூத்து. இடைவேளை விட்டாலும் கூட நம் ரசிகப் பிள்ளைகள் திரையை விட்டு அகலவே இல்லை. அதற்கேற்றார் போல் 'உத்தமனி'ன் 'கனவுகளே... கனவுகளே' பாடலையும், 'தெய்வ மகனி'ன் 'காதல் மலர்க் கூட்டம்' ஒன்று பாடலையும் இடைவேளை சமயத்தில் டைமிங்காகப் போட்டு விட்டுவிட, சும்மா ரசிகர்கள் என்னஆட்டம்! என்ன அபிநயம்! என்ன உற்சாகம்! அடேயப்பா! ஒவ்வொருவரும் தங்களை நடிகர் திலகமாக நினைத்துக் கொண்டு அவரைப் போலவே நடித்துப் பார்த்து, நடந்து பார்த்து, ஆடிப் பார்த்து மகிழ்ந்து. அதையெல்லாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது போங்கள்.

    முரளி சாரும், நானும் அருகருகே அமர்ந்து தெய்வத்தை அணுஅணுவாக ரசித்துப் பார்த்தோம். 'முரளி சார் பக்கத்தில் இருக்கிறாரே... கை தட்டாமல் சமாளிப்போம்' என்று முடிவெடுத்துதான் தியேட்டரில் அவருடன் அமர்ந்தேன். ஆனால் முதல் காட்சியிலயே என் வாட்ச்சைக் கழற்றி பையனிடம் கொடுத்துவிட்டேன். ஆரம்பக் காட்சியிலேயே எடுத்த முடிவு அம்பேல்.

    படம் பிரமாதமாக ரீ-ஸ்டோர் செய்யப்பட்டிருக்கிறது மிகப் பிரம்மாண்டமாய். ஆடியோ அருமை. சங்கீதங்களின் சங்கதிகள் அருமையாய் காதில் வந்து விழுகின்றன. படம் போவதே தெரியவில்லை. 'ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி' வெட்டி விடப்பட்டு விட்டது. ஆனால் பத்மினி, ஜெமனி காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கை வைத்திருக்கலாம். ஜெமினி காளை மாட்டுச் சண்டையை இப்போது பார்க்கையில் சற்று நீளமாகத் தெரிகிறது. அந்தக் காட்சியை விட்டுவிட்டேனே! உட்கார்ந்தபடியே காளையுடன் மோதும் கட்டபொம்மனுக்கு கரகோஷங்கள் விண்ணைப் பிளந்தது.


    இதைவிடயெல்லாம் பெரிய சந்தோஷம் எனக்கு என்ன தெரியுமா?! அருகில் அமர்ந்து படம் பார்த்த கல்லூரி படிக்கும் என் மகனிடம் இடைவேளையின் போது அவன் காதைக் கடித்தேன்.

    'எப்படிடா இருக்கு?'

    அவன் சொன்ன பதில்...

    'இப்பதான் ரொம்ப ரசிச்சி ரசிச்சி பார்க்கிறேன். அடுத்த வாரம் என் நண்பர்களையெல்லாம் கூட்டிகிட்டு 'சத்யத்'தில் போய் மறுபடியும் கட்டபொம்மனைப் பார்க்கப் போகிறேன். எல்லார்கிட்டேயும் சொல்லப் போறேன். நீங்களும் தம்பியை மறக்காம கூட்டிகிட்டு போய் காண்பிச்சிடுங்க'

    இதைவிட வேறு சந்தோஷம் வேற என்னங்க வேணும்? எத்தனை தலைமுறையானாலும் தவிர்க்கவே முடியாதவர்தானே நடிகர் திலகம்? அந்த பாக்கியம் அவரைத் தவிர வேறு எவருக்கு உண்டு?

    சாந்தி 'கட்டபொம்மன்' அமர்க்களங்கள் புகைப்படங்களாகவும், வீடியோ வடிவிலும் விரைவில். தரவேற்ற நாழியாகும். அதுவரை பொறுக்க.
    Last edited by vasudevan31355; 25th August 2015 at 07:03 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #805
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சாந்தி திரையரங்கு கொண்டாட்டங்கள்









    Last edited by vasudevan31355; 25th August 2015 at 07:05 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Thanks RAGHAVENDRA, Russellbzy thanked for this post
  11. #806
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like








    Last edited by vasudevan31355; 25th August 2015 at 07:05 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Thanks RAGHAVENDRA, Russellbzy, eehaiupehazij thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellbzy, Russellmai liked this post
  13. #807
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like








    Last edited by vasudevan31355; 25th August 2015 at 07:06 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks RAGHAVENDRA, Russellbzy thanked for this post
  15. #808
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like








    Last edited by vasudevan31355; 25th August 2015 at 07:07 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. #809
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like








    Last edited by vasudevan31355; 25th August 2015 at 07:07 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. #810
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like








    Last edited by vasudevan31355; 25th August 2015 at 07:08 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •