Page 72 of 337 FirstFirst ... 2262707172737482122172 ... LastLast
Results 711 to 720 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #711
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தேங்காய் ராமராகவும் மனோரமா சீதையாகவும்..இமாஜின் பண்ணினாக் கொஞ்சம் டைஜஸ்ட் பண்ணக் கஷ்டமாத் தான் இருக்கு
    அதுக்குத்தான் கையிலே எப்பவும் ஜெலுசில் இருக்கணும்கிறது.. தெரியுதில்லே.. டைஜஸ்ட் ஆகாதுன்னு தெரிஞ்சே சாப்பிட்டா அனுபவிச்சுத்தான் ஆகணும்...
    என்ன நான் சொல்றது..
    [சாமிக்கண்ணு மாதிரி தலையை சாச்சிப்பாத்தா கழுத்து சுளுக்கு தான் மிச்சம்]
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #712
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்

    (நெடுந்தொடர்)

    43

    'முள்ளில்லா ரோஜா'



    'மூன்று தெய்வங்கள்'

    இதோ இன்றைய தொடரில் பாலாவின் புயல் பாட்டு. சூறாவளி சாங். மேலும் புகழ் உச்சியில் அவரைக் கொண்டு நிறுத்திய, அமர்த்திய பாடல். ரோஜாவின் மென்மையை இந்த பாடக ராஜாவின் குரலில் உணரலாம். உடன் 'முள்ளில்லாத ரோஜா'வாக சுசீலா அம்மா குரலால் குல்கந்து சுகம் தருவதை உணரலாம்.

    'மூன்று தெய்வங்கள்' படத்தில் பாலா, சுசீலா இணைவில் ஒருவர் விடாமல் அத்தனை தமிழ் நெஞ்சங்களும் கொண்டாடிய பாடல். ரசித்து மகிழும் பாடல் இன்றுவரை. என்று வரையும்.

    வீட்டுக்கு வீடு ரோஜாச் செடி வைத்திருந்தார்களோ என்னவோ தெரியாது ஆனால் எல்லா வீடுகளிலும் வானொலிப் பெட்டிகளில் 'முள்ளில்லா ரோஜா'தான் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அப்போதைக்கு வந்த அத்தனை டூயட்களையும் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்து பூத்த பாடல். நம் மனதை சுகமாய்த் தைத்த பாடல். அத்தனை வானொலி நிலையங்களும் போட்டா போட்டி போட்டு, போட்டுத் தாக்கிய பாடல்.

    'மூன்று தெய்வங்களி'ல் மூன்று நாயகர்களுக்கு அப்புறம் நாலாவது நாயகர் இளம் சிவக்குமார். இவரும், சந்திரகலாவும் செய்யும் காதலை வைத்தே படத்தின் கதை சுழலும். (மூலக்கதை மதுசூதன் கலேல்கர்)

    இருவரும் அவுட்டோரின் மலைப்பகுதிகளில் நெடிதுயர்ந்த காட்டு மரங்களுக்கு நடுவே, அந்தி இளம் வெயிலில் ஆடிப் பாடும் இந்தப் பாடல் ஆனந்தமாய் நம் இதயத்தை அள்ளுகிறது.

    நடித்தவர்களை விட பாடகர்களே நெஞ்சை ஆக்கிரமிக்கிறார்கள். கூடவே ரகளையான இசைப் பின்னணியும்.

    சிவக்குமார் இளமை ததும்பும் நாயகன். ஆனால் சந்திரகலா அழகில் சுமார்தான். சிவக்குமாரோ 'ஒயிட் அண்ட் ஒயிட்' ஷர்ட்டில் (பாடலுக்குப் பொருத்தமாக ஒயிட் ஷர்ட்டில் மலர்ந்தும் மலராத, முள்ளில்லா ரோஜாக்கள் இரண்டும், அதன் மேல் ஒரு ரோஜா மொக்கும் இருப்பது போல டைமிங்காக எம்பிராய்டெரி ஒர்க் என்று நினைக்கிறேன்.) கொள்ளை அழகு. அதனால் ஜோடிப் பொருத்தம் அந்த அளவிற்கு எடுபடாது. ஆனால் பாலா, சுசீலா குரலும், அருமையான ஒளிப்பதிவும், அழகில் தோய்த்தெடுத்த வண்ணமும், அமுதமான இசையும் அந்தக் குறையை அறவே போக்கி விடுகின்றன.


    பாலா அழுத்தமான குரலில் கம்பீரமாக,

    'முள்ளில்லா ரோஜா'

    எனும் போதே நம் முகம் அனைத்தும் மலரத் தொடங்கி விடும்.

    'முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்'

    முடித்தவுடன் வரும் ஷெனாய் ஒலி அருமை.

    மிக உயர்ந்த மரங்களின் நிழல்களுக்கிடையே சூரிய ஒளிக்கதிர்கள் லேசாக அந்திப்பட்டு நேரத்தில் ஊடுருவிப் பாய, வெளிச்சங்களுக்கும், நிழல்களுக்கும் நடுவே, காதலர்கள் தங்கள் நீளமான நிழல்கள் நிலத்தில் விழ, ஆடிப் பாடுவது ரம்மியம்.

    இந்தப் பாடலின் சரணங்கள் நடுவே வரும் இடையிசை கூட அனைவருக்கும் மனப்பாடமாய்த் தெரிந்திருக்கும் என்பது இப்பாடலின் தனிச் சிறப்பு. இப் பாடலைக் கேட்கும் போது, பலர் பாடலுடன் இணைந்து பாடும் போது, இடையிசையையும் மறக்காமல் தொடர்ந்து வாயால் அளிக்கக் கேட்டு நான் பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு 'மெல்லிசை மன்னர்' வாத்தியக் கருவிகளால் அதகளம் புரிந்திருப்பார்.


    தலையில் கனகாம்பரப் பூவுடன், அதே கலரில் மேட்சாக மணி, பட்டுப்புடவை உடுத்தியிருக்கும் சந்திரகலா (இவரும் அழகாகப் புடவை கட்டுவதில் வல்லவர்தான்.) சிவாவை விட கொஞ்சம் உயரம் ஜாஸ்தி. ஆதலால் பெரும்பாலும் சரிவுப் பகுதிகளில் சந்திரகலாவை நிற்க வைத்து, மேடான பகுதியில் சிவக்குமாரை நிற்க வைத்து காதல் காட்சிகளை அட்ஜஸ்ட் செய்து எடுத்திருப்பார்கள். (இத்தனைக்கும் சிவா பிளாக் கலர் ஷூ வேறு போட்டிருப்பார். சந்திரகலா வெறும் கால்களுடனே நடித்திருப்பார்) பாடலினூடே தூரத் தெரியும் பச்சை பசேல் தேயிலைத் தோட்டங்கள் மலைகளின் படிக்கட்டுகளாகப் பரவித் தெரிவது கண்ணுக்குப் பசுமைப் பரவசமே.



    முதல் சரணம் முடிந்ததும் சுசீலா 'ஹாஹஹா' எடுக்கையில் தூரத்தில் மரங்களுக்கிடையே ஓடி வரும் சந்திரகலாவையும், அருகில் மரங்கள் அல்லாத பகுதியில் நின்று பின் ஒரு சுற்று திரும்பி சந்திரகலாவின் ஓட்டத்திற்கு இணையாக வேகமாக நடந்து வரும் சிவக்குமாரையும், அவருக்கும் கீழே உள்ள சரிவில், அதே வேகத்துடன் டிராலியில் காமெரா வைத்து நகர்ந்து கொண்டே 'அண்டர் டு டாப்' ஷாட்டாக, இந்தக் காட்சியை மிக அற்புதமாகப் படம் பிடித்திருப்பார் ஒளிப்பதிவு இயக்குனர் கே.எஸ்.பிரசாத் அவர்கள். இந்த ஷாட் என் உள்ளம் கொள்ளை கொண்ட ஷாட்டாகும். மிக மிக அற்புதமாய் இருக்கும். ஒரே ஒரு குறை. இந்த ஷாட்டில் அந்த திரும்பி நடக்கும் நடைக்கு நடிகர் திலகம் இருந்திருந்தால்?....காலமெல்லாம் நம் சொல்லிச் சொல்லி மகிழ அற்புதமான இன்னொரு நடை நமக்குக் கிடைத்திருக்கும். ப்ச்!


    இடையிசை முடிந்து வரும் பாலா, சுசீலா தரும் அந்த 'ஹாஹஹா' ஹம்மிங்...அடடடா! ஆஹா!

    'மோகத்தின் வேகத்தில் நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ'

    வரிகளில் கவிஞர் அள்ளுவார். பாலாவும் 'மறைந்து போகுமோ' வார்த்தைகளை நாம் என்றுமே மறந்து போகாதவாறு அருமையாக உச்சரித்துப் பாடுவார். 'கண்ணுக்குள்' என்று பாலா ஒர் வார்த்தை கூற, அதற்கு சுசீலா 'கொஞ்சம் பாருங்கள்' என்று பதில் கூற, திரும்ப பாலா 'என்னென்ன' என்று பாட, 'உண்டு கேளுங்கள்' என்று இசையரசி முடிப்பது வார்த்தைகள் சுகம்.

    சிவக்குமார் சின்னக் குழந்தை போல ஓட்டமும், நடையுமாக உற்சாகமாக செய்திருப்பார். சந்திரகலா பாந்தம்.

    இந்தப் பாடலிலும் நிழல்களின் நீளங்கள் சில இடங்களில் மாறி படமாக்கப்பட்ட பகல், மாலை நேரங்களை நமக்குக் காட்டிக் கொடுக்கும்.

    பொன்னூஞ்சல் போல நம் இதயத்தில் என்றும் ஊஞ்சலாடும் இளமைப் பாடல்.




    முள்ளில்லா ரோஜா
    முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்
    முள்ளில்லா ரோஜா
    முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

    பொன்னைப் போல் நின்றேன்
    பூவென்னும் என் உள்ளம் பொன்னை அள்ளித் தந்தேன்

    முள்ளில்லா ரோஜா

    முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

    மானென்னும் பேர் கொண்டு பெண்ணொன்று வந்தது
    மார்பில் ஆடட்டும்
    மானென்னும் பேர் கொண்டு பெண்ணொன்று வந்தது
    மார்பில் ஆடட்டும்

    ஏனென்று கேளாமல் நானிங்கு வந்த பின்
    ஏக்கம் தீரட்டும்
    ஏனென்று கேளாமல் நானிங்கு வந்த பின்
    ஏக்கம் தீரட்டும்

    கண்ணுக்குள்

    கொஞ்சம் பாருங்கள்

    என்னென்ன

    உண்டு கூறுங்கள்

    முள்ளில்லா ரோஜா
    முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

    ஆஹஹஹா.....ஹா
    ஆஹஹஹா..... ஹா

    தேன் பட்ட கன்னங்கள் நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ
    தேன் பட்ட கன்னங்கள் நீ தொட்ட நேரத்தில் சிவந்து போகுமோ

    மோகத்தின் வேகத்தில் நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ
    மோகத்தின் வேகத்தில் நான் தந்த சின்னங்கள் மறைந்து போகுமோ

    சந்தித்தால்

    கொஞ்சம் தொல்லைதான்

    சிந்தித்தால்

    இன்ப எல்லைதான்

    முள்ளில்லா ரோஜா
    முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

    பொன்னைப் போல் நின்றேன்
    பூவென்னும் என் உள்ளம் பொன்னை அள்ளித் தந்தேன்

    முள்ளில்லா ரோஜா
    முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

    ஹாஹா ஹாஹா
    ஹாஹா ஹாஹா


    Last edited by vasudevan31355; 16th October 2015 at 01:08 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #713
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    காற்றில் கலந்த இசை 26: காதல் வனத்தின் தேசிய கீதம்!




    வெவ்வேறு நிலப்பகுதிகளுக்கு ஏற்ற இசையை வழங்குவது என்பது அந்தந்த நிலப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள், சத்தங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டும் சாத்தியமாவதல்ல. குறிப்பிட்ட அந்த இசையைக் கேட்பவர்களை அந்த நிலப்பரப்புக்கே அழைத்துச் செல்லும் அளவுக்கு, அந்த நிலப்பரப்பின் கூறுகளை இசைக் கருவிகளின் மூலம் நுட்பமாகப் பிரதிபலிக்கும் மேதமை தேவைப்படும் விஷயம் அது.

    வெவ்வேறு கலாச்சாரங்களின் பின்னணியிலான படைப்புகளுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தியவர். வனப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘கரும்பு வில்’ (1980) திரைப்படத்தின் பாடல்கள் அந்த ரகத்தைச் சேர்ந்தவை.

    ஒய். விஜயா, சுதாகர், சுபாஷிணி உள்ளிட்டோர் நடித்தி ருக்கும் இப்படம் ஜி.ஆர்.பி. எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் விஜய் என்பவரது இயக்கத்தில் வெளியானது. காதல் கடவுளான மன்மதனின் ‘போர்க் கருவி’யான கரும்பு வில்லைத் தலைப்பாகக் கொண்ட இப்படத்துக்கு உயிர்ப்பான காதல் பாடல்களைத் தந்தார் இளையராஜா.

    மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலமும், காடும் காடு சார்ந்த இடமான முல்லை நிலமும் சங்கமிக்கும் ஒரு பிரதேசத்தைக் கண் முன் நிறுத்தும் பாடல், ஜேசுதாஸ் பாடிய ‘மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்’. எம்.ஜி. வல்லபன் எழுதிய பாடல். பழங்குடி மக்களின் வாழ்வு முறையை நினைவுபடுத்தும் இசை மற்றும் பாடல் வரிகளின் மூலம் வெவ்வேறான மனச்சித்திரங்களை உருவாக்கக்கூடிய பாடல் இது.

    மாலை நேர ஒளி கவிந்திருக்கும் கானகத்தின் ஒற்றையடிப் பாதைகளின் வழியே, பழங்குடியின இசைக் கருவிகளை இசைத்துக்கொண்டு மலைக் கிராமத்து மக்கள் பல்லக்கு ஒன்றைத் தூக்கிச் செல்லும் காட்சி மனதில் தோன்றும். பல்லக்கில் நாயகன் அமர்ந்திருக்க, அவனது பிரிவைத் தாங்க முடியாத நாயகியின் குரல் மலைப் பாதைகளின் வழியே பின் தொடர்வதைப் போன்ற சிலிர்ப்பு மனதுக்குள் எழும்.

    பழங்குடியினரின் பொது இசைக் கருவியாகக் கருதப்படும் பெரிய அளவிலான டிரம்ஸ் இசையின் பிரம்மாண்ட அதிர்வோடு பாடல் தொடங்கும். தொடர்ந்து ‘ஓலா… ஓலா… ஓலல்லா’ என்று பழங்குடியின பெண் குரல்கள் ஒலிக்கும். சீரான ஊர்வல நடையின் ஒலி வடிவமாக இப்பாடலின் தாளக்கட்டு ஒரே வேகத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும். சூரிய ஒளி அத்தனை எளிதாக ஊடுருவ முடியாத அடர்ந்த வனத்தை ஊடுருவிச் செல்லும் ஷெனாய் இசையை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா.

    வனப் பூக்களின் மீது துளிர்த்திருக்கும் பனித்துளியின் சிதறலைப் போல், சந்தூர் இசைக் கருவி ஒலித்து மறைய, ‘மீன்கொடி தேரில் மன்மதராஜன்’ என்று கம்பீரமும் கழிவிரக்கமும் கொண்ட குரலில் பாடத் தொடங்குவார் ஜேசுதாஸ்.

    முதல் நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸ், பியானோ, புல்லாங்குழல் என்று வெவ்வேறு அடுக்குகளில் பிரிவின் ஏக்கமும், வனத்தின் ஏகாந்தமும் கலந்த இசைக்கோவையை உருவாக்கியிருப்பார் இளையராஜா. பெண் கோரஸ் குரல்கள் மெல்லத் தேய்ந்து மறைவதற்கும் பியானோ இசைக்கத் தொடங்குவதற்கும் இடையிலான நுட்பமான அந்த நிசப்தம், வனத்தில் தனித்திருக்கும் உணர்வைத் தரும். ‘காதல் ராகம் பாடியே…’ எனும் வரிகளைத் தொடர்ந்து, பாறையின் மீதேறி வழிந்தோடும் ஓடையை நினைவுபடுத்தும் சந்தூர் இசை தெறிக்கும்.

    இரண்டாவது நிரவல் இசையில், புதர்கள் மண்டிய குன்றின் கீழே முன்னேறிச் செல்லும் ஊர்வலத்தை உயரமான இடத்திலிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வைத் தரும் ஷெனாய் இசையை ஒலிக்க விடுவார் இளையராஜா. பியானோ, புல்லாங்குழல், சந்தூர் என்று பொதுவான இசைக் கருவிகளை வைத்தே வனத்தின் காட்சிகளை உருவாக்குவதுதான் இப்பாடலின் தனிச்சிறப்பு.

    இதே பாடலின் இன்னொரு வடிவத்தை ஜென்ஸி பாடியிருப்பார். உண்மையில், ஜென்ஸி பாடுவதுதான் படத்தின் முதன்மையான பாடல். அதன் சோக வடிவப் பாடல்தான் ஜேசுதாஸ் பாடுவது. அதீத உற்சாகம் கலந்த குரலில் ‘ஊர்வலத்தை’ ‘உர்வல’மாகக் குறுக்கி ஜென்ஸி பாடுவது குழந்தையின் குறும்பைப் போல் வேடிக்கையாகவும் களிப்பூட்டுவதாகவும் இருக்கும். பாடலின் எந்த வடிவமும் கண்களுக்கு இதமளிக்காது என்பதைச் சொல்லியாக வேண்டும்.

    பழங்குடி பெண்ணின் சுயம்வரத்தில் கலந்துகொள்ளும் ஆண்கள் தங்கள் தகுதிகளை விளக்கிப் பாடும் ‘அடி நாகு…என் ராசாக்கிளி’ பாடலை ஜெயச்சந்திரன், டி.எல். மகராஜன் போன்றோர் பாடியிருப்பார்கள். குதூகலமான பாடல் இது.

    மலேசியா வாசுதேவன் எஸ். ஜானகி பாடிய ‘மலர்களிலே ஆராதனை’ இப்படத்தின் முக்கியமான மற்றொரு பாடல். மன்மதனின் வியூகங்களுக்குள் அகப்பட்டுக்கொள்ளும் காதல் ஜோடி, காதலின் வேதனையை ஆராதித்துப் பாடும் இப்பாடலில் பெண் குரல்களின் கோரஸ், வயலின் இசைக்கோவை, புல்லாங்குழல், வீணை என்று இசைக் கருவிகளை வைத்து பிரத்யேகமான காதல் மொழியை உருவாக்கியிருப்பார் இளையராஜா. காதல் உலகுக்காக அவர் உருவாக்கிய தேசிய கீதங்களில் இப்பாடலும் ஒன்று!

    

  6. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  7. #714
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    காற்றில் கலந்த இசை 26: காதல் வனத்தின் தேசிய கீதம்!




    வெவ்வேறு நிலப்பகுதிகளுக்கு ஏற்ற இசையை வழங்குவது என்பது அந்தந்த நிலப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள், சத்தங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டும் சாத்தியமாவதல்ல. குறிப்பிட்ட அந்த இசையைக் கேட்பவர்களை அந்த நிலப்பரப்புக்கே அழைத்துச் செல்லும் அளவுக்கு, அந்த நிலப்பரப்பின் கூறுகளை இசைக் கருவிகளின் மூலம் நுட்பமாகப் பிரதிபலிக்கும் மேதமை தேவைப்படும் விஷயம் அது.

    வெவ்வேறு கலாச்சாரங்களின் பின்னணியிலான படைப்புகளுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா, இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தியவர். வனப் பகுதிகளில் படமாக்கப்பட்ட கரும்பு வில் (1980) திரைப்படத்தின் பாடல்கள் அந்த ரகத்தைச் சேர்ந்தவை.

    ஒய். விஜயா, சுதாகர், சுபாஷிணி உள்ளிட்டோர் நடித்தி ருக்கும் இப்படம் ஜி.ஆர்.பி. எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் விஜய் என்பவரது இயக்கத்தில் வெளியானது. காதல் கடவுளான மன்மதனின் போர்க் கருவியான கரும்பு வில்லைத் தலைப்பாகக் கொண்ட இப்படத்துக்கு உயிர்ப்பான காதல் பாடல்களைத் தந்தார் இளையராஜா.

    மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலமும், காடும் காடு சார்ந்த இடமான முல்லை நிலமும் சங்கமிக்கும் ஒரு பிரதேசத்தைக் கண் முன் நிறுத்தும் பாடல், ஜேசுதாஸ் பாடிய மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான். எம்.ஜி. வல்லபன் எழுதிய பாடல். பழங்குடி மக்களின் வாழ்வு முறையை நினைவுபடுத்தும் இசை மற்றும் பாடல் வரிகளின் மூலம் வெவ்வேறான மனச்சித்திரங்களை உருவாக்கக்கூடிய பாடல் இது.

    மாலை நேர ஒளி கவிந்திருக்கும் கானகத்தின் ஒற்றையடிப் பாதைகளின் வழியே, பழங்குடியின இசைக் கருவிகளை இசைத்துக்கொண்டு மலைக் கிராமத்து மக்கள் பல்லக்கு ஒன்றைத் தூக்கிச் செல்லும் காட்சி மனதில் தோன்றும். பல்லக்கில் நாயகன் அமர்ந்திருக்க, அவனது பிரிவைத் தாங்க முடியாத நாயகியின் குரல் மலைப் பாதைகளின் வழியே பின் தொடர்வதைப் போன்ற சிலிர்ப்பு மனதுக்குள் எழும்.

    பழங்குடியினரின் பொது இசைக் கருவியாகக் கருதப்படும் பெரிய அளவிலான டிரம்ஸ் இசையின் பிரம்மாண்ட அதிர்வோடு பாடல் தொடங்கும். தொடர்ந்து ஓலா ஓலா ஓலல்லா என்று பழங்குடியின பெண் குரல்கள் ஒலிக்கும். சீரான ஊர்வல நடையின் ஒலி வடிவமாக இப்பாடலின் தாளக்கட்டு ஒரே வேகத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும். சூரிய ஒளி அத்தனை எளிதாக ஊடுருவ முடியாத அடர்ந்த வனத்தை ஊடுருவிச் செல்லும் ஷெனாய் இசையை ஒலிக்க விட்டிருப்பார் இளையராஜா.

    வனப் பூக்களின் மீது துளிர்த்திருக்கும் பனித்துளியின் சிதறலைப் போல், சந்தூர் இசைக் கருவி ஒலித்து மறைய, மீன்கொடி தேரில் மன்மதராஜன் என்று கம்பீரமும் கழிவிரக்கமும் கொண்ட குரலில் பாடத் தொடங்குவார் ஜேசுதாஸ்.

    முதல் நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸ், பியானோ, புல்லாங்குழல் என்று வெவ்வேறு அடுக்குகளில் பிரிவின் ஏக்கமும், வனத்தின் ஏகாந்தமும் கலந்த இசைக்கோவையை உருவாக்கியிருப்பார் இளையராஜா. பெண் கோரஸ் குரல்கள் மெல்லத் தேய்ந்து மறைவதற்கும் பியானோ இசைக்கத் தொடங்குவதற்கும் இடையிலான நுட்பமான அந்த நிசப்தம், வனத்தில் தனித்திருக்கும் உணர்வைத் தரும். காதல் ராகம் பாடியே எனும் வரிகளைத் தொடர்ந்து, பாறையின் மீதேறி வழிந்தோடும் ஓடையை நினைவுபடுத்தும் சந்தூர் இசை தெறிக்கும்.

    இரண்டாவது நிரவல் இசையில், புதர்கள் மண்டிய குன்றின் கீழே முன்னேறிச் செல்லும் ஊர்வலத்தை உயரமான இடத்திலிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வைத் தரும் ஷெனாய் இசையை ஒலிக்க விடுவார் இளையராஜா. பியானோ, புல்லாங்குழல், சந்தூர் என்று பொதுவான இசைக் கருவிகளை வைத்தே வனத்தின் காட்சிகளை உருவாக்குவதுதான் இப்பாடலின் தனிச்சிறப்பு.

    இதே பாடலின் இன்னொரு வடிவத்தை ஜென்ஸி பாடியிருப்பார். உண்மையில், ஜென்ஸி பாடுவதுதான் படத்தின் முதன்மையான பாடல். அதன் சோக வடிவப் பாடல்தான் ஜேசுதாஸ் பாடுவது. அதீத உற்சாகம் கலந்த குரலில் ஊர்வலத்தை உர்வலமாகக் குறுக்கி ஜென்ஸி பாடுவது குழந்தையின் குறும்பைப் போல் வேடிக்கையாகவும் களிப்பூட்டுவதாகவும் இருக்கும். பாடலின் எந்த வடிவமும் கண்களுக்கு இதமளிக்காது என்பதைச் சொல்லியாக வேண்டும்.

    பழங்குடி பெண்ணின் சுயம்வரத்தில் கலந்துகொள்ளும் ஆண்கள் தங்கள் தகுதிகளை விளக்கிப் பாடும் அடி நாகுஎன் ராசாக்கிளி பாடலை ஜெயச்சந்திரன், டி.எல். மகராஜன் போன்றோர் பாடியிருப்பார்கள். குதூகலமான பாடல் இது.

    மலேசியா வாசுதேவன் எஸ். ஜானகி பாடிய மலர்களிலே ஆராதனை இப்படத்தின் முக்கியமான மற்றொரு பாடல். மன்மதனின் வியூகங்களுக்குள் அகப்பட்டுக்கொள்ளும் காதல் ஜோடி, காதலின் வேதனையை ஆராதித்துப் பாடும் இப்பாடலில் பெண் குரல்களின் கோரஸ், வயலின் இசைக்கோவை, புல்லாங்குழல், வீணை என்று இசைக் கருவிகளை வைத்து பிரத்யேகமான காதல் மொழியை உருவாக்கியிருப்பார் இளையராஜா. காதல் உலகுக்காக அவர் உருவாக்கிய தேசிய கீதங்களில் இப்பாடலும் ஒன்று!

    

  8. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  9. #715
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu


    ஒரு வேடம் மிச்சமிருக்கிறது!







    வெற்றிபெற்ற திரைக் கலைஞர்களுக்கு மூப்புமில்லை; மரணமுமில்லை. அவர்கள் சிரஞ்சீவியாக வாழ்கிறார்கள். அந்த வகையில் ஆச்சி மனோரமா உடல் மறைந்தாலும் தில்லானா மோகனாம்பாள் ஜில் ஜில் ரமாமணியும், அன்பே வா கண்ணம்மாவும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே இளமையுடன் நம்முள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

    நாடகங்களிலிருந்து வந்ததாலோ என்னவோ திரைப்படங்களில் நாடகக் காட்சிகள் இடம் பெற்றால் வெளுத்து வாங்கிவிடுவார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி கணேசன் குழு மற்றும் பத்மினி குழுவினர் கிளாஸிக்கல் இசை- நடனத்தின் பிரதிபலிப்பாக ஜொலித்தார்கள் என்றால் அடித்தட்டு மக்களைக் கவர்ந்த நாடக நடிகராக, ஒற்றையாளாக மனோரமா வெளுத்து வாங்கினார். சொந்த வாழ்வின் துயரங்களை மறைத்துக்கொண்டு மேடையில் ரசிகர்களை மகிழ்விக்கும் ஜில் ஜில் ரமாமணியாக, ரோஸ்ஸா ராணியாக செட்டிநாட்டுத் தமிழில் பேசி நடித்துத் தூள் கிளப்பினார்.

    இப்படத்தின் இயக்குநர் ஏ.பி. நாகராஜன் முன்னர் தான் இயக்கிய குலமகள் ராதை படத்தில் சிவாஜி கணேசன் வீட்டு வேலைக்காரப் பெண்ணாக மனோரமாவை செட்டிநாட்டு பாஷை பேச வைத்து நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கினார். அப்படம் வெற்றி பெறாததால் அது மக்கள் மத்தியில் பரவலாகப் போய்ச் சேரவில்லை. தில்லானா மோகனாம்பாள் மூலம் அதே பேச்சு வழக்கையே இன்னும் கொஞ்சம் இழுவையாக மெருகேற்றி, ஜில்லுவாக உச்சாணிக் கொம்பில் கொண்டுபோய் உட்கார்த்தி வைத்தார். அந்த வெற்றியின் பின்னணியில் ஆச்சியின் கடும் உழைப்பும் இருந்தது.

    துரை இயக்கிய ஒரு குடும்பத்தின் கதை படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண் வேடம். ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழ் கொஞ்சி விளையாடும் அவர் நாவில். அதே கெட்-அப்பில் அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்தால் எப்படியிருக்கும்? பாப் வெட்டிய தலை, கவுனுடன் லோகிதாசனை மடியில் கிடத்திக்கொண்டு மவ்னே லோகிதாஸா என அவர் கொச்சை மொழி பேசியபோது தியேட்டர் அதிர்ந்தது. பின்னர் ராஜபார்ட் ரங்கதுரை படம் நெடுகப் பல நாடகங்கள், நாடகங்கள் தோறும் பலப்பல கேரக்டர்கள். நாடக நடிகையாக அவர் செய்யும் அலம்பல்கள் அசல் நாடகக் கலைஞர்களைப் பிரதிபலித்தன. காசி யாத்திரை படத்தில் அம்பிகாபதி நாடகத்தில் அமராவதியாக நடித்தார். எல்லா நாடகங்களுமே நிஜத்தில் சோக நாடகங்கள். கல்யாணராமன் படத்தில் தேங்காய் சீனிவாசனுடன் இணைந்து மனோகரா நாடகத்தை சென்னைத் தமிழ் பேசி நடித்துக் குலுங்க, குலுங்கச் சிரிக்க வைத்தார்.

    மாறுபட்ட சந்திரமதி

    அரிச்சந்திரா, அம்பிகாபதி, மனோகரா நாடகங்களைப் பார்த்தால் யாராவது விழுந்து விழுந்து சிரித்திருக்கிறோமா? ஆனால், நகைச்சுவையால் அரங்கைக் குலுங்க வைக்கும் காட்சிகளாக அவை மாறியிருந்தன. மதுரை, கொங்குத் தமிழ், பிராமண பாஷை, சென்னைத் தமிழ் என தமிழகத்தின் அத்தனை வட்டார வழக்குகளும் அவருக்குத் தண்ணீர் பட்ட பாடு.

    சரஸ்வதி சபதம் படத்தில் அவர் தத்தித் தத்திப் பேசும் தமிழும் ஓர் அழகுதான். காசேதான் கடவுளடா படத்தில் பணத்தைப் பிசாசு போல அடைகாக்கும் பணக்காரப் பெண்ணாக, அப்பணத்தைச் சுற்றி வரும் அனைவரையும் தன் அதிகாரத்தால் கைக்குள் வைத்து அடக்கியாளும் கம்பீரமான ஒரு பெண்ணாக வந்து அசத்துவார். ஆயிரம் பொய் என்று ஒரு படம். அதில் அசோக்குக்கு உடம்பு சரியில்ல, அவனைப் பார்த்துக்க வீட்டோடு ஒரு டாக்டர் வேணும் என ஒரு டாக்டரைத் தேடுவார்.

    அவரைக் காதலிக்கும் சோ, போலி டாக்டராக வந்து சேருவார். அசோக் எங்கே இருக்கான்? என அவர் அப்பாவியாகக் கேட்க, அவரிடம் அசோக்கை அவன் இவன் என்று சொல்லக் கூடாது என்று கொஞ்சும் குரலில் கண்டிஷன் போடுவார். கடைசியில் அந்த செல்ல அசோக் அவர் வளர்க்கும் நாய்தான் என்று ரசிகர்களுக்குத் தெரிய வரும்போது தியேட்டரே அதிரும். அப்பாவித்தனமும், அதே நேரத்தில் பணக்காரச் செருக்கும் கலந்து கலகலக்க வைப்பார்.

    ஏற்காத வேடம்

    இப்படி எத்தனை எத்தனை படங்கள், எத்தனை, எத்தனை பாத்திரங்கள் கடந்த 50 ஆண்டுகளில் அனைத்து நடிகர்கள், நடிகைகளுடனும் இணைந்து நடித்துவிட்டார். அவரது உச்சக்கட்டம் 60, 70-கள்.

    இக் காலகட்டத்தில் அவர் இடம் பெறாத படமே இல்லை எனலாம். தங்கவேலு, காக்கா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, அவர் மகன் வாசு, சந்திரபாபு, நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளிராஜன், எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி என எத்தனை நடிகர்களுடன் ஜோடி போட்டிருந்தாலும் ரசிகர்கள் மனங்களில் பிரிக்க முடியாத ஜோடியாக நாகேஷுடன் மட்டுமே நினைவில் நிற்பவர். ஞானப்பறவை யில் நடிகர் திலகத்தின் ஜோடிப் பறவையாகவும் ஜொலித்தார்.

    நகைச்சுவைப் பாத்திரங்கள் முடிவுக்கு வந்தபோது குணச்சித்திரப் பாத்திரங்களை நகைச்சுவை கலந்து மெருகேற்றித்தான் அளித்தார். 1980-களுக்குப் பிந்தைய நாயகர்கள் அனைவருக்கும் அம்மா, ஆத்தா, அக்கா, அண்ணியாக வாழ்ந்தார். அம்மா என்றால் சும்மா இல்லை. கனம் நிறைந்த உணர்வுப்பூர்வமான வேடங்கள். மிச்சத்துக்கு நானிருக்கேன் என்று சத்துணவுக் கூடத்து அடுப்புத் தீக்குத் தன்னுடலைத் தரும் ஜென்டில்மேன் அம்மா, கண்களுடன் மனதையும் சேர்த்துக் கலங்க வைத்துவிடுவாரே! இது நம்ம ஆளு, இந்தியன், சூரியன், சின்னக்கவுண்டர், ராசுக்குட்டியின் அம்மாக்கள் அன்பும் கண்டிப்பும் கறாரும் நிறைந்தவர்கள் இல்லையா?

    வா வாத்யாரே வூட்டாண்டெ, நான் மெட்ராஸச் சுத்திப் பாக்கப் போறேன் என்று அவர் பாடிய இரண்டு பாடல்களுக்கும் இடையில் இரண்டு தலைமுறை இடைவெளி. எவர் கிரீன் அசத்தல்கள்! நாகஸ்வர வித்வான், நாடக நடிகை, மடிசார் கட்டிய மாமி, கிராமத்துப் பெண், கோடீஸ்வரி, குப்பைக்காரி, காபரே டான்ஸர், பர்மா அகதி, ஈழத் தமிழ்ப் பெண் என்று அவர் ஏற்காத வேடங்கள் உண்டா? தந்தை பெரியாராக நடிக்க வேண்டும் என்ற நடிகர் திலகத்தின் கனவு எப்படி நிறைவேறவில்லையோ, அதுபோல மனோரமாவும் விரும்பி ஏற்க நினைத்த திருநங்கை வேடம் மட்டும் அவருக்குக் கிடைக்கவே இல்லை. காலம் அதற்குள் முந்திக்கொண்டது. எந்த நடிப்புக் கலைஞருக்கும் அவர்கள் ஏற்று நடிக்க ஒரு வேடம் மிச்சமிருக்கத்தான் செய்கிறது.

  10. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  11. #716
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார்,

    என்ன சொல்வது.. வழக்கம் போல என்றும் இந்த ப் பாடல் பதிவினில் ரசித்து எழுதுகிறீர்கள் எனச் சொல்லலாம்..

    பாடல் எடுத்த நேரம், சிவகுமார் உயரம் மட்டு எனில் காலில் செருப்பில்லாமல் சந்திரகலா ப்ளாக் ஷூ சிவகுமார், அவரது சட்டையில் எம்ப்ராய்டரி, திறம்படச் சேலை கட்டும் மாதர்களில் – அதாவது புடவைக்குப் பொருத்தமாய் அளவான உயரத்தில் பூசினாற்போன்ற உடற்கட்டில்- சந்திரகலாவும் ஒருவர்,டிராலியில் கேமரா நடந்து கொண்டே வரும் ஷாட் என அனுபவித்து அழகாக வண்ணங்களில் எண்ணங்களை எழுத உம்மைப் போல் எவருண்டு.

    நடிகர் திலகம் இருக்கவேண்டிய பாடல் என்றீர்கள்.. அப்படிப் பட்ட பாடல்கள் நிறையவே இருக்கின்றன..என்ன செய்ய..அந்தக்கால டைரக்டர்கள் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.

    ஒளிப்பதிவு கே.எஸ். பிரசாத்.. இவர் தான் தில்லானா மோகனாம்பாளுக்கும் ஒளிப்பதிவு இயக்குனர். அந்த தில்லானா பாடலுக்குப் படமாக்கப் பட்ட கோணங்கள் மறக்க முடியுமா என்ன.. வேறு படங்கள் சட்டென எனக்கு நினைவுக்கு வரவில்லை..

    சந்திரகலாவின் சுமாரான அழகுக்குக் காரணம் அவருடைய சிகப்பு நிற முகப்பவுடர் கலந்த ஒப்பனை தான்..ஏற்கெனவே கொஞ்சம் மாநிற உடற்கட்டுக் கொண்ட அவரழகை இன்னும் சுமாராக்கி விட்டது.. ஒளிப்பதிவைக் குற்றம் கூற இயலாது..

    ரோஜா செடியிலிருந்து மலர்ந்து சிரித்தபடி இருக்கும்.. பறிக்கும் போது முட்குத்தும்.. ஆனால் இந்தப் பெண்ணோ ஏற்கெனவே தலைவனுக்காக மலர்ந்து பறிக்கப் பட்டு ப் புன்சிரிக்கும் பொல்லாத ரோஜாபோல் கன்னம் சிவந்து இருக்கிறாள்.. முத்தாரம் என்பதே பல நன்முத்துக்களால் கோர்க்கப் பட்ட ஆரம்.. அதுவும் அந்த முத்தாரங்களால் அலங்கரிக்கப்பட்டு தகதகவென ஆனிப் பொன்னால் செய்த ஊஞ்சலைப் போன்று மின்னும் மேனி கொண்டவள்.. இரண்டு வரிகளில் ஆழப் பொருள் தருவதற்கு கவிஞர் கண்ணதாசனை விட்டால் வேறு யார்..

    நல்ல பாடல் தான் வாசு..

    அன்புடன்

    ஆதிராம். (அர்ஜூனன், நீலிமா ராணி புகழ்).

    ஹி ஹி..வாஸ்ஸு.. ஆதிராம் சார் பாணியில் எழுதிப் பார்த்தேன்..

    அர்ஜூனன் – இலை தெரிகிறதா இல்லை கிளை தெரிகிறதா இல்லை என்ன தெரிகிறது கிளி மட்டுமே தெரிகிறது

    நீலிமா ராணி – மொழி படத்தில் பிருத்வி ராஜை ஒரு தலையாய்க் காதலிக்கும் பெண்ணாக நடித்தவர்.. அவருக்கு படத்தி பிருத்வி ராஜ் மட்டும் கண்ணுக்குத் தெரியும்..உடன் நிற்கும் பிரகாஷ் ராஜோ மற்றவரோ கண்ணில் தெரியமாட்டார்கள்!
    சரி வாஸ்ஸு.. என் பங்கு பாராட்டு…

    துள்ளிசைப் பாடல்களில் தூக்கிவிட்டே வந்திடுமே
    முள்ளிலா ரோஜாவே முன்.

    தேன்சிட்டுக் கன்னங்கள் தேடித்தான் தந்தீரே
    எண்ணமெலாம் நின்றீரே தான்…

    வழக்கம் போல நல்ல அலசல் நன்றி வாசு..

    pinna vaaren

  12. Likes vasudevan31355, RAGHAVENDRA liked this post
  13. #717
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கரும்பு வில் மீன்கொடித்தேரில் மன்மதராசன் ஊர்வலம் போகின்றான், மலர்களிலே ஆராதனை நினைவூட்டி விட்டுவிட்டீர்கள் எஸ்.வாசுதேவன் .. அந்தக்காலத்தில் கல்லூரியிலோ முடித்தோ.. நைட் பரீட்சை நேரங்களில் டீ குடிக்க வரும்போது இது டேப்ரிகார்டரில் ஒலிக்கும்..தவிர ரேடியோ வின் ஆல்டைம் ஃபேவரிட்..கடைசியில் படம் இங்கு வெளிவராமல் சிலோனில் ரிலீஸான நினைவு.. படிப்பினை ஊட்டும்குடும்பச் சித்திரம் என விளம்பரமும் கேட்ட நினைவு..

    வாஸ்ஸூ, போகும் ஸ்லோவைப் பார்த்தால் நான் நினைத்திருக்கும் கமல் ஜெய்யூ பாட்டு வர நாளாகும் போலிருக்கே இன் எஸ்.பி.பி.

  14. #718
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    முள்ளில்லா ரோஜா எப்போதும் வாடாததும் கூட...

  15. #719
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மதுண்ணா..சின்னப் பெண் ஒரு த்தி சிரிக்கின்றாள் தமிழில் வீடியோஇல்லையா என்ன ..படத்துலயே இல்லியா.. எனக்கு நினைவில்லை.. பார்த்தால் இந்த தெலுகு ரீமிக்ஸ் தான் வருது


  16. #720
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    அது போல ஞான ஒளியில் உள்ளம் போ என்றது நெருங்கிப் பார் என்றது.. இதுவும் படத்தில் இல்லை தானே..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •