Results 1 to 10 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தீபாவளி ...

    சிவாஜி ரசிகனுக்கு சிறந்த நாள்...

    மறக்க முடியுமா...

    ஒவ்வொரு தீபாவளியும் நமக்கு திருநாளே... 1972ம் ஆண்டு தவிர... அந்த ஆண்டு மட்டும் தீபாவளி செப்டம்பர் 29ம் தேதியே வந்து விட்டது..

    காலையில் எழுந்தோமானால் சிந்தனையே தியேட்டர் அளப்பரை எப்படி இருக்கும் என்னென்ன செய்யலாம்... இதில் தான் சுற்றி சுற்றி வரும்... தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னாடியே சார்ட் வரைந்து கொண்டு போய் வைத்து விடுவதில் அப்படி ஓர் அலாதி ஆர்வம்...

    அந்த அட்டை முன் அமரும் போது தலைவரைப் பற்றிய ஏராளமான கற்பனைகளில் மனம் லயித்து விடும். அந்த தீபாவளிக்கு வரக்கூடிய படத்தின் ரிசர்வேஷன் விளம்பரம், அந்தப் படத்தைப் பற்றி முன்கூட்டியே பத்திரிகைகளில் வந்திருக்கக் கூடிய செய்திகள் மற்றும் நிழற்படங்கள், முந்தைய படத்தைப் பற்றிய பதிவுகள், மற்றும் பேப்பர் கட்டிங்குகள், வித விதமான போஸ்களில் தலைவர் இருக்கக் கூடிய கார்ட்போர்ட் அட்டைகளிலிருந்து தலைவர் படங்களை ஒவ்வொன்றாக அழகாக கத்தரித்து விதவிதமான வகையில் ஒட்டுவது. சார்ட்டில் ஒட்டுவதற்கென்றே பிரத்யேகமாக வாழ்த்து அட்டைகளை வாங்குவது...

    குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும் இதையெல்லாம் செய்து முடிக்க.

    முடித்த பின் அதை பத்திரமாக தியேட்டர் வரை கொண்டு செல்ல வேண்டுமே.. தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே மழை ஆரம்பித்து விடும்..

    கொண்டு போய் தியேட்டர் ஷோகேஸிலோ அல்லது வெளியில் அதற்கென தரப்படக்கூடிய இடத்திலோ வைத்து பரவசமடையும் போது இந்த உலகமே நமக்குப் பின்னால்...

    தீபாவளிக்கு முன் நாள் படத்தின் போட்டோ கார்டு பார்க்க வரும் போது மக்கள் சார்ட்டையும் பார்த்து ரசிக்க ஆரம்பித்து விடுவர். அதைப் பற்றி வரக்கூடிய விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் கேட்பதிலும் மனம் புளகாங்கிதமடைந்து விடும்.

    தீபாவளி விடியக் கூடாது. காலை 6 மணிக்கெல்லாம் குளித்து பட்டாசு வெடித்து விட்டு நண்பர்களை சந்திக்க கிளம்பி விடவேண்டியது தான். கிட்டத்தட்ட அனைவருமே தலைவரின் ரசிகர்களே.. ஒரு நண்பனின் உறவினருக்கு தியேட்டர்களில் நல்ல செல்வாக்கு இருக்கும், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் எப்படியாவது வாங்கி விடுவோம். மாலைக் காட்சிக்குத் தான் பெரும்பாலும்.

    காலையில் ரசிகர் மன்றக் காட்சி... காது ஜவ்வு கிழியும் அளவிற்கு ஆர்ப்பரிப்பும் கரகோஷமும் உணர்ச்சி மிக்க குரல்களும் நம்மைப் பரவசமாக்கி விடும். மழையில் நனைந்து உடல் நலமின்றி ஜூரத்துடன் போனால் வரும் போது டாக்டர் செலவின்றி மருந்து மாத்திரையின்றி ஜூரம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் வகையில் உடல் சுறுசுறுப்படைந்திருக்கும். அது தான் தலைவரின் மகாத்மியம்..

    எத்தனை தீபாவளிகள்... விவரம் தெரிந்து 1966ல் சித்ராவில் செல்வம், 1967ல் ஊட்டி வரை உறவு இருமலர்கள்... அதே சமயம் நான் ரிலீஸ் வேறு... மூன்றுமே சக்கைப்போடு போட்டன. குறிப்பாக தீபாவளி என்றால் சாந்தி தியேட்டர் தான் நமக்கு சொர்க்கம். ஊட்டி வரை உறவு கூட்டமென்றால் அப்படி ஓர் கூட்டம்... தியேட்டரில் நிற்கக் கூட முடியாது... வழக்கம் போல தியேட்டரில் நம்மை வரவேற்பது ஷியாம் பிரசாத் ஹோட்டல் பேனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஸ்டார்களின் அணிவகுப்பு.. தோரணம்... தோரணங்களில் பல வண்ணங்கள்.. நடுநடுவே காங்கிரஸ் கொடி... பிட் நோட்டீஸ்கள் ஏராளமாய்.. பல மன்றங்கள் போட்டி போட்டுக்கொண்டு நோட்டீஸ் அடித்திருப்பர். அப்போதெல்லாம் போஸ்டர்கள் அதிகமாக புழக்கமில்லை. அதே போல 1968 தீபாவளிக்கு சித்ராவில் எங்க ஊர் ராஜா.. தலைவர் மீசையுடன் காலை அகட்டி நிற்கும் பேனர் நம்மை வரவேற்கும்.. அங்கேயே நாம் ஃப்ளாட்...

    1969லோ கேட்கவே வேண்டாம். தமிழகம் முழுவதுமே தீபாவளியை விட சிவந்த மண் ரிலீஸைத் தான் அதிகம் கொண்டாடியது. சிவந்த மண் படம் பேர் வைத்ததிலிருந்து அப்போது ஆரம்பித்த சைதை சிவந்த மண் சிவாஜி ரசிகர் மன்றத்தினர் குளோப் தியேட்டரில் முதல் மூன்று நாட்களுக்கு மூன்று காட்சிகளிலும் ரசிகர்களுக்கு சாக்கலேட், ஸ்வீட். பிட் நோட்டீஸ் கொடுத்தனர். குளோப் தியேட்டரில் இருக்கைகள் சற்றே அகலமாக இருக்கும். ஆனால் யார் உட்கார்ந்து படம் பார்த்தார்கள். படம் வரும் முன் ஒரு ராஜா ராணியிடம் மற்றும் பட்டத்து ராணி பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டன. ஆனால் தியேட்டரில் அந்த செங்கல்பட்டு மலையடியில் ஹெலிகாப்டர் சீனுக்குத் தான் நொடிக்கு நொடி அளப்பரை. இத்தனைக்கும் எனக்கு இரண்டாம் நாள் தான் டிக்கெட் கிடைத்திருந்தது. இருந்தாலும் அனுபவமோ முதல் நாள் முதல் காட்சியைப் போலத் தான்...

    1970 தீபாவளி வந்தது.. அன்று காலை...

    ... தொடரும்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks mr_karthik thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •