Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சிவா சார்,

    பாகம் 19 ஐ அம்சமாகத் துவங்கியதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.


    'ஸ்டைல் சக்கரவர்த்தி' விஜயகுமார் (மீள்பதிவு... சில புதிய விளக்கங்களுடன்)




    "மிஸ்டர் மைனர்...ரொம்ப நாழியா நீங்க நிக்கிறீங்களே... உக்காருங்க"... என்று பழிவாங்கும் படலத்தை பக்காவாகத் தொடங்குமிடம்.....

    அதே போல நாற்காலியைத் தள்ளி மைனரின் தன்மானத்தைத் தவிடுபொடியாக்குமிடம்....

    "மிஸ்டர் மைனர்... என்னைத் தெரியுதா?" (கூலிங் கிளாசை கழற்றிவிட்டு) "தெரியல?" என்றபடி நொடிப்பொழுதில் கோட்டைக் கழற்றி, பின் ஷர்ட்டையும் கழற்றி, முதுகைத் திருப்பி முன் அடிபட்ட தழும்புகளைக் காட்டும் ஆவேசம்....

    "தெரியல...தெரியல"...என்று கேட்டபடியே ஷர்ட்டை சடுதி நேரத்தில் போட்டு பட்டன்களைப் போடாமல் அப்படியே பேன்ட்டுக்குள் செருகும் செம ஸ்டைல்...

    "சாப்பாட்டு ராமன்" என்றபடி கைகளை தடதடவெனக் கொட்டி "கதவை இழுத்துப் பூட்டு" என்று கட்டளையிட்டு கர்ஜிக்குமிடம்...

    "யாராவது இங்கிருந்து அசைஞ்சா சுட்டுப் பொசுக்கிடுவேன்" என்றபடி சென்று பிரம்பை எடுத்து (காமெராவின் லோ ஆங்கிளில்... நம்பியார் கீழே விழுந்தபடி பார்த்தால் எந்த ஆங்கிளில் தெரிவாரோ அந்த ஆங்கிளில்) வளைத்து, நம்பியாரை நோக்கி நான்கு ஸ்டெப்கள் படு ஸ்டைலாக நடந்து வந்து வந்து எட்டி உதைத்து விட்டு,

    "அன்னைக்கு சொன்னேனே ஞாபகம் இருக்கா?... ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும்"....என்று சவுக்கை ஓங்கும் வேகம்...தான் முன்னம் ராமனாக நம்பியாரிடம் உதைபடும் அந்த குட்டி பிளாஷ்பேக்கிற்கு பிறகு ஓங்கின பிரம்பை மெதுவாகக் கீழே இறக்கி 'சடேலெ'ன உதறும் மின்னல் வேகம்....(அடாடடடா! என்ன ஒரு காட்சி! என்ன ஒரு வேகம்! என்ன ஒரு ஸ்டைல்!) அத்தனை மனக்குமுறல்களையும், கோபங்களையும், ஆத்திரங்களையும் அந்த ஒரு உதறலில் தீர்த்துக் கொள்வார்!

    நம்பியாரின் மேல் சூட்கேஸில் உள்ள பணத்தை வீசி அடிக்கும் போது 'எத்தனை லட்சம் வேணும்?' என்று கேட்பார். இந்தக் காட்சியை அப்படியே ஓடவிட்டு கண்ணை மூடிக் கொண்டு தலைவர் சொல்லும் அந்த வசனத்தைக் கேளுங்கள். சிங்கம் ஒன்று நேரில் பேசுவது போல அப்படி ஒரு கர்ஜனையாய் அது ஒலிக்கும்.

    'லட்சாதிபதியா வரணும்னு சொன்னே இல்லே! கோடீஸ்வரனா வந்திருக்கேன்...கூப்பிடு உன் தங்கையை' என்று கர்ஜித்துக் கொண்டே கையில் இருக்கும் பிரம்பால் வெகு நேர்த்தியாக நம்பியாரின் இடது மார்பில் பாய்ச்சி நிற்க வைப்பார். உலகில் உள்ள ஒவ்வொரு துரும்பும் இவர் சொல் கேட்கும். அவருக்கு அடங்கும். இந்தப் பிரம்பும் அப்படித்தான்.

    "கூப்பிடு உன் தங்கையை" என்று சொல்லி பதிலுக்குக் காத்திராமல் "தேவகி" என்றபடி மாடிப்படிக்கட்டுகளில் ஏறும் அசுர வேகம்... "தேவகி" என்று கூப்பிட்டபடியே தேவகியின் ரூமுக்குள் அவசர, ஆனால் ஆழமானதேடல்.(தேவகியின் பெட் அருகில் ஓடிப் போய் நிற்கும் போது ஸ்பீடைக் குறைக்க கால்களால் ஒரு அழகான பேலன்ஸ் பண்ணுவார்) பின் எதிர் ரூமிலும் தேடிவிட்டு ('தேவகி') என்று கூப்பிட்டபடி பிரம்பை விசிறியபடியே 'சட்'டென்று உடலை இடப்புறமாகத் திருப்புவார். காமெராவுக்குக் கட்டுப்படாத ஸ்பீடாக அது இருக்கும். அளித்திருக்கும் ஸ்டில்லைப் பாருங்கள். எப்படி இருக்கிறது?)



    'சரசர'வென படிக்கட்டுகளில் படுவேகமாக இறங்கிவரும் ஆர்ப்பாட்டம்...(அது என்ன ஸ்பீடா?... ஸ்பீடான்னு கேட்கிறேன். மனுஷன் கண்மூடி கண் திறப்பதகுள் கீழே இறங்கி வந்து விடுவார்)
    19 அல்லது 20 படிக்கட்டுகளில், அனாயாசமாக அவ்வளவு வேகத்தில், அதாவது ஆறே வினாடிகளில் இறங்கி வந்து விடுவார். இந்த ஸ்பீடில் வேறு எவரும் இறங்கி வரவே முடியாது...இயலாது..அவர் ஒருவரைத் தவிர. இறங்கும் வேகம் ஒருபுறம் இருக்கட்டும். இறங்கும் அழகு...ஸ்டைல் இருக்கிறதே அதை பற்றி வார்த்தைகளால் வடித்து விட இயலுமா?

    இன்னும் எப்படித்தான் எழுதுவது? எப்படித்தான் புகழ்வது? ஒன்றுமே தெரியவில்லை. புரியவில்லை. யானைத் தீனிக்கு சோளப்பொறிதான் போட முடிகிறது. தோண்டத் தோண்ட அதுபாட்டுக்கு வந்து கொண்டே இருக்கிறது. நான் என்ன செய்யட்டும்? படைத்த பிரம்மன் என் கடவுளைப் பற்றி எழுத இன்னும் பத்து கைகள் படைத்திருக்கக் கூடாதா?
    Last edited by vasudevan31355; 15th June 2017 at 12:04 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks sivaa thanked for this post
    Likes adiram liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •