Page 159 of 210 FirstFirst ... 59109149157158159160161169209 ... LastLast
Results 1,581 to 1,590 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

 1. #1581
  Junior Member Diamond Hubber
  Join Date
  May 2021
  Location
  Hungary
  Posts
  0
  Post Thanks / Like
  புரியும் பார் முடிவிலே!
  ----------------------------------
  எம்.ஜி.ஆர்!
  இவரை அரசியல் கடவுள் எனலாம்!
  காரணம்?? இன்றைய அரசியல் களத்தில்--
  இவரைப் புகழ்ந்து,,இவர் ஆட்சியைக் கொடுப்பேன் என்போரும்=
  இவரைத் திட்டுவதனாலாவது தமக்கு விளம்பரம் கிடைக்குமா என்று ஏங்குபவர்கள் ஒரு புறமாய் உலா வருகிறார்கள்!
  கடவுள் விஷயத்தில் தானே--ஆத்திகன்--நாத்திகன் என இரு பிரிவு??
  சமீபத்தில் டாக்டர் காந்தராஜ் என்னும் தற்குறி ஒன்று தலை கால் புரியாமல் உளறியிருக்கிறது--
  எம்.ஜி.ஆர் அட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை?
  சத்துணவு திட்டத்தின் மூலம் அன்றைய மாணவர்களை சோத்துக்குக் கையேந்துபவர்களாக மாற்றியது தான் எம்.ஜி.ஆரது ஒரே சாதனை?
  எம்.ஜி.ஆர் தன் ஆட்சியில் உழைப்பவர்களையும் சோம்பேறிகளாக்கினார்?
  இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் வக்கணையாகப் பேச--
  வேலை வெட்டியில்லாத ஒரு சானலும் அதைக் கர்ம சிரத்தையாக ஒளி பரப்பியிருக்கிறது
  முத்து முத்தாக மலர் சிந்தினால் சுகிக்க முடியும்!
  கொத்து கொத்தாக மலம் கொட்டினால் சகிக்க முடியுமா?
  இந்த லட்சணத்தில் இந்தப் பிரகஸ்பதி ஒரு டாக்டராம்?
  பெரியாரின் சீடராம்!
  அதானே?/ ராமசாமி நாயக்கரின் கூட்டம் நாகரீகமாகவும் நாணயமாகவும் என்னிக்குப் பேசியிருக்கு?
  நாம் இப்படிக் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது--என்னிடம் இந்த தரித்திரம் சொல்கிறது--
  எம்.ஜி.ஆரும்,,ஜெவும் பெரியாரிஸத்தைக் காற்றில் பறக்க விட்டார்களாம். அதனால் தமிழகத்தைப் பாழ் படுத்திவிட்டார்களாம்??
  நேற்று இந்தக் காமெடியனிடம் நான் பேசினேன்
  எங்கள் இருவருக்குமிடையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அனல் பறக்கும் விவாதம் நடந்தேறியது.
  மனிதர் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் போதுமா என்று நக்கலாகச் சொல்ல--
  உங்களின் உதிர்வுகள் அக்மார்க் உளறல்கள் என்னும்போது உங்கள் மன்னிப்பு எனக்குத் தேவையே இல்லையே என்று அதைவிட நக்கலாகச் சொன்னேன்?
  இந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் பெயரை எவர் உச்சரித்தாலும் அவருக்கு டெபாஸிட் காலியாம்?
  காலி--யாம் இந்தக் கருத்துக் குருடர் சொல்கிறார்?
  இந்த நேரத்தில் ஒன்றை இங்கேக் குறிப்பிட்டே ஆக வேண்டும்!
  கல்லிடைக் குறிச்சி ராமன் கிருஷ்ணன்,,திண்டுக்கல் சென்றாய் பெருமாள்,,மலரவன்--இப்படி நிறைய எம்.ஜி.ஆர் பக்தர்கள் இந்த ஆளிடம் தங்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்
  ஆனால் அவை போதாது!
  ஆட்சியில் அதிகாரத்தில் உள்ள பரமார்த்த சீடர்கள் கொஞ்சமாவது உப்பை,,தம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்!
  இத்தகைய விஷக் கிருமிகளை முளையிலேயேக் கிள்ளியெறிய வேண்டும்
  எம்.ஜி.ஆரும் இரட்டை இலையும்,,அம்மாவும் மேஜிக் செய்து எங்கள் கட்சியைக் காப்பாற்றுவார்கள் என்று பல்லைக் குத்திக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பதில் எந்தப் பயனும் இருக்காது?
  ஆதாயம் கருதாத பக்தர்கள் மட்டுமே இத்தகைய ஈனப் பிறவிகளிடம் மல்லுக் கட்ட வேண்டும்--
  ரஜினி,,கமல் போன்றவர்கள் எம்.ஜி.ஆரை உயர்த்திப் பேசினால் சண்டைக்குப் போவோம் என்ற இன்றைய மேல் மட்டக் கட்சி பிஸ்தாக்கள் நினைப்பது ஆச்சர்யம் மட்டுமல்ல காமெடியும் கூட!
  எம்.ஜி.ஆரையும்,,ஜெவையும் அடுத்தடுத்துக் குதறியிருக்கிறது இந்தக் கருமாந்திரம்
  அடுத்தவர்கள் எம்.ஜி.ஆரைப் பற்றி உயர்த்திப் பேசுவது சந்தர்ப்பவாதம் என்றால்--
  எம்.ஜி.ஆரைக் கேவலப்படுத்துபவர்களை தட்டிக் கேட்காமல் இருப்பது--விசுவாச துரோகம்!
  இன்றைய அ.தி.மு.க கரை---கறைகளை அவர்களின் அம்மாவின் ஸ்டைலிலேயேக் கேட்கிறோம்--
  செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா???!...vtr...

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #1582
  Junior Member Diamond Hubber
  Join Date
  May 2021
  Location
  Hungary
  Posts
  0
  Post Thanks / Like
  #எனது #தேவையே #பிறரின் #நன்மை #தான்

  ஓராண்டில் எத்தனை இடத்தில் வேலை செய்தாய் என்பது சிறுமை. ஒரே இடத்தில் எத்தனை ஆண்டுகள் இருந்தாய் என்பதே பெருமை.

  இப்பல்லாம் அலுவலகத்திலும் சரி, பங்களாவிலும் சரி பணிபுரியும் காலம் ஒரு வருடமோ இரு வருடமோ...
  பணிபுரிந்து விட்டு...
  அப்புறம் எஸ்கேப்... அதற்கு பல காரணங்களைக் கூறுவதையும் இன்று நாம் காண்கிறோம்...
  ஒரு சிலர் மட்டும் வேறு வழியில்லாமல் அவரவர் இடங்களைத் தக்கவைத்துக் கொள்வதையும் நாம் காண்கிறோம்...
  யாரையும் குறை சொல்வதற்கில்லை...
  வாழ்க்கையை ஓட்டணுமே...!

  ஆனால்..
  அப்படி ஓய்வு பெறாமல் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆயுள் முழுவதும் புரட்சித்தலைவரிடம் வேலை செய்தவர்கள் எல்லோரும். அவரிடம், வயதைக் கணக்கெடுத்து ஓய்வு பெற்றவர்கள் யாருமில்லை...

  இப்படி,
  மாணிக்கம், சமையல்காரர் ரத்தினம், திருப்பதிசாமி, கணக்கர் சாமி, செக்யூரிட்டி கிருஷ்ணன், சபாபதி, கார் டிரைவர் கதிரேசன், கோபால் என இன்னும் பலர் பட்டியல் நீளும்...

  அவரிடம் பணிபுரிவதை தம் பாக்கியமாகவே கருதினர். அவர் வேலைக்கு மட்டுமல்ல. தேவைக்கும் கொடுத்தார் என்பதாலா ???

  இல்லை...

  சாதாரண நடிகராக இருந்தபோது தங்களிடம் எப்படி பழகி னாரோ, மரியாதை அளித்தாரோ அதில் இம்மியளவும் குறையாமல், தான் முதல்வரான பிறகும் அதைத் தொடர்ந்து கடைபிடித்ததும்...கருணையுள்ளவராக நடந்துகொண்டதும்...தன்னிடம் பணிபுரிபவர்களை வெறும் பணியாளர்களாக எண்ணாமல் தனது குழந்தைகளாகவே பாவித்ததும் ஆகும்...

  வாஸ்தவம் தான்...

  இதயதெய்வம் பொன்மனச்செம்மலைத் தஞ்சம் அடைந்தவர்களுக்குத் தேவை என்பதே இருக்காது...bsm...

 4. #1583
  Junior Member Diamond Hubber
  Join Date
  May 2021
  Location
  Hungary
  Posts
  0
  Post Thanks / Like
  என்ன செய்தார் எம்ஜியார்...?!
  -----------------------------------
  மாணவர்கள் படிப்பு என்பது 11+1+3+பட்ட மேற்படிப்பு...

  என்று இருந்தது .. அப்பொழுது கல்லூரிகள்

  மாவட்ட தலைநகரில் இருந்தது

  அல்லது 50 கி மீ தூரத்தில் இருக்கும் ..

  இதனால் கிராமபுறத்தில் படிக்கும் மாணவன்

  பாட சுமை .... பெற்றோரை விட்டு பிரிந்து இருக்கும்

  வாழும் சூழல்.... கல்லூரி மாணவர் சேர்க்கையினால்...

  பெரும்பாலும் அந்த புகுமுக வகுப்பில்

  தோல்வி அடைவார்கள்... பி யு சி என்பது கடினமான

  ஒரு காலகட்டமாக இருக்கும்... அதை எளிதாக்கினார்

  பள்ளியிலேயே 10+2+3+பட்ட மேற்படிப்பு என்று

  பட சுமைகளை குறைத்தார் பி யு சி பாடங்களை

  +1 +2 வகுப்பில் புகுத்தினார்... இதனால் கல்லூரிக்கு...

  போகும் மாணவர் எண்ணிக்கை கூடியது ...

  நிறைய பட்ட தாரிகள் தமிழ்நாட்டில் உருவாகினர் ...

  வாழ்க எம்ஜியார்...

  வாழ்க தமிழ்............grm...

 5. #1584
  Junior Member Diamond Hubber
  Join Date
  May 2021
  Location
  Hungary
  Posts
  0
  Post Thanks / Like
  என்ன செய்தார் எம்ஜியார்?!
  -----------------------------------
  சத்துணவு திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர் வருகை

  கூடியது.... அதனால் ஏற்கனவே இருக்கும் பள்ளிகளில்

  போதிய வசதிகள் இல்லததால்... புது பள்ளிகள்

  கல்லூரிகள் துவங்கவேண்டிய கட்டாயம் உருவானது

  ...அதற்கு நிலம்... நிதி ...ஆசிர்யர்.. அவர்களுக்கு

  கொடுக்கப்டும் சம்பளம் ...போன்றவை அரசுக்கு

  பிரச்சினையாக இருந்தது... ஏற்கனவெ சமய சார்புள்ள

  கல்வி நிலையங்கள் அறகட்டளைகள்மூலம்...

  நடத்தபாடும் கல்வி நிலையங்கள்... நல்ல முறையில்

  இயங்கிவந்தன... அதனால் அந்த மாதிரி தொண்டு

  நிறுவனங்கள்.. அறக்கட்டளைகளுக்கு அனுமதி அளித்து

  ..குறைந்த கட்டணத்தில் மாணவர்களை சேர்க்க அனுமதி

  அளித்தர்..1960..... 70 களில் மாவட்ட தலை நகரில் மட்டும்

  கல்லூரி இருக்கும்... அடுத்து பெரு நகரில் இருக்கும்.

  50 கி மீ 60 கி மீ தோலைவில் இருக்கும் கல்லூரிக்கு...

  போகமுடியாமல் பள்ளிகல்வியுடன் படிப்பை

  நிறுத்திகொண்டவர்கள் நிறய பேர் இருந்தனர்....

  .இதை மாற்றி 10 கி மீ க்குள் ஒரு கல்லூரி வரும்

  அளவுக்கு சட்ட திட்டங்களை எளிமையாக்கினார்..

  அதனால் மிக கூடுதலாக தனியார் கல்லூரிகள் வந்தன..

  இப்போது இந்தியாவில் மிக அதிகமான பட்டதாரிகள்

  தமிழகத்தில் இருப்பது இதனால்தான்..

  ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது வெளினாடுகளுக்கு

  பொறியியற் பட்டதாரிகள் மருத்துவர்கள்

  தமிழ்னாட்டில் இருந்துதான்

  அதிகமான பேர் போகிறார்கள் ...

  வாழ்க எம்ஜியார்

  வாழ்க தமிழ்...MaGR...

 6. #1585
  Junior Member Diamond Hubber
  Join Date
  May 2021
  Location
  Hungary
  Posts
  0
  Post Thanks / Like
  தொலை காட்சி பெட்டிகள் அறிமுகம் ஆன நேரம் அப்போது..

  தூர்தர்சனில் தலைவரின் நம்நாடு படம் அன்று ஒளிபரப்பு..

  தலைவர் வீட்டில் தோட்டத்தில் பணி முடிந்து யாரும் வீட்டுக்கு செல்லவில்லை... என்ன யாரும் வீட்டுக்கு போகவில்லை என்று தலைவர் கேட்க இன்று உங்கள் படம் நம்நாடு உங்களுடன் அமர்ந்து பார்க்க விரும்புகிறோம் என்று பதில் கிடைக்க.

  மன்னவன் புன்முறுவல் ஓடு அனைவரையும் உள்ளே ஹாலுக்கு அழைத்து அவர்கள் நடுவில் தானும் அமர்ந்து நம்ம நாட்டின் நிலையை பார்த்து மகிழ்ந்தனர்..

  இடையில் படத்தின் நடுவே அனைவருக்கும் இனிப்பு..காரம்..டீ. பால் போன்றவை சுட சுட வழங்க பட்டன...

  மகிழ்வுடன் படம் முடிந்து அனைவரும் தத்தம் வீடு திரும்ப மன்னவன் சிந்தனை அன்று இரவு வேறு மாதிரி யோசிக்க.

  மறுநாள் தன் வீட்டில் வேலை செய்யும் அன்பர்கள் வீட்டில் டி.வி க்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டு கணக்கு எடுக்க பட்டு அனைவர் வீட்டிலும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் மொத்தம் ஆக வாங்கி அவரவர் வீட்டில் பொறுத்த பட்ட நிகழ்வை ...

  பணியாளர்கள் வீட்டில் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வந்து இறங்கி அவை பொருத்தப்படும் போதே அவர்களுக்கு தெரியும் நம் தலைவர் அவர்களுக்கு கொடுத்த பரிசு என்று....

  எத்தனை பெரிய நடிகர்களால் இப்படி சிந்திக்க முடியும்..
  அதனாலே நம் தலைவர் என்றும் வாழ்கிறார் நம் நாட்டில்.

  ஊருக்கு உழைச்சாலே ஏழை உரிமையை மதிச்சாலே...தானே பதவிகள் தேடி வந்தன.
  பெருமைகள் நாடி வந்து அவை என்றும் நிலைத்து நிற்கின்றன..

  வாழ்க தலைவர் புகழ்.
  உங்களின் ஒருவன் நெல்லை மணி.

  நன்றி தொடரும்.

  வள்ளல் வரலாறு...........

 7. #1586
  Junior Member Diamond Hubber
  Join Date
  May 2021
  Location
  Hungary
  Posts
  0
  Post Thanks / Like
  M.g.r. எந்த அதிகாரப் பதவியில் இல்லாதபோதும் பல்வேறு நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்குச் சென்றுள்ளார். நடிகராக இருந்த ஒருவரை அவரது மக்கள் சேவைக்காக பல்வேறு உலக நாடுகள் அழைப்பு அனுப்பி கவுரவித்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள சிறப்பு!

  சிறு வயதில் நாடகத்தில் நடிப்பதற் காக எம்.ஜி.ஆர். ரங்கூனுக்குச் சென்றுள்ளார். பின்னர், 1965-ம் ஆண்டு இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.

  யாழ்ப்பாணம் விளையாட்டு மைதா னத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்துக்கு இலங்கை நீதிபதி தம்பையா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர். சிறந்த கலைஞர் மட்டு மல்ல; சிறந்த கொடையாளி. என் வாழ்நாளில் இந்தப் பகுதியில் இப்படி ஒரு பெருங்கூட்டத்தை பார்த்ததில்லை. தன்னைக் காண இலங்கையிலும் பெரும் கூட்டம் கூடும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்துவிட்டார்’’ என்றார்.

  இலங்கை பிரதமர் டட்லி சேனநாய காவை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்.ஜி.ஆர், அவருக்கு தென்னிந்திய நடி கர் சங்கத்தின் சார்பில் தந்தத்தால் செய்யப்பட்ட நேரு சிலையையும் தன் சார்பில் தந்தத்தில் ஆன மேஜை விளக்கையும் பரிசளித்தார். சிங்கள திரைப்படக் கலை ஞர்கள் சார்பில் இலங்கை விஜயா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆரு.க்கு வர வேற்பு அளிக்கப்பட்டது. தான் பிறந்த கண்டி நகரையும் சென்று பார்த்தார்.

  1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். அப்போது பலத்த மழை. அப்படியும் எம்.ஜி.ஆரின் பேச்சை லட்சக்கணக்கானோர் நனைந்தபடியே கேட்டனர். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

  சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு 1972-ல் அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!

  ‘‘எங்கள் குழுவினரின் கலை நிகழ்ச்சி கள் மூலம் சுமார் ஒரு லட்சம் டாலர் வரை (செலவு போக) சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த வரவேற்பை, அந்நாட்டின் வளர்ச்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது’’ என்று 1973-ம் ஆண்டு ஜனவரி மாத ஃபிலிமாலயா இதழில் சிங்கப்பூர் பயணம் பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.

  மாஸ்கோவில் 1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.

  இந்திய அரசின் சார்பில் அப்பொழுது செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் (பின்னாளில் பிரதமராகவும் பதவி வகித்தார்) கலந்து கொண்டு பேசினார். படவிழா பிரதிநிதிகளுக்கு எம்.ஜி.ஆரை அவர் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழகத்தில் அவரது செல்வாக்கு பற்றியும் அவரது படங்களின் மகத்தான வெற்றிகள் பற்றியும் எடுத்துரைத்தார். லெனின்கிராடு நகருக்கும் எம்.ஜி.ஆர் சென்றார். ரஷ்ய வானொலி நிலை யத்தினர் அவரைப் பேட்டி கண்டு அதை ரஷ்ய மொழியில் ஒலிபரப்பினர்! பின்னர், மாஸ்கோவில் இருந்து லண்டனுக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.!

  லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., லண்டன் பி.பி.சி. வானொலிக்கு சிறப்புப் பேட்டி அளித் தார். அங்கிருந்து பாரீஸ் நகருக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, கிழக்கு ஆப்பிரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்!

  நடிகராக இருந்தபோது, ஒரு நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு! 1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!

  1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெ ரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியின்போது சிக்கலான கேள்வி களுக்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாகவும், நேர்மையாகவும் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினார்! புகழ்பெற்ற மவுன்ட் சினாரியோ கல்லூரி சார்பில் அவருக்கு வரவேற்பிதழ் அளிக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது அதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்!

  ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் படமாக்கி, தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. நிஜத்திலும் அவர் உலகம் சுற்றிய வாலிபன்தான்!

  நன்றி தி இந்து..........

 8. #1587
  Junior Member Diamond Hubber
  Join Date
  May 2021
  Location
  Hungary
  Posts
  0
  Post Thanks / Like
  " என்ன செய்தார் எம்ஜிஆர் " என்று கேட்கும் அரசியல் lkg சீமானே...பதில் இதோ...

  முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவர் ஆற்றிய மக்கள் பணிகள் குறித்து சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி நினைவுகூர்ந்துள்ளார். அது வருமாறு:

  தமிழகத்தில் தி.மு.க. இயக்கத்தை வளர்த்ததும், ஆட்சியில் அமர்த்தியதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.தான். இதனை அடுத்த தலைமுறைக்கு விளக்கவேண்டிய கடமை என்னைப்போன்ற எம்.ஜி.ஆர். கொள்கைவாதிகளுக்கு இருக்கிறது.

  1952-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவுடன் இணைந்தார். ஞானிகள், சிந்தனையாளர்கள் மற்றும் அனைத்து மதங்களிலும் உள்ள சிறந்த கருத்துகளை எளிமையாக்கி, தன்னுடைய திரைப்படம் மூலம் மக்களுக்கு வழங்கிய எம்.ஜி.ஆர்., திரையரங்குகளை பாடசாலையாக மாற்றினார்.

  நேர்மை, பாசம், நாட்டுப்பற்று, பெரியோரிடம் மரியாதை, தனிமனித ஒழுக்கம், மனிதநேயம் போன்றவற்றை மக்களுக்கு சொல்லித்தரும் வாத்தியாராக விளங்கினார். பாட்டுப்புத்தகம், பாடல் வரிகள், வசனங்கள், காட்சி அமைப்பு மூலம் தி.மு.க. கொடி, சின்னம், கொள்கைகளை பட்டிதொட்டியெங்கும் பரப்பி, அண்ணாவின் இதயக்கனியாகவே மாறினார்.

  புரட்சித்தலைவரின் பிரசாரம் காரணமாகவே, 1957-ம் ஆண்டு முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. 15 இடங்களில் வெற்றியும், 1962-ம் ஆண்டு 50 இடங்களில் வெற்றியும் பெற்று பீடுநடை போட்டது.

  1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. பெரும் வெற்றியடைந்து, அண்ணா ஆட்சியில் அமர்ந்தார் என்றால், அந்த வெற்றிக்கு முழு காரணமும் எம்.ஜி.ஆர்.தான். ஆம், அப்போது தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு கழுத்தில் கட்டுப்போடப்பட்ட போஸ்டர்கள் மட்டுமே ஒட்டப்பட்டன.

  போஸ்டரில் அந்த காட்சியை கண்டு கதறிய மக்கள் தி.மு.க.வுக்கு வாக்குகளை அள்ளிக்குவித்தார்கள். அதனால்தான், அண்ணாவை பாராட்ட மாலையுடன் வந்த கட்சி பிரமுகர்களிடம், ‘மாலைக்கு சொந்தக்காரர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார்’ என்று எம்.ஜி.ஆரிடம் அனுப்பிவைத்தார். மேலும், புரட்சித்தலைவர் ஒப்புதலுடனே அமைச்சரவை பட்டியலையும் வெளியிட்டார். அண்ணா இல்லாத நிலையிலும், 1971-ம் ஆண்டு தேர்தலில் எம்.ஜி.ஆரின் பரப்புரையால் தி.மு.க. கூட்டணிக்கு 205 இடங்கள் கிடைத்தன.

  கருணாநிதியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு நீக்கப்பட்டதும், தமிழகம் காணாத மாபெரும் புரட்சியும், எழுச்சியும் உருவானது. அடுத்து நடந்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. முதல் வெற்றியைப் பெற்றது. அந்த தேர்தலில், பெரும்பான்மை பலத்துடன் இருந்த தி.மு.க., மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. அதன்பிறகு, புரட்சித்தலைவர் உயிருடன் இருந்த வரையிலும் கருணாநிதியால் ஆட்சிக்கு வரவே முடியவில்லை.

  1977-ம் ஆண்டு புரட்சித்தலைவரின் கூட்டணிக்கு 142 இடங்கள் கிடைத்தன. 1980-ம் ஆண்டு 162 இடங்கள், 1984-ம் ஆண்டு 195 இடங்கள் என்று நாளுக்குநாள் செல்வாக்கு வளர்ந்துகொண்டே இருந்தது. மக்களின் அமோக ஆதரவுக்கு காரணம், அவர் உழைத்து சம்பாதித்த அத்தனை செல்வத்தையும், சாதி, மத, இன பாகுபாடு பாராமல் மனிதநேயத்துடன் அள்ளியள்ளிக் கொடுத்ததுதான். ‘ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்’ என்று சினிமாவில் பாடியதை நிஜ வாழ்க்கையில் செய்து காட்டினார். புரட்சித்தலைவரின் 10 ஆண்டு கால ஊழலற்ற அறம்சார்ந்த ஆட்சியில் சில துளிகள் இங்கே.

  * தனியார் ரேஷன் கடைகளில் நடக்கும் தவறுகளை, ‘நம் நாடு’ படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார் புரட்சித்தலைவர். அந்த தவறுகள் நடைபெறாத வகையில், அரசு மூலமாக 22 ஆயிரம் முழுநேர நியாயவிலைக் கடைகளைத் திறந்து எல்லோருக்கும் எல்லாமும் கொடுத்தார்.

  * ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார். பள்ளியில் பயிலாத 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்கப்பட்டது.

  * மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச காலணி, இலவச பாடப்புத்தகம், இலவச பல்பொடி வழங்கப்பட்டன. கல்வி சீர்திருத்தமாக +2 பாடத்திட்டம், மருத்துவப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு அறிமுகமாயின. தனியார் பொறியியல் கல்லூரிகளை அனுமதித்த கல்விக்கொள்கையால்தான், இன்று உலகமெங்கும் தமிழர்கள் ஐ.டி. துறையில் பெரும் சாதனை புரிந்துவருகிறார்கள்.

  * தமிழகத்தில் 49 சதவீதம் என்று இருந்த இடஒதுக்கீட்டை 68 சதவீதம் என உயர்த்தியதும் புரட்சித்தலைவர்தான்.

  * சைக்கிளில் டபுள்ஸ் செல்வது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. ஏழைகள் பாதிக்கப்படுவதை அறிந்ததும் சைக்கிளில் டபுள்ஸ், சந்தேக கேஸ் போன்றவற்றை ரத்து செய்தார்.

  * குடிசைகளுக்கு ஒரு விளக்கு திட்டமும் பின்னர் இரு விளக்கு திட்டமும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும் தந்தவர் எம்.ஜி.ஆர்.தான்.

  * தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு ஓர் அவசரச்சட்டம் கொண்டுவந்தார். அதன்படி, மதுவிலக்கு சட்டத்தின் கீழ் முதல் முறை பிடிபட்டால் 3 ஆண்டுகள் சிறை, இரண்டாவது முறை பிடிபட்டால் 7 ஆண்டுகள் சிறை, மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவித்தார். இன்று தமிழகம் குடியில் மூழ்கிக்கிடக்கிறது என்றால், அன்று புரட்சித்தலைவரின் புதுமை சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தடுத்த எதிர்க்கட்சிகள்தான்

  காரணம்.ஏழைகளுக்காகவே ஆட்சி புரிந்த புரட்சித்தலைவர் ஓர் அதிசயம். அவர் ஓர் அற்புதம். அவர் ஓர் அவதாரம். காந்தசக்தியுடைய முகவெட்டு, கட்டிளங்காளை போன்ற உடற்கட்டு, தோற்றப்பொலிவுடன் கண்ணுக்குத் தெரியாத மின்சார சக்தியாக இன்றும் தமிழக மக்களுடன் கலந்திருக்கிறார் புரட்சித்தலைவர்

  . ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்’ என்று பாடியதற்கு உதாரணமாக வாழ்ந்த புரட்சித்தலைவருக்கு இணையாக இந்த மண்ணில் இதுவரை யாரும் தோன்றவில்லை, இனியும் தோன்றப்போவதுமில்லை. மண்ணுலகில் கடைசி மனிதன் இருக்கும் வரையிலும் புரட்சித்தலைவரின் புகழ் நிலைத்து நிற்கும்

  ----.சைதை சா.துரைசாமி
  சென்னை பெருநகர முன்னாள் மேயர்.........

 9. #1588
  Junior Member Diamond Hubber
  Join Date
  May 2021
  Location
  Hungary
  Posts
  0
  Post Thanks / Like
  ஒரு சில பேருக்கு வி.சி.அய்யனை பற்றிய சில சந்தேகங்கள். அவற்றில் முக்கியமானவை அய்யனை வைத்து படமெடுத்தவர்கள் லாபமில்லாமலா
  அய்யன் 300 படங்களில் நடித்தார் என்பதே. அவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைப்பது நம் தலையாய கடமையல்லவா. அய்யன் நடித்த தமிழ்ப்படங்கள் சுமார் 270 க்குள்தான் இருக்கும். பிற மொழிப்படங்களையும், ,மாமனார் சித்தப்பூ ,பெரியப்பூ, தாத்தூஸ்,ரிடையர்டு பட்டாளம், போவோர், வருவோர் வழிப்போக்கன் போன்ற வேடங்களில் நடித்த படங்களையும் கழித்தால் இந்தக் கணக்குதான் வரும்.

  எல்லோரும் 1 ம் கிளாஸ் முடித்தபின் 2,3.4 என்றுதான் படிப்பார்கள். ஆனால் வி.சி. அய்யனோ யாரோ எடுத்த எடுப்பில் காலேஜில் ரெகமென்டேஷனில் சேர்த்து விட்ட பின்பு படிப்படியாக இறங்கி முதல் வகுப்பு படிக்க ஆரம்பித்து lkg வரை சென்று விட்டார். அதன்பின்பு ஸ்கூலுக்கே போகாத கைபிள்ளையாகி வீட்டிலேயே தங்கி விட்டார். ஆரம்பத்தில் சிறிது காலம் அது மாதிரி பெரியவர்களின் துணையோடு கதாநாயகனாகவே காலந்தள்ளினாலும் அவர்களை
  புதைகுழியில் தள்ளாமல் விட்டதில்லை.

  நன்றாக அய்யனின் பட வரிசைகளை உற்று நோக்கினால் ஒன்றை மட்டும் நாம் தெரிந்து கொள்ளலாம். அவரை அறிமுகப்படுத்திய நேஷனல் பிக்சர்ஸ் என்ன ஆனது. Ps வீரப்பா "இரு துருவத்து"க்கு பின் என்ன ஆனார். பீம்சிங் ஒரு சில வெற்றி படங்களை கொடுத்தாலும் அந்த வெற்றி தனி ஒரு அய்யனால் வந்ததல்ல. மல்டிஸ்டார்ஸை கொண்டு அவர் அடைந்த வெற்றி என்றாலும் பல நடிகர்களின் சம்பளத்தை கழித்துப் பார்த்தால் தயாரிப்பாளர்களுக்கு ஒன்றும் பெரிய அளவில் மிச்சமில்லை.

  ஆனாலும் தொடர்ந்து அய்யனை வைத்தே படமெடுத்து முடிவில் விளக்கில் விழுந்து மாய்ந்து போகும் விட்டில் பூச்சி மாதிரி அனைவரும் மாய்ந்து போனதை நான் பலமுறை எடுத்துக்கூறியும் முட்டாள் கைஸ்கள் தூங்கிய மாதிரி பாவலா செய்து கொண்டு தூக்கத்தில் இருந்து எழும்பிய குழந்தை போல பே! பே! என முழிக்கிற மாதிரி அருமையாக நடிக்கிறார்கள். அய்யனை வைத்து தொடர்ச்சியாக படமெடுத்து கதை முடிந்து போன பாவப்பட்ட தயாரிப்பாளர்கள் ஒன்றா!, இரண்டா! எடுத்துச் சொல்ல.

  இருந்தாலும், நன்றாக நடிக்கும் கைஸ்களுக்கு மீண்டும் ஒரு முறை எடுத்து இயம்புவதில் மிகவும் வருத்தம் கொள்கிறேன். அதன்பின் வந்த ap நாகராஜன், ஸ்ரீதர், ஜெமினி, avm ,கோமதி சங்கர் பிலிம்ஸ், ஜேயார் மூவீஸ், சினி பாரத், உமாபதி, p மாதவன் முக்தா பிலிம்ஸ், ஜெகபதிஆர்ட் பிக்சர்ஸ், கற்பகம் மூவிஸ், k.c. பிலிம்ஸ், வினாயகா பிலிம்ஸ், vk ராமசாமி, பெரியண்ணன், பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ், ஜெயந்தி பிலிம்ஸ் இதில் அத்தனை பேரும் அய்யனால் அலங்கோலமாகி வேறு ஆட்களை வைத்து படமெடுக்க ஓடியவர்களும் உண்டு. இவர்களில் ஒரு சிலர் மக்கள் திலகத்தை வைத்து ஆயிரத்தில் ஒருவன், உரிமைக்குரல், நவரத்தினம் குமரிக்கோட்டம் போன்ற படங்களை எடுத்து இழந்த செல்வத்தையும் மதிப்பையும் மீட்டவர்களும் உண்டு..

  அய்யனால் திவாலானவர்களும் இதில் அடக்கம். முழு பட தயாரிப்புகளையும் கணக்கிலெடுத்தால் இந்த பதிவின் நீளம் அதிகமாகி விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இதில் வி.சி.அய்யனின் சொந்த மற்றும் பினாமி கம்பெனிகளும் அடக்கம். வேறு நடிகர்களை போட்டு படமெடுத்தாலும் அய்யன் ஒரு சில காட்சிகளில் தலையை காட்டி வருகின்ற ஆடியன்ஸை வரவிடாமல் ஓட விட்ட கதையும் அடக்கம். அய்யனை வைத்து எத்தனை படங்கள் எடுத்தாலும் முடிவில் அவர்களை காவு வாங்காமல் விட்டதில்லை.

  எங்க ஊர் பக்கம், அய்யனார் என்றழைக்கப்படும் காவல் தெய்வம் ஒன்று உண்டு. அவர்கள் குலதெய்வமாக குடும்பத்தை காத்து நிற்பார்கள். ஆனால் நம்ம அய்யனோ யாரும் மடியில் பணத்துடன் வீட்டுக்கு சென்று விடக்கூடாது என்பதில் குறியாக இருப்பதால்தான் அய்யன் என்றழைக்கப்படுகிறார் என்று நினைக்கிறேன். இவரிடம் துண்டை உதறி தோளில் போட்டு மடியில் ஒன்றும் இல்லை என்றால்தான் அவர்களை விடுவார். இல்லை என்றால் மீண்டும் துரத்தி சென்று அவர்களை நிர்மூலம் ஆக்கி விடுவார்.

  அதிலும் 200 படங்களை தாண்டி அவர் நடித்த படங்கள் எல்லாம் 3 நாட்கள் 5 நாட்கள் அதிக பட்சம் 7 நாட்களை தாண்டியதில்லை. உதாரணம் இரு மேதைகள், நாம் இருவர்,நெஞ்சங்கள்,மோகனப்புன்னகை,அமர காவியம், ஹிட்லர் உமாநாத் போன்ற படங்கள்தான் அவை. அதிலும் "நாம் இருவர்"படம் பார்க்க நடித்த அந்த இருவரால் கூட முடியாது.அதுவும் அத்தனையும் கலர் படங்கள் வேறு. "நாம் இருவர்" அய்யனின் 250 வது படம். மற்ற 100, 200 என்று வாயை திறக்கும் கைஸ்கள் 250 வது படத்தை பற்றி வாயே திறக்க மாட்டார்கள்.

  அதனால்தான் படங்களின் எண்ணிக்கை அதிகமிருந்தாலும் மிச்சமிருந்த அத்தனை தயாரிப்பாளர்களையும்
  திரும்பி சினிபீல்டுக்கு வராத இடத்துக்கு அனுப்பி வைத்ததுடன் அவர்களில் ஒரு சிலர் பிச்சை எடுக்கவும் செய்வதை பல பத்திரிகைகள் சுட்டிக்காட்டியும் கைஸ்கள் யாரையோ சொல்கிறார்கள் நம்மை அல்ல என்பதை போல கண்டும் காணாமல் அலைவது முறையான செயல் அல்ல.

  அதனால்தான் 200 படங்களுக்கு பிறகு அய்யனை வைத்து யாரும் படமெடுக்க முன்வரவில்லை. இவ்வளவுக்கும் புரட்சி நடிகர் இல்லாத களத்தில் கூட மல்லாட முடியாமல் அடுத்து வந்த சிறுவர்களிடம் தோற்று அடுப்படியில் முடங்கியதேன்?. ரஜினியும் கமலும் 70 வயதில் கூட உச்சபட்ச சம்பளத்தில் நடிக்கும் போது பூப்பறிக்க சென்ற அய்யன் என்ன ஆனார்? தெரிந்தால் சொல்லுங்க கைஸ்களே? அய்யனின் தயாரிப்பாளர்கள். இருந்தால்தானே படமெடுக்க. ஆனால் தலைவர் சினிபீல்டை விட்டு செல்லும்போது 61 வயதிலும் சுமார் 10 க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருந்தார் என்பதை தெரிந்துமா இந்த கேள்வி.

  அதுவும் அதிகபட்ச சம்பளத்தை பெற்றுக் கொண்டிருக்கும் போது விலகி அதைவிட உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்ளத்தான் சினிமா உலகை விட்டு சென்றார் என்பதை புரிந்து கொள்க. அய்யனின் மறுபதிப்பு படங்களை காசு கொடுத்து ஓட்டுவதை விட அய்யனை வைத்து படமெடுத்த பழைய தயாரிப்பாளர்களின் வாரிசுகளின் நல்வாழ்வுக்கு ஏதாவது செய்தால் அவர்களாவது வாழ்த்துவார்கள். உண்மையை உணருங்கள் கைபிள்ளைகளே. மீண்டும் மீண்டும் இதே சந்தேகத்தை எழுப்ப வேண்டாம்.

  உ...த்தமன் தொடர் அடுத்த பதிவில்..........ksr.........

 10. #1589
  Junior Member Diamond Hubber
  Join Date
  May 2021
  Location
  Hungary
  Posts
  0
  Post Thanks / Like
  புரட்சித் தலைவரை நம்பிக் கெட்டவர்கள் எவருமில்லை நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு ... எப்படிப்பட்ட சோதனையான காலகட்டங்களிலும் தன்னை சுற்றி நம்பி இருப்பவர்களையும், தன்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் ரசிகர்களையும் மக்களையும் எந்த நேரத்திலும் எப்போதும் அவர் ஏமாற்றியதே இல்லை. மற்றவர்கள் தங்கள் சொந்தப் பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக மாற்றி அரசியல் செய்வார்கள். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் நபராக களத்தில் இறங்கி மக்கள் பிரச்சனையை தீர்த்தவர் புரட்சித்தலைவர். ஓய்வில்லாமல் உழைத்தவர். தான் உழைத்து சம்பாதித்த பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தவர். மக்கள் நலனுக்காக ஒரு முடிவு எடுத்து விட்டால் அதை உடனே செயல்படுத்தி தொடர் வெற்றிகளை பெற்றவர் நம் புரட்சித்தலைவர். மற்ற நடிகர்கள் திரையில் மட்டுமே கதாநாயகர்கள். நம்முடைய புரட்சித்தலைவரோ நிஜத்திலும் திரையிலும் மிகப்பெரிய கதாநாயகர் சூப்பர் ஹீரோ! அதனால் தான் இன்றைய இளைய தலைமுறையினரும் புரட்சித் தலைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். என்றும் எப்போதும் புரட்சித்தலைவரின் புகழ் நிலைத்திருக்கும்.

  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க..........ssm.........

 11. #1590
  Junior Member Diamond Hubber
  Join Date
  May 2021
  Location
  Hungary
  Posts
  0
  Post Thanks / Like
  தமிழ் நாடு எம்.ஜி.ஆர் நாடு :
  🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
  1970 - 1975 ஆம் ஆண்டுக்கு பிறகு
  தமிழ்நாட்டிலிருந்து யார் வெளிநாட்டிற்கு சென்று அங்கே உள்ளவர்களிடம் தன்னை தமிழ்நாடு என்று அறிமுகப்படுத்த நினைத்தால் எதிர்முனையில் உள்ளவர்கள்
  ஓ....தமிழ்நாடு எம்.ஜி.ஆர் நாடல்லவா என்று
  கேட்பது கட்டாயமாக இருந்த விஷயம்.அந்த அளவிற்கு தமிழ் நாட்டையும் எம்.ஜி.ஆரையும்
  பிரித்துப் பார்க்க முடியாது.இப்படி ஒரு தாக்கத்தை எந்த அரசியல் தலைவரும் நிகழ்த்த வில்லை.நிகழ்த்தவும் முடியாது.
  தன்னை நம்பியிருந்த ஒவ்வொரு ரசிகரும்
  தம்மால் ஏமார்ந்துவிடக்கூடாது என்று எண்ணிய உலகப் புகழ்பெற்ற மனிதநேயர்.
  மக்களின் மேல் தன் அனைத்து சக்தியையும்
  முழுமையாக வைத்திருந்த ஒரே மக்கள் சக்தி
  எம்.ஜி.ஆர் மட்டுமே.
  எல்லோரும் MGR ஆக முடியாது...Rnjt

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •