Page 400 of 401 FirstFirst ... 300350390398399400401 LastLast
Results 3,991 to 4,000 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

 1. #3991
  Junior Member Devoted Hubber
  Join Date
  Apr 2021
  Location
  Virgin Islands
  Posts
  0
  Post Thanks / Like
  நடிகர் திலகத்தின் நடிப்பின் உச்சம் அந்த நீதிமன்றம் காட்சி.....அவருக்கு பிறகு வந்த மூன்று முதல் நான்கு தலைமுறைகள், நடிகர் திலகத்தின் இந்த காட்சியை தங்களுக்குள்ள சினிமா ஆர்வம் தூண்டி ஒரு Directorayo அல்லது Producerayo காணும்போது பேசிகான்பிபது திரை உலகின் ஒரு வழக்கமாகவே இருந்தது என்றால் பாருங்கள்.

  நமது அன்னை தமிழின் உயிர் அதன் நாடி எங்கெங்கு உள்ளதோ அந்த இடங்களையெல்லாம் சுண்டி விட்டு படம் பார்க்கும் நம்மையும் அவருக்கு மனதளவில் சப்போர்ட் செய்யவைக்கும் திறம்,

  கலைத்தாய் , தமிழ்த்தாய் நடிகர் திலகம் வரும்வரை எவ்வளவு தாகத்துடன் தமிழ் திரை உலகம் என்ற பாலைவனத்தில் இருந்திருப்பார்கள் என்று என்னிபார்தல் வேண்டும்..!

  இந்த செந்தமிழை, உரைநடை தமிழை எவ்வளவு லாவகமுடன்......ல..ள..ர..ற...ழ ....அக்ஷர சுத்தியுடன் உரைத்திருக்கிறார் அதுவும் முதல் படத்தில்....இந்த காட்சியில்...கேமரா ஒரு இடத்தில் நிருத்திவைக்கபட்டதோடு சரி. எவ்வளவு நீண்ட ஒரு வசனம்..ஒரு Takeல் எவ்வளவு நீளமான காட்சி எடுக்கப்பட்டது என்று பார்க்கும் போது...நாம் கற்று இன்று பேசும் தமிழ் ஏதோ கொஞ்சம் சுமாராக இருக்கிறதென்றால் அதற்க்கு முதல் காரணம் நம் சித்தர் படங்களை பார்த்து இதைபோல நாமும் பேசவேண்டும் அக்ஷரம் பிசகாமல் என்பது தான் !

  அந்த அனல் பறக்கும் நீதிமன்ற காட்சி - !
  http://www.youtube.com/watch?feature...&v=SdnOlP94x2g

  வசன வார்தைகளுக்கேற்ற அவருடைய முகபாவம், வார்தைகேற்றவாறு கேசம்கூட ஆடவைக்கும் அந்த தலை அசைப்பு , ஆணித்தரமாக வாதிடும்போது தானாக வரும் அந்த வலதுகை, தங்கைபற்றி, குடும்பத்தைப்பற்றி பேசும்போது முதல்படதிலயே கண்ணீரை தேக்கி எப்போது வெளியே விடவேண்டுமோ அப்போது விடவைக்கும் திறன் ...அடேயப்பா..!

  தமிழ்த்தாய் தன்னுடைய மகன் இவன் ஒருவன்தான் என்றல்லவா தன்னுடைய ஆசிகளை பராசக்தியின் மாபெரும் வெற்றியையும், ஒரே இரவில் தமிழ் திரைஉலகின் நிரந்தர உச்ச நட்சத்திரம் என்ற அழியா நிலையையும் வழங்கினாள் !

  இதை எழுதும்போது என்னுடைய மெய்சிலிர்கிறது..ஏனெனில் ...

  என் பூர்விகம் கேரளா ...தாய்மொழி மலையாளம் !

  என்னை இந்த நிலையிலாவது தமிழை சுமாராக பேசவும் எழுதவும் படிக்கவும் உந்துதலாகியது நடிகர் திலகமும் அவருடைய நடிப்பின் வீச்சும் என்பதை உணர்ந்துகொண்டதன் காரணம் !

  அனைவரிலும் பெரியவராக தமிழ்த்தாய் விளங்குவதால் முதல் பெரியவர் வணக்கத்திற்கு உரிய தமிழ் தாய் பற்றிய கட்டுரை நிறைவு......

  நடிகர் திலகத்தால் நினைவுபடுத்தப்பட்ட பெரியவர்கள் வரிசையில் அடுத்து இடம்பெறபோவது :


  மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த சோழ நாட்டின் பெருமையை இவ்வையகம் உள்ளவரை நிலைத்திருக்க செய்த

  ஏடு தந்தானடி தில்லையிலே....
  http://www.youtube.com/watch?feature...&v=7aDsRLCqxsA

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #3992
  Junior Member Devoted Hubber
  Join Date
  Apr 2021
  Location
  Virgin Islands
  Posts
  0
  Post Thanks / Like
  ராஜ ராஜ சோழனை பற்றி அறிவதற்கு முன்னர் சோழர் பரம்பரையை பற்றி அறிதல் நலம் - உங்கள் அனைவர்காகவும் -

  சோழர் பரம்பரையின் ஆட்சி மன்னன் விசயாலயன் 846 முதல் 871 வரையிலும்
  அவருக்கு பிறகு அவரது மகன் ஆதித்யன் 871 முதல் 907 வரையிலும்,
  பிறகு இவர் மகன் பராந்தகன் 907 முதல் 955 வரையிலும், பராந்தகனின் மூன்று மகன்கள் ராஜாதித்யன், கண்டராதித்த்யன், அரிஞ்சயன் மூவருமாக பின்பு கண்டராதித்த்யன் மகன் மதுராந்தக உத்தம சோழன் , அரிஞ்சயன் மகன் சுந்தர சோழனும் 985 வரை ஆண்டனர். அதற்க்கு பிறகு சுந்தர சோழனின் இரு மகன்களான கரிகாலனும், பின்னர் ராஜ ராஜ சோழனும் (985-1016) ஆண்டார்கள், பின்னர் அவருடைய மகன் ராஜேந்திரன் 1012-1044 ராஜேந்திரன் 1 இக்கு பிறகு, அவர் மகன்கள் ராஜாதிராஜன், ராஜேந்திரன் 2 , வீர ராஜேந்திரன் இவர்களில், ராஜேந்திரன் 2 மன்னராக ஆண்டார். அவர்க்கு ஆண் வாரிசு கிடையாது . மதுராந்தகி என்ற பெண் குழந்தை மட்டுமே... ஆகையால் வீர ராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் ஆண்டான். இவர்களில் கரிகாலன் சோழ மரபினர் என்றும் மற்றவர் இடைகால சோழர்கள் என்றும் அழைக்க பட்டனர்.

  ராஜ ராஜ சோழனின் மகள் குந்தவை சாளுக்ய வம்சாவழி விமலாதித்யனை மணந்து அதன் மூலம் ராஜராஜன் நரேந்திரன் என்ற குழந்தையை ஈன்றெடுத்தாள்.

  இவனும் சாளுக்ய வம்சவழியே. ராஜராஜன் நரேந்திரன் ராஜேந்திர சோழன்-1 மகள் அம்மன்கதேவியை மனமுடித்ததில் குலோத்துங்கன் -1 ஜனனம் .
  குலோத்துங்கன் 1 வளர்ந்து ராஜேந்திரன் 2 மகள் மதுராந்தகியை மணமுடித்து அவர்களுக்கு நான்கு மகன்கள் பிறகின்றனர். அவர்கள் சாளுக்ய சோழர் என்று அழைக்கபடுகின்றனர்.

  மேற்கூறியவை சுருக்கமாக சொன்ன சோழர் வழி, சாளுக்ய வழி, சோழ மரபு வம்சத்தின் தகவல்களாகும்.

  பழங்கால ஏடுகளில் ராஜராஜசோழனை பற்றியுள்ள குறிப்புகள் :

  ராஜராஜன் யானை மீது அமர்ந்து வரும்போது எதிரே கூட்டமாக கேசரி (சிங்கம்) வந்தாலும் ஒருகணம் திகைத்து சிதறி நாலு பக்கம் தலை தெறிக்க ஓடும் என்று கூறுகிறது..!

  அரசவையில் ராஜ ராஜன் வருகையில் நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, வலக்கரம் சென்கோலிலும் இடக்கரம் சிம்ஹாசனபிடியிலும் வைத்து கோரிக்கையை கேட்டு, தீர்ப்பு சொல்லும்பாங்கு இவை மாநிலத்து மக்களெல்லாம் இமைகொட்டமால் இறைவனை பக்தியுடன் காண்கின்ற பாங்கினை அரசவையில் தோற்றுவித்தன..!
  பெரும் குற்றும் செய்தவன் கூட கொற்றவனின் பார்வை ஒருமுறை பார்க்கும் பாந்தத்தில் பனி போல நெஞ்சுருகி மனிப்பு கோருவான் ..

  போர்க்களத்தில் ராஜராஜன் வாள் சுழலும் வேகம் சக்ராயுதம் போல பல திசையிலும் தலைகளை கொய்யும் பூஜ வலிமை கொண்டது என்றும் அகன்ற மார்பில் அந்த கவசம் அமர என்னபாக்கியம் செய்ததோ..என்றும் குறிபிட்டுள்ளது

 4. #3993
  Junior Member Devoted Hubber
  Join Date
  Apr 2021
  Location
  Virgin Islands
  Posts
  0
  Post Thanks / Like
  இனி நமது நிலைக்கு வருவோம் -

  நமக்கு பல விஷயங்களில் முன்னோடியாக வாழும் முறையை கற்றுகொடுத்த பெரியவர்களை அவர்களின் அரும்பணிகளை நாம் மறக்காமல் நம்மால் முடிந்தவரை அவர்கள் புகழை குறைந்தது நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு உரைத்திடல் வேண்டும். இல்லையேல், காலபோக்கில் அவர்களை பற்றிய உண்மைகளும், அவர்களுடைய தொண்டும், புகழும், ஆற்றிய அரும்பணிகள் யாரும் அறியாவண்ணம் இருக்கும்.

  வெறும் ஒரு சிலையை, கல்வெட்டை பார்ப்பது போல தான் பார்பார்கள்.

  அந்த பெரியவர்களின் மகத்துவங்களை, திரை மூலமாக அடித்தட்டு மக்கள் மீண்டும் நினைத்துபார்க்கும் வண்ணம் அவர்களிடத்தில் கொண்டு சென்ற பெருமை, அந்த திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்த தயாரிப்பாளரையும் சாரும்.

  அந்த தயாரிப்பாளர், தன மனதில் இது போல ஆசை வளர்ந்தால் அதை திரைப்படமாகும் முயற்சியில் எப்போது ஈடுபடுவார்?

  அந்த கதாபாத்திரதுக்கான, அந்த கதாபாத்திரத்தை மிக சிறந்த முறையில் கையாளக்கூடிய கை தேர்ந்த நடிகர் இருந்தால் மட்டுமே அந்த தயாரிப்பாளரின் கனவு நனவாகும்.

  அதுமட்டும் அல்ல ! இவர் எந்த நடிகர் அதை செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைகிறாரோ..இவர் மட்டும் அல்ல, அந்த திரைப்படத்தை வாங்கி திரையிடும் விநியோகஸ்தர்கள், திரை அரங்கு முதலாளிகள் இவர்கள் அனைவரும் அந்த நடிகர் செய்தால் மிக சிறப்பாக இருக்கும் என்றும் ஒருமித்த கருத்து அவர் மூவருக்கும் இருக்கவேண்டும்...

  அதைவிட முக்கியம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க, அதை சிறப்பாக கையாண்டு மக்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அந்த கதாநாயகனுக்கு தைரியமும், தன் திறமை மீதும் அபார நம்பிக்கை வேண்டும் !

  அப்படி உள்ள ஒரு நடிகனால் மட்டுமே இதிகாச, சரித்திர, தெய்வாம்சம்கொண்ட கதாபாத்திரங்களை கையாள முடியும்....இதில் ஒன்று குறைந்தாலும், பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அந்த கதாபாதிரதுக்கே பங்கம் ஏற்படும் !

  அப்படி இந்த ராஜ ராஜ சோழன் வரலாற்றில் ஒரு சில விஷயங்களை திரைப்படமாக திரு. உமாபதி ஆனந்த் Pictures முடிவெடுத்தபோது அதுவும் அகன்ற திரையில் ஒரு மாபெரும் சோழ மன்னனை காண்பிக்க வேண்டும் என்று முடிவுசெய்தபோது ....தமிழ் திரை உலகில் பல திறமையாளர்கள் இருந்தாலும் , அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கி வருகின்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சோழனாக சித்தரிக்கபட்டால், அது மிக சிறப்பாக அமையும் என்று ஏகோபித்த ஒப்புதலை விநியோகஸ்தர்கள், திரையிடும் திரை அரங்கு உரிமையாளர்கள் கொடுத்ததால்
  நடிகர் திலகம் ராஜ ராஜ சோழனாகவும்,
  திரு.சிவகுமார் ராஜராஜன் மகன் ராஜேந்திர சோழனாகவும்,
  திருமதி. லக்ஷ்மி அவர்கள் ராஜராஜன் மகள் குந்தவயாகவும்,
  திரு.முத்துராமன் அவர்கள் சாளுக்ய விமலாதித்யனாகவும் நடிக்க வைக்க முடிவெடுத்து தமிழின் முதல் Cinemascope வண்ணப்படமாக ராஜ ராஜ சோழன் 1973இல் வெளிவந்தது.

 5. #3994
  Junior Member Devoted Hubber
  Join Date
  Apr 2021
  Location
  Virgin Islands
  Posts
  0
  Post Thanks / Like
  ராஜராஜ சோழன் வரலாற்றில் நடிக்க ஏன் நடிகர் திலகம் ஒத்துகொண்டார் ? அதற்க்கு அவர் கூறும் காரணம் என்ன ?

  ராஜராஜ சோழனாக நடிகர் திலகம் நடிப்பதற்கு என்னென்ன சவால்களை சந்திக்க வேண்டி இருந்தது, அந்த சவால்களையும் மீறி அவர் ராஜராஜ சோழனாக பரிமளிதாரா அப்படி பரிமளித்தார் என்றால் எப்படி ?

  ராஜராஜ சோழனை பற்றி வரலாற்றில் குறிப்பிட்டிருப்பதை போல நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, தந்தையின் கனிவு கொண்ட கண்கள், அதே நேரம் அரசவையில் கம்பீர தோற்றம், தவறு செய்பவர்களை பார்வையால் தண்டிக்கும் பாங்கு...இப்படி போகிறது ராஜராஜனை பற்றிய வர்ணனை.

  தமிழ் ஆர்வம் பெருகிவரும் காட்டாற்று வெள்ளம் போல, வார்த்தை ஜாலங்கள் அர்ஜுனன் வில்லிலிருந்து விடுபட்ட அம்புகள் போல் ...திறமையில் முதன் முதல் திறமை..பலகுரலில் பேச பழகி தேர்ச்சிபெற்ற வேந்தன்...இப்படி சொல்லிகொண்டே போகலாம்...!

  ராஜராஜனின் இவ்வளவு மிடுக்கும், ஆண்மையும், கம்பீரமும், தோற்றப்பொலிவும், பேசும் திறமும், ஒருங்கே பெற்ற ஒரு நடிகன் தமிழ் திரை உலகில் யார் என்ற கேள்வி எழும்போதெல்லாம் எந்த சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒருமித்த குரலில் தஞ்சை பெரியகோவிலிலுள்ள மணியின் " நங் " என்ற ரீங்காரமிடும் நாதம் போல உரைப்பது திரை உலக சித்தர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் என்பதை வீடறியும், நாடறியும், தமிழர்கள் உள்ள புவி அறியும்...அதனுடன் நாமும் அறிவோம்..!

  ஒரு மன்னனுக்குரிய அனைத்து லக்ஷணங்களும் ஒருங்கே பெற்ற நடிகர் திலகம்...தஞ்சை பெரியகோயில் நந்திக்கு, கோவில் கும்பாபிஷேக பூஜை செய்யவரும் காட்சியை பாருங்கள்....!

  திரை உலக சித்தர் நமது நடிகர் திலகம் ராஜ ராஜ சோழன் வேடம் புனைந்து இந்த கும்பாபிஷேக காட்சி திரைப்படமாக எடுக்கப்பட்டதை போலவா உள்ளது ?

  இல்லவே இல்லை !!

  நம் கண் முன்னால், உண்மையிலயே ராஜ ராஜ சோழன் நமக்காக தஞ்சை பெரியகோயில் கும்பாபிஷேகத்தை நமக்காக இன்னொருதடவை செய்வதை போல உள்ளது என்றால்.....அந்த ராஜ ராஜ சோழனாக நடிகர் திலகம் நடிக்கவா செய்தார் ? இல்லவே இல்லை அவர் தான் ராஜ ராஜ சோழனாக வாழ்ந்தார் !!!! அது தான் உண்மை !  http://www.youtube.com/watch?feature...&v=5DhrsSQ-2aY
  Last edited by NTthreesixty Degree; 28th May 2013 at 09:09 PM.

 6. #3995
  Junior Member Devoted Hubber
  Join Date
  Apr 2021
  Location
  Virgin Islands
  Posts
  0
  Post Thanks / Like
  இளையராஜா சாதனை படத்தில் நடிகர் திலகத்தை பற்றி கூறுவது ஞ்யபகதிர்க்கு வருகிறது...அவர் கூறுவதை அனைவரும் சற்று கேட்போமே !


 7. #3996
  Moderator Veteran Hubber
  Join Date
  Mar 2006
  Posts
  1,773
  Post Thanks / Like
  வாசு சார் அவர்களுக்கு,

  ராகவேந்தர் சார் சொன்னது போல் நானும் அவரும் 11-வது பாகத்தை துவக்கி வைக்க கோபால் அவர்களை அழைக்க வேண்டும் என நினைத்திருந்தபோது அதை முதல் ஆளாக இந்த சபையில் முன்மொழிந்ததற்கு நன்றி. அதையே நாங்களும் வழிமொழிகிறோம்.

  விக்கிரமனாக ஜனிக்க ஆசைப்பட்டு ஆனால் காத்தவராய அவதாரம் எடுத்த நெய்வேலி நாயகன் கோபால கிருஷ்ணனை 11-வது பாகத்தை துவக்கி வைக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்.

  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராகவேந்தர் சார்!

  இது பல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!

  அன்புடன்

 8. #3997
  Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  1,585
  Post Thanks / Like
  GOPAL SIR


  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 9. #3998
  Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  1,585
  Post Thanks / Like
  ஜோ சார், முரளி சார்,
  தங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 10. #3999
  Junior Member Newbie Hubber
  Join Date
  Mar 2021
  Posts
  0
  Post Thanks / Like
  Hi Guys,
  I am out of HQ and reaching only on 30 May night.Can you wait till that time?I am really sorry that I am tied up till then .I want the starting to be good and in Tamil too..I know that I am depriving you of 1 1/2 golden Day!!!Can you all put up with this inconvenience?
  Otherwise tonight,I'll do it in English.
  Last edited by Gopal.s; 29th May 2013 at 06:42 AM.

 11. #4000
  Junior Member Newbie Hubber
  Join Date
  Mar 2021
  Posts
  0
  Post Thanks / Like
  My wishes for 4000 Golden contributions and your birthday coinciding. May be Thiruvilayadal from heaven by Our Acting God?

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •