Page 80 of 185 FirstFirst ... 3070787980818290130180 ... LastLast
Results 791 to 800 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #791
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    Last edited by vasudevan31355; 1st May 2013 at 11:10 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #792
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    நடிகர் திலகமே தெய்வம்

  4. #793
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இணையத்தில் இதுவரை வெளிவராத மிக மிக மிக அரிய ஆவணம்.

    பெரும்பான்மையோர் பார்த்திராத ஆவணம்.

    பாதுகாக்கப் பட வேண்டிய பொக்கிஷம்.

    எங்கு தேடினாலும் கிடைக்காத அற்புத ஆவணம்.

    நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இரு திலகங்களும் நடிப்பதாக ஒரே சமயத்தில், ஒரே பக்கத்தில் இடதும், வலதுமாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த 'உத்தம புத்திரன்' பட விளம்பரம்.

    நடிகர் திலகம் Filmography யில் தற்சமயம் 'உத்தமபுத்திரன்' படத்தைப் பற்றி பதிவுகள் இடப்பட்டுள்ளன. எனவே இந்த அரிய, அற்புத விளம்பரம் அதற்கு பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த ஆவணத்தை போற்றிப் பாதுகாத்து வருகிறேன். இப்போது இணையத்தில் அனைவரும் கண்டு மகிழ இந்நன்னாளில் பதிவு செய்கிறேன். நன்றி!



    அன்புடன்
    நெய்வேலி வாசுதேவன்
    Last edited by vasudevan31355; 1st May 2013 at 12:37 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #794
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Vasu Sir,
    Millions and millions of
    THANKS

    NEVER NEVER NEVER SEEN BEFORE .... ITS FOR SURE .... RAREST OF RARE DOCUMENT .....
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #795
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    உத்தமபுத்திரன்....

    இன்று இந்த நடிகரின் ஸ்டைல் பிரமாதம், அந்த நடிகரின் ஸ்டைல் பிரமாதம் என்று கூறுகிறார்கள்,

    ஆனால் ஸ்டைலின் முன்னோடியே நம் தலைவர் தான், இந்த படத்தின் யாரடி நீ மோகினி பாடலில் வெகு ஸ்டைலாக நடனம் மற்றும் body language மூலம் அசத்தி இருப்பார், இதை இன்றுள்ள இளைய தலைமுறையினர் பார்த்தால் அவர்களும் உணர்த்து கொண்டு நம் தலைவரின் ரசிகராய் மாறி விடுவர்.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  7. #796
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Vasu Sir,
    Millions and millions of
    THANKS

    NEVER NEVER NEVER SEEN BEFORE .... ITS FOR SURE .... RAREST OF RARE DOCUMENT .....
    It is simply GREAT VASU SIR. We have heard about this since school\college days proof you have given after several decades truely remarkable. kudos. one of my most favorite movies always, in top five movies.

  8. #797
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மோசர் பேர் நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ள உத்தம புத்திரன் நெடுந்தகட்டின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #798
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பல்லாண்டுகளாக ஏங்கிக் கிடந்த கிடைத்தற்கரிய அரிய ஆவணத்தை இங்கு நம்முடன் பகிர்ந்து கொண்டு நம்மையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ள வாசு சாருக்கு ...

    கோபால் சார் குறிப்பிட்டுள்ள காட்சிகளின் வரிசையில் முதலாவதாக இடம் பெற்றுள்ள காட்சி யை சமர்ப்பிக்கிறேன்.



    நன்றி வாசு சார்...

    கோபால் சார் .. தங்களுக்கும் இது மகிழ்ச்சியான விஷயம் தானே...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #799
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    உத்தமபுத்திரன்!!! நடிகர் திலகத்தின் திரியின் பத்து பாகங்களில் அவரது ரசிகர்களால் பலவிதமாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட திரைப்படம். 1958-லேயே மிகவும் ரசனையுடன் stylish-ஆக எடுக்கப்பட்ட திரைப்படம். எல்லோரையும் போல் எனக்கும் மிக மிக பிடித்த திரைப்படம். நடிகர் திலகம் முதல் இரட்டைவேட படத்திலேயே தான் ஏற்றுக்கொண்ட இரண்டு கதாபாத்திரங்களையும் நான்கு பரிணாமங்களில் (அதாங்க விக்ரமனாக, பார்த்திபனாக, விக்ரமன் பார்த்திபன் வேடம் போடுவதாக, பார்த்திபன் விக்ரமன் வேடம் போடுவதாக) வெளுத்துக்கட்டியிருந்தார். நடிப்பு, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம் என எல்லாமே நன்றாக பரிமளித்து இன்றும், என்றும் பேச வைக்கும் திரைப்படமாக மிளிர்கிறது.

    இதற்கு முன்னர் P.U.சின்னப்பா தேவர் அவர்கள் நடித்த உத்தமபுத்திரன் நான் பார்த்ததில்லை. வெற்றிப்படம் என்று கேள்விப்பட்டேன். ஆனால் பின்னர் திரைஅரங்குகளில் திரையிடப்பட்டதாக கேள்விப்பட்டதில்லை. இரண்டு வருடத்திருக்கு முன்பு இதே பெயரில் வந்த இன்றைய நடிகர் ஒருவரின் படம், இனிமேல் நடிகர் திலகத்தின் திரைப்பட பெயர்களை வைத்து இன்றைய தயாரிப்பாளர்கள் படம் எடுக்கக் கூடாது என்று நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எதனால் சொல்கிறார்கள் என்பதை நிரூபித்தது. உத்தமபுத்திரன் கதையை வைத்து நகைச்சுவை படமாக இன்றைய தொழில் நுட்பத்தில் எடுத்து வெற்றி அடைந்தார்கள். அத்தோடு முடிந்தது. இன்னும் பல்லாண்டுகள் போனாலும் உத்தமபுத்திரன் என்றால் நடிகர் திலகத்தின் படம்தான்.

    கதையை காப்பி அடித்தார்கள், தலைப்பை காப்பி அடித்தார்கள். பாடல்களை காப்பி அடித்தார்கள். நடிப்பை மட்டும் எவராலும் காப்பி அடிக்கவே முடியவில்லை. மக்களின் மனதிலிருந்து இந்த படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை எவரின் திரைப்படங்களாலும் ஏற்படுத்தவே முடியாது. இந்த படத்தை இன்றைய தொழில் நுட்பத்தில் வண்ணமாக்கி, வேறு ஒன்றுமே செய்யாமல் (இசை, 70MM என்று முயற்சிக்காமல்) அப்படியே திரையிட்டால் சிறுவர் முதற்கொண்டு அனைவரது ஆதரவையும் மீண்டும் பெற்று பெரு வெற்றி அடையும்.
    Last edited by kalnayak; 2nd May 2013 at 06:03 PM.

  11. #800
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    உத்தமபுத்திரன்

    முதற்கண் திரு. ராகவேந்தருக்கும் திரு. வாசுதேவன் (நெய்வேலி) அவர்களுக்கும் நன்றி இந்தப் படத்தைப் பற்றி அரிய பதிவுகள் இட்டமைக்கு.

    ஒரு வில்லன் பாத்திரத்தையும் மிகுந்த ரசனையோடு சித்தரித்து, அனைவரையும் ரசிக்க வைத்த படம்.

    ஒரே சாயல் கொண்ட சகோதரர்கள் (இருவர்) - ஆக ஒரே நடிகர் இரு வேடங்கள் தாங்கி, எந்த வித ஒப்பனை வித்தியாசத்தையும் செய்யாமல், ஒவ்வொரு பிரேமிலும் வித்தியாசமாக நடித்துக் காட்டிய படம்.

    திரைக்கதை மிக மிக நேர்த்தியாகவும், சுவாரஸ்யம் இம்மியும் குறையாமலும் அமைந்த படம். படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் நூறு சதவிகிதம் பொருந்தி நடித்த படம். நடிகர் திலகம் அத்தனை நடிகர்களையும் விஞ்சி, ஏன் பார்த்திபனாய் நடித்த அவரையே, விஞ்சி விக்கிரமனாய் வில்லனையே ரசிக்க வைத்த படம்.

    பின்னர் வந்த அத்தனை இரட்டை வேடப் படங்களுக்கும் பாத்திரப் படைப்புகளுக்கும், இலக்கணமாய் அமைந்த படம்.

    நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன் - எங்கள் வீட்டில், நெருங்கிய உறவினர் மத்தியில், நடிகர் திலகம் அல்லாத ரசிகர் - என் தந்தை மட்டுமே என்று. அவர் மக்கள் திலகத்தின் ரசிகர். ஆனால், அவரே எனக்கு சுமார் பத்து வயது இருக்கும் போது, இந்தப் படத்திற்கு என்னை அழைத்துச் சென்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

    இளமைக்கால நிகழ்வு ஒன்று. இதையும் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அப்போது எனக்கு கிட்டத்தட்ட 30 வயதிருக்கும். அது வரையே உத்தமபுத்திரனை 20 முறைக்கு மேல் திரை அரங்குகளிலேயே பார்த்து விட்டிருந்தேன். என் தந்தை ஒரு வேலையாய் என்னை வெளியே அனுப்பி இருந்தார். நானும் வேலையை முடித்து விட்டு வரும் வழியில், ஓரிடத்தில் கூட்டமாக இருக்கவே என்ன என்று பார்த்தேன். டிவி வைத்து அதில் உத்தமபுத்திரனை போட்டுக் கொண்டிருந்தார்கள். அது ஆடி மாதம் ஆகையால், ஆங்காங்கு படங்கள் திரையிடுவார்கள். அப்போதெல்லாம் அரசுத் தொலைக்காட்சிகள் தான். அதனால் இது போல் படங்களைத் திரையிட்டால், கூட்டம் கூடி விடும். "ஆளப் பிறந்த என் கண்மணியே" பாடல் ஓடிக் கொண்டிருந்தது. திரை அரங்குகளில், ரசிகர்கள் இந்தப் பாடல் எப்போது முடியும் என்று பரபரத்துக் கொண்டிருப்பார்கள். உடனே, நடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சியும் வரும் அல்லவா! நானும், என்னை மறந்து கூட்டத்தோடு நின்று படத்தை - அல்ல அல்ல - நடிகர் திலகத்தை எல்லோரையும் போல் ரசிக்கத் துவங்கி விட்டேன் - இருபத்தோராவது முறையாக! ஆக, அப்பா எனக்குக் கொடுத்த வேலையை மறந்து, படம் முழுவதையும் ரசித்து விட்டு, வீட்டிற்குத் தாமதமாக இரவு சுமார் பத்து மணிக்குச் சென்ற போது, எல்லோரும் டென்ஷனின் உச்சியில் இருந்தார்கள் - எனக்கு என்ன ஆயிற்றோ என்ற டென்ஷன்! - அப்போதெல்லாம் தான் செல் போன் கிடையாதே! அப்பாவிடம் வாங்கு வாங்கு என்று வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •