- 
	
			
				
					24th January 2014, 12:07 PM
				
			
			
				
					#961
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Barani  
 எப்படியெல்லாம்   யோசித்து பதிவு செய்யும் திரு ரவி கிரண் சூர்யா  உமது திறமையை தலைவர் குறித்த விஷயத்தில் காண்பிக்கவும். 
 
 
 தங்கள் கூறிய அறிவுரைக்கு மிக்க நன்றி.
 
 அந்த அறிவுரை வரியில் ஒரு சிறு திருத்தம் திரு பரணி அவர்களே
 
 தாங்கள் ஒத்துகொண்ட எனது திறமையை தலைவர் குறித்த விஷயத்திலும் காட்டுவேன் !
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							24th January 2014 12:07 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					24th January 2014, 12:12 PM
				
			
			
				
					#962
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							முதலில் ராமர் 
 
 பிறகு நாயகர்
 
 அதன் பிறகு நட்சத்திரம்
 
 அடுத்து முருகர்?
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					24th January 2014, 12:50 PM
				
			
			
				
					#963
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							மக்கள் திலகம் பாகம் 12 திரியில் ஒரு நண்பர் பதிவிட்ட செய்தி படிதேன். 
 
 வெட்கப்படவேண்டிய, வேதனைபடவேண்டிய ஒரு செயல் மதியிழந்து ஒருவர நெல்லையில் செய்துவிட்டார் !
 
 மக்கள் திலகம் திரியில் கருத்து கூறிய அந்த நண்பர் கூறியிருப்பது சரியே !
 
 ஒரு விஷயத்தை சிலர் புரிந்து கொள்ள வேண்டும். நடிகர் திலகம் சிலை அகற்ற மறைந்தும் ஏழை எளிய மக்கள் மனதில் வாழும் மக்கள் திலகம் காரணம் அல்ல ! ஆகவும் முடியாது ! ஆகவும் மாட்டார் !
 
 தொழில் துறையில் போட்டி அவர்களுக்குள் என்றுமே இருந்தாலும் அது ஆரொக்யமானதாக இன்று வரை இருக்கிறதே தவிர அநாகரீகமாக இன்றுவரை இருந்ததில்லை.
 
 நடிகர் திலகமும் மக்கள் திலகமும் அவர் அவர் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் மரியாதையும் கொண்டவர்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்..
 
 அப்படி இருக்கும்போது இது போன்ற தரமற்ற காழ்புனற்சியுள்ள செயலால் நடிகர் திலகதிற்கு எந்த பெருமையும் நன்மையும் பயக்காது மக்கள் திலகத்திற்கு எந்த சிறுமையும் எள்ளளவும் ஏற்படாது என்பதை உணரவேண்டும்.
 
 மாறாக தனி மனித விரோதம் வளர வகை செய்யும்.
 
 ஆயிரம் கருத்து - எதிர்மறை கருத்து ஒருவருக்கொருவர் இருக்கலாம் தவறில்லை. ஆனால் ஈனசெயல்கள் நிச்சயம் கண்டனத்திற்குரியவை.
 
 நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் சார்பில் எங்கள் வருத்தத்தை பதிவு செய்வதுடன் தங்களுடைய கண்டனத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என்பதை மக்கள் திலகம் ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும், அவரை தெய்வமாக போற்றும் பக்தர்களுக்கும் மக்கள் திலகம் திரியில் செய்தி பகிர்ந்த நண்பருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					24th January 2014, 02:49 PM
				
			
			
				
					#964
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  RavikiranSurya  
 மக்கள் திலகம் பாகம் 12 திரியில் ஒரு நண்பர் பதிவிட்ட செய்தி படிதேன். 
 
 வெட்கப்படவேண்டிய, வேதனைபடவேண்டிய ஒரு செயல் மதியிழந்து ஒருவர நெல்லையில் செய்துவிட்டார் !
 
 மக்கள் திலகம் திரியில் கருத்து கூறிய அந்த நண்பர் கூறியிருப்பது சரியே !
 
 ஒரு விஷயத்தை சிலர் புரிந்து கொள்ள வேண்டும். நடிகர் திலகம் சிலை அகற்ற மறைந்தும் ஏழை எளிய மக்கள் மனதில் வாழும் மக்கள் திலகம் காரணம் அல்ல ! ஆகவும் முடியாது ! ஆகவும் மாட்டார் !
 
 தொழில் துறையில் போட்டி அவர்களுக்குள் என்றுமே இருந்தாலும் அது ஆரொக்யமானதாக இன்று வரை இருக்கிறதே தவிர அநாகரீகமாக இன்றுவரை இருந்ததில்லை.
 
 நடிகர் திலகமும் மக்கள் திலகமும் அவர் அவர் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் மரியாதையும் கொண்டவர்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்..
 
 அப்படி இருக்கும்போது இது போன்ற தரமற்ற காழ்புனற்சியுள்ள செயலால் நடிகர் திலகதிற்கு எந்த பெருமையும் நன்மையும் பயக்காது மக்கள் திலகத்திற்கு எந்த சிறுமையும் எள்ளளவும் ஏற்படாது என்பதை உணரவேண்டும்.
 
 மாறாக தனி மனித விரோதம் வளர வகை செய்யும்.
 
 ஆயிரம் கருத்து - எதிர்மறை கருத்து ஒருவருக்கொருவர் இருக்கலாம் தவறில்லை. ஆனால் ஈனசெயல்கள் நிச்சயம் கண்டனத்திற்குரியவை.
 
 நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் சார்பில் எங்கள் வருத்தத்தை பதிவு செய்வதுடன் தங்களுடைய கண்டனத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என்பதை மக்கள் திலகம் ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும், அவரை தெய்வமாக போற்றும் பக்தர்களுக்கும் மக்கள் திலகம் திரியில் செய்தி பகிர்ந்த நண்பருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
 
 
 
 உண்மையான உணர்வுகளை உறைக்கும் விதத்தில் உரைத்திட்ட உன்னதமான அன்பு சகோதரர் ரவி கிரண் சூர்யா அவர்களுக்கு நன்றி !
 
 ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
 
 அன்பன் : சௌ.செல்வகுமார்
 
 என்றும் எம். ஜி. ஆர்.
 எங்கள் இறைவன்
 
 
 
 
				
				
				
					
						Last edited by makkal thilagam mgr; 24th January 2014 at 02:53 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					24th January 2014, 02:55 PM
				
			
			
				
					#965
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							சின்னப் பிள்ளையிலிருந்தே எம். ஜி. ஆரும் நானும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும் என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவர் தாயார் கையால் நான் சாப்பிடுவதும் சகஜம். ஒரு கதை மாதிரி எங்கள் நட்பின் வரலாற்றைச் சொல்கிறேன்.
 
 இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயம், 1943 – 44 ல் நான் சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்திலுள்ள ஒற்றைவாடை தியேட்டர் அருகில்தான் குடியிருந்தேன்.
 
 ‘லட்சுமிகாந்தன்’ நாடகமெல்லாம் நடத்தினோமே அந்த நேரத்தில், எனது வீட்டுக்குப் பக்கத்தில்தான் எம். ஜி. ஆர் அவரது தாயார், சகோதரர் எம். ஜி. சக்ரபாணி ஆகியோர் குடியிருந்தனர். அப்போதுதான் எம். ஜி. ஆர். சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்கள்.
 
 நானும் என்னுடைய நண்பர் காகா ராதாகிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அனேகமாக சாப்பாட்டு நேரத்தில் அங்கேயே இருப்போம். எம். ஜி. ஆர். ‘பசிக்கிறது’ என்றாலும், ‘இருப்பா கணேசன் வரட்டும்’ என்பார்கள். அவருடைய அம்மா அந்த அளவுக்கு அவர்களுக்கு என்மேல் பாசம்.
 
 எம். ஜி. ஆர். இரவு நேரத்தில் என்னையும், ராதாகிருஷ்ணனையும் டவுனுக்குப் பக்கத்திலுள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கக் கூட்டிச் செல்வார். திரும்பி வரும்போது, சப்பாத்தி, பால் போன்றவைகளைச் சாப்பிடுவோம். எல்லோருக்கும் அவர்தான் செலவு செய்வார். அதுபோல நீண்ட நாட்கள் இருந்தோம். பிறகு நான் காஞ்சிபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.
 
 அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் முதலில் எம். ஜி. ஆர். நடிப்பதாக இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னைத் தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும்போது, எம். ஜி. ஆரைச் சந்தித்தேன்.
 
 ஒரே காலகட்டத்தில் இருவரும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அதேசமயத்தில் இருவரும் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்.
 
 என்னை அவர் விமர்சிப்பார். அவரை நான் விமர்சிப்பேன். அது அரசியல் பற்றித்தான் பெர்சனலாக ஒன்றுமில்லை. பலர் இதை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் விரோதிகள் என்று பேசிக்கொண்டார்கள். அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.
 
 பல வருடங்கள் சென்ற பின் அவர் முதல் மந்திரியானார். அவர் பதவியிலிருந்த போது, பல முறை நான் சந்தித்திருக்கிறேன். அவரும் பல சம்பவங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வந்திருக்கிறார். அவர் கையால் விருதுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு என்றும் மாறவில்லை.
 
 எனக்கு சென்னையில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதுவும் எம். ஜி. ஆரின் தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது. என் தாயார் மறைந்த பிறகு அவர்கள் நினைவாக என் தோட்டத்தில் என் தாயாரின் உருவச்சிலையைத் திறப்பதற்கு வரவேண்டுமென்று எம். ஜி. ஆருக்குச் சொல்லியனுப்பினேன். உடனே ஒத்துக்கொண்டு, தன் மனைவியுடன் வந்து எனது தாயார் சிலையைத் திறந்து வைத்தார்.
 
 தனது தாயைப்போல் கருதிய என் அம்மாவின் உருவச் சிலையைத் திறந்துவைத்ததில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.
 
 இதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. தஞ்சாவூரில் எனக்கு சாந்தி கமலா என்றொரு தியேட்டர் இருந்தது. இப்போது இல்லை. அந்த தியேட்டர் திறப்பு விழாவின் போதும் ‘நானே வந்து திறக்கிறேன்’ என்று சொல்லியனுப்பினார். தஞ்சாவூர் வந்து அந்தத் தியேட்டரைத் திறந்தார். எனக்கும் அவருக்கும் நட்பும், உறவும் இல்லையென்றால், இவையெல்லாம் நடந்திருக்குமா?
 
 = சிவாஜி - பிரபு அறக்கட்டளை வெளியிட்ட
 ' எனது சுய சரிதை ' என்ற நூலிலிருந்து .- Courtesy Face book
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					24th January 2014, 03:27 PM
				
			
			
				
					#966
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
 
 
- 
	
			
				
					24th January 2014, 03:35 PM
				
			
			
				
					#967
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							thuglaq CHO's views in this issue is worth remembering......... had there been an initiative to re-locate all statues located in the middle of the road then it is a welcome one, rather to target only one particular statue is avoidable............ taking cue out of this........ if some one would have filed a PIL to study and identify all statues similar to Sivaji statue case and give a uniform judgement for all such cases, then it would have made things different I believe.....
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					24th January 2014, 04:27 PM
				
			
			
				
					#968
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
 
 
- 
	
			
				
					24th January 2014, 07:30 PM
				
			
			
				
					#969
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Regular Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Dear KCS Sir.your fluent speech during the debate in Kalaignar news channel echoed views if millions of fans.Thanking the other two guests for their points.Hats off to Kalaignar Tv to give a platform to raise our voice.
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					24th January 2014, 07:32 PM
				
			
			
				
					#970
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Regular Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							Unaraadhavargalukku adhu SILAI
 
 Adhan adaiyaalamo KALAI
 
 Kai vaiththaal kodukka vaendi irukkum VILAI
 
 Idhudhaan manasaatchi ullavargalin NILAI.
 
 
 
 
 
 
 
Bookmarks