Page 222 of 400 FirstFirst ... 122172212220221222223224232272322 ... LastLast
Results 2,211 to 2,220 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2211
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (3)

    'அமர்ஜோதி' மூவிஸ் அளித்த 'உயிரா மானமா' என்ற படத்தின் ஒப்புயர்வில்லாத பாடல். டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் சுசீலாவின் இணைவில் வந்த மிகச் சிறந்த பாடல் வரிசைகளில் இப்பாடலும் ஒன்று.



    நடிக, நடிகையர்கள்: ஜெய்சங்கர், முத்துராமன், நம்பியார், நாகேஷ், 'ஞானஒளி' விஜயநிர்மலா, கிருஷ்ணகுமாரி, டி.கே.பகவதி. எஸ்.வரலஷ்மி

    பாடல்கள்: கண்ணதாசன்

    இசை: மெல்லிசை மன்னர். உதவி: கோவர்த்தனம்

    கதை, வசனம், டைரக்ஷன்: 'இயக்குனர் திலகம்' கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.


    ஊட்டி மலை ஹேர்பின் வளைவுகளில் மோட்டார் பைக்கில் ஜெய்சங்கரும், அவருடன் அவர் தங்கை மல்லிகாவும் பாடி வரும் பாடல். (இப்படத்தில் ஜெய்க்கு 'பொசுக் பொசுக்' என்று கோபம் வந்து எல்லோரையும் 'பொட் பொட்'டென்று அடித்து விடுவார்) மல்லிகா அதிகம் தெரியாத நடிகை. ஆனால் நன்றாக முகபாவங்கள் காட்டுவர்.

    படம் டைட்டில் முடிந்தவுடனேயே இப்பாடல் தொடங்கும். படம் பார்க்கும் நமக்கு ஜெய்யும், மல்லிகாவும் ஜோடியோ என்று தோன்றும். படத்தில் இந்த ஜோடியைப் பார்க்கும் 'லூஸ்' மோகன் கோஷ்டியும் அப்படி தப்பாக நினைத்து ஜெய்யிடம் சொல்லப் போக கோபத்தில் ஜெய் நாங்க 'அண்ணன் தங்கைடா' என்று சொல்லி அடிக்கும் போதுதான் நமக்கே இவர்கள் அண்ணன் தங்கை என்று தெரியும். (கொஞ்சம் நெருக்கத்தைக் குறைத்திருந்தால் இந்த சந்தேகம் எழுந்திருக்க வாய்ப்பில்லை)

    அண்ணன் தங்கை டூயட் என்று கார்த்திக் எழுதுவாரே! அம்மாதிரி ஒரு அருமையான பாடல். இயற்கை அழகை ரசித்து, அம்மா போல தங்களை வளர்க்கும் அண்ணி எஸ்.வரலஷ்மியை நினைத்துருகிப் பாடி வரும் பாடல்.


    இப்பாடலின் உண்மையான நாயகன் யார் தெரியுமா?



    பாடகர் திலகம் தான். அடடா! என்ன ஒரு வாய்ஸ். என்ன ஒரு வெளிப்படுத்தும் திறமை! அத்தோடு சேர்ந்த அந்த இனிமையான ஆண்மகனுக்கென்றே முழுமை பெற்ற குரல்வளம். பாடும் தொனி,
    பாடலைப் புரிந்து அவர் நன்கு அதை உள்வாங்கி பின் நூறு சதம் அதை அருமையாக பிரசெண்ட் பண்ணும் விதம், ஏற்ற இறக்கங்கள், ஜால வித்தைகள் என்று பாடல் முழுதையும் ஆக்கிரமித்து விட்டார். சுசீலா அருமை என்றாலும் சௌந்தரராஜன் வெகு ஈசியாக அவரை ஓவர் டேக் செய்து விடுகிறார்.

    'பறவைகளே! பறவைகளே!'

    என்று அவர் குரலை சற்றே உள்வாங்கி பின் வெளிவிடுவது அருமையிலும் அருமை.

    உச்ச்கட்டம் எது தெரியுமா?

    'அம்மா என்னும் தெய்வம் எம்மை' வரிகளில் அவர் 'அம்மா' என்று பாடும் போது அதில் அவர் காட்டும் அன்பு, பாசம், நேசம், பக்தி, நேர்த்தியை எப்படிப் புகழ்வது? கண்களைக் குளமாக்கும் குரல் பாவம்.

    இப்பாடல் நமது நடிகர் திலகத்திற்கு அமைந்திருந்தால் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று கற்பனையில் நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.

    கார்த்திக் சார் மற்று வினோத் சாரின் நட்புக்காக இப்பாடலை முழு விருப்பத்துடன் அளிக்கிறேன்.




    கொடியில் இரண்டு மலருண்டு
    மலரில் பனியின் துளி உண்டு
    பனியில் கதிரவன் ஒளியுண்டு
    எதிலும் புதுமை மணம் உண்டு

    அஹஹாஹஹாஹஹஹா
    அஹஹாஹஹாஹஹஹா

    கொடியில் இரண்டு மலருண்டு
    மலரில் பனியின் துளி உண்டு
    பனியில் கதிரவன் ஒளியுண்டு
    எதிலும் புதுமை மணம் உண்டு

    கோடை வரும் வெய்யில் வரும்
    கோடைக்குப் பின்னே மழையும் வரும்
    கோபம் வரும் வேகம் வரும்
    கோபத்தின் பின்னே குணமும் வரும்

    மேகங்களே மேகங்களே வான்மீதிலே
    உங்கள் தேரோட்டமா
    வானமென்னும் அன்னை தந்த
    பாசத்தினால் வந்த நீரோட்டமா

    கொடியில் இரண்டு மலருண்டு
    மலரில் பனியின் துளி உண்டு
    பனியில் கதிரவன் ஒளியுண்டு
    எதிலும் புதுமை மணம் உண்டு

    பன்னீரிலே தாலாட்டவும்
    கல்யாணப் பெண்ணாக சீராட்டவும்
    அண்ணன் உண்டோ தங்கை உண்டோ
    எங்கள் அண்ணி என்னும்
    அன்னை அங்கே உண்டோ

    பறவைகளே பறவைகளே
    பாசத்தை என் வீட்டில் பாருங்களேன்
    அம்மா என்னும் தெய்வம் எம்மை
    அரசாளும் கோலத்தை காணுங்களேன்

    கொடியில் இரண்டு மலருண்டு
    மலரில் பனியின் துளி உண்டு
    பனியில் கதிரவன் ஒளியுண்டு
    எதிலும் புதுமை மணம் உண்டு

    அஹஹாஹஹாஹஹஹா
    அஹஹாஹஹாஹஹஹா


    Last edited by vasudevan31355; 23rd July 2014 at 10:12 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2212
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாவ் நல்ல பாடல்கள் நன்றி ராஜேஷ், கோபால் சார், ராகவேந்திர சார், வாசு சார்..வினோத் சார்..

    தேசுலாவுதே - சன் சிங்கர் இறுதிப் போட்டியில் நாக்பூர் ஐஸ்வர்யா என்னும் சிறுமி பாடி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்..

    கொடியில் இரண்டு மலருண்டு நல்ல பாட்டு எனக்குப் பிடிக்கும்..

    பொங்கும் பூம்புனல் அசத்தல்.. நன்றி.

    ம்ம் எண்ணம் போல கண்ணன் வந்தான்.. நல்ல பாட்..ஜோ.ல தான்கொஞ்சம் இடிக்குது

  4. #2213
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    டியர் வாசு சார்
    நல்லதொரு அண்ணன் தங்கை டூயட் பாடலை பதிவு செய்து உள்ளீர்கள்

    இந்த படத்தின் இறுதி கோர்ட் சீன் நல்ல நினைவு .உண்டு t கே.பகவதி மற்றும் oak தேவர் .

    இந்த படத்தில் தானே 'சவாலே சமாளி ' பாடகர் திலகம்,ராட்சசி குரல்களில்

    பூவா தலையா,உயிரா மானமா,குலமா குணமா,கட்டிலா தொட்டிலா ,தாலியா சலங்கையா,பணமா பாசமா இப்படி இந்த டைட்டில் க்கு பிள்ளையார் சுழி போட்ட முதல் படம் இது னு நினைக்கிறன்
    உறுதி செய்யவும்
    gkrishna

  5. #2214
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post


    டியர் வாசு சார்
    நல்லதொரு அண்ணன் தங்கை டூயட் பாடலை பதிவு செய்து உள்ளீர்கள்

    இந்த படத்தின் இறுதி கோர்ட் சீன் நல்ல நினைவு .உண்டு t கே.பகவதி மற்றும் oak தேவர் .

    இந்த படத்தில் தானே 'சவாலே சமாளி ' பாடகர் திலகம்,ராட்சசி குரல்களில்

    பூவா தலையா,உயிரா மானமா,குலமா குணமா,கட்டிலா தொட்டிலா ,தாலியா சலங்கையா,பணமா பாசமா இப்படி இந்த டைட்டில் க்கு பிள்ளையார் சுழி போட்ட முதல் படம் இது னு நினைக்கிறன்
    உறுதி செய்யவும்
    கிருஷ்ணா சார்,

    வணக்கம், நன்றி!

    'உயிரா மானமா'வுக்கு முன்னாடியே 'பணமா பாசமா' வந்துடுச்சின்னு நினைவு.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2215
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    நல்ல பாட்..ஜோ.ல தான்கொஞ்சம் இடிக்குது


    பயங்கரமாக ஆட்சேபிக்கிறேன் யுவர் ஆனர்
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2216
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்/ சி.க சார்,

    'நீங்கள் எமக்களித்த

    நெய்வேலி

    பெருமை கண்டு

    எங்கள் ஊர் புகழ் பாடிய படம் சார் 'உயிரா மானமா'.

    எனவே மறக்க முடியாது
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2217
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கிருஷ்ணா சார்/ சி.க சார்,

    'நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமை கண்டு

    எங்கள் ஊர் புகழ் பாடிய படம் சார் 'உயிரா மானமா'.

    எனவே மறக்க முடியாது
    சீர்காழி ஈஸ்வரி குரல்களில்

    வற்றாத பேரழகே நீராடு
    eswari humming
    லல்லி லல்லி ஈஈ அல்லது பல்லி யா
    gkrishna

  9. #2218
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    தெய்வீக உறவு 1968
    இயக்குனர் சத்யம்
    தயாரிப்பாளர் பி. ராமசாமி
    திருமுருகன் பிக்சர்ஸ் ...
    திரை இசை திலகம் மாமா இசை


    திரை இசை திலகம் மாமா இசை
    ஜெய்ஷங்கர் தேவிகா நாகேஷ்

    'முத்து நகை பெட்டகமோ' -tms
    'அழகிய தென்னம்சோலை' - tms
    'மரம் பழுத்தால் பறவை' - suseela

    இந்த பாடல்களை பற்றி நாம் பேசியுள்ளோமோ
    gkrishna

  10. #2219
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    அபூர்வ பாடல்களை அள்ளித்தரும் அபூர்வ சித்தர் நீங்கள் எங்களுக்கு.

    'தேக் தேரே சன்ஸார் கி ஹாலத்(து) கியா ஹோகய் பஹ்வான்
    கித்னா பதல்கயா இன்சான்'

    'நாஸ்திக்' (1954)இந்திப் படத்தில் பிரதீப்ஜியின் (இவர் கவி மற்றும் பாடலாசிரியரும் கூட) அருமையான குரலில் ஒலிக்கும் அற்புத பாடல்.

    என்ன பாட்டு சார் அது? அப்படியே மனிதனை உலுக்கு உலுக்கு என்று உலுக்கி சொல்லமுடியாத உணர்வுக் குவியல்களை இப்பாடல் நம்முள் உண்டாக்குகிறதே!

    இப்படத்தை தமிழில் 'நாஸ்திகனா'க்கி மேற்சொன்ன பாடலை பிரதீப்ஜியின் குரலை ஓரளவிற்கு ஒத்த திருச்சி லோகநாதன் அவர்களைப் பாட வைத்து 'மாநிலமே! சில மானிடரால் என்ன மாறுதல் பாரய்யா! மனிதன் மாறியதேனய்யா' தந்தார்கள்.

    ஆனால் இந்திப் பாடல்தான் முதன்மை பெறுகிறது. திருச்சியாரும் குறை வைக்கவில்லை. ஆனால் இரண்டாம் இடம்தான்.

    அஜித், நளினி ஜெய்வந்த் பிரதான வேடங்களில் நடித்திருந்தார். நளினி கிட்டத்தட்ட நர்கீஸை தோற்றத்தில் நினைவுபடுத்துவார்.

    Last edited by vasudevan31355; 23rd July 2014 at 11:17 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2220
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    சற்றே வயது முதிர்ந்த, குதிரைவால் கொண்டையுடன் பேண்ட், பிளாக் ஷர்ட்டில் அண்ணியார் தேவிகா. அப்புறம் சேலை.

    அழகான மெலடி

    நன்றி கிருஷ்ணா சார்.


    அழகிய தென்னஞ்சோலை
    அமைதி உலாவும் மாலை
    இளையவன் ஒருவன் வந்தான்

    அங்கு இயற்கையில் எதையோ கண்டான்

    தொடரும் தொடரும்
    இது தொடர்கதை
    போலத் தொடரும்

    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •