-
22nd September 2015, 09:00 AM
#131
Senior Member
Diamond Hubber
இது தமிழில் பெருகும் அமெரிக்க அருவி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd September 2015 09:00 AM
# ADS
Circuit advertisement
-
22nd September 2015, 10:16 AM
#132
Senior Member
Senior Hubber
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
மதுண்ணா, செந்தில்வேல், வாசு.. அருவிப் பாடல்களுக்கும் சர்க்கரைப் பாடல்களுக்கும் தேங்க்ஸ்..
அருவிகூட இனிமையாக சுரங்களைத் தேடுதுஎன ஒரு கெளரி மனோகரி பாட்டு நினைவுக்கு வருகிறது..பாட்டில் திருவையாறு பேக் க்ரெளண்ட் வரும்..
அட இப்படி அலசியதாய் நினைவிலில்லையே..பின்னணியில் தெரியும் இயற்கை..பேக்க்ரெளண்ட்..
சமீபத்திய ஒரு படத்தில் அனுஷ்கா சூர்யா பாடும் ஒரு சின்னத்தாமரை.. பாட்டோட பேக் க்ரெளண்ட் மஸ்கட்டிலிருந்து துபாய் போகும் வழியில் மலைகளும் மணல்கள் கொஞ்சம் கருமை வண்ணம் கொண்டது போல் காட்சியளிக்கும் இடத்தில் எடுக்க ப் பட்டது என நினைக்கிறேன்..ஹிந்தி ரேஸில் கூட லண்டன், ஸ்விஸ் எல்லாம் சொல்லி சேஸின் போது மஸ்கட் சாலைகளைக் காண்பித்திருப்பார்கள்..
நம்ம ஊர் ப் படங்களுக்கு க் கோவில்கள், அணைகள் தான்..இன்னும் இந்தக் கர்ணன் பாடல் எந்தக் கோவில் என்று தெளிவாக எனக்குத் தெரியாது..மஞ்சு பார்கவி சங்கராபரணத்தில் ஆடுவதும் இதே கோவில் போலவே இருக்கும்..
இது போல் சொல்லலாமே..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
22nd September 2015, 10:29 AM
#133
Senior Member
Seasoned Hubber
வணக்கம் சிக, வாசு ஜி, மதுண்ணா
-
22nd September 2015, 11:23 AM
#134
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 5 Likes
-
22nd September 2015, 11:24 AM
#135
Senior Member
Seasoned Hubber
http://www.inbaminge.com/t/s/Sengottai%20Singam/
செங்கோட்டை சிங்கம் படத்தில் ஒரு பாடலுண்டே... தேனருவி பாதையிலே ஓ ஆசை மாமா...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
22nd September 2015, 11:28 AM
#136
Senior Member
Seasoned Hubber
அருவியின் பின்னணியில் அபிநய சரஸ்வதி...
அருமையான பாடல் .. ஆஹா.. ஜிக்கியின் குரலில் சொக்குதே மனம்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd September 2015, 11:33 AM
#137
Senior Member
Seasoned Hubber
ஆஹாஹா.. ஆசை தீர பேசலாமே ஊஞ்சல் மேலே..
ஆனால் இது நாம் நினைக்கிற ஊஞ்சலில்லே... இவங்களோட ஊஞ்சல் எது என்று பாடலைப் பாருங்கள்..
அருவியின் பின்னணியில் இன்னொரு பாடல்..
செங்கோட்டை சிங்கம் படம் மட்டும் கலரில் எடுக்கப்பட்டிருந்தால் உள்ளம் கொள்ளை போயிருக்கும்.. படம் முழுதும் இயற்கை அழகு கொஞ்சும் வன மற்றும் மலைப்பிரதேசம்.. படத்தில் உதயகுமார் மேலாடை அணிந்த காட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.
கன்னட சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடியாக உதயகுமார் சரோஜாதேவி வலம் வந்த போது அந்த சென்டிமென்டை வைத்து அவர்களைத் தமிழில் நாயகன் நாயகியாக நடிக்க வைத்து எடுக்கப்பட்ட படமே செங்கோட்டை சிங்கம்..
அருமையான படம்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
22nd September 2015, 11:35 AM
#138
Senior Member
Seasoned Hubber
செங்கோட்டை சிங்கம் படத்தை இது வரை பார்க்காதவர்களுக்கக
முழுப்படத்திற்கான காணொளி
ஆனால் இந்த காணொளியில் தேனருவி பாதையிலே பாடல் இடம் பெற்றதாகத் தெரியவில்லை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd September 2015, 11:50 AM
#139
Junior Member
Veteran Hubber
காதல் மன்னரின் மறக்க முடியாத கிளைமாக்ஸ் மதுர கீத காட்சிகள் !
பகுதி 1 கல்யாண பரிசு / ரோமன் ஹாலிடே
ஒரு படத்தைப் பார்க்கிறோம் கதையமைப்பின்படி நகரும் காட்சிக்கோர்வையை ரசிக்கிறோம் இனிய இசையமைப்பிலும் பாடல்காட்சிகளிலும் லயிக்கிறோம்!
பெரும்பாலும் ஒரு படத்தின் வெற்றி இடையிடையே வரும் காட்சிகளை விட அதன் கிளைமாக்ஸ் அமைப்பில்தான் உறுதி செய்யப்படுகிறது என்பது எனது தாழ்மையான கருத்து ! சிறந்த உதாரணங்கள் நடிகர் திலகத்தின் கர்ணன், புதிய பறவை, அந்த நாள், கௌரவம்...பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன்...காதல் மன்னரின் கல்யாணபரிசு, சுமை தாங்கி, சாந்தி நிலையம்.....ரவிச்சந்திரனின்
அதே கண்கள்....ஜெய்யின் நூற்றுக்கு நூறு.....ஹிட்ச்காக்கின் திகில் படங்கள்...முக்கியமாக சைக்கோ , வெர்டிகோ.... ஜேம்ஸ் பாண்ட் படங்கள்....கிரிகரிபெக்கின் ரோமன் ஹாலிடே........வெற்றிக்கோட்டையில் கொடிநாட்டிய காவியங்கள்!
கிளைமாக்ஸில் சொதப்பிய படங்கள் பெரும்பாலும் வெற்றியைக் கோட்டைவிடுகின்றன !
அந்தவகையில் கல்யாணப் பரிசு திரைப்படத்தில் விரக்தியோடு இலக்கின்றி போகும் திசையறியாது மனமும் உடலும் தள்ளாட காதலிலே தோல்வியுற்ற காதலனின் மொத்த உருவகமாக ஜெமினி ஒரு லாங்க்ஷாட்டில் சில்லவுட்டாக முதுகாட்டி நடந்து செல்லும் மகோன்னதமான காட்சி என் மனத்தைக் கவர்ந்த கிளைமாக்ஸ் ஆகும் !!
ஆனால் ஸ்ரீதர் இந்தக் காட்சியை ரோமன் ஹாலிடே படத்தின் கிளைமாக்சில் கிரிகரிபெக் காதல் நழுவிய துக்கம் தொண்டையடைக்க நம்மை நோக்கி விரக்தியுடன் நடந்து வரும் ஷாட்டைத்தான் இன்ஸ்பிரேஷனாக கொண்டிருக்க முடியும்!!
Last edited by sivajisenthil; 22nd September 2015 at 12:40 PM.
-
22nd September 2015, 11:53 AM
#140
Senior Member
Seasoned Hubber

இன்று அமரர் பி.பி.ஸ்ரீநிவாஸ் பிறந்த நாள். வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத பல பாடல்களைத் தந்த கந்தர்வக் குரலோன். இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் இனிக்கும்..
சரசா பி.ஏ. படத்தில் இரவின் மடியில் உலகம் உறங்கும்...
உள்ளே ஒருவன் உறங்குகின்றானே..
வெளியே ஒருவன் உலவுகின்றானே...
எல்லாம் தெரிந்தும் ஊமையைப் போலே
இருக்கின்றானே என் தலைவன்.. தலைவன்...தலைவன்...
என்ன கருத்தாழமிக்க வரிகள்...
வேதாவின் இசையில மெய்மறக்கச் செய்யும் பாடல்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks