
Originally Posted by
makkal thilagam mgr
1972ம் ஆண்டில் வெளி வந்த தங்களின் அபிமான நடிகரின் படங்களின் பெருமையை மட்டும் சொல்லி சொல்லி ( அப்படியென்றால் மற்ற ஆண்டுகளில் இது போன்ற நிகழ்வுகள் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார்களோ என்னவோ) மாய்ந்து போயிருக்கின்றனர் மாற்று திரி நண்பர்கள்.
"பட்டிக்காடா பட்டணமா 21 வாரங்கள் மட்டுமே சாந்தியில் ஓடி இருக்கிறது. பின்பு, சித்ரா அரங்கில் ஷிப்ட் செய்து 4 வாரங்கள் ஒட்டப்பட்டு, அதனையும் வெள்ளி விழா படங்களில் ஒன்று என கணக்கு காட்டியதை நாங்கள் மறக்க மாட்டோம்.
வெள்ளி விழா படம் என்று கூறப்பட்ட "வசந்த மாளிகை" , "திரி சூலம்" போன்ற திரைப்படங்கள் மறு வெளியீட்டில், தியேட்டரை விட்டு ஒரு வாரத்துக்குள் தூக்கப்பட்ட பரிதாப நிலை , எங்கள் மக்கள் திலகத்தின் காவியங்களுக்கு என்றுமே ஏற்பட்டதில்லை.
வீர பாண்டிய கட்ட பொம்மனை விட்டு விட்டீர்களே என்று எங்கள் மக்கள் திலகத்தின் அன்பர் குரல் ஒலிக்கிறது ஒரு புறம்.
1965ல் நூறு நாட்கள் ஓடிய எங்கள் மன்னவனின் காவியம் "ஆயிரத்தில் ஒருவன்", பெட்டிக்குள் முடங்காமல், தமிழகமெங்கும் ஓடிக்கொண்டே இருந்தது. 2014ம் ஆண்டு, வெள்ளி விழாவையே கண்டது. இதைப்போல் கின்னஸ் சாதனை நிகழ்த்த எங்கள் பொன்மனச்செம்மல் ஒருவரால் மட்டுமே முடியும்.
1972ல் வெளியான, பொன்மனசெம்மலின் - சங்கே முழங்கு, நல்ல நேரம், ராமன் தேடிய சீதை, நான் ஏன் பிறந்தேன், அன்னமிட்ட கை, இதய வீணை போன்ற பொற்காவியங்கள் இன்றும் மறு வெளியீடுகளில் சக்கை போடு போட்டு வருகிறது. அந்த 1972ம் ஆண்டு வெளியான, இதர நடிகர்களின் படங்கள் எத்தனை முறை மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.
நாங்களும் எங்கள் தரப்புக்கு -
1. 15-07-1972 அன்று வெளிவந்து வெறும் 41 நாட்கள் (ஓடியன் அரங்கில்) மட்டுமே ஓடிய 'தர்மம் எங்கே" வசூலை தெரிவியுங்கள் என்று கேட்கலாமே.!
மகாராணி அரங்கில் 35 நாட்கள் ஓடியதன் வசூலையும், மேகலா அரங்கில் ஓடிய 42 நாட்கள் வசூலையும், ராம் அரங்கில் 34 நாட்கள் மட்டுமே ஓடியதன் வசூலையும் போனால் போகிறது என்று விட்டு விடுகிறோம்.
2. 15-06-1973 அன்றுகி,,சென்னை பிளாசா அரங்கில் வெளியாகி வெறும் 42 நாட்கள் மட்டுமே ஓடிய "பொன் ஊஞ்சல் " வசூலை கோரலாமே ! ராம் தியேட்டரில் வெறும் 28 நாட்களில் தூக்கப்பட்டதன் விவரத்தை நாங்கள் பெருந்தன்மையாக விட்டு விடுகிறோம்.
3. 07-12-1973 அன்று, வசந்த் மூவீஸ் வெளியிட்ட "மனிதரில் மாணிக்கம்" பைலட் அரங்கில் வெறும் 15 நாட்கள் ஓடியது. அதன் வசூலை நாங்கள் எப்போதாவது எங்கள் மக்கள் திலகத்தின் பட ஒரு நாள் வசூலுடன் ஒப்பீடு செய்தோமா ? ஸ்ரீ முருகன், (35 நாட்கள்) ஜெயராஜ் (21 நாட்கள்) முரளி கிருஷ்ணா (15 நாட்கள்) ஓடியதை விட்டு விடுவோம்.
4. சிவா கம்பைன்ஸ் ரிலீஸ் செய்த "ராஜபார்ட் ரங்க துரை" யின் 69 நாட்கள் ( பைலட் அரங்கில்) வசூலை எதிர்பார்க்கலாமே !
5. 26-01-1974 அன்று, கிரசண்ட் மூவிஸ் வெளியிட்ட "சிவகாமியின் செல்வன்" (சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக ஓடிய "ஆராதனா" இந்தி படத்தின் தமிழாக்கம்), தேவி பாரடைஸ் அரங்கில் வெறும் 55 நாட்கள் மடடுமே ஓடியதன் வசூலையும் நாங்கள் கேட்கலாமே ! (47 நாட்கள் உமா அரங்கில் ஒடியதையும், 56 நாட்கள் அகஸ்தியா அரங்கில் ஓடியதையும் விட்டு விடுகிறோம்)
இப்படியே, சென்னை அரங்குகளில், முதல் வெளியீட்டிலேயே, 1975 முதல் 1980 வரை, 50 நாட்களுக்கும் குறைவாக ஓடிய -
6. மனிதனும் தெய்வமாகலாம், 11-01-1975 அன்று வெளிடப்பட்டு ஆனந்த் அரங்கில் வெறும் 27 நாட்கள், பிராட்வே - 41 நாட்கள், முரளி கிருஷ்ணா 41 நாட்கள், தமிழ்நாடு 27 நாட்கள்)
7, அன்பே ஆருயிரே,- 27-09-1975 அன்று வெளியானது. வெலிங்டன் - 36 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணா 36 நாட்கள், சயானி -- 27 நாட்கள் , ராம் 27 நாட்கள்)
8. வைர நெஞ்சம், 02-11-75 அன்று வெளியானது. ஓடியன் 26 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணா 26 நாட்கள், முரளி கிருஷ்ணா 26 நாட்கள், நூர்ஜஹான் 19 நாட்கள்)
9. உனக்காக நான் 12-02-1976 அன்று வெளியாகி ( 50 நாட்கள் மட்டுமே ஓடிய தேவி பாரடைஸ் அரங்கு தவிர்த்து) அகஸ்தியா 43 நாட்கள், புவனேஸ்வரி 43 நாட்கள் ஓடியது
10. சித்ரா பௌர்ணமி, அவன் ஒரு சரித்திரம் (ஸ்ரீ கிருஷ்ணா ஆரங்கு தவிர்த்து) ,
11. இளைய தலைமுறை, (28-05-1977 அன்று வெளியானது) - சித்ரா 34 நாட்கள், கிரவுன் 41 நாட்கள், புவனேஸ்வரி 34 நாட்கள், பழநியப்பா 27 நாட்கள்)
12. நாம் பிறந்த மண் : (07-10-1977 அன்று வெளியானது) சித்ரா 37 நாட்கள், மகாராணி 34 நாட்கள், முரளிகிருஷ்ணா 28 நாட்கள்) ,
12. வாழ்க்கை அலைகள் 14-04-1978 அன்று வெளியானது. சென்னை பாரகன் - 8 நாட்கள் மட்டுமே, நடராஜ் - 14 நாட்கள், நூர்ஜஹான் - வெறும் 7 நாட்கள்)., ... இப்படி ஒரு படம் திரைக்கு வந்ததா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்திய படம்.
13. புண்ணிய பூமி 12.05.1978 அன்று வெளியானது. (சித்ரா 21 நாட்கள், பிராட்வே - 21 நாட்கள், உமா 26 நாட்கள்), - கேள்விப்படாத ப்டமாயிருக்கிறதே என்று எண்ண வைத்த படம்.
14. ஜஸ்டிஸ் கோபிநாத் 16-12-1978 அன்று வெளியானது. (பாரகன் 43 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணா 27 நாட்கள், லிபர்ட்டி 41 நாட்கள்)
15. கவரி மான் 06-04-1979 அன்று வெளியானது (மிட்லண்ட் 49 நாட்கள், பிராட்வே 42 நாட்கள், லிபர்ட்டி 42 நாட்கள்),
16. இமயம் 21-07-1979 அன்று வெளியானது. ( சாந்தியிலேயே 48 நாட்கள் தான், கிரவுன் 35 நாட்கள், புவனேஸ்வரி 41 நாட்கள்)
17. வெற்றிக்கு ஒருவன் 08-12-1979 அன்று வெளியானது. (ஸ்டார் 34 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணா 38 நாட்கள், ஈகா 20 நாட்கள்), இதுவும் எப்போது வெளியானது என்று ரசிகர்களை கேட்க வைத்த படங்களுள் ஒன்று.
18. தர்ம ராஜா 26-04-1980 அன்று வெளியானது. (பைலட் 20 நாட்கள், ஸ்ரீ கிருஷ்ணா 40 நாட்கள், ஈகா 20 நாட்கள்)
19. எமனுக்கு எமன் 16.05. 1980 அன்று வெளியானது. (மிட்லண்ட் 49 நாட்கள், கிரவுன் 35 நாட்கள், புவனேஸ்வரி 49 நாட்கள், கமலா 42 நாட்கள்),
போன்ற படங்களின் வசூலை கேட்கலாமா ?
இந்த தோல்விப்பட பட்டியல், 1981ல் வெளியான மோகனப்புன்னகை .படம் முதற்கொண்டு 1981ல் வெளியான ஞானப்பறவை வரை அடுத்த பத்தாண்டுகளில், ஒரு தொடர்கதை போல் நீளுகிறது.
தேவைப்பட்டால் அவற்றையும் புள்ளி விவரங்களுடன் வெளியிட தயாராக உள்ளேன்.
எனவே, இந்த வசூல் விவர ஒப்பீடு என்பதை அடுத்த நிலையில் உள்ள நடிகர்களின் பட வசூல்களுடன் ஒப்பிட்டு ஆனந்தம் அடைந்து கொள்ளுங்கள்.
தமிழ் திரையுலகின் ஒரே நிரந்தர வசூல் சக்கரவர்த்தியின் காவியங்களை ஒப்பிடுவதை, இனியாவது நிறுத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
Bookmarks