-
27th August 2011, 08:05 AM
#1301
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
என் மனமார்ந்த நன்றிகள்! தங்களின் சாணக்ய சந்திரகுப்தா பற்றிய நிழற் படங்கள் மற்றும் பட விவரப் பதிவுகள் அனைத்தும் அருமை. நன்றி.
அன்பு பம்மலார் சார்,
எங்கள் உளம் கனிந்த பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள். தவப் புதல்வனைப் பற்றிய ஆவணப் பதிவுகள், கிடைத்தற்கரிய நிழற் படங்கள், குறிப்பாக கண்ணதாசன்,c.v.r, பாலாஜி, முக்தா அவர்களுடன் நடிகர் திலகம் சர்வ சாதரணமாய் அமர்ந்துள்ள பிலிமாலயாவின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் கண்களிலேயே தங்கி நகர மறுக்கிறது, சூப்பர்.
டியர் சந்திரசேகரன் சார்,
அற்புதமான முக்கனிகளை எங்களுக்கு உங்கள் பிறந்த நாள் பரிசாக அளித்து விட்டீர்கள். தீஞ்சுவையாக இனித்தன. நடிகர் திலகத்தை நேரிலே சந்தித்த சந்தோஷத்தை அளித்தது அவர் தங்களுக்கு கையொப்பமிட்டு அளித்த அந்த அருமையான புகைப்படம். விசிட்டிங் கார்டும் அருமை. கிடைத்தற்கரிய பொக்கிஷம். (என்ன ஒரு ரசனை அவருக்கு!) நன்றி சார்!.
அன்பு பாலா சார்,
தாங்கள் அளித்துள்ள சுட்டியும், பதிவுகளும் மறக்க இயலாதவை. நன்றி!
மற்றும் அனைத்து நல் உள்ளங்களின் அருமைப் பதிவுகளுக்கும் என்னுடைய இதய பூர்வமான நன்றிகள்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 27th August 2011 at 08:11 AM.
-
27th August 2011 08:05 AM
# ADS
Circuit advertisement
-
27th August 2011, 08:38 AM
#1302
Senior Member
Diamond Hubber
மருத நாட்டு வீரனின் மாறு பட்ட வேடங்கள்.

அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
27th August 2011, 10:33 AM
#1303
Senior Member
Regular Hubber
thank u pammalar sir
all the best to shekar
Raghavendra sir
can you please add Engamama ellorum nala vala song in you tube sir
pammalar sir thank u again
-
27th August 2011, 10:46 AM
#1304
Senior Member
Seasoned Hubber
முத்தான முதல் வாழ்த்தை அளித்த திரு.ராகவேந்திரன் அவர்களுக்கும், வாழ்த்தை வழங்கி பாராட்டிய நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கும், திரு. பம்மலார் அவர்களுக்கும் நன்றி.
தொடரும் தவப்புதல்வன் பதிவுகள் மற்றும் சந்திரகுப்த சாணக்கியா தகவல்களுக்கு பாராட்டுக்கள்.
-
27th August 2011, 10:50 AM
#1305
Senior Member
Diamond Hubber
உலகின் முதலிசை தமிழிசையே
உலகின் முதல்தர நடிகர் நம் தவப்புதல்வனே
நடிகர் திலகமும், அவரது இனிய நண்பரும் மலையாளத் திரைப்பட நடிகருமான திரு.திக்குரிசி சுகுமாரன் நாயர் அவர்களும் இணைந்து நடித்த அற்புதமான பாடல் காட்சி. காலத்தால் அழியாத கானம். அதற்கு உதட்டசைவுகளாலும், அங்க அசைவுகளாலும் உயிர் கொடுக்கும் நடிகர் திலகம். இதோ அந்த அற்புதமான பாடல் காட்சி....
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 27th August 2011 at 11:23 AM.
-
27th August 2011, 11:51 AM
#1306
Senior Member
Veteran Hubber
அன்புள்ள சந்திரசேகர் சார்,
இதயம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். (நேற்று இணையத்துக்கு வரவில்லை. அதனால்தான் தாமதம்). தாங்கள் அளித்த பொக்கிஷங்கள் மூன்றும் அரியவை. அவற்றை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கியமைக்கு நன்றிகள். எங்கெங்கோ பிறந்தவர்களை இங்கே ஒன்றாக்கிய நடிகர்திலகம் என்னும் அன்புக்கயிறு, திருத்துறைப்பூண்டியில் பிறந்த தங்களையும் எங்களோடு இணைத்து விட்டது. இனி நம் வாழ்நாள் முழுதும் நமக்குள் பிரிவில்லை.
சிவாஜி சமூக நலப்பேரவை மூலம் தாங்கள் ஆற்றிவரும் பணிகள் அளவிடற்கரியது. பாராட்டுக்குரியது. நடிகர்திலகத்தோடு நெருங்கிப்பழகும் பேறு பெற்ற நீங்கள் எங்களில் ஒரு பாக்கியசாலி.
நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணிக்காகவே தாங்கள் பல்லாண்டுகள் வாழ வேண்டும்.
-
27th August 2011, 12:15 PM
#1307
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
'தவப்புதல்வன்' மேளா மிக மிக அருமை. கிடைத்தற்கரிய அரிய பொக்கிஷங்களை, பல்வேறு பத்திரிகைகளில் திரட்டிவற்றை அள்ளிக்குவித்து விட்டீர்கள். விளம்பரங்கள், ஸ்டில்கள், செய்தித்துணுக்குகள், விமர்சனங்கள் அனைத்தும் மிகப்பிரமாதம். அதிலும் அனைத்து கலைஞர்களுடனும் பாலாஜி, சி.வி.ஆர். ஆகிய வெளியாரும் இடம்பெற்றிருக்கும் அந்த புகைப்படம் கண்கொள்ளாக் காட்சி.
ஆனந்த விகடன் விமர்சனம் மனதை வருத்தப்படுத்தியது. படத்தில் எவ்வளவோ சிறப்புக்கள் இருந்தும் அவற்றைக் குறிப்பிடாமல், குறைகளை மட்டும் லென்ஸ் வைத்துத் தேடியெடுத்து சொல்லியிருக்கின்றனர். அவர்களின் முகத்தில் கரி பூசுவது போல படம் 100 நாட்களைக்கடந்து வெற்றி நடை போட்டது.
இரண்டு விமர்சனங்களிலும், அசத்தலான நான்கு பாடல்களை அமைத்துத் தந்த மெல்லிசை மாமன்னரைப்பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. அன்றைய காலகட்டத்தில் தமிழ்ப்படங்களில் ஆங்கிலப்பாடல்கள் இடம்பெறுவது அபூர்வம். அதிலும் வங்கத்திலிருந்து அஜீத்சிங் என்பவரைக்கொண்டு வந்து பாடச்செய்து படமாக்கப்பட்டது.
பிற்காலத்தில் வெறும் தாரை தப்பட்டை அடித்தவர்களையெல்லாம் தலையில் தூக்கி வைத்து ஆடிய பத்திரிகைகள், நல்ல இசையத்தந்த மெல்லிசை மன்னரைக் கண்டுகொள்ளவில்லை. நடிகர்திலகத்தைப் போலவே மீடியாக்களால் வஞ்சிக்கப்பட்ட இன்னொரு சாதனையாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
எழுபதுகளின் மத்தியிலிருந்து சுமார் 25 ஆண்டு காலம் முற்றிலுமாக இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்தார். இப்போதுதான் சில டிவி சேனல்கள் அவரை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.
தவப்புதல்வன் வெளியீட்டு நாள், மற்றும் 100வது நாள் விளம்பரங்கள் அருமை. தினத்தந்தியில் 50-வது நாள் விளம்பரம், தமிழ்நாட்டிலுள்ள 14 தியேட்டர் பெயர்களுடன் வெளிவந்திருந்தது நினைவில் உள்ளது.
தங்கள் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள். தந்தவைக்கும் நன்றி... தர இருப்பவைக்கும் நன்றி...
-
27th August 2011, 12:33 PM
#1308
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள சந்திரசேகர் சார்,
எங்கெங்கோ பிறந்தவர்களை இங்கே ஒன்றாக்கிய நடிகர்திலகம் என்னும் அன்புக்கயிறு, திருத்துறைப்பூண்டியில் பிறந்த தங்களையும் எங்களோடு இணைத்து விட்டது. இனி நம் வாழ்நாள் முழுதும் நமக்குள் பிரிவில்லை.
திரு. கார்த்திக் அவர்களே - இதயத்தைத் தொட்ட தங்களின் இனிய வாழ்த்திற்கு பல நூறு நன்றிகள்
-
27th August 2011, 01:38 PM
#1309
Senior Member
Devoted Hubber
டியர் சந்திரசேகர் சார்,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், வேலை பளு காரணமாக இரு தினங்களாக இங்கு வர முடியவில்லை, தாங்கள் அளித்துள்ள அறிய பொக்கிஷங்களுக்கு நன்றி!
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
27th August 2011, 01:50 PM
#1310
Senior Member
Devoted Hubber
டியர் பம்மலார் சார், வாசுதேவன் சார்,
தாங்கள் அளித்துள்ள தவப்புதல்வன் நிழற்படங்கள் பிரமாதம், குறிப்பாக கண்ணதாசன், பாலாஜி, முக்தா அவர்களுடன் நடிகர் திலகம் உள்ள ஸ்டில் அறிய ஒன்று.
வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
Bookmarks