Page 181 of 197 FirstFirst ... 81131171179180181182183191 ... LastLast
Results 1,801 to 1,810 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #1801
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள anm சார்,

    வருக..... வருக....

    தங்களைப்போன்ற தீவிர நடிகர்திலகத்தின் ரசிகர்களை வரவேற்பதில் இத்திரி பெருமையடைகிறது. உங்கள் முதல் பதிவே முத்தான பதிவாக அமைந்துள்ளது. எல்லா சிவாஜி ரசிகர்களுக்கும் உரிய மனக்குமுறலோடு வந்திருக்கிறீர்கள்.

    த்மிழிலும் ஆங்கிலத்திலும் அழகாக எழுதும் நீங்கள், தொடர்ந்து நடிகர்திலகத்தின் அருமை பெருமைகளை நீங்கள் அறிந்தவற்றை, பார்த்தவற்றை, அனுபவித்தவற்றை உங்கள் மேலான கருத்துக்களைப் பதிக்க வேண்டுகிறோம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1802
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள பம்மலார் சார்,

    நடிகர்திலகத்தின் 125-வது வெற்றிப்படமான உயர்ந்த மனிதன் படவிழா பற்றிய விவரங்களடங்கிய பொம்மை மாத இதழின் ஏடுகளை இங்கு பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

    விழாவின்போது தேனொழுகப் பேசியவர்கள் எல்லாம், செயல் வடிவில் எதையும் செய்யவில்லையென்றும், ஒரு சிறந்த கலைஞனுக்குரிய நியாயமான அங்கீகாரங்கள் கிடைக்க்க தடையாக நின்றனர் என்றும் வாசுதேவன் அவர்களும் அதைத்தொடர்ந்து சாரதா அவர்களும் கொட்டியிருக்கும் உள்ளக்குமுறல்கள் நியாயமானவையே. நடிகர்திலகத்தின் ஒவ்வொரு ரசிகருக்கும் அடி மனதில் இருந்து வரும் தீராத வலி அது. கள்ளம் கபடமில்லாத குழந்தை உள்ளம் படைத்தவரை எப்படியெல்லாம் தங்கள் சுயநலத்துக்காக உருட்டி விளையாடியிருக்கிறார்கள் என்பதை நினைத்தால் ஒவ்வொருவரும் கொதிப்படைவது நிச்சயம். இருந்தும் அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் தன்னலம் கருதாத ரசிகப்பிள்ளைகள்தான். இன்றுவரை அவர் புகழை முன்னெடுத்துச் செல்வதல்லாது, வேறெதையும் அறியாத தொண்டர் படை.

    இப்படை இருக்கும் வரை, அவர் புகழையோ, பெருமைகளையோ, திறமைகளையோ, சாதனைகளையோ எவரும் மறைத்துவிட முடியாது.

  4. #1803
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,

    நடிகர்திலகம் பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கும் புகைப்படத் தொகுப்பு ஒரு அசுர சாதனை. இத்தனை இசைக்கருவிகள் இசைக்கும் புகைப்படங்களையும் திரட்டி, ஒரே அளவில் பதித்து, அவற்றை ஒரே புகைப்பட வடிவில் தருவதென்பது, உங்களைப்போன்ற அபார கற்பனா சக்தி கொண்டவர்களால் மட்டுமே நிகழ்த்தப்படக்கூடியது.

    தாங்கள் அளித்திருக்கும் அந்தப்பதிவு மிகப்பெரிய பொக்கிஷம். பதினாறு சுவைகளை உள்ளடக்கிய விருந்து. நன்றிகள் ஏராளமாய்.

    பம்மலார் சார்,

    நடிகர்திலகத்தின் கடைசிக்காவியமான 'பூப்பறிக்க வருகிறோம்' பட விளம்பரம் ஜோர். அப்படத்தில் அவரோடு இணைந்து நடித்த மாளவிகா போன்ற இன்றைய தலைமுறையினரின் கருத்து பற்றிய பத்திரிகை கட்டிங் எதுவும் இருக்கிறதா?.

  5. #1804
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார் தொகுத்துள்ள 'இசைக்கருவிகளுடன் இணையில்லாக்கலைஞன்' தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் நிழற்படங்கள், என் அறிவுக்கு எட்டியவரையில்...

    தர்மம் எங்கே (கிடார்)
    திருவிளையாடல் (துந்தனா, மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, கொன்னக்கோல்)
    படித்தால் மட்டும் போதுமா (மேண்டலின்)
    தவப்புதல்வன் (ட்ரம்பெட், சிதார், யாழ்)
    தில்லானா மோகனாம்பாள் (நாதஸ்வரம், மிருதங்கம்)
    ராஜபார்ட் ரங்கதுரை (டேபிள் டென்னிஸ் மட்டையே சப்ளா கட்டையாக)
    என் மகன் (ட்ரம்பெட்)
    எங்க மாமா (அக்கார்டியன், பியானோ)
    புதிய பறவை (ட்ரம்பெட், சாக்ஸபோன், பியானோ - இரு ஸ்டைகளில்)
    ராமன் எத்தனை ராமனடி (புல்லாங்குழல்)
    பாவ மன்னிப்பு (டேப்)
    கலாட்டா கல்யாணம் (ஷெனாய்)
    பட்டிக்காடா பட்டணமா (எலக்ட்ரிக் கிடார்)

    (விடுபட்டவற்றைச் சுட்டிக்காட்டுங்கள் என்று ராகவேந்தர் சார் கேட்டதால்) மேலும் இடம் பெற வேண்டியவை.....

    லட்சுமி வந்தாச்சு (தபேலா)
    பாசமலர் (பியானோ)
    கௌரவம் (புல்லாங்குழல், பியானோ)
    ராஜபார்ட் ரங்கதுரை (ஆர்மோனியம்)
    மிருதங்க சக்கரவர்த்தி (மிருதங்கம்)
    தெய்வ மகன் (சிதார்)
    பாட்டும் பரதமும் (ஜதீஸ்வரம்)
    விடுதலை (ட்ரம்ஸ்)

  6. #1805
    Senior Member Regular Hubber kumareshanprabhu's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    Dear ALL

    We around 30 Members went to the distributor and discussed about Vasntha Malagai

    it will be released on October 14th Friday

    Regards
    Kumareshan

  7. #1806
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பான anm சார் அவர்களே!

    வருக! வருக!.
    நம் திரியின் சார்பாக உங்களை வருக! வருக! என வரவேற்கிறோம். நீங்கள் இந்ததத் திரியில் இணையும் போதே உங்களுடைய பங்களிப்பு தொடங்க ஆரம்பித்து விட்டது. பார்த்துப் படித்து இன்புறுங்கள். கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ளுங்கள். சிகரத் தலைவரின் சிறந்த ஆசிகளோடு இத் திரியில் வலம் வர வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    வாசுதேவன்.

  8. #1807
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    thank u kumaresan sir. very good news. hats off. we will meet on october 16th at Bengaluru

    regards,
    vasudevan

  9. #1808
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    விழாவின்போது தேனொழுகப் பேசியவர்கள் எல்லாம், செயல் வடிவில் எதையும் செய்யவில்லையென்றும், ஒரு சிறந்த கலைஞனுக்குரிய நியாயமான அங்கீகாரங்கள் கிடைக்க்க தடையாக நின்றனர்
    மிகச்
    சரியாகச்
    சொன்னீர்கள்
    கார்த்திக் சார்.
    நன்றிகள் சார்.

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 16th September 2011 at 06:31 PM.

  10. #1809
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் anm,
    நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகர் பட்டாளத்தில் இணைந்து விட்ட தங்களுக்கு மனமார்ந்த



    நீங்களும் anm நடிகர் திலகமும் anm (Avare Nadiga Mudhalvar)

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1810
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் சாரதா, கார்த்திக் மற்றும் நண்பர்கள்,
    தங்கள் அனைவருடைய பாராட்டுகளும் நடிகர் திலகத்திற்கே சமர்ப்பணம். உந்து சக்தி, கிரியா சக்தி எல்லாம் அவர் செயல். இசைக் கருவிகளைப் பட்டியலிட்டு எண்ணிக்கையினை அதிகரித்துள்ள கார்த்திக் அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். இன்னும் கூட இருக்கலாம். அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து எல்லாவற்றின் நிழற்படங்களையும் தொகுத்து வழங்கும் போது இன்னும் கூட பிரமிப்பாக இருக்கும்.
    நன்றி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •