-
19th April 2012, 12:44 PM
#2941
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
திரு.சந்திரசேகரன் சார்,
தங்களின் உயரிய பண்பும், பாராட்டும் இயல்பும், தங்கள் அளப்பரிய சமூக நலப் பேரவையின் நலத்திட்டங்களும் மறக்க முடியாதவை. தங்களின் அன்பு உள்ளத்திற்கும், இதுவரை அளித்த ஆதரவிற்கும் மிக்க நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
தங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் நன்றி! தங்களின் பளிச் பதிவுகளை மீண்டும் எதிர்நோக்குகிறேன்.
-
19th April 2012 12:44 PM
# ADS
Circuit advertisement
-
19th April 2012, 01:11 PM
#2942
Junior Member
Newbie Hubber
டியர் கோபால் சார்,
சிறிது காலமே பழகினாலும் நம் நட்பு ஆழமானது. உங்களை மிகவும் நான் அறிவேன். நண்பர்களுக்குள் சிறு சிறு மோதல்கள் வருவது இயற்கை. எந்த வகையிலாவது நான் தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் தயவு செய்து அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அளவுக்கதிமாக வருத்தம் தெரிவித்து விட்டீர்கள். அது தேவை இல்லாதது. எந்த வித குற்ற உணர்ச்சிக்கும் நீங்கள் ஆளாக வேண்டாம். உங்கள் நெத்தியடி பதிவுகளுக்கு நான்தான் முதல் ரசிகன். நீங்கள் கேட்டிருந்தபடி நான் பதிவு இட்டாயிற்று. இனி நீங்களும் பதிவுகளை கண்டிப்பாக தொடரவேண்டும் என்பது என் வேண்டுகோள். இல்லை. இல்லை. அன்புக்கட்டளை. செய்வீர்கள் என தீர்க்கமாக நம்புகிறேன். நீங்கள் எதையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். நான் திரியை விட்டு விலகுவதற்கும், தங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. என் சொந்த வேலைகளும் இருக்கின்றன. உங்கள் அற்புதமான பதிவுகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
வாசு சார்,
உங்கள் அன்பு கட்டளையை ஏற்கிறேன்.ஆனால் நான் வியாபாரி.பதிலுக்கு எதையாவது பெறாமல் நான் எதையும் கொடுப்பதில்லை.நீங்கள் என் அன்பு கட்டளையை ஏற்று உங்கள் சொந்த வேலைகள் முடிந்ததும் பதிவுக்கு வர வேண்டும்.செய்வீர்களா?
-
19th April 2012, 01:28 PM
#2943
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
தாங்கள் இல்லாமல் அருமைப் பதிவுகள் இல்லை. அவசியம் திரிக்கு வந்து மீண்டும் புதுப் பொலிவு தர உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எந்தப் பதிவானாலும் உடனே அந்தப் பதிவிற்கு முழுமனதுடன் பாராட்டும் உயர்ந்த குணம் தங்களுக்கு. அதே போல தவறான பதிவுகளையும் மனம் நோகாத படி நாசூக்காக கோடிட்டுக் காட்டும் குரு போன்றவர் தாங்கள் எனக்கு. ஒரு விசுவாசமிக்க மாணவனாக குருவான தங்களை எப்போதும் வணங்குகிறேன். ஆவலுடன் தங்கள் பதிவுகளைக் காண வழி மீது விழி வைத்துக் காத்திருக்கிறேன்.
அன்பு கார்த்திக் சார்,
என்னைப் பொறுத்தவரை நீங்கள் நக்கீரர். நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் தாங்கள் அஞ்சாமல் குற்றம் குற்றமே என்று சூளுரைக்கும் பாணியே தனி. நீங்களும் திரியில் பங்கு பெற்று சில மாதங்கள் ஆயிற்று. எங்களுக்கு பல யுகங்கள் ஆனாற்போன்று இருக்கிறது. தங்கள் முதல் நாள் திரையரங்கு அனுபவ பதிவுகளைக் காணாமல் கவலையுறுகிறது நெஞ்சு. தங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், வழிகாட்டுதல்களும் மறக்க முடியாதவை. தங்கள் அற்புதமான பதிவுகளை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.
அன்பு பார்த்தசாரதி சார்,
தங்கள் பாடல் ஆய்வுகள் என்னவாயிற்று? தாங்கள் இல்லாமல் பாடல் ஆய்வுப் பதிவுகள் இல்லை. அவசியம் திரிக்கு வாருங்கள். இன்பப் பாடல்களின் ஆய்வுப் பதிவை அள்ளித் தாருங்கள். தங்கள் அன்பிற்கும் பாராட்டும் குணத்திற்கும் மிக்க நன்றி!
திரு.சந்திரசேகரன் சார்,
தங்களின் உயரிய பண்பும், பாராட்டும் இயல்பும், தங்கள் அளப்பரிய சமூக நலப் பேரவையின் நலத்திட்டங்களும் மறக்க முடியாதவை. தங்களின் அன்பு உள்ளத்திற்கும், இதுவரை அளித்த ஆதரவிற்கும் மிக்க நன்றி!
டியர் ஞானகுருசுவாமி சார்,
தங்கள் குடும்பத்தின் புதிய வரவான அந்த தெய்வக் குழந்தைக்கு என் மனப்பூர்வமான ஆசிகள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள்.
மற்றும் திரியின் அனைத்து நண்பர்களே!
திரு plum சார், திரு.P.R சார், திரு கோல்ட் ஸ்டார் சதீஷ் சார், அன்பு ஹரீஷ் சார், திரு. சங்கரா சார், dear grouchcho sir, அன்பு குமரேசன் பிரபு சார், அன்பிற்கினிய பாலா சார், திரு.ராதாகிருஷ்ணன் சார் , திரு சுப்பிரமணியம் ராமஜயம் சார், திரு.ரங்கன் சார், புதிய வரவுகளான சிவாஜி தாசன் சார், திரு subras சார், இளம் சிங்கமான ராகுல் சார், படைப்பாளி பாலா சார், திரு மோகனராம் சார், திரு சகலா சார், திரு கரிகாலன் சார், மற்றும் பெயர் விடுபட்டுப் போன உயிரினும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் என் பாசம் கலந்த நன்றிகளைத் தெரிவித்து, தாங்கள் அனைவரும் எனக்குக் கொடுத்த ஒத்துழைப்பிற்கு தலை வணங்குகிறேன்.
டியர் கோபால் சார்,
சிறிது காலமே பழகினாலும் நம் நட்பு ஆழமானது. உங்களை மிகவும் நான் அறிவேன். நண்பர்களுக்குள் சிறு சிறு மோதல்கள் வருவது இயற்கை. எந்த வகையிலாவது நான் தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் தயவு செய்து அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அளவுக்கதிமாக வருத்தம் தெரிவித்து விட்டீர்கள். அது தேவை இல்லாதது. எந்த வித குற்ற உணர்ச்சிக்கும் நீங்கள் ஆளாக வேண்டாம். உங்கள் நெத்தியடி பதிவுகளுக்கு நான்தான் முதல் ரசிகன். நீங்கள் கேட்டிருந்தபடி நான் பதிவு இட்டாயிற்று. இனி நீங்களும் பதிவுகளை கண்டிப்பாக தொடரவேண்டும் என்பது என் வேண்டுகோள். இல்லை. இல்லை. அன்புக்கட்டளை. செய்வீர்கள் என தீர்க்கமாக நம்புகிறேன். நீங்கள் எதையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். நான் திரியை விட்டு விலகுவதற்கும், தங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. என் சொந்த வேலைகளும் இருக்கின்றன. உங்கள் அற்புதமான பதிவுகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
வாசு சார்,
உங்கள் அன்பு கட்டளையை ஏற்கிறேன்.ஆனால் நான் வியாபாரி.பதிலுக்கு எதையாவது பெறாமல் நான் எதையும் கொடுப்பதில்லை.நீங்கள் என் அன்பு கட்டளையை ஏற்று உங்கள் சொந்த வேலைகள் முடிந்ததும் பதிவுக்கு வர வேண்டும்.செய்வீர்களா?
-
19th April 2012, 01:49 PM
#2944
Senior Member
Seasoned Hubber
thanks very much for mentioning my name too along with the list of hub stalwarts........
Take care and Looking for your earliest return to this hub
-
19th April 2012, 03:05 PM
#2945
Junior Member
Junior Hubber
-
19th April 2012, 03:24 PM
#2946
Junior Member
Newbie Hubber
இரு மேதைகள்
அந்த பிரபல மேடை நாடக நடிகரின் நாடகத்தை பார்க்க மாக் சென்னேட்ட் என்பவரும் பாபேல் நோர்மாந்து என்பவரும் வந்தனர்.நாடகத்தில் அவரின் நடிப்பை பார்த்து அசந்து போய்,தங்கள் படமான மேகிங் எ லிவிங் என்ற படத்துக்கு ஒப்பந்தம் செய்தனர்.அதுவரை கீஸ்டோன் கம்பெனி யில் நடித்த போர்ட் ஸ்டேர்லிங் என்பவரை தூக்கி விட்டு ,அந்த புது நடிகரை போட்டனர்.அந்த படத்தில் அவரது வேடம் நகரத்தில் காசில்லாத ஒருவன்,மற்றவர்களை ஏமாற்றி வேடமிட்டு வாழ்கையை நடத்துவான்.ஆனால் பட தயாரிப்பாளர் சென்னேட்ட் ,புது நடிகரின் நடிப்பில் திருப்தியில்லாமல் ,பழைய நடிகரை போட்டு படபிடிப்பை மீண்டும் தொடர விரும்பினர்.ஆனால் நோர்மாந்து பிடிவாதமாய் அதே நடிகரை வைத்து மீண்டும் பழைய ரீல்களை திரும்பி எடுத்தார்.இப்போது சென்னேட்ட் கு திருப்தி.படம் ரிலீஸ் ஆனது.பிய்த்து கொண்டு ஓடி ,ஒரே இரவில் அந்த நடிகர் ஐ பிரபல்யம் ஆக்கியது.
என்ன,எங்கோ கேட்ட கதையை திரும்பவும் ஆங்கில பெயர்களை போட்டு கதை விடுகிறான் என்கிறீர்களா?உண்மை.உண்மை.சத்தியம்.அந்த நடிகரின் பெயர் சாலி சாப்ளின்.
நான் பிறவி மேதைகளை வணங்கும் நமது நடிகர் திலகத்துக்கும் ,சார்லி சாப்ளினுக்கும் உள்ள ஒற்றுமை வியக்க வைக்கிறதல்லவா?படக்கதை,பாத்திரம் எல்லாமே பராசக்தி மாதிரியே.
Last edited by Gopal.s; 24th April 2012 at 02:54 PM.
-
19th April 2012, 04:15 PM
#2947
Senior Member
Seasoned Hubber

Making a Living is the first film starring Charlie Chaplin. It premiered on February 2, 1914. Chaplin plays Edgar English, a lady-charming swindler who runs afoul of the Keystone Kops.
Chaplin wore a large moustache and a top hat in this film, he also carries a walking cane. Whilst not "the tramp" the character is somewhat reminiscent of the tramp, having hat, cane, moustache and baggy trousers; his famed screen persona of "The Little Tramp" did not appear until his next film, Kid Auto Races at Venice.
It was written and directed by Henry Lehrman.
Cast
Charlie Chaplin - Swindler
Virginia Kirtley - Daughter
Alice Davenport - Mother
Henry Lehrman - Reporter
Minta Durfee - Woman
Chester Conklin - Policeman / Bum
Plot
Edgar English cons a journalist out of some money. He applies for a job at his newspaper. Whilst the journalist is helping a trapped motorist Edgar steals the camera with the picture of the accident and rushes back to the paper with it. He steals the headlines. A short pursuit with the police ensues.
from the pages of wikipedia
Making a Living video
-
19th April 2012, 04:23 PM
#2948
Senior Member
Seasoned Hubber
அன்பு ராகவேந்திரன் சார்,
திரியில் என்னை எல்லா வகையிலும் ஊக்கமளித்து, என்னுடைய பல தொழில் நுட்ப சந்தேகங்களை எந்த நேரமானாலும் பொறுமையாக விளக்கி என்னை வழி நடத்திய நான் மிக மிக நேசிக்கக் கூடிய என்னுடைய ஆசான் ஸ்தானத்தில் இருக்கும் தங்களை என்னால் மறக்கவே முடியாது. எப்போது சென்னை வந்தாலும் சொந்த சகோதரரைப் போலத் தாங்கள் என்னை கவனித்துக் கொண்டது காலம் உள்ள வரை மறக்க முடியாது. எந்த பிரதிபலனும் கருதாது மூச்சும் உயிரும் நடிகர் திலகத்துக்காகவே என்று வாழும் தங்களின் தன்னலமற்ற சேவை எனக்கும், நம் திரியில் உள்ளவர்களுக்கும் சிறந்த வழிகாட்டுதல்களைத் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தன்னந்தனி ஆளாக நடிகர் திலகம் இணையதளத்தை தொடங்கி அதை சிறப்பாக ஆறாவது ஆண்டில் அடியெடுக்க வைக்க நீங்கள் பட்ட சிரமங்களுக்கெல்லாம் நாங்கள் பட்ட சிரமங்கள் மிகக் குறைவு. வெற்றிகரமாக N.T. fans association தொடங்கி திரு Y.G.M மற்றும் முரளி சார் அவர்களின் உறுதுணையுடன் சிறப்பாக நடத்தி வருவது பெருமைக்குரிய விஷயம். தங்களுடன் இணைந்து பணி புரிந்ததில் நடிகர் திலகத்துடன் இணைந்து பணி புரிந்ததாகவே அப்படி ஒரு சந்தோஷத்தை உணர்கிறேன். தங்களுடைய பேராதரவிற்கும், அன்பிற்கும் தலைவணங்கி மிகுந்த மன வருத்தத்துடன் விடைபெறுகிறேன்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய அளவற்ற அன்பிற்கும் பாசத்திற்கும் என்றென்றும் நன்றியுடையவனாயிருக்கிறேன். தயவு செய்து தங்கள் பதிவுகளைத் தொடருங்கள். ஒவ்வொரு நிழற்படத்திற்கும் தாங்கள் எடுக்கும் சிரத்தையும் அதே போல் ஒவ்வொரு ஆவணத்திற்கும் பம்மலார் எடுக்கும் சிரத்தையும் நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். அதே போல் இங்குள்ள அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். தங்களைப் போன்றே நானும் ஒரு சமயம் முடிவெடுத்து சற்று விலகியிருந்து மீண்டும் வந்திருக்கிறேன். தற்சமயம் தங்களுடைய மனப் பளுவும் மற்ற சுமைகளும் குறைய வேண்டி சற்று ஒய்வெடுங்கள். ஆனால் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் தலைதூக்கி வந்து வாசுன்னா வாசுதான் என்று நிரூபியுங்கள். நாம் அனைவரும் ஆற்றும் தொண்டு நடிகர் திலகம் என்ற உயர்ந்த மனிதருக்கு எனவே அது என்றும் தங்களை கை விடாது. வாருங்கள், தாருங்கள், நம்மோடு சேருங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
19th April 2012, 06:14 PM
#2949
Junior Member
Newbie Hubber
பம்மல் சுவாமிக்கு அர்பணிப்பு.
தெய்வ பிறவி-1960
அதுகாறும் தூய தமிழ் பேசி வந்த (சமயத்தில் பிராமின் மொழி) படங்கள் மக்களை பெற்ற மகாராசி புண்ணியத்தால் வட்டார மொழிக்கு(ஹீரோ மட்டும்தான் வட்டாரம் பேசுவார் ) அறிமுகமாகி பிறகு பேச்சு வழக்குக்கு வந்தது பாக பிரிவினை புண்ணியத்திலும் பிறகு தெய்வ பிறவியிலும் தான்.
புண்ணியத்தை கட்டி கொண்டவர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.(மல்லியம் ராஜகோபால் தன கதை என்று சொன்னதாக ஞாபகம்.பிறகு அவரே
சவாலே சமாளி எடுத்தார்)கருத்து வேற்றுமையில் (vpkb vs sgs) இருந்த சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.மாமன் ,மச்சானாக,பத்மினி ஜோடியாக.இந்த வெற்றி காவியம் ஏ.வீ.எம். தயாரித்து கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில்.ஓரளவு ரியலிசம் என்று சொல்லப்படும் படங்களுக்கு தமிழ் முன்னோடி .நடிப்பில்,கதையமைப்பில் இந்த படமே. நடிகர் திலகத்துக்கு சிறந்த நடிகர் கொடுத்திருக்க வேண்டிய முதல் படம்.(ஜூரிகள் பார்வையில்)(இரண்டாவது மோட்டார் சுந்தரம் பிள்ளை,மூன்றாவது தில்லானா மோகனம்பாள்,நாலாவது முதல் மரியாதை)-உலக தரத்தில் பார்த்து முடிவு செய்தாலும் இந்த படங்களுக்கு அவசியம் அவருக்கு கொடுக்க பட்டிருக்க வேண்டும்.சிவாஜியே சரவணன் இடம் ஹிந்தியில் எடுக்காதே ,எங்களை போல் உயிரை கொடுத்து நடிக்க ஆளில்லை என்று கூறிய படம்.பத்மினி கம்போஸ் செய்த பாடல் காட்சி ஹை லைட்.(அன்பாலே)
சுலபமான குடும்ப கதை போல் தோற்றமளிக்கும கஷ்டமான கதையமைப்பு.மினிமம் காரன்டி காக கதையோடு ஒட்டி திணிக்கப்பட்ட நகைச்சுவையை ஒதுக்கினால் விறு விருப்பாக நகரும் கதை.
நடிகர் திலகம் ஒரு கட்டிட மேஸ்திரி , உரிமையாளராக மாறும் உழைப்பாளி,தம்பியுடன் அனாதையாக வாழும் அவர் தன அன்னையுடன்,தம்பியுடன் வாழும் பத்மினி யை கல்யாணம் செய்து மனைவி வீட்டரையும் தன்னோடு வாழ செய்யும் பெருந்தகை.இவர் தம்பியை மனைவியும்,மனைவி தம்பியை இவர் உம அரவணைத்து வாழ ,அப்பாவால் கைவிடப் பட்ட சிற்றன்னை ,அரை தங்கையை தற்செயலாக பார்த்து அடைக்கலம் கொடுத்து ,உண்மையை யாருக்கும் சொல்லாமல் மறைத்து,அதனால் எழும் பிரச்னை,துரோகம்,சந்தேகம்,முக்கோண காதலில் இருவர் தம்பிகள் என சுபமாய் முடியும் படம்.
நடிகர் திலகத்தின் நடிப்பை வர்ணிக்க என்னிடம் தமிழ் இல்லை.தனது சித் தாளை நோட்டமிடும் அழகென்ன,சம்பளம் கொடுக்கும் பொழுது நாசூக்காக சீண்டும் நயமென்ன,பெண்ண கேட்க போகும் போது உள்ள தயக்கம்,பிறகு அமைதியான மனைவி தம்பியை கண்டிக்கும் போது கொதிக்கும் போது ரசிப்பதாகட்டும்,தாம்பத்யம்,பாசம்,நேசம ,கண்டிப்பு எல்லாவற்றிலும் பத்திரந்த்தின் தன்மைகேற்ற படு படு இயல்பாக இருப்பார்.
ஆனால் நடிப்பு கடவுள் வெளிப்படும் நேரம்,சந்தேக நெருடலின் ஆரம்பம்,சொல்ல முடியாத தவிப்பு,இப்படி இருக்காதே என்று உள்ளம் சொன்னாலும் உதடுகள் பாதை தவறி பேசும் காட்சிகள்.கடவுளே,என்னை அடுத்த ஜென்மத்திலும் இந்த நடிப்பு கடவுளின் ரசிகனாகவே படைத்து விடு.சந்தேகம் கொண்டு உதடுகள் பேசும் ஆனால் பார்வை நேசத்தை வெளிப்படுத்தும்.உடல் தடுமாற்றத்தை காட்டும்.பிறகு உதட்டின் குற்றத்திற்காக கண்களும்,உடலும் வருந்தும். எடுத்து கொண்ட பாத்திரத்துக்காக நடிப்பு கடவுளின் முக பாவம்,நடை,வசன உச்சரிப்பு,எல்லாவற்றிலும் அவ்வளுவு இயல்புத்தன்மை.
எந்த கோணத்தில் நின்று அலசினாலும் உன்னத படம். சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்.,பத்மினி சம்பந்தப்பட்ட உணர்ச்சிமிகு காட்சி ஒன்று மிகவும் பேச பட்டது.
-
20th April 2012, 12:04 AM
#2950
Bharath,
It is heartening to see people born in late 70s and early 80s coming out with their brand of admiration for NT. The enjoyable part of your write up is you were able to bring out your inner feelings quite well. Keep them coming!
Congrats Guruswamy Sir!
வாசு அவர்களிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசினேன். தனிப்பட்ட பல அலுவல்கள் காரணமாகவும் அவர் இந்த ஓய்வை விரும்பி எடுத்துக் கொண்டிருக்கிறார் என தெரிய வருகிறது. ஆனால் நிச்சயமாக மீண்டும் வருவேன் என்று உறுதி பட கூறினார். அதற்காக காத்திருப்போம்.
சுவாமி,
சாரதி சொன்னது போல் வணங்காமுடி சாதனையில் யாருக்கும் வணங்காமுடி என்று ஆவணபூர்வமான ஆதாரத்தை அள்ளி தந்ததற்கு மிக்க நன்றி. நடிகர் திலகத்தின் படமே நடிகர் திலகத்தின் படத்திற்கு போட்டியாக வருவது இங்கும் நடைபெற்றது. மதுரை தங்கத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த வணங்காமுடி 78 நாட்களை நிறைவு செய்த போது திரையரங்க நிர்வாகம் ஏற்கனவே செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தின்படி நடிகர் திலகத்தின் தங்கமலை ரகசியம் வெளியானது. இல்லையென்றால் மதுரை தங்கத்தில் 100 நாட்கள் ஓடிய நான்காவது நடிகர் திலகத்தின் படமாக வணங்காமுடி மாறியிருக்கும்.
அன்புடன்
Bookmarks