-
31st July 2012, 04:05 AM
#271
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
அன்பு பம்மலார் சார்,
தங்கள் அன்புப் பாராட்டிற்கு மிக்க நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
சங்கரா சார் அவர்களின் பிறந்த நாள் பரிசாக தாங்கள் அவருக்களித்த 'கோடீஸ்வரன்' அவருக்கு மட்டுமல்ல... எங்கள் அனைவருக்கும் கோடியைத் தாண்டிய கோலாகலப் பரிசு. கொள்ளை அழகு கொஞ்சும் கோமேதகப் பரிசு.
கிரிக்கெட்டைப் பற்றி தாங்கள் பதித்துள்ள பதிவு பதிவுகளில் மட்டுமல்ல... கிரிக்கெட்டிலும் கிங் பம்மலார் என்பதை ஆணித்தரமாக சொல்கிறது. ஆல்ரவுண்ட் பம்மலார் ஆல் போல் தழைத்து வாழ வாழ்த்துக்கள். தங்களுக்குப் பிடித்த மற்றொரு SG இதோ தாங்கள் கண்டு களிக்க.
சித்தூர் ராணி பத்மினி முதல் வெளியீட்டு விளம்பரங்கள் 'ராஜ' பதிவுகள்.
என்னைப் போல் ஒருவன் மறு வெளியீட்டு விளம்பரம் மற்றும் குறிப்புகள் உங்களைப் போல் ஒருவர் யார் என்று கூற வைக்கிறது. வேறு யாரால் சார் மறு வெளியீட்டு விளம்பரங்களை இப்படி அள்ளி வழங்க முடியும்?...
சிகரப் பதிவுகளுக்கு மனம் மகிழ்ந்த நன்றிகள்.
ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்களே,
எனது இன்னொரு கண் போன்றவரான 'லிட்டில் மாஸ்ட'ரின் கொள்ளை அழகு புகைப்படத்தை ஆச்சரிய-அதிர்ச்சியாக அளித்த 'கிரேட் மாஸ்ட்'ரான தங்களுக்கு விண்ணளவு வாழ்நாள் நன்றிகள்..!
நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை சார்..! என் கண்கள் ஆனந்தக்கண்ணீரால் குளமாகின்றன..! பேச நா எழுவில்லை..! அப்படியே ஆனந்தத்தில் தத்தளிக்கிறேன்..! இந்த Live புகைப்படத்தில், கவாஸ்கரின் அந்த Superb Stance, Grip on the bat handle, Marvellous Posture, Razor-sharp eyes இத்யாதி..இத்யாதிகளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். He is technically the most correct & perfect batsman of all-time, strictly adhering himself to the Copy-Book Style..!
நமது நடிகர் திலகம் அவர்கள், நுண்கலை நடிப்பு நுட்பங்களில், எப்பேர்ப்பட்ட ஈடு-இணை கூறமுடியா perfectionist-ஓ அதுபோன்று கிரிக்கெட் பேட்டிங் நுட்பங்களில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத technically most perfect batsman 'Sunny'.
மீண்டும் மீண்டும் எனது எண்ணிலடங்கா ஆயுட்கால நன்றிகள் தங்களுக்கு..!
தங்களின் உச்சமான பாராட்டுதல்களுக்கும், இதயபூர்வமான வாழ்த்துக்களுக்கும் தலைவணங்குகிறேன்..!
ஒரு மாணிக்கத்தை எனக்குத் தந்த தங்களுக்கு,
தங்கள் 'மனம் கவர்ந்த மாணிக்கம்' எனது நன்றியின் வெளிப்பாடாக:

பாசப்பெருக்கில்,
பம்மலார்.
-
31st July 2012 04:05 AM
# ADS
Circuit advertisement
-
31st July 2012, 04:10 AM
#272
Senior Member
Veteran Hubber
அடியேன் பாகம் எட்டில் பதித்த 'சிக்கலார்' சம்பந்தப்பட்ட அரிய புகைப்படங்களை, இன்று இங்கு இந்த இனிய தருணத்தில் - என் பெயரையும் மறவாமல் நினைவுகூர்ந்து - மறுபதிப்பு செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள், ராகவேந்திரன் சார்..!
-
31st July 2012, 04:13 AM
#273
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
'நடிகர் திலகத்தின் பதினோராம் ஆண்டு நினைவாக அப்பெருமகனாருக்கு ஓர் அர்ப்பணம்' என்கின்ற தலைப்பில் தாங்கள் இடுகை செய்துள்ள சென்னை சிவாஜி சிலை திறப்பு விழா ஆவணப்பதிவு ஒரு சிகர பதிவு. நமது நடிகர் திலகத்தின் ஐந்தாம் ஆண்டு அவதார நிறைவு நாள் [21.7.2006 : வெள்ளி] அன்று அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களால் பல இடர்ப்பாடுகளைக் கடந்து திறக்கப்பட்ட இந்தச் சிலையின் திறப்புவிழா பற்றிய 'தினகரன்' தொகுப்பு அருமையிலும் அருமை..!
அன்னை கமலா அம்மையார் அவர்கள் கண்கலங்குவதைக் கண்டு என் கண்களும் ஊற்றுப்பெருக்காயின.
தங்களின் சேவை உள்ளத்துக்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும், உயர்ந்த நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
31st July 2012, 06:01 AM
#274
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகத்தின் நீட்சி எந்த அளவிற்கு இருக்கும் என்பதற்கு இந்த இழையே சாட்சி. பம்மலார் இந்த இழையை ஆரம்பித்திருப்பது Tamil Film Classics பிரிவில். பழைய , முந்தைய காலத்தைய, திரை உலகின் பல தலைப்புகளில், பல கலைஞர்களைப் பற்றி, பொருட்களைப் பற்றி, விவாதங்கள் நடக்கும் பிரிவு. பொதுவாக அதிகம் கண்டு கொள்ளப் பட வாய்ப்பற்ற தலைப்புகள், என்ற கணிப்புகளையெல்லாம் உடைத்தெறிந்து, தேடி வந்து நடிகர் திலகத்தின் இழைக்கு மக்கள் பெரும் வரவேற்பை நல்கும் வண்ணம் ஆணித்தரமாய்த் தன் முத்திரையைப் பதித்துள்ள பம்மலார் மற்றும் வாசு அவர்களின் உழைப்புக்கு கிடைத்துள்ள அங்கீகாரமே, இந்த இழை தற்போது பதிவுகளின் எண்ணிக்கையில் முன்னூறையும் பார்வையாளர் எண்ணிக்கையில் பத்தாயிரத்தையும் எட்டும் வேகமாகும். கிட்டத் தட்ட 10 நாட்களில் இது மிகச் சிறப்பானதாகும். இதற்கு அனைத்து பார்வையாளர்களுக்கும் நம் நன்றிகளும் பாராட்டுக்களும். பாகம் 10ல் சில விரும்பத் தகாத மனக் கிலேசங்கள் ஏற்பட்டது ஒரு வகையில் பம்மலாரின் ஆளுமையை அனைவரும் அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அமைந்து விட்டது. நம் அன்புச் சகோதரர்கள் இதனை சரியான முறையில் புரிந்து கொள்வர் என்று நம்புகிறேன். பாகம் பத்தோடு நமது மனக் கிலேசங்களையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு தொடர்ந்து அனைவரும் ஒரு சேர இந்த பம்மலாரின் உழைப்பினை அங்கீகரித்து இங்கே பங்கு பெற வேண்டும் என்பதே என் விருப்பம். மேலும் முந்தைய பாகங்களில் பல சந்தர்ப்பங்களில் நமது சகோதரர்கள் பம்மலாருக்கு உரிய அங்கீகாரம் தரவேண்டும் என்று கூறியிருந்தார்கள். அது உண்மையான வார்த்தைகளின் வெளிப்பாடாக இருக்குமானால், இந்த இழை அதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.
அன்புடன்
ராகவேந்திரன்
Last edited by RAGHAVENDRA; 31st July 2012 at 06:06 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
31st July 2012, 08:31 AM
#275
Junior Member
Platinum Hubber
makkal thilagam mgr part 2 - 200 runs.thanks to NT FANS

நன்றி ..... நன்றி. நன்றி .....
21 .4 .2007 அன்று நடிகர் திலகம் அன்பு ரசிகர் திரு . JOE அவர்களால் துவக்க பட்ட மக்கள் திலகம் PART 2 இன்று 200 பக்கம் தாண்டியது ஒரு மாபெரும் சாதனையாகும் .இந்த திரியில் பல்வேறு கருத்துக்கள் , விமர் சனங்கள் ,பாடல்கள் , ஆய்வுகள் , புகைப்படங்கள் ,வீடியோ பேப்பர் விளம்பரங்கள் ,,கருத்து மோதல்கள் , என்று பல்வேறு கோணங்களில் நடிகர் திலகத்தின் நண்பர்கள் மற்றும் மக்கள் திலகத்தின் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்கள் சார்பாக எங்களது நன்றியினை நடிகர் திலகத்தின் அன்பு உள்ளங்களுக்கு தெரிவித்து கொள்கின்றோம் .
மதிப்பிற்குரிய நதியின் நண்பர்கள்.
திருமதி சாரதா அவர்கள்
திரு . பம்மலர் - திரு .ராகவேந்திரன் . திரு ,முரளி ஸ்ரீநிவாஸ் . திரு JOE திரு . வாசுதேவன் . திரு திருமாறன் .
திரு .பாலாஜி . திரு .செல்வகுமார் . திரு .கார்த்திக் . திரு .மகேஷ் . திரு .தமிழரசன் . திரு .ராஜாராம் . திரு .சதீஷ் . திரு கல்நாயக் . திரு ராஜா .திரு .பாரிஸ்டர் ரஜினிகாந்த் . திரு .PR
திரு . groucho70 . திரு. tfmlover . app _engine .m -23 -bayarea - திரு hattori மற்றும் எல்லா நடிகர் திலகத்தின் அன்பு உள்ளங்களுக்கு எங்கள் நன்றியினை மீண்டும் தெரிவித்து கொள்கின்றோம் .
Last edited by esvee; 31st July 2012 at 08:33 AM.
-
31st July 2012, 08:56 AM
#276
Junior Member
Platinum Hubber
irandu kaigal ... nanganal ......
அன்புள்ள நண்பர் திரு . ராகவேந்திரன் அவர்களுக்கு
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி .மக்கள் திலகம் - நடிகர் திலகம் இரண்டு இமயங்கள் இந்திய திரை உலக வரலாற்றில் ஏற்படுத்திய சாதனை கின்னிஸ் வரலாற்றில் இடம் பெறவேண்டும் .
உலகில் எந்த ஒரு நடிகர்களுக்கு இல்லாத பெருமை - அவர்கள் மறைந்த பின்னும் அவர்கள் திரை படங்கள் தொடர்ந்து ஓடி சாதனை புரிவது உண்மையிலே ஒரு சரித்திர புரட்சியாகும் .
மேலும் இணைய தளத்தில் இரண்டு திலகங்களின் புகழ் கொடிகட்டி பறக்கிறது என்றால்
அதற்கு மூல காரணம் நடிகர் திலகம் ரசிகர்களால் துவக்கப்பட்ட இந்த நடிகர் திலகம் திரி & மக்கள் திலகம் திரி என்றால் அது மிகையாகது .
இன்றைய இளைய தலை முறை ரசிகர்களும் எதிர்கால ரசிகர்களும் நிச்சயம் நமது திரிகளை பார்த்து , ரசித்து , போற்றுவார்கள் என்பது நிச்சயம் .
மீண்டும் நன்றி .
-
31st July 2012, 02:24 PM
#277
Senior Member
Veteran Hubber
நட்சத்திர கிரிக்கெட் 1973 (என் நினைவுக்கு எட்டியவரை)
அன்புள்ள ராகவேந்தர் சார் அவர்கள் பழைய நினைவுகளைப் பதிந்துகொள்ளுங்கள் என்று அனுமதியும் உற்சாகமும் அளித்ததால், நான் பள்ளி மாணவனாக இருந்தபோது சென்னை பழைய நேரு ஸ்டேடியத்தில் நடந்த 'நட்சத்திர கிரிக்கெட்' பார்த்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாம் என்ற ஆவல். இது ஏதோ ஒரு பள்ளியின் வளர்ச்சி நிதிக்காக நடத்தப்பட்ட மேட்ச்.
அப்போது கிரிக்கெட்டுக்காக சேப்பாக்கம் ஸ்டேடியம் இருந்தபோதிலும், நட்சத்திர கிரிக்கெட் அங்கு விளையாட அனுமதிக்க மாட்டார்கள். விளையாடத்தெரியாத சில நட்சத்திரங்கள் பேட்டால் மைதானத்தை கொத்திப்போட்டு விடுவார்கள் என்ற பயமோ அல்லது வேறு காரணமோ தெரியாது. அதனால் மாநகராட்சிக்கு சொந்தமான பழைய நேரு ஸ்டேடியத்திலேயே நடைபெறும். கூட்டமும் நிறைய சேரும். நட்சத்திரங்கள் பிரமாதமாக விளையாடுவார்கள் என்பதால் அல்ல, எல்லா நட்சத்திரங்களையும் ஒருசேர பார்க்கலாமே என்ற ஆர்வத்தில். இப்போதுபோல அன்றைக்கு ஆளாளுக்கு விருது வழங்கும் விழா நடத்துவது என்பதெல்லாம் கிடையாது அல்லவா?. டெஸ்ட் மேட்ச் மட்டுமே நடந்து வந்த அந்தக்காலத்தில் ஒன்டே மேட்சை துவக்கியதே நமது நட்சத்திரங்கள்தான். இன்னும் சரியாகச்சொன்னால் அரைநாள் மேட்ச்தான். பகல் ஒருமணிக்குத் துவங்கி மாலை ஆறு மணிக்கு முடிந்துவிடும்.
அது ஒரு பொங்கல் தொடர் விடுமுறை. அப்போது சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையே டெஸ்ட் மேட்ச் நடந்து வந்தது. ஐந்து நாள் மேட்ச் நடுவே ஒரு நாள் 'ஓய்வுநாள்' என்று விடுவார்கள். சரியாக அந்த ஓய்வு நாள் பார்த்துதான் நட்சத்திர கிரிக்கெட் நடத்தினார்கள். ஓய்வுநாள் என்பதால் இந்திய இங்கிலாந்து அணி வீரர்களும் நட்சத்திர கிரிக்கெட்டைக்காண வருவார்கள் என்று விளம்பரத்தில் அறிவிப்புச் செய்திருந்தார்கள்.
மேட்ச் நடந்த அன்று பகல் பணிரெண்டரை மணிக்கெல்லாம் நாங்கள் நண்பர்கள் க்ரூப்பாக ஸ்டேடியத்தின் உள்ளே போய் விட்டோம். டிக்கட் விலை 5 ரூ., 10 ரூ., மற்றும் 20 ரூ. அப்போதைய எங்கள் சக்திக்கு 5 ரூபாய் டிக்கட்தான் வாங்கமுடிந்தது. அதனால் கூரையில்லாத வெயில் பகுதியில்தான் அமர முடிந்தது. (பழைய நேரு ஸ்டேடியத்தில் மேற்கூரை கிடையாது. இருந்தாலும் முதல் வகுப்பு மற்றும் வி.ஐ.பிக்களுக்காக டெம்ப்ரரி ரூஃப் அமைத்திருந்தனர்). மார்கழி முடிந்த தருணமாதலால் வெயில் அவ்வளவாக உறைக்கவில்லை.
நடிகர்திலகம் ஒரு அணிக்குத் தலைவராகவும், ஜெமினிகணேஷ் இன்னொரு அணிக்குத்தலைவராகவும் அறிவிக்கப்பட்டனர். மேட்ச் துவங்கும் முன்னதாக இரு அணியினரும் தங்கள் தலைவரின் பின்னால் மைதானத்தைச்சுற்றி அணிவகுத்து வந்தனர். நடிகர்திலகம் ஒயிட் அண்ட் ஒயிட்டில் மேலே நீலநிற ஜிப் ஜெர்க்கின்ஸ் அணிந்து, வெள்ளைத்தொப்பி, கூலிங் கிளாஸ் சகிதம் கையில் கொடி பிடித்து தன் அணியினர் பின்தொடர வந்தபோது ரசிகர்கள் கைதட்டலும் விசிலும் பற்ந்தன. அதன்பின்னால் ஜெமினியும் தன் அணியினருடன் இதேபோல ஸ்டைலாக உடையணிந்து (மைனஸ் தொப்பி) வந்தார். இரண்டு அணியிலும் நடிகர் நடிகையர் என கலந்து இடம்பெற்றிருந்தனர். எந்த அணியில் யார் யார் இருந்தனர் என்பது இப்போது சரியாக நினைவில்லை.
மேட்ச் துவங்க சற்று முன்னர் இந்திய அணி வீரர்கள் மட்டும் ஸ்டேடியத்துக்கு வந்தனர். இங்கிலாந்து வீரர்கள் வரவில்லை. கேப்டன் பிஷன்சிங் பேடி, துணை கேப்டன் காவஸ்கர், விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி மற்றும் சந்திரசேகர், ஜி.ஆர்.விஸ்வநாத், பிரசன்னா, சோல்கர், பிரிஜேஷ் படேல் உள்பட அனைத்து வீரர்களும் வந்திருந்தனர். அவர்கள் வந்தபோதும் ரசிகர்கள் உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர். வீரர்களும் கையசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.
மேட்ச் துவங்கியது. ஜெமினி அணி முதலில் பேட் செய்ததாக ஞாபகம். நடிகர்கள் நன்றாக ஆடினர். நடிகைகள்தான் சொதப்பினர். பல நடிகைகள் பேண்ட், ஷர்ட் அணிந்து வந்திருந்தபோதிலும், சில நடிகைகள் சேலையுடன் விளையாட வந்து ரசிகர்களின் நகைப்புக்கு ஆளாகினர். வர்ணனையாளர்களாக இரண்டு தேர்ந்த நபர்களை நியமித்திருந்தனர். அவர்களுடன் நடிகர் 'சோ'வும் அமர்ந்து அவ்வப்போது குறிப்புகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஜெய்சங்கர வந்தபோது கமெண்ட்ரி செய்தவர், 'எதிரிகளின் பந்துகளை அடித்து தூள் பரத்த வருகிறார் தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' என்று அறிவிக்க ரசிகர்கள் கைதட்டினர். அவரும் பந்துகளை தடாலடியாக அடித்து பத்து ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
'அடுத்து அம்மன் அருள் பெற்று ஆட வருகிறார் ஏ.வி.எம்.ராஜன்' என்று கமெண்ட்ரேட்டர் அறிவிக்க (அப்போது அவர் அம்மன் அருள் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்) அவரும் வரும்போதே ரசிகர்களைப்பார்த்து கையசைத்தபடி வந்தார்.
பேண்ட் ஷர்ட்டுடன் ரொம்பவே பந்தாவாக அலட்டிக்கொண்டு மைதானத்துக்குள் இறங்கிய நடிகை ஜெயசித்ரா, பேட்டிங் செய்யத்தெரியாமல் மண்ணோடு சேர்த்து தரையைக் கொத்தியவாறு பேட் செய்ய, இயக்குனர் பி.மாதவன் சென்று, எப்படி பேட் செய்ய வேண்டும் என்று அங்கேயும் அவரை டைரக்ட் செய்தார்.
ரசிகர்கள் எங்கே எங்கே என்று தேடிக்கொண்டிருந்த அந்த நேரமும் வந்தது, 'ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செங்கோல் ஏந்தி ஆட்சி செய்த கைகளில் இப்போது பேட் எடுத்து ஆட வருகிறார் ராஜ ராஜ சோழன்' என்று கமெண்ட்ரியாளர் அறிவித்ததும் கைதட்டல் பறக்க ராஜ நடை நடந்து மைதானத்தில் இறங்கினார் நடிகர்திலகம். (அப்போது ராஜராஜசோழன் பெரிய எதிர்பார்ப்புகளுடன் தயாரிப்பில் இருந்தது). அவர் வந்தபோது இந்திய கிரிக்கெட் வீரர்களும் கைதட்டினர்.
இவரும் மற்றவர்களைப்போலவே சொத்த்ப்புவாரோ என்று சிலர் முணுமுணுத்தபோது, அவர் மின்னல் வேகத்தில் பந்துகளை பட் பட்டென்று அடித்து ஓடி ஓடி ரன்களைச் சேர்த்தார். அவர் 16 ரன்கள் எடுத்திருந்த சமயம் இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் வீசிய பந்தை அடித்தபோது நடிகர் ஸ்ரீகாந்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
நாகேஷ் முதலிலேயே விளையாடி அவுட்டான பின்னர், ரசிகர்கள் மத்தியில் சோடா, கலர் விற்கத்தொடங்கினார். அவர் கையால் வாங்கவேண்டும் என்பதற்காகவே எல்லோரும் வாங்கிக்குடித்தனர். நல்ல விற்பனை.
மேட்ச் முக்கால்வாசி முடிந்திருந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் கையசைத்து விடைபெற்றனர். நட்சத்திரங்களின் கிரிக்கெட் ஆட்டத்தைப்பார்த்தால் தங்களுக்கு கிரிக்கெட் மறந்து போய்விடுமோ என்று பயந்துவிட்டார்களோ என்னவோ.
ஆறு மணிக்கு மேட்ச் முடிந்தபோது ஜெமினி கணேஷ் அணி வெற்றிபெற்றதாக அறிக்கப்பட்டது. ஆட்ட நாயகனாகவும் ஜெமினியே தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டார். ஸ்கோர் பற்றியெல்லாம் யார் கவலைப்பட்டது?. ஐந்துமணிநேரம் ரொம்ப ஜாலியாகக் கழிந்தது. அதுபோதும் என்ற நிலையில் ரசிகர்கள் வெளியேறினர்.
-
31st July 2012, 02:30 PM
#278
Senior Member
Seasoned Hubber
டியர் கார்த்திக் சார்,
தங்களின் கிரிக்கெட் நினைவலைகள் மிகவும் அருமை. நாங்களே நேரில் ரசிப்பதுபோல தங்களுடைய வர்ணனை இருந்தது.
-
31st July 2012, 02:40 PM
#279
Moderator
Platinum Hubber

Originally Posted by
mr_karthik
'அடுத்து அம்மன் அருள் பெற்று ஆட வருகிறார் ஏ.வி.எம்.ராஜன்'


Originally Posted by
mr_karthik
பேண்ட் ஷர்ட்டுடன் ரொம்பவே பந்தாவாக அலட்டிக்கொண்டு மைதானத்துக்குள் இறங்கிய நடிகை ஜெயசித்ரா, பேட்டிங் செய்யத்தெரியாமல் மண்ணோடு சேர்த்து தரையைக் கொத்தியவாறு பேட் செய்ய, இயக்குனர் பி.மாதவன் சென்று, எப்படி பேட் செய்ய வேண்டும் என்று அங்கேயும் அவரை டைரக்ட் செய்தார்.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
31st July 2012, 02:54 PM
#280
Senior Member
Diamond Hubber

Originally Posted by
mr_karthik
நாகேஷ் முதலிலேயே விளையாடி அவுட்டான பின்னர், ரசிகர்கள் மத்தியில் சோடா, கலர் விற்கத்தொடங்கினார். அவர் கையால் வாங்கவேண்டும் என்பதற்காகவே எல்லோரும் வாங்கிக்குடித்தனர். நல்ல விற்பனை.

ivar appo server sundharam padatthula nadichuttu irundhaaraa??
Bookmarks