Page 136 of 305 FirstFirst ... 3686126134135136137138146186236 ... LastLast
Results 1,351 to 1,360 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #1351
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பம்மலார் சார்,
    ஒவ்வொருவருக்கும் தாங்கள் தேர்ந்தெடுத்து அளிக்கும் நிழற்படங்கள் எந்த அளவிற்கு ஒவ்வொரு நண்பரையும் அவர்களுடைய ரசிப்புத் தன்மையினையும் தாங்கள் அறிந்து வைத்துள்ளீர்கள் என்பதற்கான சான்றாகும். பாராட்டுக்கள்.

    கோவையில் திருவிளையாடல் வெளியான சாரதா திரையரங்கில் ரசிகர்கள் வைத்துள்ள பதாகையினை ரவி அவர்கள் அடியேனுக்கும் அனுப்பி வைத்துள்ளார்கள். நான் அதனை இங்கே பதிவிட எண்ணியிருந்தேன். தங்களுக்கு உளமார்ந்த நன்றி.

    இதோ மற்றொரு பதாகை.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1352
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பைரவன்' சாம்ராஜ்யம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  4. #1353
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சுவாமி,

    உங்கள் பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் அளித்த விக்ரம மகாராஜாவின் அதியற்புதமான ஸ்டில்-ற்கு நன்றி. நான் எப்போதோ ஒரு முறை உத்தமபுத்திரன் என்ற படத்தின் பெயரைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொண்ட செய்தியை நினைவில் வைத்துக் கொண்டு இந்த புகைப்படத்தை எனக்கு dedicate செய்ததற்கு மீண்டும் நன்றி.

    உயர்ந்த மனிதனைப் பற்றி நான் எழுதிய சிறு குறிப்பை பாராட்டிய வாசு அவர்களே! கார்த்திக் அவர்களே உங்கள இருவருக்கும் என் நன்றிகள்.

    கார்த்திக்,

    இசையைப் பொறுத்தவரை எனக்கு தெரிந்தது ஒன்றுமில்லை. நீங்கள் மற்றும் ராகவேந்தர் சார், சுவாமி, கோபால் மற்றும் சாரதா அவர்கள் திரைப்பட பாடல்களைப் பற்றி பாடல்களுக்கு நடுவில் ஒலிக்கும் இசை கருவிகள் பற்றி எல்லாம் அழகாகவும் சரியாகவும் எழுதுவீர்கள். இன்னும் சொல்லப் போனால் ஒரு முறை சாரதா அவர்கள் "ஆடை முழுதும் நனைய நனைய மழையடிக்குதடி" பாடலில் மெல்லிசை மன்னர் எப்படி துக்கத்தின் போது வாசிக்கப்படும் ஷெனாய் வாத்தியத்தை சந்தோஷமான தருணத்திற்கு உபயோகித்திருப்பார் என்பதை அழகாய் சுட்டிக் காட்டியிருந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. மெல்லிசை மன்னரை ஒரு முறை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தப் போது இதை குறிப்பிட்டு இது போல எனக்கு தெரிந்த ஓருவர் இதை இணையத்தில் எழுதியிருக்கிறார் என்று அவரிடம் சொன்னபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அதனால்தான் அப்படி குறிப்பிட்டேன்.

    அன்புடன்

  5. #1354
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    பல்வேறு காரணங்களினால் என்னால் வந்து இந்த திரியை படிக்கவோ, எழுதவோ முடியவில்லை. இன்று வந்தபோது...
    பம்மலாருக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாமதத்திற்கு பொறுத்தருள வேண்டும்.
    அருமைச்சகோதரர் கல்நாயக் அவர்களே,

    திரிக்குத் திரும்பிய கையோடு தாங்கள் வழங்கிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்..!

    நகைச்சுவை உணர்வு மிகுந்த தங்களுக்கு ஒரு நல்ல பரிசு:



    பாசத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  6. #1355
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கர்ணன் 2012 - ஒரு பின்னோட்டம்

    இந்த ஆண்டு இன்னும் மூன்று மாதங்களில் முடியப் போகிறது. மிகவும் பெரியதாக இந்த மூன்று மாதங்களில் திருப்புமுனையாகவோ திருப்பமாகவோ ஏதும் நிகழும் வாய்ப்பு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படும் சூழ்நிலை காணப் படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டின் மிகப் பெரிய பரபரப்பை உருவாக்கிய கர்ணன் திரைக்காவியத்தின் நவீன மயமாக்கலும் அது அடைந்த வெற்றியும் ஏனோ மனதில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மறக்கவும் மறுக்கவும் முடியாத உண்மை.

    மார்ச் 16ல் இப்படம் மறுவெளியீடு கண்ட போது இந்த அளவுக்கு புதிய தலைமுறையினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது யாரும் எதிர் பார்த்திராத ஒன்று. என்னதான் காலம் நம்மை விட வேகமாக பயணித்தாலும் நினைவுகள் அதனை விடவும் வேகமாக நம்முன் வந்து நிற்கின்றன. சாந்தியில் முதல் வெளியீட்டில் கர்ணனை நான் பார்த்த பொழுது அறியாத வயது. அதன் பிரம்மாண்டத்தை நிச்சயமாக உணரும் திறமை இல்லாத பிராயம். ஆனால் சில ஆண்டுகள் கழித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் திரையிலும் பின்னர் நெடுந்தகடு வடிவிலும் அதற்கு சற்றே முன்னர் ஒளிநாடாக்களிலும் இப்படத்தைப் பார்த்திருக்கிறோம் என்றாலும் உண்மையாக கர்ணனின் பிரம்மாண்டம் நமக்கே இந்த 2012ல் தான் நிஜமாக தெரிந்தது அதனை நாம் இப்போது தான் உணர்ந்தோம் என்பது உண்மை. முதல் வெளியீட்டில் நன்கு விவரம் தெரிந்து அதனுடைய பிரம்மாண்டத்தை அப்போதே உணர்ந்திருப்பவர்கள் தற்போது குறைந்த பட்சம் 70 வயதையாவது அடைந்திருப்பார்கள். அவர்களில் இங்கு நம்முடன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்கள் இருக்கும் வாய்ப்பு சற்றுக் குறைவு. எனவே இப்போது தான் நாம் உண்மையாக அதனுடைய விசாலமான நீட்சியை உணர்கிறோம் என்றால் அது உண்மை.

    காரணம், சமீபத்திய வெளியீட்டில் நம்முடைய பழைய காலத்து ரசிக நண்பர்களே குறைந்தது 10 முறையாவது அப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்திருக்கிறார்கள். நவீன மயமாக்கல் அப்படத்தின் மீது நமக்கே ஒரு புதிய அளவிலான தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது. இன்று ஒரு தொலைக் காட்சியில் கர்ணன் பாடலைப் பார்க்க நேர்ந்த போது இப்படத்தை சத்யம் திரையரங்கில் பார்த்தது மனதில் உடனே நிழலாடியது.

    இந்தத் தலைமுறையுடன் நவீன வடிவில் நவீன வசதிகளுடன் பார்க்கும் போது கிடைத்த பரவசம் முற்றிலும் புதியதாய் இருந்தது. நாமும் பல ஆண்டுகள் நம்முடைய வயதில் குறைந்து ஆர்ப்பரித்து மகிழ்ந்து ரசித்தது நிறைவைத் தந்தது.

    இதனை இப்போது ஏன் எழுதுகிறாய் என உங்களுக்கெல்லாம் தோன்றும் வாஸ்தவம். படம் ஓடும் போது ஏற்படும் நினைவுகளை விட அது ஓடி முடிந்து நினைவுகள் அசை போடும் போது பரவசம் கூடுகிறது.

    எனக்குக் கிடைத்த இந்த உணர்வு நம்மில் ஒவ்வொருவருக்குமே ஏற்பட்டிருக்கும் என்பது திண்ணம். எங்கு பார்த்தாலும் கர்ணன் பற்றிய பேச்சு, எங்கு பார்த்தாலும் அதனுடைய விளம்பரங்கள் ஏற்படுத்திய பரபரப்பு, தொடர்ந்து வந்த செய்திகள், நிகழ்வுகள், ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ... அப்பப்பா... 2012 ம் ஆண்டே மறந்து போய் 1964ல் திளைத்து விட்டோம்.

    இந்த நினைவுகளோடு 1965 க்கு மீண்டும் திரும்ப மாட்டோமா என்கிற ஏக்கத்தைத் திருவிளையாடல் படம் ஏற்படுத்தியிருக்கிறது.

    கர்ணன் நமக்குள் உண்டாக்கிய புத்துணர்வு, புது ரத்தம் பாய்ச்சியது போன்ற வேகம், இதனைத் திருவிளையாடல் தொடர வைக்குமா ...

    அந்த பரமசிவன் தான் விடை கூறத் தக்கவர்.

    காத்திருப்போம், நம்முடைய ஆசை நிறைவேறும், கனவு பலிக்கும், என்று வழி மேல் விழி வைத்து காத்திருப்போம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1356
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    அலைபேசி மூலம்/மூலமும் அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை நல்கிய திரு.esvee, திரு.வாசு, திரு.சந்திரசேகரன், திரு.முரளி, திரு.ராகவேந்திரன், திரு.வியட்நாம் கோபால், திரு.ராமஜெயம்(சென்னை 'சாந்தி'), திரு.அண்ணாதுரை(திருச்சி), திரு.கோல்ட்ஸ்டார் சதீஷ் மற்றும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் இந்த எளியவனது இதயங்கனிந்த அன்பான நன்றிகள்..!

    நமது இதயதெய்வம் நம் எல்லோருக்கும் இன்று போல் என்றென்றும் நல்வழி காட்டுவார்:




    பாசத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  8. #1357
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    pammalar sir
    for u

  9. #1358
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார்,

    தங்களுக்கு மீண்டும் என் இனிய நல்வாழ்த்துக்கள்.

    தங்கள் பிறந்தநாள் பரிசாக தாங்கள் எனக்களித்த 'ஞானஒளி' அருண்ஆண்டனியைக் 'காத்த'வராயனாகக் காத்து வைத்துக் கொள்வேன். அருமையான இரு புகைப்படங்களை எனக்களித்து புளகாங்கிதப்பட வைத்ததற்கு நன்றி!

    அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஹப்பருக்கும் தனித்தனியாக தாங்கள் வழங்கிய புகைப்படங்கள் அவரவர்களுக்கேற்ப பொருத்தமாக இருந்தது சிறப்பு. தனித்தனியே வழங்கினாலும் எல்லோருமே பாதுகாத்துக் கொள்ளக் கூடிய பொக்கிஷங்கள். அனைத்தும் அருமை. தங்கள் வள்ளல் குணம் வாழ்க!

    எல்லாவற்றிலும் சிகரம் எது தெரியுமா? பத்திரிகை புகைப்படங்கள் வரிசையில் தாங்கள் அளித்துள்ள "எதிரொலி(1970)" ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்தான். சும்மா பட்டை கிளப்புகிறது. இளமையான பாலச்சந்தர் தலைவரை இயக்கும் அற்புதமான புகைப்படம் அப்படியே சுண்டி ஈர்த்து விட்டது. இந்த ஒரு புகைப்படத்திற்காக தங்களுக்கு என்னுடைய கோடானு கோடி நன்றிகள்.

    கோவை 'சாரதா' அரங்கில் வைக்கப்பட்டுள்ள 'திருவிளையாடலு' க்கான தலைவரின் புகழ் பாடும் அட்டகாசமான பதாகையை இங்கு பதிப்பித்து மகிழ்வுறச் செய்தமைக்கு நன்றிகள். (பதாகையின் அழகிய வடிவத்தை தங்களுக்கு மின்னஞ்சல் செய்த திரு. சிவாஜி ரவி அவர்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள்).
    Last edited by vasudevan31355; 26th September 2012 at 10:22 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1359
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு வினோத் சார்,

    'ஜல்லிக்கட்டு' நூறாவது நாள் விழாவில் தலைவரின் அட்டகாச சிரிப்புடன் கூடிய நிழற்படம் ஓஹோ...

    'ஞானஒளி' ஸ்டில் ரகளை. சூப்பர் ஸ்டில்களுக்கு சூப்பர் நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1360
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    கர்ணனைப் பற்றிய தங்களது நினைவலைகள் அப்படியே நம் எல்லோரது நெஞ்சிலும் நிழலாடும் இன்ப நினைவலைகள்தாம். 20 mp சோனி காமரா போல அப்படியே எல்லோரது உள்ள உணர்வுகளையும் படம் பிடித்து விட்டீர்கள்.

    தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்தவார படங்களின் விவரங்களை சிரமப்பட்டு தொகுத்தளித்துள்ளீர்கள். நிச்சயம் நிறைய நேரம் பிடித்திருக்கும். சிரமம் பாராமல் தொகுத்தமைக்கு இதயபூர்வமான நன்றிகள்.

    கோவையில் 'திருவிளையாடல்' பதாகையை பதிப்பித்தமைக்கு மிக்க நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •