இறைக்குருவனார் மறைவு 25.11.12
தமிழாய்ந்த இறைக்குருவனார் மறைவு
தமிழுலகம் தனக்கொன்று துன்பச் செய்தி!
அமிழ்தெடுத்தே அளிக்கின்ற அரிய பேச்சு,
அரியபல தொகுத்தளிக்கும் ஆற்றல்பெற்றார்.
அமிழ்ந்துள்ள தமிழார்வம் எழுச்சி கொள்ள
அவர்தொண்டும் அளப்பரிதே ஐய மில்லை!
கமழ்கின்ற மலர்களிலே உறங்கும் நல்லார்
அவரான்மா அமைதிபெற வணங்கி நிற்போம்.




Reply With Quote
Bookmarks