-
27th January 2013, 03:59 PM
#11
Junior Member
Platinum Hubber
1976 -
மக்கள் திலகதிற்கு ஒருபக்கம் அன்றைய மாநில அரசும் மத்திய அரசும் வெவ்வேறு வகைகளில் நெருக்கடி கொடுத்துஅவரது கலையுலகம் - அரசியல் இரண்டிலும் பாதிப்பு உண்டாக்கிட எடுத்த எல்லா முயற்சிகளையும் மக்கள் திலகம் தனி மனிதனாக நின்று வெற்றி பெற்றார் .
On January 31, 1976, the Indira Gandhi Government , dismissed DMK Government after DMK had challenged the imposition of the Emergency in 1975. The stated charges against the State Government were "corruption, maladministration and misuse of power."
மக்கள் திலகம் அவர்களின் நடத்திய அற போராட்டதிற்கு[ 1972 முதல் போராடியதற்கு] 31-1-1976 அன்று வெற்றி கிடைத்தது .
பதவி இழந்தவர்களின் ஆத்திரம் - கோபம் -வெறி எல்லாமே மக்கள் திலகத்தின் மீது திரும்பியது .
அவர்கள் வைத்த குறி .\
அண்ணா நினைவு நாளன்று [ 3.2.1976 ] சென்னையில் அவரை தாக்க முயற்சி செய்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன் மக்கள் திலகம் அவர்கள் மைசூரில் படபிடிப்பு முடித்துவிட்டு பெங்களூர் திரும்பியதும்
2.2..1976 இரவு சென்னை பயணத்தை மாற்றிவிட்டு
பெங்களூர் MGR மன்ற நிர்வாகிகளுடனும் அதிமுக நிர்வாகிகளுடன் கலந்து மறுநாள் காலை 8 மணி பெங்களூர் - லாவண்யா அரங்கு அருகில் உள்ள கிறிஸ்துவ ஆலய மைதானத்தில் மௌன அஞ்சலி அனுசரிக்கப்படும்
என்று முடிவு செய்யப்பட்டது .
3-2-1976 காலை 6 மணி முதலே மக்கள் திலகத்தின் ரசிகர்களும் கழக நண்பர்களும் கூடி .விட்டனர்
மக்கள் திலகம் அவர்கள் 7,50 மணி அளவில் ரசிகர்கள் வெள்ளம் சூழ மேடையேறினார் .
சுமார் இரண்டாயிரம் ரசிகர்கள் கூடியிருந்தனர் .
சரியாக 8 மணிக்கு மக்கள் திலகம் எழுந்து நின்று 3 நிமிட மௌன அஞ்சலிக்கு பிறகு எந்தவித ஆரவாரமின்றி ,அமைதியான முறையில் ராணுவ கட்டு கோப்புடன் ரசிகர்கள் அமைதியுடன் கலைந்து சென்றனர் .
Last edited by esvee; 27th January 2013 at 04:07 PM.
-
27th January 2013 03:59 PM
# ADS
Circuit advertisement
Bookmarks