Results 1 to 10 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    சென்னை: ஆனந்தஜோதி படத்தில், முடியும் உன்னால், ஏறு ஏறு என்று என்னை தூக்கி விடுவார் எம்.ஜி.ஆர். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கி விட்டதனால். எனவே எனக்குப் பயமில்லை என்று கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
    -
    நேற்று செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், வெற்றி தோல்விகளை ஒரே மனப்பாங்குடன் பார்க்கும் மைய நிலை எனக்கு வந்ததற்கு காரணம் என்ன தெரியுமா?
    நான் குழந்தையையாக நடிகையர் திலகம் கையில் அணைத்து எடுக்கப்பட்டிருக்கிறேன். காதல் மன்னன் ஜெமினி கணேசன் கையை பிடித்துக்கொண்டு நடை பயின்றிருக்கிறேன்.
    -
    மடியில் அமர்ந்தது நடிகர் திலகத்திடம். தோளில் ஏறி நின்றது எம்.ஜி.ஆரிடம். எம்.ஜி.ஆர். அவர்கள் ஆனந்த ஜோதி படத்தில் முடியும் உன்னால் ஏறு..ஏறு..ஏறு.. . என்று தூக்கி விடுவார். அப்படி ஏறி வந்த பிள்ளை நான். உயரம் கற்றது அவர் தூக்கிவிட்டதனால், எனக்கு பயமில்லை என்றார் கமல்.
    -
    தட்ஸ்தமிழ்
    வினோத் சார்,

    கமலஹாசன் ஒரு அற்புதமான நடிகர். மக்கள் திலகத்தின் படத்தில் அவருடன் நடித்த போது ஏற்பட்ட அனுபவத்தினை பகிர்ந்து கொண்டு, தனக்கு பயமில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் தமிழ் நாட்டை விட்டே சென்று விடுவேன் என்று பேட்டி அளித்ததும், இந்த "விஸ்வரூபம்" பட விவகாரத்துக்கு அரசியல் சாயம் பூசப்பட்டதும் துரதிருஷ்டவசமானதே..

    திரை உலகில் எதிர்ப்புக்கள் யாவும் வரத்தான் செய்யும். அவற்றை வெற்றிகரமாக, ரசிகர்கள் ஆதரவுடன், பொதுமக்கள் துணையுடன் சமாளிக்க வேண்டும்.

    நமது பொன்மனச்செம்மல் எம்.ஜீ.ஆர். அவர்கள் சந்திக்காத சோதனைகளா ? இளம் வயதில் வறுமையின் கொடுமை வாட்டி எடுத்தது. எதிர்ப்பிலேயே வளர்ந்த எழில் வேந்தன் எம்.ஜீ.ஆர். அவர்கள் நடிக்க துவங்கிய 1936ம் வருடம் முதல் 1966 வரை, பின்பு மீண்டும் 1972 முதல் 1977 வரை ஆக மொத்தம் 35 ஆண்டு கால திரை உலகில் அவருக்கு சாதகமான காலம் வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே (1967 முதல் 1972 - முதல் பாதி வருடம் வரை) , குறீப்பாக "நேற்று இன்று நாளை" மற்றும் "உலகம் சுற்றும் வாலிபன்" படங்கள் மூலம் அவர் சந்தித்த இன்னல்கள் சொல்லி மாயாது. அவருக்கு பொது மக்கள் சபை தான் "நீதிமன்றம்" . பொது மக்கள்தான் நீதிபதிகள். மக்கள் திலகம் மற்றும் மக்கள் தலைவர் என்ற பட்டங்களுக்கு பொருத்தமானவர்.

    சோதனைகளை சாதனைகளாக மாற்றிய விந்தையாளர் நமது புரட்சித்தலைவர்.



    அன்பன் சௌ செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்
    எங்கள் இறைவன்




  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •