Results 1 to 10 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு எனது பிறந்த நாள் செய்தி .

    தமிழக முதல்வர் அறிக்கை .

    எனது ஆசான் டாக்டர் புரட்சி தலைவரும் ,எனது இதய தெய்வமும் , உலகமெங்கும் வாழும் மக்கள் இதயங்களில் என்றென்றும் குடியிருக்கும் மக்கள் திலகம் அவர்களின் கலை உலக பயணமும் , அரசியல் பயணமும் உலக வரலாற்றில் நிரந்தர இடம் பெரும் செய்தியாகும் .

    77 வருட சினிமா வரலாற்றில் நமது மக்கள் திலகம் படைத்த சாதனைகள் .. பெரும்பாலான படங்கள் வசூலில் சக்கை போடு போட்டு இன்றும் பல தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் - என்று அவர்களுக்கு அமுத சுரபியாக , அட்சய பாத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் .
    மக்கள் திலகம் அவர்கள் அரசியல் மாற்று முகாம் குழுமங்கள் கூட நமது மக்கள் திலகத்தின் படங்களை
    ஒளி பரப்பி வசூலை குவிக்கின்றனர் .
    எப்படி பார்த்தாலும் நமது இறைவன் மக்கள் திலகம் எல்லோரையும் அன்றும் வாழ வைத்தார் .
    இன்றும் வாழ வைத்து வருகிறார் . நாளையும் அவர்கள் மக்கள் திலகத்தின் பெயரை சொல்லி வாழ்வார்கள் .

    எனது நீண்ட நாள் ஆசை .

    மக்கள் திலகதிற்கு ஒரு மணி மண்டபம் கட்டி அதில் அவர் நடித்த 134 படங்களின் டிஜிட்டல் கட் அவுட் -
    மற்றும் பதாகைகள் மண்டபத்தை சுற்றி அலங்கரிக்க வேண்டும் .
    மண்டபத்தை சுற்றி ஒலி பெருக்கி மூலம் மக்கள் திலகம் நடித்த பாடல்கள் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும் .
    மண்டபத்தின் மைய அரங்கில் அகன்ற திரையில் மக்கள் திலகத்தின் படங்கள் தினமும் 3 காட்சிகள் சுழற்சி முறையில் இலவசமாக திரையிட வேண்டும் .

    படத்தை காண வரும் பொது மக்களும் - ரசிகர்களும் அமைதியுடன் கண்டு களித்து செல்ல வேண்டும் .

    கட்சி நிர்வாகிகள் தங்களுடைய ஒவ்வொரு விளம்பரங்களிலும் - போஸ்டர் களிலும் மக்கள் திலகத்தின் முழு உருவ படத்தினை கண்டிப்பாக போட்டுத்தான் வரவேண்டும் .

    மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா விரைவில் வர உள்ளதை முன்னிட்டு உலக அளவில் இது வரை நடந்திராத வண்ணம் மிக சிறப்பாக செய்திட எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன .

    மக்கள் திலகம் mgr - என்ற புதிய தொலைக்காட்சி நிறுவனம் விரைவில் தொடங்கப்படும் .

    மக்கள் திலகம் mgr
    - இலவச பள்ளிக்கூடம் - இலவச மருத்துவமனை - இலவச தொழிற்பள்ளி - இலவச கல்லூரி படிப்பு
    என்று தமிழகமெங்கும் கிராமங்கள் தோறும் துவங்கப்படும் .

    மக்கள் திலகத்தின் நீண்ட நாள் கனவான தமிழக தலை நகரம் - திருச்சி நகருக்கு மாற்ற எல்லா ஏற்பாடுகளும் நாடி பெற்று வருகிறது .

    மக்கள் திலகம் வாழ்ந்த ராமாவரம் தோட்டம் - நீதி மன்றம் சம்மதித்தால் -
    நமது இதய தெய்வம் வாழ்ந்த தோட்டத்தை அரசு பராமரிப்பில் புதுப்பிக்கப்பட்டு எல்லோருக்கும் குடியிருந்த கோயிலாக மாற்றி உலகமெங்கும் வாழும் மக்கள் திலகம் பக்தர்கள் இங்கு வந்து சுற்றி பார்க்க ஏற்பாடு செய்ய படும் .
    தென் மாவட்டங்கள் என்று பார்த்தால் நமது மக்கள் திலகத்தின் சினிமா - அரசியல் இரண்டிற்கும் மாபெரும்
    ஆதரவு தந்த பெருமை மதுரை மாவட்டத்துக்கு உண்டு .
    மதுரை நகரில் மட்டும் நம் மன்னவர் படைத்த சினிமா சாதனை .
    என்றென்றும் சாதனை கோட்டை அல்லவா . வெள்ளி விழா - வெற்றிவிழா - நூறு நாட்கள் - பின்னர் வெளியீடுகளில் அன்றும் இன்றும் வசூலில் கலக்கும் மக்கள் திலகத்தின் படங்கள் .
    அரசியல் .. எல்லா தொகுதிகளிலும் நமது வெற்றி கொடி பறக்கிறது .
    இது போன்ற மக்கள் திலகத்தின் சாதனைகளுக்கு விரைவில் அரசு சார்பாக mgr - மலர் ஒன்று விரைவில் வர உள்ளது .
    விரைவில் இன்னும் பல மக்கள் திலகத்தின் சாதனைகள் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகின்றேன் .
    நன்றி ... வணக்கம் .

    [ இது ஒரு கற்பனை -செய்தி ].
    Last edited by esvee; 24th February 2013 at 06:56 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •