-
9th April 2013, 02:49 PM
#11
Junior Member
Devoted Hubber

Originally Posted by
kr
சாரிங்க...இந்த செய்தியும் மன்னா போச்சு.... கீழே உள்ள செய்தி தினமலரிலிருந்து எடுக்கப்பட்டது, பொய்யாக இருந்தால் தேவலாம்.
மணிரத்னம் படத்துக்கு இளையராஜா இசையமைக்க சான்சே இல்லையாம்!
மணிரத்னத்தின் முதல் படமான பகல் நிலவு தொடங்கி அவரது மெகா ஹிட் படங்களான மெளனராகம், நாயகன், அக்னிநட்சத்திரம், தளபதி என்று பல படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. ஆனால் 1990-களில் அவர்களது நட்பில் விரிசல் விழுந்ததையடுத்து ஏ.ஆர்.ரகுமானை தனது ரோஜா படத்தில் அறிமுகம் செய்தார் மணிரத்னம். அதன்பிறகுதான் இளையராஜா-மணிரத்னத்தின் பிரிவு நிரந்தரமானது.
இந்த நிலையில், மும்பையில் இளையராஜா இசையமைத்து வந்த ஒரு ஒலிப்பதிவு கூடத்தில் அவரை சந்தித்திருக்கிறார் டைரக்டர் மணிரத்னம். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளாக பிரிந்து செயல்பட்ட அவர்கள் இணையும் முதல் சந்திப்பு இது. அதனால் மணிக்கணக்கில் இருவரும மனம் விட்டு பேசியதாககூட கூறப்படுகிறது.
இதையடுத்து, மீண்டும் அவர்கள் இருவரும் திரைப்படங்களில் இணைந்து பணியாற்றுவதற்கான சூழல் உருவாகியிருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இந்த செய்தி எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று இளையராஜா தரப்பை விசாரித்தபோது, மீண்டும் மணிரத்னத்துடன் இளையராஜா இணைய சான்சே இல்லை. நீண்டகாலத்துக்கு பிறகு சந்தித்ததால் மரியாதை நிமித்தமாக பேசியிருக்கிறார்கள்அவ்வளவுதான் என்கிறார்கள்.
-
9th April 2013 02:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks