-
17th April 2013, 03:05 PM
#11
Senior Member
Veteran Hubber
சந்தானத்தால் தொங்கும் 'வாலு'!
கோலிவுட்டில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் கூட வாரத்தில் ஒரு நாளாவது ஒய்வு எடுப்பார்கள். ஆனால் ஒரு நாள் கூட ஒய்வில்லாமல் பம்பரமாக சுழன்று நடித்து வருகிறார் காமெடி சூப்பர் ஸ்டார் ('சேட்டை' படக்குழு கொடுத்தது) சந்தானம்.
சந்தானம் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருவதால், எந்த படத்தில் நடிப்பது, யாருக்கு தேதிகள் ஒதுக்குவது என்ற குழப்பம் தொடர்ச்சியாக நீடித்து வருகிறது.
சமீபத்தில் கூட ஒரு பிரச்னை உருவாகி அதனை வெளியில் தெரியாமல் அமுக்கி விட்டார்கள். சிம்பு நடித்து வரும் 'வாலு' படத்தின் படப்பிடிப்பை, சந்தானம் இல்லாமல் ஒத்தி வைத்துவிட்டார்கள்.
தீபாவளி 2012 வெளியீடு என்று ஆரம்பிக்கப்பட்ட படம் தான் 'வாலு'. இன்னும் படப்பிடிப்பு முடிவு பெறாத தருவாயில் சந்தானத்தால் மீண்டும் பிரச்னை. 'வாலு' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள், மற்றும் பாடல்கள் இன்னும் படமாக்கப்பட வேண்டும்.
க்ளைமாக்ஸ் காட்சியில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் மூவரும் ஒரு கோயிலில் சந்திப்பது போன்று அமைத்து இருந்தார் இயக்குனர். சந்தானத்திடம் கால்ஷீட் தேதிகள் கேட்ட போது " 'தலைவா' படத்திற்க்காக ஆஸ்திரேலியா செல்கிறேன். வந்து தேதிகள் ஒதுக்குகிறேன் " என்று பறந்து விட்டாராம் சந்தானம்.
" சந்தானத்தை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு...அவருக்கே இந்த நிலைமையா?" என்று ஆச்சரியத்தில் இருக்கிறது கோலிவுட்.
-
17th April 2013 03:05 PM
# ADS
Circuit advertisement
Bookmarks