-
17th April 2013, 03:05 PM
#31
Senior Member
Veteran Hubber
சந்தானத்தால் தொங்கும் 'வாலு'!
கோலிவுட்டில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் கூட வாரத்தில் ஒரு நாளாவது ஒய்வு எடுப்பார்கள். ஆனால் ஒரு நாள் கூட ஒய்வில்லாமல் பம்பரமாக சுழன்று நடித்து வருகிறார் காமெடி சூப்பர் ஸ்டார் ('சேட்டை' படக்குழு கொடுத்தது) சந்தானம்.
சந்தானம் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருவதால், எந்த படத்தில் நடிப்பது, யாருக்கு தேதிகள் ஒதுக்குவது என்ற குழப்பம் தொடர்ச்சியாக நீடித்து வருகிறது.
சமீபத்தில் கூட ஒரு பிரச்னை உருவாகி அதனை வெளியில் தெரியாமல் அமுக்கி விட்டார்கள். சிம்பு நடித்து வரும் 'வாலு' படத்தின் படப்பிடிப்பை, சந்தானம் இல்லாமல் ஒத்தி வைத்துவிட்டார்கள்.
தீபாவளி 2012 வெளியீடு என்று ஆரம்பிக்கப்பட்ட படம் தான் 'வாலு'. இன்னும் படப்பிடிப்பு முடிவு பெறாத தருவாயில் சந்தானத்தால் மீண்டும் பிரச்னை. 'வாலு' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள், மற்றும் பாடல்கள் இன்னும் படமாக்கப்பட வேண்டும்.
க்ளைமாக்ஸ் காட்சியில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் மூவரும் ஒரு கோயிலில் சந்திப்பது போன்று அமைத்து இருந்தார் இயக்குனர். சந்தானத்திடம் கால்ஷீட் தேதிகள் கேட்ட போது " 'தலைவா' படத்திற்க்காக ஆஸ்திரேலியா செல்கிறேன். வந்து தேதிகள் ஒதுக்குகிறேன் " என்று பறந்து விட்டாராம் சந்தானம்.
" சந்தானத்தை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியவர் சிம்பு...அவருக்கே இந்த நிலைமையா?" என்று ஆச்சரியத்தில் இருக்கிறது கோலிவுட்.
-
17th April 2013 03:05 PM
# ADS
Circuit advertisement
-
18th April 2013, 12:59 PM
#32
Senior Member
Veteran Hubber
Another Tamil movie in SAME NAME...........Who holds the title rights ????
MDSG509366-MDS-M.jpg
-
30th May 2013, 11:33 AM
#33
Senior Member
Veteran Hubber
சிம்பு-தயாரிப்பாளர் திடீர் மோதல்!
சமீபகாலமாக ஆன்மீகத்தில் தனது மனதை திருப்பியுள்ளார் சிம்பு. இந்த மாற்றத்தின் மூலம் என்னை நான் அடையாளம் காண முடிகிறது என்றும் செய்தி வெளியிட்டிருந்தார் அவர். இந்த நிலையில், இமயமலை சென்று திரும்பியுள்ள சிம்பு, வாலு, வேட்டை மன்னன் என்ற இரண்டு படங்களில் நடித்து வந்தவர், அப்படத்தயாரிப்பாளருடன் தனக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக, நடிக்காமல் ஒதுங்கியிருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
ஆனால் சிம்புவின் இந்த முடிவினால் அப்படங்களின் தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்து போனாராம். இரண்டு படங்களும் முடிவடையும் தருவாயில் இருக்கும்போது இந்த பிரச்னை எதற்கு என்று நட்பு வட்டாரமும் கூடி பேசி அவர்களை சமாதானம் செய்து வைத்திருக்கிறார்களாம். அதனால், இதுபற்றி, தயாரிப்பாளருடனான பிரச்னை தீர்ந்துவிட்டது. மீண்டும் வாலு, வேட்டை மன்னன் படங்களில் கலந்து கொள்கிறேன் என்று டுவிட்டரில் எழுதியுள்ள சிம்பு, இந்த பேச்சுவார்த்தையில் நான் உடன்பட என்னை மாற்றியதும் ஆன்மீகம்தான் என்றும் தெரிவித்துள்ளார்.
-
2nd July 2013, 11:26 AM
#34
Senior Member
Veteran Hubber
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் படம், 'வாலு'. சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் சந்தர் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்துவருகிறது. அங்கு தனது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடிய விஜய் சந்தர் கூறியதாவது: இது காமெடியான காதல் கதை. சிம்புவும் சந்தானமும் வரும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பாக இருக்கும். ஹன்சிகாவும் காமெடி பண்ணியிருக்கிறார். படத்தின் சண்டைக்காட்சியை ஐதராபாத் அருகில் உள்ள லிங்கப்பள்ளியில் எடுத்துவருகிறோம். சிறப்பு அனுமதி வாங்கி ரயில்வே ஸ்டேஷனிலேயே செட் அமைத்து படப்பிடிப்பை நடத்துகிறோம். இரண்டு ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இதில் சிம்புவும் சண்டைக்கலைஞர்களும் மோதும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் இந்த சண்டைக்காட்சியும் ஒன்றாக இருக்கும். கனல் கண்ணன் சண்டைக்காட்சிகளை அமைத்து வருகிறார்.
-
29th August 2013, 12:06 PM
#35
Senior Member
Veteran Hubber
TFU Kannan @TFU_Kannan 14m
Ajith - Arya multi starrer #Arrambam and STR's #Vaalu gearing up 4 Diwali '13 release. Audio launch of both films in September!
-
29th August 2013, 03:11 PM
#36
Senior Member
Veteran Hubber
Oh - Good news!!
I thought this project is dropped!!
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
-
29th August 2013, 03:41 PM
#37
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Cinemarasigan
Oh - Good news!!
I thought this project is dropped!!
Last time(Poda podi) released with Vijay movie, this time with Ajith movie..
-
15th October 2013, 02:40 PM
#38
Senior Member
Veteran Hubber
Fight sequence @ binny mill on 12th & 14th Oct 2013
-
19th November 2013, 12:05 PM
#39
Senior Member
Veteran Hubber
ஒரு வழியா வருது சிம்புவின் வாலு!

சென்னை: சிம்பு நடிப்பில் கடந்த இரு ஆண்டுகளாக வருமா வராதா என இழுத்தடித்துக் கொண்டிருந்த வாலு படம், விரைவில் வெளியாகிறது.
சிம்புவின் பிறந்த நாளன்று, இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
சிம்பு, ஹன்சிகா நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள படம் ‘வாலு'.
இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு ரொம்ப நாள் கழித்தும் முடியாமல் இழுத்துக் கொண்டே இருந்தது. இதற்கு சிம்புதான் காரணம் என சிலரும், இல்லையில்லை தயாரிப்பாளர்தான் காரணம் என சிலரும் கூறி வந்தனர்.
இந்நிலையில் இப்படத்தை விரைவில் வெளியிடப் போவதாக இப்படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் கூறியுள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் விஜய்சந்தர் கூறும்போதுகையில், "நானும், சிம்புவும் படத்தை வெளியிட தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால், தயாரிப்பாளரின் நிதி நெருக்கடி படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறது.
இந்த பிரச்சினை இன்னும் சில நாட்களில் தீர்ந்துவிடும். இன்னும் செட் போட்டு எடுக்கவேண்டிய பாடல்களும், வெளிநாடுகளில் எடுக்கப்பட வேண்டிய பாடல்கள் மட்டும் படமாக்கப்படாமல் உள்ளன
. டிசம்பரில் இப்படத்தின் பாடல்களையும், பிப்ரவரி மாதம் சிம்பு பிறந்த நாளன்று படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
ஒரு காலத்தில் அஜீத்தின் ஆஸ்தான தயாரிப்பாளராகத் திகழ்ந்த நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
-
21st January 2014, 08:45 PM
#40
Junior Member
Seasoned Hubber
SST @MusicThaman 11h
#Vaalu releasing on #Vaali 's date tat is on MAY 1'st and it is thala Ajith sir 's birthday too super excited
@iam_STR @vijayfilmaker
Bookmarks