-
24th April 2013, 04:29 PM
#11
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் மனப்பூர்வமான வரவேற்புக்கும், வைர நெஞ்சம் பதிவிற்கான பாராட்டுக்கும் மிக்க நன்றி. படத்தில் நடித்திருக்கும் அந்த இரண்டு நடிகர்கள் யார் என்று மட்டும்தான் கேட்டேன். அவர்களின் பூரண விவரங்களை ஸ்டில்களோடு தந்தது மட்டுமல்லாமல், அதில் ஒருவருக்கு குரல்கொடுத்தவர் யார் என்பது உள்பட புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள். ஆகா என்ன ஒரு பூரணத்துவம். கூடவே வில்லன், வில்லி ஸ்டில்லும் அட்டகாசம்.
படத்தில் நடிகர்திலகத்தின் பெயருக்கு மட்டும்தான் தனி கார்டு. மற்றொரு கார்டில் முத்துராமன், பாலாஜி, தூலிபாலா, ஜி கே. ராம்குமார் ஆகியோர் பெயர்களைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. நடிகை இந்துவை பல சீரியல்களிலும் படங்களிலும் பார்த்திருக்கிறேன். காதல்கோட்டை ஜென்ஸியை மறக்கமுடியுமா?. ஆனால் அவர் ராம்குமாரின் மகள் என்பதை இப்போதுத்தன் தெரிந்துகொண்டேன்
தங்களின் 'தாம்பத்யம்' பட அலசல் ஆய்வு சூப்பரோ சூப்பர். 'கருடா சௌக்கியமா’வை 'துணை' மிஞ்சியது என்றால், 'துணையை' வென்றது ‘தாம்பத்யம்’ என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மிக நேர்த்தியான ஆய்வு. தாம்பத்யம் படம் பார்த்திருக்கிறேன். நீங்கள் சொன்ன குறைகள் அனைத்தும் உண்மை. பிளாஷ்பேக்கில் தலைவரை காட்டிய விதம் கொஞ்சமும் சரியில்லை, நல்ல கதையை எடுத்தவிதத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்பதே உண்மை.
வெளிச்சத்துக்கு வராத இம்மாதிரிப் படங்களை ஆய்வு செய்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும் தங்களின் சீரிய பணியை மனதாரப் பாராட்டுகிறேன்.
தொடரட்டும் தங்கள் தொண்டு.
-
24th April 2013 04:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks