-
4th June 2013, 11:12 AM
#11
Senior Member
Diamond Hubber

புளிக்காய்ச்சல் செய்வதை சொல்லித் தருகிறேன். Try பண்ணிப் பாருங்கள். ரொம்ப ஈஸி. கொஞ்சம் எள்ளு, கொஞ்சம் வெந்தயம், 5 காய்ந்த மிளகாய், இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை(தேவைப்பட்டால்) இவற்றை வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு தனித் தனியாக வறுக்கணும். அதற்கு முன் எலுமிச்சம்பழ சைஸில் புளியை எடுத்து தண்ணீரில் மூழ்கும் அளவு ஊற வைக்கணும். அதில் கொஞ்சம் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போடணும். கொஞ்சம் வேர்க்கடலையை தனியாக வறுத்து வைக்கணும்.
ஆச்சா! அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு கரண்டி நல்ல எண்ணையை ஊற்றணும். எண்ணை காய்ந்ததும் சிறிது வெந்தயம் போட்டு கிள்ளி வைத்த காய்ந்த மிளகாய் ஐந்தை அதன் தலையில் போடணும். கூடவே இரண்டு ஸ்பூன் கடலைப் பருப்பைப் போடணும். க.பருப்பு சிவந்ததும் கொஞ்சம் கறிவேப்பிலையை போட்டு புளித்தண்ணீரை வடிகட்டி ஊற்றனும்.
இடைவேளையில் அரைத்து வைத்த பொருட்களை மிக்சியில் போட்டு ஒண்ணும் பாதியுமா அரைக்கணும். (வறுத்த கடலையைத் தவிர) புளித்தண்ணீர் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது அரைத்த பவுடரைப் போட்டு தீயை சிம்மில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்கணும். வாசனை ஊரைக் கூட்டும். பின் வறுத்த வேர்க்கடலையைப் போட்டு, முந்திரி சிறிது வறுத்து அதையும் சேர்த்தால் சுவையான புளியோதரைக் குழம்பு ரெடி.
பின் சாதத்தை உதிரியாய் வடித்து ஆறவைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பின் புளியோதரைக் குழம்பை ஊற்றி கைபடாமல் சாதத்தை பக்குவமாக கிளற வேண்டும்.
அதற்குள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்க ஆரம்பித்து விடுவார்கள்.
இது என் சொந்தப் பக்குவம். copy,paste பண்ணல.
செஞ்சு பார்த்துட்டு feed back கொடுங்க.
Last edited by vasudevan31355; 4th June 2013 at 12:34 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
4th June 2013 11:12 AM
# ADS
Circuit advertisement
Bookmarks