-
15th August 2013, 10:06 PM
#11
Member
Devoted Hubber
http://tamil.oneindia.in/movies/hero...ed-181309.html
சென்னையை கலக்கும் வீரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் Posted by: Mayura Akilan Published: Thursday, August 15, 2013,
சென்னை: அஜித் நடிக்கும் 54 வது படமான வீரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சென்னை மாநகரமெங்கும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. நாகி ரெட்டியின் விஜயா வாகினி நிறுவனம் தயாரிக்கும் 100 வது படத்தில் அஜித் நடிக்கிறார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்திற்கு விநாயகம் பிரதர்ஸ்' என டைட்டில் வைக்கப்பட உள்ளதாக பேசப்பட்டது. ஆனால் ரொம்பவும் தாமதம் செய்யாமல் கடந்த வாரம் படத்திற்கு ‘வீரம்‘ என டைட்டில் அறிவிக்கப்பட்டது. சுதந்திர தினமான இன்று சென்னை நகரம் முழுவதும் பட்டு வேட்டி, பட்டு சட்டை பளபளக்க அஜீத் ஸ்டைலாக சிரித்தபடி அமர்ந்திருக்கும் போஸுடன் கூடிய ‘வீரம்' பட போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.
Read more at: http://tamil.oneindia.in/movies/hero...ed-181309.html
-
15th August 2013 10:06 PM
# ADS
Circuit advertisement
Bookmarks