-
18th August 2013, 07:47 PM
#11
Senior Member
Veteran Hubber
அன்புள்ள ராகவேந்தர் சார்,
சாந்தியில் திரிசூலம் வெற்றிநடை போட்டபோது நடந்த 'எமனுக்கு எமன்' ஷூட்டிங்க் ஸ்டில்கள் மிக அருமை மட்டுமல்ல, அந்த இனிய காலங்களை கண்முன் கொண்டுவருகின்றன.
நண்பகலில் ஷுட்டிங் நடந்துள்ளது எங்களுக்குத் தெரியாது. வழக்கம்போல மாலைநேரம் சாந்திக்கு சென்றபோது, பகலில் அங்கு ஷூட்டிங் நடந்த விவரத்தை அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அந்த நீரூற்றைச் சுற்றிஇருந்த சிமெண்ட் திண்ணையில்தான் எப்போதும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். பக்கத்தில் இருந்த 'பால்ஸ் ரெஸ்டாரெண்ட்' போர்டும் அதன் முன்னிருந்த வெற்றிடமும்கூட கவராகியிருக்கிறது.
திரிசூலம் நடிகர்திலகம் கட்-அவுட் அணிந்திருப்பது எங்கள் மன்றம் அணிவித்த மாலைதான். (கட்-அவுட் என்றால் பிளைவுட்டால் அமைக்கப்பட்ட ஒரிஜினல் கட்-அவுட்டே தவிர இப்போதுபோல டிஜிடல் பேனரை இழுத்துக் கட்டிவிட்டு அதை கட்-அவுட் என்று சொல்வது கிடையாது)
என்ன இருந்தாலும் பழைய சாந்தி, பழைய சாந்திதான்...
-
18th August 2013 07:47 PM
# ADS
Circuit advertisement
Bookmarks